Ramayanam History in Tamil – இராமயண கதை வரலாறு

Ramayanam History in Tamil – இராமயண கதை வரலாறு

Ramayanam History in Tamil

Ramayanam History in Tamil:- இராமயண கதை வரலாறு: கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்ற ஒரு சமஸ்கிருத காவிய கதை தான் இந்த ராமாயணம். அயோத்தியின் இளவரசர் ராமனின் மனைவியான சீதையை பத்து தலை கொண்ட இராவணன் சிறையிடுவார். இதனால், ராமர், அனுமனின் உதவியுடன் சீதையை தேடும் நிகழ்வுதான் இராமாயண கதை.

இராமாயணம் கதை சுருக்கம் || ராமாயணம் கதை புத்தகம்

“வால்மீகி முனிவர்” இராமாயண கதையை வட மொழியில் இயற்றியுள்ளார். இது ஒரு “சமஸ்கிருத காவிய” கதையாகும். இந்த இராமாயணத்தில் 7-காண்டங்களும், 24,000 வசனங்களும் உள்ளடங்கியுள்ளது.

இந்தியாவின் மிகவும் பழமையான இலக்கிய நூல்களில் இந்த இராமாயண படைப்பும் ஒன்றாகும். இதில், முனிவர்களின் போதனை நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

ராமரின் தோற்றம்:

Ramayanam History in Tamil:- ராமர் தனது மனைவி சீதை மீது வைத்திருந்த தயராத அன்பையும் பற்றையும் அவரது மனைவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை திறம்பட கூறும் ஒரு காவியம் தான் இந்த ராமாயணம்.

ராமாயணத்தை பொறுத்தவரை கடவுள் மகாவிஷ்ணுவின் குழந்தை அவதாரமாக தோன்றியவர்தான் ராமர். அவரது மனைவியை மீட்பதற்காக அவர் எவ்வாறு பத்துதலை இராவணிடமிடம் போரிட்டு வெற்றி பெற்று சீதையை மீட்டார் என்பதை தெளிவாக விளக்கும் ஒரு காவியம் ஆகும்.

ராமரின் அவதாரம்:

அயோத்தியை ஆட்சி செய்த இளவரசர் ராமர் அழகான இளவரசியான சீதா தேவியாரை திருமணம் செய்தார். இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர்.

இராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள்:

• ராமர்

• சீதா

• லட்சுமணன்

• இராவணன்

• அனுமன்

• சுக்கீரவனன்

ராமர்:

இந்த இராமாயணக் கதையில் வரும் கதாநாயகன் அயோத்தி அரசவையின் இளவரசர் ராமர் ஆவார். அயோத்திய அரசர் தசரதனின் மூத்த மகன் தான் ராமர். ரமர், மக்களை பேணி பாதுகாக்கும் மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் மிகவும் இரக்க குணம் உள்ள மிகச் சிறந்த ஒரு நல்லொழுக்கமான மக்களால் நேசிக்கப்பட்ட இளவரசராக திகழ்ந்தார். கைகேயியின் சூழ்ச்சியால் அவர் அயோத்தியில் இருந்து 14-ஆண்டு காலம் வனவாசம் புகுந்தார். இந்த கைகை ராமரின் இளைய தாய் மற்றும் தசரதனின் இளைய மனைவி ஆவாள்.

சீதை:

மிதிலைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஜனகாவின் மகள்தான் பேரழகி சீதை ஆவாள். பெண்களின் நல்லொழுக்கம், தூய்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சீதை தான். சீதை அயோத்திய இளவரசர் ராமரின் மனைவி ஆவாள்.

லட்சுமணன்:

அயோத்திய அரசர் தசரதனின் இளைய மகன் தான் லட்சுமணன். இவர், ராமரின் தம்பி ஆவார். ராமரின் முழு விசுவாசியாக இருந்த லட்சுமணன் ராமர் வனவாசம் போகும்போது அவர்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

இராவணன்:

இலங்கைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் தான் இந்த இராவணன். இவருக்கு 10-தலைகள் மற்றும் 20-கரங்கள் உள்ளது. 10,000-ஆண்டுகால மிகக் கடுமையான தவம் புரிந்ததால் தெய்வங்கள் பூதங்கள் மற்றும் பேய்கள் இதுபோன்று எந்த சக்தியாலும் என்னை கொள்ள முடியாது என்ற ஒரு வாக்கை பிரம்மனிடம் இருந்து பெற்றார்.

பிரம்மனிடமிருந்து தனது வெகுமதிப்பை பெற்ற ராவணன் பூமியில் சில தொல்லைகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தத் தொடங்கினார். குறிப்பாக முனிவர்கள் செய்யும் நற்செயல்கள் அனைத்தையும் தனது சக்தியை பயன்படுத்தி பல இடையூறுகளையும் தொண்டர்களையும் செய்தார் இராவணன்.

இதனால், முனிவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவை வேண்டி அவரிடம் முறையிட்டனர். முனிவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நினைத்த மகாவிஷ்ணு ராமர் என்னும் மனித அவதாரம் எடுத்து இராவணனை அளித்தார். இந்த மனித அவதாரம் தான் இராமாயண காவிய கதையாகும்.

அனுமன்:

இராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்பதற்காக ராமருக்கு உதவி செய்யும் ஒரு அறிவுமிக்க புத்திசாலித்தனமான குரங்கு அவதாரம் தான் இந்த அனுமன்.

சுக்ரீவனன்:

இராட்சியத்தின் ஆட்சியாளராக இருந்த சுக்ரீவனன் என்ற குரங்கு அவதாரம் அவரது, சிம்மாசனம் தனது சகோதரர் வாலியின் சூழ்ச்சியால் பரி போனது. சீதாதேவி அம்மையாரை கண்டுபிடிக்க ராமருக்கு சுக்ரீவனன் உதவிய காரணத்தால் அதற்கு பதிலாக வாலியை தோற்கடித்து சுக்ரீவனுக்கு மீண்டும் அவரது ஆட்சியை திரும்ப பெற உதவினார் ராமர்.

இராமாயணம் உருவான வரலாறு || ramayanam story in tamil pdf free download

Ramayanam History in Tamil:- அயோத்திய அரசர் தசரதனின் மூத்த மகன் தான் இளவரசர் ராமர். இவர், இளவரசி சீதா தேவியை திருமணம் செய்தார். தனது மகனுக்கு இளவரசர் பட்டம் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய ராமரின் இளைய தாயான கைகேயின் சூழ்ச்சியால் ராமர் 14-ஆண்டு காலம் சீதா தேவியுடன் நாட்டை விட்டு வெளியேறி வனவாசத்தில் வாழ்ந்தார்.

இவர்களுடன், ராமரின் தம்பி லட்சுமணனும் நாட்டை விட்டு வெளியேறினார். இவர்கள், காட்டில் தங்கி இருந்தபோது இலங்கையை ஆட்சி செய்த இராவணன் என்ற மன்னரால் சீதா தேவி கடத்தப்பட்டாள். இதனால், ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் அனுமன் என்ற குரங்கு படையின் உதவியுடன் சீதையை தேடும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தான் சீதை இலங்கையில் இராவணனால் கடத்தி சிறை அடைக்கப்பட்டாள் என்ற செய்தி ராமனுக்கு தெரிய வந்தது. இந்த செய்தியை அறிந்த ராமர் தனது பாடையில் உதவியுடன் சீதாதேவியை காப்பாற்ற இலங்கை புறப்பட்டார்.

பிறகு பத்து தலை கொண்ட சாவனிடம் போரிட்டு சீதாதேவி அம்மையாரே காப்பாற்றினார் இருப்பினும் ராமனுக்கு சீதையின் கற்பு மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், தனது கற்பை உண்மை என்று நிரூபிக்க சீதாதேவி தீயில் இறங்கினாள். அவள், உண்மையானவள் என்பதால் நெருப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை.

ராமரின் குடும்ப உறுப்பினர்கள்:

தசரத மன்னன் – அயோத்தியின் அரசர் மற்றும் ராமரின் தந்தை ஆவார்.

கௌசல்யா – ராமரின் தாய் மற்றும் தசரதரின் முதல் மனைவி ஆவார்.

கைகேயி – தசரதனின் இரண்டாவது மனைவி மற்றும் ராமரின் இளையதாய் ஆவாள். இவள் தனது மகன் பரதனுக்கு இளவரசர் பட்டம் வழங்க வேண்டும் என்பதற்காக ராமரை 14-ஆண்டு காலம் வனவாசம் அனுப்பினாள்.

