வராகி அம்மன் வரலாறு – Varahi Amman History in Tamil

வராகி அம்மன் வரலாறு – Varahi Amman History in Tamil

Varahi Amman History in Tamil

Varahi Amman History in Tamil:- பண்டைய காலங்களில் இருந்தே பெண் தெய்வங்களை வழிபடுவது ஒரு முக்கியமான நிகழ்வாக நடைமுறையில் இருந்துள்ளது. சப்த கன்னிகளில் ஒருவர் தான் இந்த வாராகி அம்மன். சைவம், வைணவம், பிராமணியம், சக்தி போன்ற நான்கு பிரிவினர்களால் வழிபடப்படும் ஒரு முக்கியமான தெய்வம் ஆகும். அம்மனின் காவல் தெய்வமாகவும் வாராகி அம்மன் வழிபடப்படுகிறது.

வாராகி அம்மனின் தோற்றம்:

Varahi Amman History in Tamil:- திருமாலின் வராக அம்சம் தான் இந்த வாரகி அம்மாள். வராகி அம்மனின் தோற்றம் காட்டுப்பன்றியின் தலையையும், மனித பெண் உடலும் கொண்ட வடிவமான பெண் தெய்வமாக காட்சி தருகிறார். சிம்மா வாகனத்தில் அமர்ந்து கருப்பு நிற ஆடை அணிந்து அனைவருக்கும் காட்சி தருகிறாள்.

வாராஹி அம்மனை துர்கா தேவியின் ஒரு அம்சமாகவும் வழிபடுகின்றனர். புராண கதைகளின் படி, வாராஹி அம்மன் தன்னுடைய முழு சக்திகளையும் 7-பிரிவுகளாக பிரித்து அதனை சப்த கன்னிகளுக்கு அளித்து ரத்த பீஜனுடன் போர் செய்ததாக புராணக் கதைகளில் கூறப்படுகிறது.

வாராஹி அம்மனுக்கு மொத்தம் “8-கைகள்” உள்ளது. அதில் ஆறு கைகளிலும் ஒவ்வொரு வீதம் சங்கு,சூலம்,ஏர்கலப்பை, அங்குசம், ஸ்ரீ சக்கரம், கதாயுதம் என 6-கைகளிலும், மற்ற 2-கைகளில் வரத, அபாயம் என்ற ஆயுதங்களையும் கொண்டு காட்சியளிக்கிறாள்.

வாராகி அம்மன் உகந்த நாள்:

• வாராஹி அம்மனை தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி நாட்களில் 5-வது நாள் வாராஹி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

• அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அஷ்டமி திதிகளில் வாராஹி அம்மனை வழிபடலாம்.

• இரவு நேரங்களில் வாராகி அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.

• வராகி அம்மனை புதன்கிழமைகளில் வழிபட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி விடும்.

வராகி அம்மன் பெயர்கள்:

1. பஞ்சமீ

2. ஸிவா

3. தண்ட நாதா

4. போத்ரிணீ

5. வார்த்தாளீ

6. ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ

7. மஹாஸேநா

8. வார்த்தாளீ

9. ஸமய ஸங்கேதா

10. ஸ்மேஸ்வரீ

11. ஸ்ங்கேதா

12. வாராஹீ

எட்டு வாராகிகள்:

1. ஆதிவராகி

2. மகா வாராகி

3. லகு வராகி

4. அச்வாருடா வாராகி

5. சிம்ஹாருடா வாராகி

6. மகிஷாருடா வாராகி

7. உன்மத்த வாராகி

8. ஸ்வப்ன வராகி

வாராகி 8 (அஷ்டவாராகி) வாராகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வாராகி அம்மன் கோயில்:

Varahi Amman History in Tamil:-  வராகி அம்மனை சப்த கன்னியர்கள் ஒரு பகுதியாக வழிபடும் கோயில்களை தவிர, வாராகி அம்மனுக்கு தனியாக பிரதான தெய்வமாக வழங்கப்படும் குறிப்பிடத்தக்க கோயில்கள் ஏராளமானது உள்ளது.

• விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு என்னும் ஊரில் அஷ்டவராகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் தான் உலகிலேயே முதன்முதலாக வாராகி அம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாக கருதப்படுகிறது.

• தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு என தனியாக ஒரு சன்னதி உள்ளது.

• நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோவில் வாராஹி அம்மன் வழிபாடு தளமாக செயல்படுகிறது.

• தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகாமையில் என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி ஊரில் வாராகி அம்மன் கோவில் ஒன்று உள்ளது.

• திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்த மாதா தனி சன்னதியாகவும், சப்தமாதாகாள் வராகி அம்மன் காட்சியளிக்கிறாள்.

• திருச்சி எழில் நகர் பகுதியில் அருள்மிகு லட்சுமி கணபதி ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு என தனியாக ஒரு சன்னதி உள்ளது.

• இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் என்ற ஊரில் வாராகி அம்மனுக்கு தனியாக ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

• இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் மங்கலநாதர் திருக்கோவிலுக்கு 100-மீட்டர் தொலைவில் வாராகி அம்மனுக்கு என தனி கோவில் ஒன்று உள்ளது.

• கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் என்ற ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் என்னும் பெயரில்) ஒரு வாராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதிகள் சிறப்பு அபிஷேகங்கள், பூஜை மற்றும் மகா யாகம் நடைபெறும்.

• திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளி பகுதியில் அருள்மிகு செரை கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும்.

• ஒடிசா மாநிலத்தில் பெரிய மாவட்டத்தில் “பாராகி தேவலா” என்கிற பெயரில் வாராகி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இது 9-ஆம் நூற்றாண்டில் கலிங்கத்து மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.

வாராகி அம்மன் மந்திரம்:

ஓம் ஐம் க்லெளம் ஐம்

நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

வாராஹி வாராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம….

ருத்தே ருந்தினி நம….

ஜம்பே ஜம்பினி நம….

மோஹே மோஹினி நம….

ஸ்தம்பே ஸ்தம்பினி நம….

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்…

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி…

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட ட ட ட ஹும் அஸ்த்ராயபட்…

இவையே வாராகிஅம்மனுக்குரிய மந்திரமாகும்.

வாராகி அம்மன் விரதம்:

Varahi Amman History in Tamil:-  வாராகி அம்மனுக்கு உரிய திசை வடக்கு திசையாகும். வாராஹி அம்மனை வழிபடுபவர்கள் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்.

வழிபாடும் போது வாராகி அம்மனுக்கு விருப்பமான நீல நிறம், கருப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிற உடைகளை உடுத்தி வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

வாராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா || வாராகி அம்மன் போட்டோ:

வாராகி அம்மன் மிகவும் சக்தி வடிவானவள். தாந்த்ரீக வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கிய பெண் தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறாள். தீயவற்றை அளிக்கும் உக்கிர கடவுளாக வாராகி அம்மன் இருப்பதால் பொதுவாக திருமணம் ஆகாதவர்களுக்கும், துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள் வாராகி அம்மனை அது இரவில் வழிபடுகின்றனர். இவர்கள் வாராகி அம்மனின் சிலை மற்றும் படத்தை வைத்து வீட்டில் முறைப்படி பூஜை செய்கின்றனர்.

இல்ல வாழ்க்கையில் வாழ்பவர்கள் வாராகி அம்மனின் படத்தை மட்டுமே வைத்து பூஜை செய்யலாம். குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்கள் வாராகி அம்மனுக்கு உரிய பூஜையை முறை தவறாமல் மற்றும் வழிபாடுகளை உடல், மனம், ஆன்மா சுத்தத்தோடு முறைப்படி பூஜை செய்ய முடியும் என்றால் மட்டுமே வாராகி அம்மன் படம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதில் ஏதாவது தவறு ஏற்படும் படுத்தத்தில் அவர்கள் வாராகி அம்மனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாராஹி வழிபாடு பலன்கள் || வாராகி அம்மன் வழிபாடு:

Varahi Amman History in Tamil:-  செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம், எதிரிகள் ஆகியவற்றை நீக்கி, காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு பலன்கள் உள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராகி அம்மனை புதன்கிழமையில் வழிபட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லைகள் நீங்கிவிடும். வாராகி அம்மனுக்கு பல விதமான ரூபங்கள் உள்ளது.

காலக்குறிப்பு – Varahi Amman History in Tamil:

வாராஹி அம்மனை வழி படுவது எப்படி?

வாராஹி அம்மனை வழிபடும் முறை:

Varahi Amman History in Tamil:-  வாராகி அம்மனுக்கு உரிய திசை வடக்கு திசையாகும். வாராஹி அம்மனை வழிபடுபவர்கள் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்.

வழிபாடும் போது வாராகி அம்மனுக்கு விருப்பமான நீல நிறம், கருப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிற உடைகளை உடுத்தி வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது?

• வாராஹி அம்மனை தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி நாட்களில் 5-வது நாள் வாராஹி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

• அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அஷ்டமி திதிகளில் வாராஹி அம்மனை வழிபடலாம்.

• இரவு நேரங்களில் வாராகி அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.

• வராகி அம்மனை புதன்கிழமைகளில் வழிபட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி விடும்.

வாராகி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது?

காசி நகரத்தில் வாராஹி அன்னைக்கு மிகப்பெரிய கோவில் உள்ளது.

வாராகி என்றால் என்ன?

1. வாராகி என்றால் சிற்றரத்தை என்னும் மூலிகை தாவரமாகும்.

2. வாராகி என்றால் சிறுகுறிஞ்சா என்னும் மருந்து தாவரக் கொடி ஆகும்.

Read Also:- சிவன் வரலாறு

Leave a Comment