நரகாசுரன் வரலாறு – Narakasuran History in Tamil

நரகாசுரன் வரலாறு – Narakasuran History in Tamil

Narakasuran History in Tamil

நரகாசுரன் உண்மை வரலாறு:

Narakasuran History in Tamil:-  நம் இந்தியாவில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடுகின்றோம். ஆனால், குறிப்பாக அளவு கடந்த மகிழ்ச்சியில் நாம் கொண்டாடும் ஒரு பண்டிகை தான் தீபாவளி பண்டிகை.

இந்த பண்டிகை நாம் ஏன் கொண்டாடுகிறோம். எதனால், இதற்கு வெடி வெடித்து, இனிப்பான பலகாரங்கள் செய்து உண்டு மகிழ்கிறோம் என்பது இன்று பலருக்கும் தெரிவதில்லை.

இந்த பண்டிகையானது நரகாசுரன் என்னும் அரக்கனை கொன்ற திருநாளை தான் தீபாவளியாக நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். யார் இந்த நரகாசுரன் எதனால் இவன் கொல்லப்பட்டான் என்பதை பற்றி இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நரகாசுரன் பிறந்த கதை:

திருமாலின் வராக அவதாரத்திற்கும், பூமாதேவிக்கும் மகனாக பிறந்தவர் தான் இந்த நரகாசுரன். இவர், கடுமையான தவத்தினால் பிரம்மனிடம் தன்னுடைய தாய்னால்தான் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தினை பெற்றார். இதனால், அளவு கடந்த அட்டகாசங்களை செய்த நரகாசுரனை அளிப்பதற்காக திருமாலுடைய கிருஷ்ணர் அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக அவதரித்த நராசுரனை வதம் செய்ததாக புராண கதைகள் கூறுகின்றது.

இதுபோன்று நரகாசுரனின் அழிவை தேவர்கள் மட்டும் கொண்டாடாமல் மக்களூம் கொண்டாட வேண்டும் என்று நினைத்த அவருடைய தாய் சத்தியபாமா கிருஷ்ணரிடம் வரம் பெற்றதால் தீபாவளி என்ற ஒரு பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனின் அழிவிற்கு காரணம்:

Narakasuran History in Tamil:-  நரகாசுரன் தன்னுடைய கடுமையான தவத்தால் பிரம்மனை சந்தித்தான் அப்போது பிரம்மனிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தான் தனது தாயைத் தவிர தன்னை வேற யாரும் கொல்லக்கூடாது. தன் தாயின் கையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று கூறி ஒரு வரத்தினை பெற்றான்.

இதனால், அவ்வாறே ஆகட்டும் என்று அவனுக்கு வரம் அளித்தார் பிரம்மன். ஆனால், நரகாசுரன் அந்த வரத்தினை பயன்படுத்திய நாளுக்கு நாள் அவனுடைய அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை, பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்களும், பாலர்கர்களும், கடவுளும் திருமலை சந்தித்து நரகாசுரனை அளிக்குமாறு வேண்டி கொண்டனர்.

கிருஷ்ணாவதாரம்:

இதனால், தேவர்கள் மற்றும் கடவுள்களின் கோரிக்கையை கேட்ட பகவான் மகாவிஷ்ணு அவர்கள், தன்னுடைய எட்டாவது அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தின் போது தான் நரசுரனை அளிப்பேன் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கிறார். அதேபோல் பகவான் மகாவிஷ்ணு பூமாதேவி சத்தியபாமாவாக அவதாரம் எடுத்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்கிறார்.

நரகாசுரனின் மரணம் || who killed narakasura

Narakasuran History in Tamil:- மகா விஷ்ணு உறுதியளித்தது போன்றே நரகாசுரனுக்கும், பகவான் கிருஷ்ணனுக்கும் இடையே கடுமையான போர் நிலவுகிறது. அப்போது, போர்க்களத்தில் சத்தியபாமா தேரை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த தருணத்தில் நரகாசுரன் விட்ட ஒரு அம்பு கிருஷ்ணரை தாக்கி அவர் அங்கேயே மயக்கமடைகிறார். இது கிருஷ்ணரின் ஒரு லீலை தான் என்பது சத்தியபாமாவுக்கு தெரியாது. இதையே ஒரு காரணமாக வைத்து மயங்கி நிலையிலேயே கிருஷ்ணர் இருந்தார்.

