மகா சிவராத்திரி வரலாறு – Maha Shivaratri History in Tamil

மகா சிவராத்திரி வரலாறு – Maha Shivaratri History in Tamil

Maha Shivaratri History in Tamil

மகா சிவராத்திரி வரலாறு || Maha shivaratri history in tamil essay:

இந்த மகா சிவராத்திரி ஆனது இந்து கடவுளான சிவனுக்கு இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் 14-வது நாள் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தியில் நள்ளிரவில் 12-மணிக்கு விரதம் மற்றும் நோம்பு இருந்து, தூங்காமல் கண் விழித்து சிவனை வழிபாடு செய்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இதன் நோன்பு முறை மற்றும் விரத முறைகளை மக்களுக்கு எடுத்து கூறும் நூல் “மகா சிவராத்திரி கற்பம்” என்னும் நூலாகும்.

சிவராத்திரியின் விரத வகைகள் || மகா சிவராத்திரி சிறப்புகள்:

1. மகா சிவராத்திரி

2. மாத சிவராத்திரி

3. நித்திய சிவராத்திரி

4. பட்ச சிவராத்திரி

5. யோக சிவராத்திரி

இது போன்று சிவராத்திரி விரதம் ஐந்து வகையான பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்தினம் சதுர்த்தசியில் இருக்கும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று கூறுகின்றனர்.

சிவராத்திரி உருவாகிய இடம்:

சிவபெருமான் குடியிருக்கும் பஞ்சபூத ஸ்தலத்தில் ஒன்றான அக்னி ஸ்தலமான “திருவண்ணாமலையில் “ தான் முதன் முதலில் மகாசிவராத்திரி உருவாகியது.

சிவராத்திரி கதை:

சிவராத்திரி உருவான கதைகள் பல கூறப்படுகிறது.

இதில் சிவனுக்கு உகந்த மரமான வில்வ மரத்தின் மீது குரங்கு ஒன்று ஒரு சந்தர்ப்ப வேலை காரணமாக மரத்தில் இருந்த ஒவ்வொரு இலைகளையும் பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தது. இப்படி ஒரு இரவு முழுவதும் அந்த குரங்கு அந்த மரத்தின் இலைகளை பறித்து வீசிக் கொண்டிருந்தது.

அந்த வில்வ மரத்தின் அடியில் ஒரு “சிவன் லிங்கம்” வைத்துப் பிரதிஷ்டை செய்து வந்துள்ளனர். அந்த வில்வ மரத்தின் இலை ஒன்று எதிர்பாராத விதமாக சிவன் மீது விழுந்தது. மனம் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அந்த குரங்கை அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக அவதாரம் எடுப்பாய் என்று வரம் கொடுத்தார்.

சிவபெருமான் வரம் கொடுத்தது போலவே அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தி மன்னராக அவதாரம் எடுத்தார்.

மன்னராக பிறந்த பிறகும் சிவன் மீது இருந்த பக்தி காரணமாக இந்திரன் பூஜை செய்த விடங்க லிங்கத்தை பூஜித்து சிவனின் அருள் ஆசி பெற்றார்.

குரங்கு வடிவில் இருந்த மன்னனின் வரலாறு:

இந்தக் குரங்கு வடிவில் இருந்த அரசனின் வரலாறு கைலாய மலையில் நடைபெற்றதாகவும் காட்டில் வேட்டையாட வந்த ஒரு வேடனிடம் இருந்து இந்த குரங்கு தப்பித்து அந்த காட்டில் இருந்த ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அதிலிருந்து இலைகளை எல்லாம் தன் நிலை மறந்து விடிய விடிய கண் விழித்து சிவனுக்கு பூஜை செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரியை “லிங்கோத்பவ காலம்” என்றும் அழைப்பார்கள். நள்ளிரவு நேரத்தில் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் நன்று.

சிவராத்திரி அன்று சிவனுக்கு நான்கு விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

1. முதல் காலம் பூஜையில் பஞ்ச காவியம் அபிஷேகம் நடைபெறும்.

2. இரண்டாவது காலத்தில் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

3. மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

4. நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது மிகவும் புகழ் பெற்ற அபிஷேகம் ஆகும்.

சிவராத்திரி தினத்தன்று உலகமெங்கிலும் உள்ள சிவன் கோவில்களில் சிவன் பெருமானை வழிபடுவது மிகவும் நன்மையை உண்டாக்கும். சிவனை வில்வ மர இலைகளால் முடிந்த அளவு பூஜை செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஏனென்றால், வில்வ மர இலை சிவனுக்கு மிகவும் உகந்த இலை என்பதால் அதில் அர்ச்சனை செய்வதால் பல நன்மைகள் ஏற்படும். அந்த இலைகளை பிரசாதமாக கொண்டு வீட்டில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் “சுபிட்சம்” உண்டாகும்.

பிரம்மா – விஷ்ணுவின் மாபெரும் சண்டை || சிவராத்திரி காரணம்:

படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கும், காக்கும் கடவுள் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போர் நிலவியது. அதற்கு தீர்வு காண சிவபெருமானை தேடி வந்தனர்.

அவர்களில் யார் பெரியவர் என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு ஒரு சோதனையை நடத்த முடிவு செய்தார். அந்த சோதனையில் தன்னுடைய தலையையும், பாதத்தையும் யார் ஒரே நேரத்தில் காண்கிறார்களோ அவரை உங்களில் பெரியவர் என்று கூறிய சிவபெருமான் ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஜீவ ஜோதியாய் காட்சியளித்தார்.

