ஜல்லிக்கட்டு வரலாறு || Jallikattu Varalaru in Tamil

ஜல்லிக்கட்டு வரலாறு || Jallikattu Varalaru in Tamil

Jallikattu Varalaru in Tamil

jallikattu in tamil || தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை

Jallikattu Varalaru in Tamil:- ஏறு தழுவுதல் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழர்களின் மரபு வலி விளையாட்டுகளில் ஒன்றாகும். நம் விவசாய நிலங்களில் இரண்டு காளைகளை ஒன்று கூட்டி அவற்றை ஏறு என்பது குறிக்கும்.

காளை மாடுகளை ஓட விட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது அவற்றின் கொம்பை பிடித்து வீழ்த்துவதுமான விளையாட்டு மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு என்று கூறப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் மஞ்சுவிரட்டு என்பது சொர்க்க பூமியாக கருதப்படுகின்றன. நம் தமிழ்நாட்டில் அதிகப்படியான மஞ்சுவிரட்டு நடைபெறும் மாவட்டங்கள் சிவகங்கை மாவட்டமாக உள்ளது.

நம் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் இவ் விளையாட்டு தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் உள்ள மதுரை மாவட்டம் என்ற ஊரில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சியில் சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் என்னும் ஊர்களில் மிகப் பிரம்மாண்டமாக தைப்பொங்கல் திருநாள் முன்னிட்டு ஜல்லிக்கட்டு வருடங்கள் தோறும் நடைபெற உள்ளன. இவ்வூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருடந்தோறும் வந்து ஜல்லிக்கட்டு பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மாடு பிடிக்கும் பொழுது அவர்களுக்கு ஏராளமான சிறுசிறு காயங்கள் உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் நடந்து வரும் நடக்கின்றன.

இதன் விளைவாக விளங்கூரிமை அமைப்புகள் இந்த போட்டிக்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தில் முறையிட நீதிமன்றம் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு பலமுறை தடை விதித்தது இருப்பினும் இந்த தடைக்கு மக்கள் எதிர்த்து போராடியதால் ஜல்லிக்கட்டு தொடர ஒரு புதிய சட்டம் 2017ல் ஏற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு பெயர் காரணம்:

Jallikattu Varalaru in Tamil:- ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே சளி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் வளையத்தினை குறிக்கின்றது. புளியங்கம்பினால் இந்த வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் இப்போதும் அதிகமாக வழக்கத்தில் உள்ளன.

முந்தைய காலங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக்காஸ் என்னும் இந்திய நாணயங்களை துணியில் சுற்றி அவற்றை மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் பழக்கமும் இன்னமும் இருந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு விடும் போது மாட்டை பிடிக்கும் வீரர்கள் அந்த பணமுழிப்பு அவருக்கு சொந்தமாகும். இவை தற்போது காலங்களில் இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறப்பட்டு ஜல்லிக்கட்டு என்ற பெயர் மாறியது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு:

ஜல்லிக்கட்டு நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு:

வாடிவாசல் ஜல்லிக்கட்டு என்பது மதுரை அலங்காநல்லூர் என்ற ஊரில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளம் இளைஞர்கள் விரட்டிச் சென்று மாட்டின் திமிழ் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் காலையில் மேல் அமர்ந்து செல்கின்றார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு:

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில், 20 அடி நீளம் கயிற்றால் காளையை கட்டி இருபுறமும் அவற்றை ஆண்கள் இருபுறமும் இழுத்துப் பிடிக்க, அவற்றை ஒரு சில வீரர்கள் மட்டும் அந்தக் காலையின் முன்னே நின்று காளையின் கொம்பில் உள்ள பரிசு பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள்.

Jallikattu varalaru in tamil pdf || Jallikattu varalaru in tamil wikipedia

Jallikattu Varalaru in Tamil:- பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகங்களிலும் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழ்நாட்டில் ‘முல்லை’புவியியல் பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடி மக்களிடையே இவை பொதுவானது . ஏர் உழுதல் மஞ்சுவிரட்டு என்ற சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் காளைய அடக்கும் வீரர் விளையாட்டு பெயராக பயின்று வருகிறது. கொள்ளக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் கொள்ளேறி தழுவுதல் என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு கவனம்பெற்ற போட்டிகள் :

போட்டிகள் நடக்கும் ஊர் – மாவட்டம்

1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மதுரை
2. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – மதுரை
3. பாலமேடு ஜல்லிக்கட்டு – மதுரை
4. சூரியூர் ஜல்லிக்கட்டு – திருச்சி
5. ஆவரங்காடு ஜல்லிக்கட்டு – திருச்சி
6. கே.ராயவரம் மஞ்சுவிரட்டு – புதுக்கோட்டை
7. வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு – புதுக்கோட்டை
8. அரளிப்பாறை ஜல்லிக்கட்டு – சிவகங்கை
9. அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு – நாமக்கல்
10. சிரா வயல் மஞ்சுவிரட்டு – சிவகங்கை

இவைகள் அனைத்தும் நம் தமிழ்நாட்டில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடக்கும் தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்கள்.

ஜல்லிக்கட்டு பற்றிய தகவல்கள் || Jalli kattu varalaru in tamil meaning

Jalli kattu varalaru in tamil

இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு பெறவேண்டும்.

  • காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் முறையாக பதிவு செய்தல் வேண்டும்.
  • ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
  • காளைகள் ஓடவும் வீரர்கள் அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

எப்போது, ஏன் தடை விதிக்கப்பட்டது:

  • கடந்த வருடம் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கோர்ட் தடை விதித்துள்ளது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றதில் மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, ஜல்லிக்கட்டை கட்டுபாடுகளுடன் நடத்த அனுமதி அளித்தனர்.
  • 2008 ஜனவரி மாதம் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2009 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக அரசு சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
  • 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனவரி 15 முதல், 5 மாதங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தன. 2011 மார்ச் மாதம் வாடி வாசல்களை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கோர்ட் அனுமதி அளித்தது.
  • 2011 ஏப்ரல் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை ‘விலங்குகள் காட்சிப்படுத்துதல்’ பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
  • 2012 ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி உட்பட 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
  • 2014ம் ஆண்டு மே 7-ந் தேதி, ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிபடுத்துதல் பட்டியலில் காளைகள் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெறவில்லை என்பதை. தொடர்ந்து நம் தமிழக மக்கள் வலியுறுத்தியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால்தான் நம் ஜல்லிக்கட்டுக்கு போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியும் என்று மத்திய அரசு கைவிரித்து வருகிறது.

நடப்பாண்டில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் கட்டிகாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2009-ல் திமுக கொண்டு வந்த பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. ஆதலால், மாநில அரசால் சட்டத்தை திருத்த முடியாது” என்று அறிவித்துள்ளார்.

Jallikattu Varalaru in Tamil:- ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டுதோறும் பல மாதங்களாக சொந்த ஊர்களுக்கு செல்லாத மக்கள் கூட ஜல்லிக்கட்டை காண அவர்களின் ஊர்களுக்கு திரும்புகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் வாழ்வில் கலந்துள்ளது. ஜல்லிக்கட்டு இன்று நேற்று தோன்றியது அல்ல.

நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில் மக்கள் காளைகளை துரத்தும் காட்சிகள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான கல் பலகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாருங்கள் எத்தனை பழமையான வரலாற்று ஜல்லிக்கட்டுவிற்கு உள்ளது என்று இதில் கலந்துக் கொள்வதே பெருமை தான் விளையாட்டின் ஒரு பகுதியாக, காளையின் கொம்பில் தங்கம் பதிக்கப்பட்டு, ஓடும் காளையை பிடித்து, பட்டா எடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.

பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயத்தை துணியில் வைத்து கட்டி மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இன்றும் நடந்து வருகிறது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக வெற்றிப் பெரும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பணம் ஆகிய பரிசுத்தொகைய இன்று அளிக்கப்படுகின்றன. இந்த பரிசுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை இளைஞர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.

வீரமும் பாசமும் நிறைந்த ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு போட்டியாக மட்டுமல்லாமல் நம் தமிழரின் வீரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. காங்கேயம் காளை, புள்ளிகுளம் காளை ஆகிய மாடு இனங்கள் இதில் கலந்துக் கொள்கின்றன. இந்த காளைகள் சிறப்பான உணவு, உடற்பயிற்சியுடன் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல செல்லப்பிராணியாக பெருமையுடனும் சீருடனும் சிறப்புடனும் வளர்க்கின்றனர்.

Jallikattu Varalaru in Tamil:- இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அன்றும் இன்றும் என்றுமே இருக்கின்ற மவுசே தனி இந்த காளைகளை உரிமையாளர்கள் விற்கும் சமயத்தில் நான், நீ என போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவணியாபுரம், பீளமேடு ஆகிய பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், காண்டுபட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாப்பூர், வேடன்பட்டி, சேலம் மாவட்டம் திம்மம்பட்டி, தேனி மாவட்டம் பலவரயான்பட்டி ஆகிய இடங்களில் மிக பிரபலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. தமிழகத்தின் வேறு பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன in Tamil

மஞ்சுவிரட்டு ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுகளை விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓட விட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு தான் இந்த ஜல்லிக்கட்டு. சிவகங்கை மாவட்டம் மஞ்சுவிரட்டின் “சொர்க்க பூமியாக” கருதப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தடை எப்போது வந்தது

Jallikattu Varalaru in Tamil:- 2015-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. 2016-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்த தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது. இதனால், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானது.

ஏறு தழுவுதல் இடம் பெரும் சங்க நூல் எது

பழுந்தமிழரின் நூலான கலித்தொகையில் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

Read Also:- தெருக்கூத்து

Leave a Comment