இதை கண்ட சத்தியபாமா மிகுந்த கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்து அவனை வதம் செய்தார். சத்தியபாமா போருக்கு அழைக்கும் போது நரகாசுரன் சிறிது யோசிக்காமல் அவருடன் போர் புரிய ஆரம்பித்தார். ஆனால், சத்தியபாமா பூமா தேவியின் அவதாரம் என்பதை நரகாசுரன் உணரவில்லை. அதன் பிறகு நரகாசுரனின் கோரப்பிடியில் இருந்த பெண்கள் அனைவரையும் காப்பாற்றி தேவர்களிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணர்.

நரகாசுரன் கூறிய கடைசி வார்த்தைகள்:

தன்னுடைய தாயின் கையால் வீழ்ந்த நரகாசுரன் இறக்கும் தருவாயில் “என்னுடைய இறப்பிற்கு யாரும் அழக்கூடாது, வருத்தப்படக்கூடாது” என்னுடைய இறப்பை கோலகலமாக அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். 16-வகை பலகாரங்கள் படைத்து செல்வ செழிப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் பெற்றார்.

தீபாவளி அர்த்தம்:

மகனின் கோரிக்கை ஏற்ற சத்தியபாமாவும் நரசுரனை அளித்த நாளை தேவர்கள் மட்டும் கொண்டாடாமல் மக்களும் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் பெற்றார். இதனால், கிருஷ்ணரும் இந்த நாளில் மங்களம் உண்டாகி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று வரம் அளித்தார். அந்த திருநாளை தான் நாம் அனைவரும் இன்று ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

புராணங்கள் கூறும் வரலாறு || நரகாசுரன் தமிழன்

காளிகா புராணம்:

Narakasuran History in Tamil:- பத்தாம் நூற்றாண்டில் காளிகா புராணத்தில் நரகாசுரன் மிதிலாவிலிருந்து வந்து, பிராக்ஜோதிச நாட்டை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, தனவா வம்சத்தின் அரசன் கிராதர்கள் கட்டகாசுரனை போரில் வீழ்த்தி கொன்று அவரது கோட்டையை கைப்பற்றதாக கூறுகிறது.

விஷ்ணுவின் பிற்கால அவதாரத்தால் நரகாசுரன் அழைக்கப்படுவார் என்று முன்பே கூறப்பட்டுள்ளது. நரகாசுரனின் தாயார் சத்திய பாமா தனது மகனுக்கு கூடுதல் ஆயுள் இருக்க வேண்டும் என்றும், அவன் அனைவரையும் விட மிகவும் வலிமை உடையவனாகவும், சக்தி உடையவனாகவும் இருக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் வரத்தை பெற்றார். விஷ்ணு இந்த வரத்தினை அவருக்கு வழங்கினார்.

காமரூபா பகுதியில் முந்தைய காலங்களில் ஆட்சி செய்த மூன்று வம்சங்களில் முன்னோடியாக நரகாசுரன் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. குவகாத்திக்கு பக்கத்தில் உள்ள ஒரு மலைக்கு நரகாசுரன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய நம்பிக்கையுடனும், இந்துக்களின் வழிபாட்டுத் தளமான காமக்கியாவில் உள்ள சக்தி தெய்வத்தை வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.

நரகாசுரனை கொன்றது யார்?

Narakasuran History in Tamil:- திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் தான் நரகாசுரன். இவர் கடுமையான தவத்தால் பிரம்மனிடம் தன் தாயின் கையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தினை பெற்றார். இதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

நரகாசுரனின் உண்மை பெயர் என்ன?

நரகாசுரனின் உண்மையான பெயர் “பவுமன்”. பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த அரக்கர்களை அழிப்பதற்காக பூலோகத்திற்கு வந்த பெருமாள் பூமா தேவியை மணந்தார். இவர்கள், இருவருக்கும் பிறந்த மகன்தான் நரகாசுரன்.

தீபாவளி பண்டிகை எப்படி உருவானது?

நரகாசுரனை வதம் செய்த சத்தியபாமா அந்த நாளை தேவர்கள் மட்டும் கொண்டாடாமல் மக்களும் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் பெற்றார். நரகாசுரனை வதம் செய்த அந்த திருநாளை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாட காரணம் என்ன?

இராமாயண இதிகாசத்தில் இராமர் இராவணனை அழித்து சீதை மீட்டு தன்னுடைய 14-ஆண்டு கால வனவாசத்தை முடித்துவிட்டு தம்பி லட்சுமணனுடன் அயோத்திய நாட்டிற்கு திரும்பிய நாளை அயோத்திய மக்கள் அனைவரும் ஊர் எங்கிலும் விளக்கேற்றி மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த திருநாளை “தீபாவளியாக” கொண்டாடப்படுவதாக சிலரால் கூறப்படுகிறது.

Read Also:- மகா சிவராத்திரி வரலாறு

Leave a Comment