இந்த சோதனையை ஏற்றுக் கொண்ட மகாவிஷ்ணு ஆகாயத்திற்கும் பூமிக்கும் காட்சியளித்த சிவபெருமானின் காலடியை காண பூமியை நோக்கி விரைவாக பயணம் செய்தார். பிரம்மனும் சிவபெருமானின் தலையின் உச்சி காண்பதற்காக வானத்தை நோக்கி பயணம் செய்தார்.

இப்படி விஷ்ணுவும், பிரம்மனும் சிவனின் தலையையும், பாதத்தையும் காண்பதற்காக கடுமையாக முயற்சி செய்தும் கடைசிவரை காண இயலவில்லை. இதனால் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட மகாவிஷ்ணு மீண்டும் விண்ணுலகிர்க்கு திரும்பினார்.

Maha Shivaratri History in Tamil:-  எவ்வளவுதான் உயர உயர பறந்தாலும் பிரம்மனால் சிவனின் தலை உச்சியைக் காண இயலவில்லை அப்போது சோர்வடைந்த பிரம்மன் பூமியை நோக்கி ஒரு தாழம்பூ விழுந்து கொண்டிருந்ததை பார்த்தார். பிரம்மன் அப்பொழுது அந்த தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேள்வியை கேட்க அதற்கு தாழம்பூவோ நானோ சிவனின் தலையில் இருந்து விழுந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியது.

நீண்ட நாட்களாக பயணம் செய்தும் என்னால் பூமியை அடையவில்லை என்று அந்த தாழம்பூ கூறியது. அதற்கு பிரம்மன் தாழம்பூவிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். நான் சிவனின் தலை முடியை பார்த்து விட்டேன் என்று அவரிடம் சாட்சி கூறுமாறு தாழும்புவிடம் கேட்டுக் கொண்டார். தாழம் அதற்கு சரி என்று கூறியது.

இருவரும் சிவனை நோக்கி பயணம் செய்தனர். சிவனைக் கண்டதும் தாழம்பூ பிரம்மன் கூறியவரே சிவபெருமானிடம் கூறியது. தாழம்பூ பொய்கூர்வதை அறிந்த சிவன் பெரும் கோபம் அடைந்தார். இதனால் ஜோதி வடிவமாய் காட்சி அளித்த சிவபெருமான் அக்கினி கடலாய் மாறினார்.

இந்த செய்தியை அறிந்த இந்திரன், குபேரன், அக்கினி, எமன் போன்ற எட்டு பாலகர்கள் மற்றும் தேவர்களும் ஒன்று சேர்ந்து சிவனைச் சாந்த நிலைக்கு மாறும் படி கடுமையாக வேண்டினர்.

இவர்களின் கடுமையான வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் ஓர் பெரும் மலையாய் அடங்கி அதன் உச்சியில் சிறிய வடிவில் ஜோதியாய் காட்சியளித்தார். இதனைக் கண்ட அனைவரும் வணங்கினார்கள். இந்த திருநாளே “மகா சிவராத்திரி” ஆக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்.

சிவன் – பார்வதி || மகா சிவராத்திரி சிறப்புகள்:

மகா சிவராத்திரியின் மிக முக்கியமான புராணக் கதைகளில் ஒன்று தான் சிவன் மற்றும் சக்தியின் திருமண புராணக் கதை. இந்த கதை சிவன் தன்னுடைய அன்பு மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வை இந்த கதை விளக்குகிறது.

இந்தப் புராணக் கதைகளின் படி, சிவன் பார்வதியை திருமணம் செய்த நாள் தான் சிவராத்திரி என்று மக்களால் கொண்டாடப்படுகிறது.

சிவலிங்கம் உருவான வரலாறு || Maha shivaratri history in tamil pdf

Maha Shivaratri History in Tamil:- மகாசிவராத்திரி உருவானதை விட சிவலிங்கம் உருவான கதை மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். மகா சிவராத்திரி அன்று தான் சிவன் தன்னை லிங்க வடிவில் காட்சியளித்தார் என்பது இன்றளவும் மக்களால் நம்பப்படுகிறது.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் இந்த மகா சிவராத்திரி அன்று மிகவும் புனிதமான நாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சிகரமான இரவு மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.

இந்த மகா சிவராத்திரியை கொண்டாட பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை மிகவும் உள்ள தூய்மையோடு வணங்குகின்றனர். இதனால், பக்தர்களுக்கு மனதில் இருக்கும் அச்சங்கள், அழுத்தங்கள் அனைத்தும் நீங்கி மிகவும் ஒரு புத்துணர்ச்சியான மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்கின்றன என்பது பக்தர்களின் கருத்தாக இன்றளவும் கூறப்படுகிறது.

இதனால், சிவராத்திரி அன்று சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

வில்வ மர இலைகள்:

Maha Shivaratri History in Tamil:- சிவராத்திரி அன்று காட்டில் பல விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடும் ஒரு வேட்டைக்காரன் மிகுந்த பசியுள்ள ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொண்டான். இப்போது சிங்கத்தின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு வில்வ மரத்தின் மீது ஏறினான். அப்போது சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் அவன் இறங்கும் வரை இரவு முழுவதும் காத்திருந்தது.

இதனால், எங்கு தன்னை அறியாமல் நம் தூங்கி விடுவோமோ என்று எண்ணிய வேட்டைக்காரன் அந்த மரத்தின் மீது இருந்த வில்வ இலைகளை பறித்து கீழே போட்டான் அப்போது அந்த மரத்தின் கீழே இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தது.

இதனால், வில்வ இலைகளில் தனக்கு அர்ச்சனை செய்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொன்ற வேட்டைக்காரனின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனை சிங்கத்திடமிருந்து இருந்து காப்பாற்றினார். இந்த புராணக் கதையும், சிவராத்திரி அன்று வில்வ இலைகளில் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

Read Also:- இராமயண கதை வரலாறு

Leave a Comment