தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places

இன்று நாம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய முக்கியமான கோவில் மற்றும் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களை பற்றி நாம் இந்த Mttamil.com – ல் பார்க்கலாம் வாருங்கள்.
1. காஞ்சிபுரம்

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. கோயில்கள் அதிகம் உள்ள ஊர் எது தெரியுமா..!! அது காஞ்சிபுரம் தான். அங்கு மொத்தம் 125 கோயில்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஏழு முக்கியமான புண்ணிய தளங்களில் காஞ்சிபுரம் ஒன்று.
கோயில்கள்
காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு உள்ள கைலாசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இக்கோவிலில் உள்ள அழகிய சிற்பங்கள் கண்கவர் மனதை கவர்பவன. சுவற்றில் எழுதப்பெற்ற வண்ணம் ஓவியங்கள் இன்றும் அழியாமல் இருக்கின்றன.
தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places
வைகுண்ட பெருமாள் கோவில் என்னும் திருமால் கோவிலும் தொன்மையானது. இவையே அல்லாமல் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகியனவும் சிறப்புடையன.
இங்கு இந்து சமய கோவில்களே அல்லாமல் புத்த சமண கோயில்களும் உள்ளன காஞ்சிபுரத்தை ‘நகரச காஞ்சி’ என்று காளிதாசர் புகழ்ந்து உள்ளார்.
காஞ்சிபுரத்தின் கலைகள்
சமயம் கலைக்கல்வி முதலியனூற்றை வளர்த்த பெருநகரங்களில் காஞ்சிபுரம் ஒன்று. கோயில்களில் உள்ள சிற்பங்களினால் சிற்பக்கலையும், ஓவியங்களினால் ஓவியக்களையும், வானவில் ஆன கோபுரங்களினால் கட்டிடக்கலையும், பழந்தமிழகத்தில் சிறப்புற்று இருப்பதை அறியலாம்.
காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு பெயர் பெற்றது. காஞ்சிபுரத்தை பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவை. இங்கு எங்கு பார்த்தாலும் பல பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன.
காஞ்சிபுரத்தில் உள்ள சமயங்கள்
தமிழ் நூல்கள் இந்நகரை “கச்சி” என குறிப்பிடுகின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இங்கு சைவ சமயத்தை பரப்பினார்கள். சங்கரர் “காஞ்சி காமகோடி மடத்தை” இங்கு நிறுவினார்.
பேயாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை, ஆழ்வார், திருமழி சையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐம்பெரும் குறவர்களும் ராமானுஜரும் பயணத்தை இங்கு வளர்த்தனர்.
காஞ்சிக்கு வந்த வழிப்போக்கர்கள் பௌத்தர்களாய் இருந்தனர். மணிமேகலைக்கு அறம் உரைத்த அரவண அடிகள் காஞ்சியில் இருந்தார்.
காஞ்சிக்கு அண்மையில் இருக்கும் திருப்பரங்குன்றம் சமண காஞ்சி என வழங்கப்படும். வஜ்ரம் நந்தி குறவர் இங்கு தங்கி சமண சமயத்தை வளர்த்தார்.
பேரரசர்களின் தலைநகரமாக இருந்த காஞ்சிபுரம்
பல்லவர், சோழர், விஜயநகர ராயர் போன்ற தமிழகத்தின் தலைசிறந்த அரசர்களின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.
மேலும், இந்நகரத்திலேயே முதல் முதலாக அனைத்து கலைகளையும் பழந்தமிழர்கள் வெளிப்படுத்த தொடங்கினார்.
2. மதுரை

மதுரையின் தொன்மை சிறப்பு
இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று, மதுரை. இது வரலாற்று சிறப்புடைய மூதூர். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் அசோகரின் கல்வெட்டுகளிலும் மதுரையை பற்றிய குறிப்புகள் உள்ளன.
ரோமானியர்கள், கிரேக்கர்களும் இந்நகருடன் வணிபுத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழ் நாகரிகத்தின் சின்னமாய் மதுரை விளங்குகிறது.
இங்கு பாண்டியர் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தனர். அவர்களின் தலைநகராகவும் மதுரை புகழ்பெற்றது. உமா தேவியார் பாண்டியன் மகள் மீனாட்சியைப் பிறந்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாய் புராணங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை நகரின் நடுவில் மீனாட்சி அம்மை கோவில் அமைந்துள்ளது. கோயிலின் நான்கு வாயில்களும் உயரமான கோபுரங்கள் உள்ளன. அவற்றில் பல புராணக் கதைகள் விளக்கும் சுதை சிற்பங்கள் உள்ளன.
கோயில் நூல் இருக்கும் சிற்பங்களும் சிலைகளும் அழகானவை. அவை தமிழரின் கலைத்திறனுக்கு சான்றானவை. கோயில் நூல் பொற்றாமரை குளமும் ஆயிரம் கால் மண்டபமும் உள்ளது.
மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் சிறந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு சிறிய இசை தூண்கள் இக்கோவிலில் உள்ளன. அவற்றில் உள்ள ஒவ்வொரு துணை தட்டும் போதும் வெவ்வேறு விதமான இசை ஒளி எழுகிறது.
மதுரையின் தொழில் வளம்
17 – ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய அரண்மனையாக திருமலை மஹால் மதுரையில் உள்ளது. மதுரையில் ஒரு பல்கலைக்கழகமும் பல கல்லூரிகளும் ஒரு விமான நிலையமும் உள்ளன.
மதுரை நகரின் நடுவே வைகை ஆறு ஓடுகிறது. இன்னாரு பல பஞ்சாலைகள் உள்ளன. கைத்தறி ஆடைகளும், கைவேலைப்பாடு மிகுந்த தங்க, வெள்ளி நகைகளும், மதுரைக்கு புகழ் பெற்றது.
மதுரையில் உள்ள அருங்காட்சியகம்
காந்தியடிகள் நினைவாக பொருட்காட்சி நிலையம் ஒன்று இங்கு உள்ளது. அவர் பயன்படுத்திய பொருட்களும் எழுதிய கடிதங்களும் இங்கு காட்சிக்கு வைத்து பாதுகாக்கப்படுகின்றது.
மதுரையில் காணத்தக்கவை
மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருவாதவூர் ஆகியவை புகழ் பூத்த புண்ணிய தளங்களாக உள்ளது.
3. தஞ்சாவூர்

தஞ்சாவூரின் பெருமை
தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் தஞ்சாவூரும் ஒன்று. இது “தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்” என போற்றப்பட்டது. இது முன்பு சோழ மன்னர்களும் மராட்டிய அரசர்களும் தலைநகராக விளங்கி இருக்கிறது.
நீர்நிலைகளின் இருப்பிடமாக திகழும் தஞ்சாவூர்
தஞ்சாவூர் காவிரி ஆற்றின் பல கிளைகளால் சூரப்பட்டுள்ளது. நகரின் வடக்கே வெண்நாறும் நடுவே முத்தாரம் தெற்கே மேட்டூர் நீர் தேக்கத்தின் வாய்க்காலும் பாய்கின்றன.
தஞ்சாவூர் பெரிய கோவில்
ராஜராஜசோழன் 11 ஆம் நூற்றாண்டில் “பிரகதீஸ்வரர் ஆலயம்” என்னும் பெரிய கோவிலை எழுப்பினான். இக்கோவில் தஞ்சைக்கு புகழ் சேர்ப்பதாகும். இது அடித்தளத்தில் இருந்து தூபி வரை கருங் கற்களினாலே கட்டப்பட்டது.தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places
கோபுரத்தின் உச்சியில் உள்ள ஒரு தூபியின் அடித்தளம் ஒரே கல்லால் அமைந்தது. சுமார் 80 டன் எடையுள்ள இந்த பெரிய கல்லை எப்படி கோபுரத்தின் மேல் ஏற்றினார்கள் என்பது வியப்பாய் இருக்கிறது.
கோயிலில் உள்ள சிவலிங்கம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. இங்கே ஒரே கல்லில் ஆன பெரிய நந்தி உள்ளது. கோயிலின் மூலதனத்தை சுற்றியுள்ள சுவர்களிலும் மண்டபம் மேற்கூறையிலும் சோழர் காலத்தில் எழுதப்பட்ட அழகிய வண்ண ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தாக உள்ளன.
தஞ்சாவூரின் கலை சிறப்புகள்
தஞ்சையில் உள்ள “சரஸ்வதி மஹால்” என்னும் நூலகம் தஞ்சை தரணிக்கு பெருமை சேர்ப்பதாகும். “சங்கீதா மஹால்” என்னும் இசை மன்றமும் நகரில் உள்ளது. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் இருக்கிறது. இங்கு ஒரு மருத்துவக் கல்லூரியும், பல கல்வி நிலையங்களும் உள்ளன.
பட்டு, நெசவு, உலோக வேலை, இசைக்கருவி செய்தல் முதலிய கைத்தொழில்கள் இங்கு சிறப்பாய் நடைபெறுகின்றன. தஞ்சாவூர் தட்டு உலக புகழ் பெற்றது.
4. திருவண்ணாமலை
ஒளித்தலம்
சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாய் செஞ்சியை கடந்து திருவண்ணாமலை திருத்தளத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சபூத தளங்களில் ஒரு தளமாய் விளங்குவது திருவண்ணாமலை. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை திருவிழா உலகை ஒளிமயமாகிறது.
திருவண்ணாமலையின் ஞானியார் புகலிடம்
ஊரின் நடுவே உயர்ந்த மலை ஒன்று உள்ளது அதன் பெயர், அண்ணாமலை. அம்மாளையின் பெயரை ஊருக்கு அமைந்துள்ளது. இப்புனித மலை சித்தர்களுக்கும் அருள் ஞானிகளுக்கும் புகலிடமாய் திகழ்கிறது.
சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற ஞானிகள் வாழ்ந்து அருங்காட்சி புரிந்த புனித மண் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் உள்ள திருக்கோவில்கள்
25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த திருவண்ணாமலை கோவிலின் கருவறை, கொடிக்கம்பம், கோபுரம், திருக்குளம், சுற்றுச்சூழல் போன்றவை பல அரசு மரபினர் கட்டிக் காத்தனர். அவர்கள் சோழர் பல்லவர் விஜயநகர மரபின் அவர்கள். இக்கோவில் ஒன்பது கோபுரங்கள் 56 திருச்சி சுற்றுக்கள் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places
திருவண்ணாமலையின் சமயச் சான்றோர்
மாணிக்கவாசகர், அடி அண்ணாமலையில் தங்கி இருந்து திருவம்பாவை பாடினார். அருணகிரிநாதர் இக்கோவிலில் எழுந்தரியில் உள்ள இறைவன் திருவருள் வாய்க்கப் பெற்ற திருப்புகழ் முதலிய பல பிரபந்தங்களை இயற்றினார்.
வைர குன்று
செங்கம் சொல்லும் சாலையின் அருகில் வைர குன்று என்னும் ஓர் இடம் இருக்கிறது. அங்கு கிடைக்கும் கற்கள் தெய்வத்திருமேனிகள் படிக்க ஏற்றவை.
அவை திண்மையும் உறுதியும் வாய்ந்ததாய் இருப்பதால் இவ்விடம் வைர குன்று என பெயர் பெற்றது போலும்.
இடத்தின் மரபு
இன்று திருவண்ணாமலை மாவட்ட தலைநகராக இருக்கிறது. நினைத்தாலே வான் வீட்டை அருளும், திருத்தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் கிரிவலம்
திங்கள் தோறும் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருதல் நலமும் வளமும் கிட்டும் என மக்கள் நம்புகின்றனர். அன்னாளில் சித்தர்களும், ஞானிகளும் கிரிவலம் வருவார்களாம்.
5. கோயம்புத்தூர்

இருப்பிடம்
கோயமுத்தூர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய நகரங்களில் ஒன்று. இது கோவை மாவட்டத்தின் தலைநகரமாகும், கோவைக்கு மேற்கே நீலகிரி மலைத்தொடரும், தெற்கே ஆனைமலை இருக்கின்றன.
நீர் இறைக்கும் இயந்திரங்கள்
இது தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். இந்தியாவிலேயே நீர் பாசனத்திற்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை முதன்முதலாக உற்பத்தி செய்ய தொடங்கிய நகரம் கோவை என்பது இதன் சிறப்பாகும்.
கல்லூரிகள்
இங்கு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல் என உள்ளன. மேலும் சிறப்பாக காட்டியல், வேளாண்மையில், மனையியல் ஆகிய துறை சார்ந்த கல்லூரிகளும் உள்ளன.
கரும்பு பருத்தி ஆராய்ச்சி நிலையங்களும் நெசவுத்தொழில் ஆராய்ச்சி நிலையமும் இங்கு உள்ளன. இங்கு விமானப்படை பயிற்சி நிலையம் ஒன்றும் உள்ளது.தமிழகத்தின் சிறப்புகளை சொல்லும் ஊர்கள் – Tamilnadu Important Places
பஞ்சாலைகள்
இந்த மாவட்டத்தில் பருத்திப் பெரும் அளவில் உற்பத்தி ஆகிறது. அதனால் தென்னிந்தியாவிலேயே கோவையில் தான் பஞ்சாலைகள் அதிகம் இருக்கின்றன. இங்கு பல வகை தொழிற்சாலைகள் உள்ளன செயற்கை வைரங்கள் செய்வதற்கு தேவையான பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.
பேரூர்
புகழ்பெற்ற பேரூர் கோவில் இந்நகருக்கு மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இக்கோவிலூரில் உள்ள சிறப்பு அம்சங்கள் காண்பர் உள்ளத்தை தனபால் ஈர்க்கும் கலை மற்றும் வாய்ந்தவை.
மருதமலை முருகன் கோவில்
கோயமுத்தூருக்கு அடுத்து ஒரு சிறப்பான அந்தஸ்தை வழங்க கூடியது இந்த மருதமலையில் அமைந்துள்ள திருக்கோவில்.
கருவறையில் உள்ள தெய்வமாக முருகப்பெருமான் அமைந்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த மருதமலையைக் காண கண் கோடி வேண்டும்.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .