Bharathiar History In Tamil

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiar History In Tamil

Post views : [jp_post_view]

Table of Contents

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiar History In Tamil

Bharathiar History In Tamil
Bharathiar

பாரதியார் வாழ்க்கை வரலாறு:

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் Bharathiar History In Tamil – யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிய மொழி வேறு எங்கும் உண்டோ என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இவர், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தன்னுடைய கவித்திறமையால் எழுச்சிமிகு ஊக்கங்களை அழித்தவர் பாரதியார். எண்ணற்ற மொழிகளைப் பயின்று, மேலும் சிறுகதைகள் பாடல்கள் என இவர் செய்யாத சாதனைகளை இல்லை என்று கூறலாம்.

Biography Of Bharathiar In Tamil

பாரதியார் பிறந்தநாள் – 11-12-1882

பாரதியாரின் முழு பெயர் – சுப்பிரமணியம் என்கின்ற சுப்பையா

பாரதியார் பிறந்த ஊர் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்

பாரதியார் பெற்றோர் பெயர் – சின்னச்சாமி ஐயர் – இலக்குமி அம்மாள்

பாரதியாரின் மனைவி பெயர் – செல்லம்மாள்

பாரதியார் எழுதிய நூல்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்

பாரதியார் எழுதிய சிறுகதைகள் – சின்ன சங்கரன் கதை, ஸ்வர்ணகுமாரி கதை, ஆறில் ஒரு பங்கு

பாரதியார் எழுதிய பாடல்கள் – சுதந்திரப் பாடல்கள், தேச பாடல்கள், தலைவர் வாழ்த்துக்கள், பக்தி பாடல்கள், சமூக பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, பாப்பா பாட்டு

பாரதியாரின் பிள்ளைகளின் பெயர் – தங்கம்மாள், சகுந்தலா

பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் – காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓம் உத்தம தேசாபிமனி, நித்திய தீரன், பாரதியார், மகாகவி

பாரதியார் செய்த பணிகள் – பத்திரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் போராட்ட வீரர் மேலும் பல

பாரதியாருக்கு எத்தனை மொழிகள் – தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி, வட மொழிகள் அடங்கிய மொத்தமாக 14 மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.

பாரதியார் பயின்ற கல்லூரியின் பெயர் – காசி இந்து கல்லூரி அலகாபாத் பல்கலைக்கழகம்

பாரதியார் எங்கு அமைச்சரவையில் இருந்தார் – எட்டயபுறா அமைச்சரவையில் முதன்மை அரசவை கவிஞராக பணி புரிந்தார்

பாரதியார் எந்த ஊரில் பள்ளி படிப்பை படித்தார் – 1904 – ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள சேதுபதி உயர்நிலைப்பள்ளி

பாரதியார் பாரதி பட்டம் எந்த வயதில் பெற்றார் – தன்னுடைய 11ஆவது வயதில் கவி புலமையின் காரணமாக எட்டயபுரம் சமஸ்தானம் பாரதி என்ற பட்டம் கொடுத்தது.

பாரதியாரின் பிறப்பு:

இவர் தற்போது தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்னும் 11.12.1882 ஆம் ஆண்டு சின்னச்சாமி ஐயர் மற்றும் இலக்குமி அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாய் பிறந்தார். பாரதியாருக்கு இவரது பெற்றோர்கள் சுப்பிரமணியம் என்கின்ற சுப்பையா என்ற பெயரினை வைத்தார்கள்.

எட்டயபுர அரண்மனையில் இவருக்கு பாரதி என்ற பட்டம் சூட்டப்பட்டதால், இதுவே பிற்காலத்தில் இவரை அனைவரும் பாரதியார் என்று அழைக்க தொடங்கினார்கள்.

பாரதியாரின் திருமண வாழ்க்கை:

Bharathiar History In Tamil

எண்ணற்ற மொழிகளையும் கவித்திறமைகளையும் பெற்றிருந்த பாரதியார் செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பெயர் தங்கம்மாள் மற்றும் சகுந்தலா ஆகும்.

பாரதியார் பற்றிய விரிவான விளக்கம்:

விடுதலை போராட்டத்தில் தொடங்கி, பல்வேறு நாடுகளுக்கு சென்று பலவையான மொழிகளையும் கற்று அறிந்து, இளமைப் பருவத்தில் பாரதி என்ற பட்டத்தையும் பெற்று, இவர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்பட்டார்.

பாரதியார் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் பாரதியார் தன்னுடைய சிறுவயதிலேயே தன் தந்தையையும் இழந்தார்.

விடுதலை ப் போராட்டத்திற்கு எழுச்சிமிகு வசனங்களை எழுதி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நாற்றுப்பற்றை ஊட்டினார்.

பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

விடுதலை கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓம் உத்தம தேசாபிமானி, நித்திய வீரர், தேசிய கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன் பாரதி, நீடுதுயில் நீங்க பாடி வந்த நிலா

விடுதலைப் போராட்டத்தின் போது பாரதியார் எண்ணற்ற வீரர்களின் எழுச்சிக்கு துணையாய் இருந்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மேலும் தனி ஒரு ஆளாய் நின்று ஐந்து விதமான பத்திரிக்கை இதழ்களையும் நடத்தி, தனக்கு நிகரானது ஒரு வீரன் உலகில் எவரும் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்.

பாரதியார் நடத்திய இதழ் ஆசிரியர் பணி:

Bharathiar History In Tamil

• 1905 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி என்கின்ற பெண்களுக்கான வார இதழ் ஒன்றை நடத்தி வந்தார்.