பரதன் – தசரதனின் இளைய மனைவியான கைகேயின் மகன்தான் இந்த பரதன். ராமரை வனவாசத்திற்கு தனது சூழ்ச்சியால் கைகேயி அனுப்பியதால் அந்த துயரத்தில் தசரதன் இறந்து விட்டார். இதனால், பரதன் அரசனாக சிம்மாசனத்தில் ஏற விரும்பவில்லை. ராமர் வரும் வரை அவரது காலணியை சிம்மாசனத்தில் வைத்து அவரை மன்னர் என கருதி வழிபட்டு வந்தார்.

சுமித்திரை – லட்சுமணன் மற்றும் சத்ருணன் ஆகிய இரட்டை சகோதரர்களின் தாய் மற்றும் தசரத மன்னனின் இன்னொரு மனைவி ஆவாள்.

இராமாயணத்தின் சிறப்புகள்:

• 1987 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மிக பிரபலமான தொலைக்காட்சி தொடரான ராமாயணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

• இதனால், உலகில் 200 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களால் கவரப்பட்ட தொடராக ராமாயண தொடர் பார்க்கப்பட்டது.

• 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராமாயணம் தொலைக்காட்சிகளில் ஒரு புதிய நிலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

• ராமாயணத்தின் ஏழு புத்தகங்களின் ஓவியங்கள் மூன்று பாணிகளில் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 17-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மேவர் கலைஞரான சாகிப் தின் எழுதிய இரண்டு புத்தகங்களும் உள்ளடங்கும்.

• ஏழு புத்தகங்களில் நான்கு மற்றும் ஐந்தில் ஒரு பகுதி பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. மீதி உள்ள இரண்டு புத்தகங்கள் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறது.

ராமாயணம் கதை சுருக்கம் || ராமாயணம் முழு கதை pdf

ராமர் பிறந்த இடம் எது?

Ramayanam History in Tamil:- ராமர் பிறந்த இடமாக கருதப்படுவது அயோத்தி ஆகும். இந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவதற்காக பல பிரச்சினைகள் நடைபெற்றது. இதனால், அங்கு இருந்த மசூதியை இடித்து தற்போது அங்கு ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இராமாயணம் எந்த மொழியில் எழுதப்பட்டது?

இந்தியாவின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தான் இந்த சமஸ்கிருதம் இந்த மொழியை வடமொழி என்ற பெயரிலும் அழைப்பார்கள். இந்த மொழி பெரும்பாலும் தற்போது பேச்சு வழக்கில் அதிகளவில் இல்லாத மொழியாக கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் தான் ராமாயணம் முதன் முதலில் எழுதப்பட்டது.

இராமாயணத்தை தமிழில் எழுதியவர் யார்?

இராமாயணம் முதன் முதலில் வால்மீகி என்ற முனிவரால் சமஸ்கிருத மொழியில் இற்றப்பட்டது. அதன் பிறகு, தமிழ் புலவர்களின் மிகவும் புகழ்பெற்ற புலவரான கம்பர் என்ற புலவரால் இராமாயணம் முதன் முதலில் தமிழில் எழுதப்பட்டது.

வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?

வால்மீகி என்ற முனிவர் இந்தியாவின் புகழ் பெற்ற இரண்டு இதிகாச கதைகளில் ஒன்றான இராமாயண என்ற கதையை வடமொழியில் முதன் முதலில் இயற்றினார். இவர், ஒரு வட இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி எங்கு அமைந்துள்ளது?

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமாகவும் அயோத்தி மாநகராட்சி உள்ளது. இந்த அயோத்தி சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

தசரதன் யார்?

கோசல நாட்டின் மன்னன் நான் இந்த தசரதன். இவர் ஒரு சூரிய குலத்தை சேர்ந்தவர் ஆவார். 10-தேர்களை இவர் ஒற்றை ஆளாய் இயக்குவதில் மிகவும் வல்லமை பெற்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் யார்?

ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் வால்மீகி என்ற முனிவர் ஆவார்.

வால்மீகியின் இயற்பெயர் என்ன?

வால்மீயின் இயற்பெயர் ரத்னாகர் ஆகும்.

ராமர் கோவில் எந்த மாநிலம்?

Ramayanam History in Tamil:- ராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவின் குழந்தை அவதாரமாகும். ராமர் பிறந்த இடமான உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தி மாவட்டத்தின் நிர்வாக தலைமை இடமான அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது.

Leave a Comment