பப்பாளி பழத்தின் நன்மைகள் தீமைகள் || பழத்தின் பயன்கள் – Pappaya Benefits In Tamil

Table of Contents

Pappaya Benefits In Tamil – பப்பாளி பழத்தின் நன்மைகள் தீமைகள் || பழத்தின் பயன்கள்

Pappaya Benefits In Tamil

பப்பாளி பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்:

பப்பாளி பழம் என்பது நமது நாடுகளில் முன்பெல்லாம் அரிதாக காணப்பட்டது. இந்தப் பப்பாளி பழம் வெப்பமண்டல காடுகளில் வளரக்கூடிய ஒரு குளிர்ச்சி மிக்க பலமாகும். இது நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் அழைக்கிறது.

பப்பாளி பழத்தின் நன்மைகள்:

1. நீரிழிவு நோய் குணப்படுத்த உதவுகிறது.

2. ஆஸ்துமாவை தடுக்கிறது.

3. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிகிறது.

4. புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

5. கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

6. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

பப்பாளி பழத்தின் தீமைகள்:

• கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால், பப்பாளி பழத்தின் பால் கருக்கலைக்கும் தன்மை கொண்டது.

• அதுபோன்று முழுமையாக பழுக்காத பப்பாளி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அரக்காயுடன் சாப்பிடும் பொழுது கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

• பப்பாளி பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உண்டு. அதுபோன்று அளவுக்கு அதிகமாக பப்பாளிப்பழத்தை சாப்பிடும்போது குடல் பிரச்சனை மற்றும் இரப்பை பிரச்சினை போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.

பப்பாளி பழம்:

பப்பாளி பழத்தின் நன்மைகள் தீமைகள் பழத்தின் பயன்கள்

Pappaya Benefits In Tamil:- பப்பாளி பழம் என்பது வெப்ப மண்டல பகுதிகளில் விலையக்கூடிய ஒரு வகை இனிப்பு மற்றும் உடலுக்கு சூட்டை குறைத்து குளிர்ச்சி தரக்கூடிய மிகுந்த சுவையான உண்ணக்கூடிய ஒரு பழமாகும்.

பப்பாளி பழம் பழங்காலத்தில் மிகவும் எளிதாகவும் அரிதாகவும் விளையும் பழமாக காணப்பட்டது. ஆனால், இப்போது எல்லாம் இந்த பப்பாளி பழத்தை பெரிதாக நாம் பார்ப்பதும் கிடையாது, சாப்பிடுவதும் கிடையாது.

பப்பாளி பழத்தின் வரலாறு:

பப்பாளி பழத்தின் பூர்வீகம் “மெக்சிகோ” ஆகும். தற்போது, உலகிலேயே பப்பாளி பழத்தை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட “6-மில்லியன்” பப்பாளி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பப்பாளி பழம் முதன் முதலில் 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் இருந்து தோன்றியது. பிறகு 1550-ஆம் ஆண்டு கால கட்டங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஸ்பெயினியர்கள் மூலம் கொண்டுவரப்பட்டது.

பப்பாளி பழம் நன்மைகள் || பப்பாளி பழத்தின் பயன்கள்:

Pappaya Benefits In Tamil:- பப்பாளி பழம் சாப்பிடுவதனால் நம் உடலில் ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகிறது.

1. இதய நோயை தடுக்கிறது:

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் இதய நோய்களை தடுக்க பெரிதும் உதவி செய்கிறது. பப்பாளி பழத்தை நாம் சாப்பிடுவதனால் நம் உடம்பில் பொட்டாசியம் அதிகரித்து சோடியம் சத்தை குறைக்கிறது. இதனால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

2. நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது:

அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் பொழுது இரத்த குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை, லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவு மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது ஒரு சிறிய பப்பாளி பழம் சுமார் 3-கிராம் அளவு நார்ச்சத்து கொண்டது.

3. ஆஸ்துமாவை தடுக்கிறது:

அதிக சத்துள்ள உணவுப் பொருட்களில் உட்கொண்டால் ஆஸ்துமா மரம் அபாயம் உள்ளது. இதனால், ஆஸ்துமாவை தடுக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று நான் “பீட்டா கரோட்டின்” ஆகும். இது பப்பாளி பழத்தில் அதிக அளவு உள்ளது. எனவே, இது ஆஸ்துமா வருவதை தடுக்கிறது.

4. புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது:

பப்பாளி பழத்தில் உள்ள “ஆன்டி ஆக்சிடென்ட் பீட்டா கரோட்டின்” புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக “கேன்சர் எபிடெமியாலஜி அண்ட் ப்ரெவன்ஷன் பயோமார்கர்ஸ்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இளைய ஆண்களில் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் புரோஸ்டேட் புற்று நோய்க்கு எதிராக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால், பப்பாளி பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள பீட்டா கரோட்டின் புற்றுநோயை வராமல் தடுக்கிறது.

5. கண் ஆரோக்கியம்:

பப்பாளி பழத்தில் வைட்டமின்-A மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

வைட்டமின்-A கண்ணின் கார்னியா படலத்தை பாதுகாக்கிறது. அதே சமயத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் விழித்திரையில் ஏற்படும் சிதைவை குறைக்கிறது.

6. எலும்பை வலுப்படுத்துகிறது:

வைட்டமின் – K குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. இதனால், வைட்டமின் – K எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்து ஆகும். ஏனெனில், இதில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தும் பணி செய்கிறது. சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேறுவதை தடுக்கிறது. இதனால், நாம் உடலில் வலுவான எலும்புகளை பெற கால்சியம் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.

7. சர்மம் மற்றும் முடி பிரச்சனைகளை தீர்க்கிறது:

Pappaya Benefits In Tamil:-  பப்பாளியில் வைட்டமின் – A உள்ள காரணத்தினால் இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. தோல் மற்றும் முடி போன்ற அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் – A மிகவும் முக்கியம்.

சரும கட்டமைப்பிற்கு ஆதாரமான “கொலாஜான்” உற்பத்தி செய்ய வைட்டமின் – C தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் – C பப்பாளி பழத்தில் தேவைப்படும் அளவு உள்ளது.

8. மலச்சிக்கல் நீங்குவதற்கு:

பப்பாளி பழத்தில் “பாப்பைன்” என்னும் நொதி அதிக அளவில் உள்ளது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து பப்பாளி பழத்தில் அதிக அளவில் காணப்படுவதால் இவை இரண்டும் மலச்சிக்கலை தடுக்கவும், செரிமான பாதை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவுகின்றது.

9. காயங்களை குணப்படுத்துகிறது:

Pappaya Benefits In Tamil:-  தீக்காயங்கள் ஏற்படும் பொழுது அதை குணமாவதற்கும் காயம் ஏற்பட்ட பகுதியில் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் பப்பாளி பழத்தை மேற்பூச்சாக பயன்படுத்துகின்றனர்.

பப்பாளி பழத்தில் உள்ள சைமோ பாபைன் மற்றும் பபைன் என்ற புரோட்டோலிடிக் எம்சைன்கள் காயங்களை குணப்படுத்துவதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெகுபிடஸ் புண்களுக்கு பப்பாளியின் எம்சைன் கொண்ட களிம்புகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

10. கொழுப்பை கரைக்க உதவுகிறது:

பப்பாளி பழத்தை தொடர்ந்து 4-வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைகிறது. இந்த பப்பாளி காயை சமைத்து நாம் சாப்பிடுவதனால் உடல் எடை குறையும். பப்பாளிக்காயை நாம் சாப்பிடுவதனால் சிறுநீரில் உள்ள சர்க்கரை உடைய அளவு குறைகிறது.

11. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் நாக்குப்பூச்சிகள் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. பப்பாளிக்காயின் பாலை வாய் புண் மற்றும் தோல் மீது காணப்படும் புண்கள் மீது பூசினால் புண்கள் விரைவில் குணமடையும்.

12. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

இப்படி பப்பாளி பழத்தின் விலை மிகவும் குறைவு ஆனால் அதனுடைய பயன்களோ அதிகம் இதுபோன்று நாமும் பப்பாளி பழங்களை சாப்பிட்டு நம் உடம்பை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி பழத்தின் தீமைகள்:

• கர்ப்பம் தரித்த பெண்கள் முதல் 2-மாதங்களுக்கு பப்பாளி பழத்தை உண்ணாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், பப்பாளி பழத்தின் பால் கருக்கலைப்புக்கு காரணமாக இருக்கிறது.

• அளவுக்கு அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடும்போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்றில் ஒரு விதமான எரிச்சலை உண்டாக்குகிறது. அதுமட்டுமில்லாமல், செரிமான பிரச்சனையையும் உண்டாகிறது.

• பப்பாளி விதைகளில் காணப்படும் “கார்பைன்” என்ற நச்சானது நாடி துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை உண்டாக்குகிறது.

• பப்பாளி காயை நாம் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது.