• 1905 முதல் 1906 ஆம் ஆண்டு வரை இந்தியா என்ற வார பத்திரிக்கை இதழையும் நடத்தி வந்தார்.

• 1908 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பாலபாரதம் என்கின்ற ஆங்கில வழி இதுலயும் நடத்தி வந்தார்.

• 1909 ஆம் ஆண்டு விஜயா கர்மயோகி என்கின்ற இதழையும் 1910 ஆம் ஆண்டு சூரிய உதயம் என்கின்ற இதழையும் நடத்தி வந்தார்.

பாரதியாரின் பத்திரிக்கை பணி:

விவேக பானு என்ற பத்திரிகையின் தனிமை இறக்கம் என்ற பாடல் நாட்டிலேயே முதல் முதலாக வெளியிடப்பட்டது.

சுதேசி மித்திரன் என்கின்ற நூலை 1904ஆம் ஆண்டு துறை ஆசிரியர் மற்றும் தினசரி இதழ்களிலும் பணியாற்றி வந்தார்.

பாரதியார் எழுதிய பாடல்கள்:

• தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

• காக்கை குருவி எங்கள் ஜாதி நீர் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

• யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

• செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

• பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பேச வேண்டும்

• சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதைத் தொழுது படித்ததடி பாப்பா

• நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்

• எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

• ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு

பாரதியாரின் இறப்பு:

1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று இருந்தார். அப்போது அந்த கோவிலில் இருந்த யானை சற்றும் எதிர்பாராமல் அவரை முட்டி தூக்கி தள்ளி பலத்த காயம் அடைய செய்தது.

இதனால் அவர் பெரிதும் அடிபட்டு, அதே வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தன் புவி வாழ்வை முடித்துக் கொண்டார்.

பாரதியாருக்கு செய்த தமிழ்நாடு அரசின் சிறப்புக்கள்:

பாரதியார் வாழ்ந்த இடங்களான எட்டயபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இடங்களை நினைவு இல்லங்களாக மாற்றி பொதுமக்களின் பார்வைக்காக வைத்து தமிழக அரசு இன்று வரை பராமரித்து வருகின்றது.

மேலும் அவர் பிறந்த எட்டயபுரத்தில் அவருடைய நினைவாக மணிமண்டபமும் மற்றும் அவருடைய திரு உருவ சிலையும் வைத்து பெருமை படுத்தி உள்ளது.

பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த விதங்கள் ஆகியவை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் எழுதிய முப்பெரும் கவிதை பாடல்கள்:

பாரதியார் பல்வேறு மொழிகளில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும் திறம்படுத்தி இருந்தார். அவ்வகையில் இவர் எழுதிய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று நூல்களும் இன்று வரையிலும் அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றது.

மேலும் இவர் பல வகையான சிறுகதைகளையும் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். அவ்வகையில் சின்ன சங்கரன் கதை, ஸ்வர்ணகுமாரி கதை, ஆற்றில் ஒரு பங்கு ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

பாரதியார் வாழ்க்கை வரலாற்று கட்டுரை:

பாரதியின் குறிக்கோள்:

தமிழ் அன்னைக்கு தம் கவிதைகளால் முடிக்கவித்தம் ஆரம் அணிவித்தும் அழகு பார்ப்பவர்கள் தமிழ் கவிஞர்கள். அத்தகைய கவிஞர்கள் தம் பாட்டு திறத்தால் இவ்வையகத்தை பாலித்திட வைத்தவர் பைந்தமிழ் பாவாணர் பாரதி. “நமக்குத் தொழில் கவிதை” என்ற குறிக்கோளோடு இமைப்பொழுதும் சோறாது தமிழ் வளர்த்தவர் பாரதி.

பாரதியாரின் கவி பாடும் ஆற்றல்:

சுப்பிரமணிய பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் நாளில் சின்ன சாமியாருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் மகனாய் பிறந்தார். இளம் வயதிலேயே கவிதை பாடும் திறமை படத்தில் இருந்தால் இவர் “பாரதி” என்று போற்றப்பட்டார்.

பாரதியாரின் தேசிய கவி:

பாரதியார் நம் நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்தார். அவருடைய கவிதைகள் நாட்டு விடுதலைக்கு உயிர் மூச்சாய் விளங்கின. அதனால் அவர் “தேசிய கவி’ எனும் சிறப்பு பெயர் பெற்றார்.

பாரதியார் இயற்றிய நூல்கள்:

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய முப்பெரும் பாடல்களால் புகழ்பெற்றார்.”யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழில் பெருமையை முழங்கினார்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று தமிழ்நாட்டின் உயர்வை பாடினார்.

குழந்தைகளுக்குப் பாரதி:

பாரதி குழந்தைகளுக்கு “பாப்பா பாட்டு” பாடினார். புதிய ஆத்திச்சூடியையும் அருளினார். சமுதாய சீர்திருத்தங்களையும் புரட்சி மனம் கமலும் கவிதைகளையும் பாடினார்.

பாரதியாரின் புகழ் உரை:

“நீடுதுயில் நீங்க பாடி வந்த நிலா; காடு மனம் கவரும் புறச் சொற்கோ” என பாரதிதாசனால் சிறப்பிக்கப்பட்ட பாரதியார் 11-9-1921 ஆம் ஆண்டு புகழ் உடம்பு எய்தினார்.

(மேலும், பாரதியார் பற்றிய தகவல்களுக்கு Wikipedia – வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

Read Also : திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *