சிவன் வரலாறு – Sivan History in Tamil

சிவன் வரலாறு – Sivan History in Tamil

Sivan History in Tamil

சிவன் பிறந்த வரலாறு:

Sivan History in Tamil:- இந்து சமயத்தில் வழிபடக்கூடிய மும்மூர்த்திகளில் ஒருவர்தான் சிவன். சைவ சமயத்தின் முழு முதற்கடவுளாக திகழ்கிறார். பிறப்பும், இறப்பும் இல்லாத காரணத்தினால் “பரமசிவன்” என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தன்னுடைய உடம்பில் ஒரு பகுதியில் இருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார். அதன் பிறகு தேவலோகத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடி அண்டா சராசரங்களையும் உருவாக்கினார்கள். சிவன் தன்னுடைய கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து பணிகளுக்கான அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார். அதன் பிறகு பராசக்தி படைப்பிற்காக பிரம்மனையும், மக்களை காப்பதற்காக காக்கும் கடவுளாக விஷ்ணுவையும் உருவாக்கினார்.

சிவனின் வலது புறத்திலிருந்து பிரம்மனும், இடதுபுறத்தில் இருந்து விஷ்ணு தோன்றினார்கள். இதனை, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான தேவவியாசர் எடுத்துரைக்கிறார். அதன் பிறகு, பிரம்மன் படைக்கும் தொழிலில் உயிர்களை அழிக்க சிவனிடம் வேண்டியதற்காக பிரம்மனின் மகனாக மும்மூர்த்திகளில் ஒருவராக அழிக்கும் கடவுளாக உருத்திரன் உருவானார் என்று கூறுகிறது வாயுபுராணம்.

சிவனின் மற்ற பெயர்கள்:

• ஈசன்

• பரமசிவன்

• மகாதேவன்

• லிங்கம்

• ஈஸ்வரன்

• முக்கட் செல்வன்

• அம்மையப்பன்

• ஐ

• கங்காதரன்

• யோகி

• சித்தன்

இது போன்று பல பெயர்களால் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

சிவன் அர்த்தம் || சொற்பிறப்பும் பிற பெயர்களும்:

தமிழில் சிவன் என்பதற்கு பொருள் “சிறந்தவன்’ என்பது ஆகும். வடமொழியில் சிவம் என்றால் முழுமையானது, மங்களகரமானது என பல பொருள்கள் உண்டு. யோகா நிலையில் சிவன் இருப்பதனால் “யோகி” என்றும், அட்டமும் சித்திகளில் வல்லவர் என்பதனால் “சித்தன்” என்றும் புகழ்பெற்றவர்.

சிவபெருமானின் மகன்கள்:

சிவபெருமானுக்கு 5-மகன்கள் உண்டு.

1. பைரவர்

2. கணபதி

3. முருகன்

4. ஐயப்பன்

5. வீரபத்திரர்

பாற்கடலை கடைந்த போது திருமால் மோகினி அவதாரம் எடுத்தபோது சிவபெருமானுடன் கூடி பெற்ற கடவுள் தான் ஐயப்பன்.

சிவபெருமானின் ஆயுதங்கள்:

• திரிசூலம் – ‘திரி’ என்றால் மூன்று என்பது பொருளாகும்.

• சந்திரகாசம் – சிவபெருமானுடைய வால்.

• நாகம் – சிவபெருமானுடைய வில்.

• கட்லவங்கம் – காபாலிகா ஆயுதம்.

சிவபெருமானின் அடையாளங்கள்:

• சடைமுடி வைத்திருத்தல்.

• புலித்தோல் அணிந்து இருப்பது.

• சடை முடியில் பிறை நிலா காணப்படுவது.

• கழுத்தில் உத்ராட்சம் அணிந்து இருப்பது.

• கையில் திரிசூலம் வைத்திருப்பது.

• சிவனின் வாகனமாக நந்தி காணப்படுவது.

• யானைத் தோல், மான் தோல் போன்றவை அணிந்து இருப்பது.

• நாகப் பரணம்

• நீலகண்டம்

• கங்கை

• தோடுடைய செவி

• நெற்றிக்கண்

• உடுக்கை

• பொன்மேனி

இவை அனைத்தும் சிவபெருமானின் அடையாளங்கள் ஆகும்.

சிவபெருமானின் கோவில்கள்:

Sivan History in Tamil:- சிவபெருமானை முதற்கடவுள், மூலவராக கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்தியா, நேபாளம், இலங்கை கம்போடியா என பல நாடுகளை உதாரணத்திற்கு கூறலாம்.

சிவ தலங்கள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், ஆறு ஆதார தலங்கள்,  பஞ்சகேதார தலங்கள், சப்த விடங் தலங்கள், சப்த கரை சிவ தலங்கள், சப்த கைலாயத் தலங்கள், நவலிங்கபுரம், நவகைலாயங்கள், அட்டவீராட்டன தலங்கள் என பல்வேறு பெயர்களால் சிவ தலங்கள் அழைக்கப்படுகிறது.

சைவ அடியர்களால் பாடலைக் கொண்டு திருவாசக திருத்தலங்கள், தேவார திருத்தலங்கள், தேவார வைப்புத்தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேஷ தலங்கள், முக்தி தரவல்ல சிவதலங்கள், சோதிர்லிங்கத் தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாரம் பாடல் இடம்பெற்ற தலங்கள் காவிரி வடகரைத்தலங்கள், பாண்டிய நாட்டுத் தலங்கள், கொங்கு நாட்டு தலங்கள், காவிரி தென்கரைத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிவன் பார்வதி வரலாறு:

Sivan History in Tamil:- சிவன், சக்தி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று இன்றியமையாத இரு அம்சங்கள் ஆகும் இந்த நாள் இவற்றை பரமசிவன் ஆதி சக்தி என்று கூறுவார்கள்.

தக்கனின் தவத்தால் அவனுக்கு மகளாக பிறக்கும் ஆதி சக்தியை “சதி தேவி” என்று அழைக்கப்படுகிறார். தக்கனின் அனுமதியின்றி சதி தேவி சிவனை திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த தக்கன் அவர்களுக்கு அழைப்பு எதுவும் விடுக்காமல் யாகம் செய்யத் தொடங்குகிறார்.

தந்தையின் அழைப்புயின்றி வந்த சதி தேவியிடம் சிவபெருமானை பற்றி தக்கன் இழிவாக பேசுவதால் பெரும் கோபம் கொண்ட சதி தேவி கேள்விதீயில் விழுந்து மறைகிறாள். ஆங்காரமற்ற சிவனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி தக்கன் செய்த யாகத்தை அளிக்கிறார்.

அந்த யாககிண்டத்தில் சதி தேவியின் உடல் கிடைத்ததாகவும், அதை ஆற்றாமையுடன் சிவபெருமான் தூக்கி சென்ற போது அவற்றை விஷ்ணுவின் அவதாரமான திருமால் ஆழியால் சிதைத்ததாகவும் அது வீழ்ந்த இடங்களை சக்தி பீடங்களாக உருவாக்கியதாகவும் கூறுகின்றனர்.

அதன்பிறகு பர்வதராசன், மைனாவதியின் தவத்துக்கு அருள் புரிய சக்தி தேவி மீண்டும் பார்வதியாக அவதரித்தாள். கடும் தவத்தில் இருந்த ஈசனை கணவனாக அடையும் நோக்கத்தில் உமையவள் ஆனாள். பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தம், பிள்ளையார் மற்றும் முருகன் ஆகியோரை படைத்ததும் பார்வதி தேவியே ஆவாள்.

சிவபெருமானின் வடிவங்கள்:

• சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்றும் மூன்று முக்கியமான வடிவங்களில் காட்சியளிக்கிறார்.

• அருவத்திருமேனி ‘சத்தர்’ என்றும், அருவுருவம் திருமேனி ‘பரம்பொருள்’ என்றும், உருவத்திருமேனி ‘பிரவிருத்தர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

• அருவுருவமாக லிங்கமும், மகேஸ்வரமூர்த்திகள் மற்றும் சிவ உருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றனர்.

• தடத்த நிலையில் சிவபெருமானின் வடிவங்கள் 64-ஆகும். அவற்றில் சிறப்பாக 25-வடிவங்கள் சிவமூர்த்திகள், மகேஸ்வர மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சிவன் பெருமைகள்:

தன் வயத்தனாதால், தூய உடம்பினனாதல், இயற்கைய உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுக்களின் நீக்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றுலுடைமை, வரம்பிலின்பமுடைமை என எட்டு வகை குணங்களையும் சிவன் கொண்டு உள்ளார் இதுவே சிவனின் பெருமைகள் ஆகும்.

சிவன் வரலாறு pdf || காலக் குறிப்பு:

சிவன் எப்படி தோன்றினார் || சிவன் பிறந்த ஊர் எது?

Sivan History in Tamil:- சிவபெருமான் பிறந்த இடம் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோசமங்கை தான் என்று மாணிக்கவாசகர் கூறியதாக வாய்ச்சொல் வழக்கம் உள்ளது. அதற்கு ஏற்றது போல் இங்கு உள்ள இலந்தை மரம் “3500ஆண்டுகள்” பழமை வாய்ந்தது என்று அறிவியல் ஆய்வாளர்களால் கூறப்பட்டுள்ளது. உத்திரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும்.

சிவன் என்ன ஜாதி?

ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர். தஞ்சை மற்றும் திருவள்ளுவர் பகுதியிலுள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவார்.

சிவன் என்றால் என்ன?

இந்து புராணங்களில் சிவபெருமான் சக்தி வாய்ந்த மற்றும் கருணை உள்ள தெய்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவர், பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவுக்கு பொறுப்பானவர். சிவபெருமான் பெரும்பாலும் சன்னியாசிகள், யோகா, தியான, இசை மற்றும் நடனம் போன்ற கலைகளில் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

சிவன் எந்த கடவுள்?

தமிழில் சிவன் என்றால் “சிவந்தவன்” என்பது பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்களகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை, அந்தணன், காரியுண்டி கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்க நூல்களில் உள்ளது.

சிவனுக்கு ஏன் உருவம் இல்லை?

சிவன் இன்றி சக்தி இல்லை அது போல தான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. இதனால், பிரபஞ்தத்தை படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரமன் என்பது சிவனும், சக்தியும் இணைந்துள்ள சிவ சக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியாக உருவிலே பூஜை செய்யாமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜை செய்கிறார்கள். எனவே, பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது.

பார்வதியின் தந்தை யார்?

மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாக பார்வதி பிறந்தார். இவர் கங்கைக்கு இளையவர் ஆவார்.

Read Also:- மகா சிவராத்திரி வரலாறு

Leave a Comment