•பாப்பாளில் காணப்படும் “பெப்பெய்ன் எம்சைம்” சளி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல், ஆஸ்துமா, தொண்டை வீக்கம் ஒவ்வாமை மற்றும் சுவாச தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என இந்தியாவின் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள்:

• ஒரு கிராம் பப்பாளி பழத்தில் உள்ள தாது சத்துக்கள்,

1. இரும்பு சத்து – 0.25 மி.கி

2. பாஸ்பரஸ் – 10 மி.கி

3. கால்சியம் – 20 மி.கி

4. சோடியம் – 8 மி.கி

5. காப்பர் – 0.045 மி.கி

6. மெக்னேசியம் – 21 மி.கி

7. மாங்கனிஸ் – 0.040 மி.கி

8. செலினியம் – 0.6 மி.கி

9. சிங்க் – 0.08 மி.கி

10. பொட்டாசியம் – 182 மி.கி

• 100 கிராம் பப்பாளி பழத்தில் காணப்படும் வைட்டமின்கள்,

1.தையமின்(B1) – 0.023 மி.கி

2. ரிபோபிளோவின்(B2) – 0.027 மி.கி

3. நியாசின் (B3) – 0.357 மி.கி

4. பாந்தோதனிக்(B5) – 0.191 மி.கி

5. பைரிடாக்ஸின்(B6) – 0.038 மி.கி

6. போலேட் (B9) – 37 மி.கி

7. கோபலமைன்(B12)

• 100 கிராம் பப்பாளி பழத்தில் உள்ள கலோரிகள்,

1. புரதச்சத்து – 0.5 கி

2. மாவுச்சத்து – 11 கி

3. கொழுப்புச்சத்து – 0.3 கி

4. நார் சத்து – 1.7 கி

பப்பாளி பழத்தின் வகைகள்:

• கோவை பப்பாளி

• கனிடியு

• கூர்க் பப்பாளி

• பிலிப்பைன்ஸ் பப்பாளி

• சிலோன் பப்பாளி

• பாங்காக் பப்பாளி

• வாஷிங்டன் பப்பாளி

• சோலா வைமினாலோ

• சோலா சன்ரைஸ்

இது போன்ற பப்பாளி வகைகளில் விதைகள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் மக்களால் பெரிதும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

நாட்டு பப்பாளி பயன்கள்:

Pappaya Benefits In Tamil:-  நாட்டு பப்பாளி பழத்தை நாம் உண்ணும் போது பல் சம்பந்தமான குறைகள் நீங்கும். சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்க பப்பாளி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலப்படுத்தவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளியை சாப்பிடலாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. ஏன் என்றால் பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

பப்பாளி பழம் ஆண்மை:

பப்பாளி பழத்தில் வைட்டமின் – A,B,C,E மற்றும் நிறைய சத்துக்களை கொண்டுள்ள தாதுக்கள் உள்ளது. இதனால், தொடர்ந்து பப்பாளியை நாம் உண்ணும் போது ஆண்மை தன்மை பெருகும், இரத்த விருத்தி அடையும், ஞாபக சக்தி உண்டாகும். ஒழுங்கற்ற மாதவிடாய்யை சரி செய்யும்.

பப்பாளி பழம் சாப்பிடும் முறை:

பப்பாளி பழத்தின் வாசம் சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பப்பாளி பழங்களில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. இதனால், அதை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகளை பெற முடியும்.

பப்பாளி பழம் இரவில் சாப்பிடலாமா:

பப்பாளி பழத்தை இரவில் சாப்பிடுவதனால் நல்ல தூக்கம் வரும். இதில், “ட்ரிப்டோ பேன்” எனப்படும் அமினோ அமிலம் உள்ளது. இது மனதிற்கு அமைதியை தரும். ‘பப்பாயின்’ என்ற பொருள் இதில் இருப்பதால் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு பிரச்சனைகளை தீர்க்கிறது.

பப்பாளி சாப்பிடுவதால் என்ன நன்மை?

பப்பாளி பழத்தில் நார்ச்சத்து, கரோட்டின், வைட்டமின்- A,B,C, கால்சியம் போன்ற பலவிதமான சத்துக்கள் காணப்படுவதனால் இதய நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பலவிதமான நோய்களை குணமாக்கும் மருந்தாக பப்பாளி பழம் பயன்படுகிறது.

பப்பாளி பழம் ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரணத்தை குணமாக்கும் தன்மை கொண்டது. காலிங் பலம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது.

பப்பாளி பழம் எப்படி சாப்பிடுவது?

மதிய உணவுக்கு முன்பாக பப்பாளி பழம் சாப்பிட்டால் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். இதனால், குடல் இயக்கம் சீராக இருக்கும்.

பப்பாளியில் என்ன வைட்டமின் உள்ளது?

பப்பாளியில் வைட்டமின்-A,B,C, கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

Leave a Comment