Kanmani Anbodu Kadhalan Song Lyrics

கண்மணி அன்போட காதலன் பாடல் வரிகள் – Kanmani Anbodu Kadhalan Song Lyrics

Post views : [jp_post_view]

கண்மணி அன்போட காதலன் பாடல் வரிகள் – Kanmani Anbodu Kadhalan Song Lyrics

Kanmani Anbodu Kadhalan Song Lyrics

 

Kanmani Anbodu Kadhalan Song Lyrics: “கண்மணி அன்போடு காதலன்” என்ற இந்த பாடல் குணா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 1991 ஆம் வருடம் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா மற்றும் பாடல்களை பாடியவர்கள் கமலஹாசன் மற்றும் ஜானகி.மேலும் இந்த பாடலை எழுதியவர் வாலி.

ஆண் – கண்மணி அன்போட காதலன் நான்… நான் எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சிகலாமா..!!  வேணாம், கடிதமே இருக்கட்டும். படி… Kanmani
பெண் – கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…
ஆண் – ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம்..
பெண் – பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆண் – உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது.ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை…
பெண் – உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
ஆண் – அதான்
பெண் – அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஆண் – அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி
பெண் – கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
பெண் – உன்னை எண்ணிப் பார்க்கையில்…கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது ஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
ஆண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
பெண் – பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
ஆண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
ஆண் – ம்ம்… எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக்க நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்.
ஆண் – இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்..  உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி
பெண் – அதையும் எழுதணுமா
பெண் – ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ.. அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா ஹா ஹா ஹா… மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல…அதையும் தாண்டி புனிதமானது
பெண் – உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே…
பெண் –என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே…
பெண் – எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.. எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.
பெண் – மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது…
ஆண் – அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா..
ஆண் – சுப லாலி லாலியே லாலி லாலியே..,, அபிராமி லாலியே லாலி லாலியே..,, அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா..,,
பெண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
ஆண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
பெண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
ஆண் – லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..
ஆண் – பெண் – ஓஓ… லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா.. லா..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *