நவராத்திரி வரலாறு – Navarathri History in Tamil

நவராத்திரி வரலாறு – Navarathri History in Tamil

Navarathri History in Tamil

நவராத்திரி வரலாறு:

Navarathri History in Tamil:- நவராத்திரி என்பது பெண்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அம்பாளுக்கு பூஜை செய்து வழிபடும் ஒரு பண்டிகை ஆகும். நவராத்திரி என்பதற்கு “9-இரவுகள்” என்று பொருள். இந்த நவராத்திரியின் சிறப்புகள் மற்றும் எவ்வாறு விரதம் இருந்து அம்பாளை வழிபட வேண்டும் அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

navarathri in tamil || நவராத்திரி பற்றிய பேச்சு

Navarathri History in Tamil:- முன்பு ஒரு காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வரமுனி என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர், மருத்துவம் மற்றும் அனைத்து விதமான கலைகளில் சிறந்து விளங்கினார். இவருக்கு, நிகர் இவர்தான் என்ற தலைக்கனம் அதிகளவில் இவருக்கு ஏற்பட்டது. இதனால், மற்றவர்கள் யாரையும் மதிக்காமல் தலைகனத்துடன் இருந்தார். அகத்தியர், போகர் போன்ற பெரும் முனிவர்களிடம் மகிஷம்(எருமை)போல் உருவம் மாறி அவர்களிடம் துச்சமாக நடந்து கொண்டார்.

இதனால், பெரும் கோபம் அடைந்த முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீ எருமையாக மாறுவாய் என்று அவருக்கு சாபம் விட்டனர். அது போன்று ரம்பன் என்ற ஒரு கொடிய அரக்கன் கடுமையான தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். அவன் தவத்தை ஏற்று அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் அக்னி பகவானிடம் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய வலிமையான மகன் வேண்டும் என வரம் கேட்டான்.

அவர், கேட்ட வரத்தை கொடுத்த அக்னி பகவான் நீ கேட்ட வரத்தை நான் கொடுத்து விட்டேன். இனிமேல் நீ எந்த பெண்ணின் மீது திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாயோ அவள் மூலம் உனக்கு நீ கேட்ட படி ஒரு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

இப்படி அக்னி பகவானின் வரத்தை பெற்று மகிழ்ச்சியான இருந்தான் ரம்பன். இவன், முதன்முதலில் கண்டது ஒரு காட்டெருமை தான் இதனால், அவனுடைய அசர புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. காட்டெருமை மீது காதல் கொண்டு தானும் ஒரு காட்டெருமையாக உரு மாறினான். அந்த காட்டெருமை தான் முனிவர்களால் சாபம் பெற்ற பெற்ற வரமுனி. அசுரனின் வாரிசாக பிறந்தவர் தான் மகிஷாசுரன்.

Navarathri History in Tamil:- அதன் பிறகு மகிஷாசுரன் பல ஆண்டுகள் பிரம்மையை நோக்கி தவம் புரிந்தான். இதனால், மகிஷாசுரனின் முன்பு தோன்றினார் பிரம்மன். தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இவர்களில் யாராலும் என் மரணம் ஏற்படக்கூடாது. ஒரு கன்னிப் பெண்ணால் தான் என்னுடைய மரணம் ஏற்பட வேண்டும் என்று பிரம்மனிடம் வரம் கேட்டான். பிரம்மனும் சிறிதும் யோசிக்காமல் அவன் கேட்ட வரத்தை கொடுத்து அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

அதன் பிறகு, மகிஷாசுரன் நாளுக்கு நாள் மக்களை அதிக அளவில் கொடுமைப்படுத்தினான். கிட்டத்தட்ட 10,000 தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்தினான். இதனால், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் மகிஷாசுரனை அளிக்குமாறு வேண்டிக் கேட்டனர். அவனை வதம் செய்வதற்கு மகாசக்தி மூலம் தான் முடியும் என்று கூறினார்.

இதனால், மும்மூர்த்திகள் மற்றும் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பிராத்தனையை செய்தனர். இவர்களின், வேண்டுதலுக்கு ஏற்ப மக்களின் துன்பத்தை கண்டு பெரும் வேதனை அடைந்த ஆதி சக்தி மகாலட்சுமி உருவத்தில் அவர்கள் தோன்றினாள். ஆதிசக்தி மிகவும் அழகான பெண் வடிவத்தில் அவளுடைய அழகுக்கு ஈடு இணை இவ்வுலகில் யாரும் இல்லை என்பது போல் காட்சியளித்தால்.

சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் தங்களுடைய ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்று திரட்டி அன்னை ஆதி சக்திக்கு அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அது போன்று இந்திரனும், பாலகரனும் தங்களுடைய ஆயுதங்கள் அனைத்தையும் அன்னைக்கு அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள்.

இப்படி இவர்கள் அனைவரும் சிலையாக நின்ற காரணத்தினால் தான் நவராத்திரி “தினத்தன்று” கொலு பொம்மைகள் வைத்து நம் வழிபடுகின்றோம்.

நவராத்திரி விளக்கம்:

• அன்னை ஆதிசக்தி ஆயுதங்களையும், மூவரின் சக்தியின் பலத்தோடு மகிஷாசுரனை அழிக்க போர் மேற்கொண்டால். மகிஷாசுரனை போரில் அழித்து மக்களை காப்பாற்றி தர்மத்தை பூமியின் நிலை நாட்டினார்.

• இந்தப் போராட்டம் ஒன்பது நாட்கள் விடாமல் தொடர்ந்து நடைபெற்றது. இதனால்தான், இது நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்னை ஆதி சக்தி வெற்றி பெற்ற தினமே “விஜயதசிமியாக” கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா || நவராத்திரி இரவில் கொண்டாடப்பட காரணம்:

Navarathri History in Tamil:- பழங்காலத்தில் போர் புரிவதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு. அதில், மாலை நேரம் சூரியன் மறைந்த பிறகு யாரும் போர் புரிய மாட்டார்கள்.

இதனால், படைகள் தங்களது ஓய்வெடுக்கும் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அன்னை ஆதிசக்திக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், சோர்வுகளை நீக்கும் வகையிலும் அன்னையைப் போற்றி ஆடல், பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இது தொடர்ந்து 9-இரவுகளும் நடைபெற்றது. இதனால், தான் நாம் இரவில் நவராத்திரி கொண்டாடுகிறோம்.

நவராத்திரி நாயகிகள்:

• முதலாம் நாள் – சைலபுத்ரி

• இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி

• மூன்றாம் நாள் – சந்திரகாந்தா

• நான்காம் நாள் – கூஷ்மாண்டா

• ஐந்தாம் நாள் – ஸ்கந்த மாதா

• ஆறாம் நாள் – காத்தியாயினி தேவி

• ஏழாம் நாள் – காளராத்ரி தேவி

• எட்டாம் நாள் – மகா கௌரி

• ஒன்பதாம் நாள் – சித்திதாத்திரி

இதுபோன்று, அன்னை 9-வடிவங்களில் காட்சியளிக்கும் தருணம் தான் இந்தியாவில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி சிறப்புகள்:

• நவராத்திரியானது ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்பட வேண்டும்.

• கோடை காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் வரும் நவராத்திரி “வசந்த நவராத்திரி” என்றும், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி “சாரதா நவராத்திரி” என்றும் அழைக்கப்படுகிறது.

• குளிர் மற்றும் கோடை காலங்களில் நோய் நொடிகள் அதிக அளவில் பரவும் இதிலிருந்து மக்களை பாதுகாக்க தேவியை பூஜிக்க வேண்டும். இதனால், தான் நவராத்திரி என்ற ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

• நவராத்திரி தினங்களில் அம்பிகையை வெவ்வேறு புதிய வடிவங்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

• இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக வழிபடுவார்கள்.

• அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக வழிபடுவார்கள்.

• இறுதி மூன்று நாட்களாக குறிப்பிடப்படும் கடைசி மூன்று நாட்களை சரஸ்வதியாகவும் க்ஷ, முப்பெரும் ஆதி சக்தியாகவும் வழிபடுவார்கள்.

• நவராத்திரியின் முதல் நாள் ஆதி சக்தி தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் வதத்திற்கு காரணமாக இருந்த தேவியை வழிபடுகின்றனர். இரண்டாம் நாள் கவுமாரி, குமாரியாக வழிபடப்படுகிறாள். இவளே, ராஜராஜேஸ்வரி ஆகவும் போற்றப்படுகிறாள். மூன்றாம் நாள் கன்யா கல்யாணி என்று அழைக்கப்பட்டு வழிவிடப்படுகிறாள்.

• நான்காம் நாள் மகாலட்சுமியாக வழிபடப்படுகிறாள். இவள் ரோகினி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவ மோகினியாக அலங்கரித்து போற்றப்படுகிறாள். ஆறாவது நாள் தேவி வடிவாக இந்திராணி கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

• ஏழாம் நாள் மகா சரஸ்வதி தேவியாக காட்சியளிப்பதால் “சுமங்கலி தேவி” என்று அழைக்கப்படுகிறாள். எட்டாம் நாள் நரசிம்மிதருமி தோற்றத்தில் வழிபடப்படுகிறாள். இந்த தோற்றத்தில் அன்னை ஆதி சக்தி சினம் தனித்த கோலத்தில் அன்போடு காட்சியளிக்கிறாள்.

• ஒன்பதாம் நாள் அம்பிகை சாமுண்டி மாதா அம்பு அங்குசம் தரித்தல் லலிதா பரமேஸ்வரி ஆக அன்னை ஆதிசக்தி மக்களால் வழிபடப்படுகிறாள் அதற்கு அடுத்து பத்தாம் நாளாக அசுரர்களை வதம் செய்து அம்பிகை வெற்றி பெற்ற தினத்தை விஜயதசமி என கொண்டாடுகிறார்கள்.

• இந்த விஜயதசமி அன்று அன்னை ஆயிசக்தி வெற்றி திருமறாக அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகிறாள் இந்த வடிவத்தில் தேவியை நாம் தரிசனம் செய்து வழிபடுவதால் மனதில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி ஒரு புதுமையான புத்துணர்ச்சியுடன் கூடிய நீடூடிய வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

நவராத்திரி கொலு பொம்மைகள்:

Navarathri History in Tamil:- நவராத்திரி தினத்தன்று மிகவும் கடவுளின் உருவங்களை அழகாக பொம்மைகளாக செய்து கோவில்கள் மட்டும் வீட்டின் பூஜை ரூமில் வைத்து வழிபடுவார்கள். இது பார்க்க மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

நவராத்திரி பற்றிய கட்டுரை:

நவராத்திரி என்றால் என்ன in tamil?

நவராத்திரி என்றால் “9-இரவுகள்” என்று பொருள். புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் “நவராதிரியாக” இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியில் முதன்மையாக திகழ்ந்தவர் யார்?

நவராத்திரியில் முதன்மையாக திகழ்பவர் “அன்னை சக்தி மற்றும் மகிஷாசுரன்” ஆகிய இருவருமே ஆகும்.

நவராத்திரி எப்போது கொண்டாடப்படும்?

நவராத்திரி பூஜை என்பது புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நடைபெறும் பூஜை ஆகும். எனவே, புரட்டாசி மாதத்தில் வளர்பிறை முதல் நவமி வரை 9 நாட்கள் கடைபிடிக்கக்கூடிய நோன்பு விரதம் தான் “நவராத்திரி” நோன்பாகும்.

நவராத்திரி கொலு என்றால் என்ன?

Navarathri History in Tamil:- கொலு என்பதற்கு “அழகு” என்று பொருள். நவராத்திரி அன்று அழகழகான பொம்மைகளை வைத்து கோவில்கள் மற்றும் வீடுகளின் பூஜை அறையில் பூஜை செய்வார்கள். இதில், குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளாக கருதப்படும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் இவ்வழிபாடு முறை அதிக அளவு நடைபெறுகிறது.

Read Also:- மகா சிவராத்திரி வரலாறு

Leave a Comment