மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு – History Of Meenakshi Amman Temple

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது தான் இந்த மீனாட்சியம்மன் கோவில். பண்டைய காலத்தில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனின் கனவில் வந்த சிவபெருமான் அவன் கடம்பாவன் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும் இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்து தந்திருக்கிறார்.
இத்திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மேலும் இந்த கோவிலில் எட்டு கோபுரங்களும் இரண்டு விமானங்களும் அமைக்கப்பட்டுள்ளது இங்கு உள்ள விமானம் எனப்படும் கருவறை விமானம் உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட வரலாறு
மீனாட்சி அம்மன் திருக்கோவிலை 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கவிலை கட்டுவதற்கு பல்வேறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக கிழக்கு கோபுரம் கிபி 1216 முதல் 1238 ஆண்டுகளும், மேற்கு கோபுரம் கிபி 1323 ஆம் ஆண்டிலும், தெருக்கி அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கோபுரம் கிபி 1559 ஆம் ஆண்டிலும் வடக்கு கோபுரம் கிபி 1564 முதல் 1574 என கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு கடைசி வரை முடியாமலேயே இருந்திருக்கிறது.
பின்னர் தேவகோட்டை நகரத்தார் வம்சத்தை சேர்ந்த வாய் நகரம் குடும்பத்தாள் 1878 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களில் தெற்கு கோபுரம் மட்டுமே மிக உயரமானது இதன் அடி சுமார் 160 அடியாக இருக்கிறது.பண்டைய காலத்தில் பாண்டியர்கள் சேரர் சோழர் என்ற மூன்று பெரும் சாம்ராஜ்யங்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.
இதில் பாண்டி அவர்கள் கட்டிடக்கலையில் கைதேர்ந்தவராகவும், சோழர்களும் கட்டிடக்கலையில் மிக கைதேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர்.மதுரை மாநகரம் என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருவது உடனே மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் தான்.இந்த மதுரையில் உள்ள கோவில்தான் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தலைநகரமாக இருந்து வந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள குளம்

பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது இக்கோவில் பல்வேறு நூற்றாண்டுகளாக கட்டப்பட்டிருந்தது.அவர்கள் ஆட்சியின்போது பல்வேறு படை எடுப்புகள் நாளும் இக்கோவில் சேதம் அடைந்து மறுபடியும் மறுபடியும் கட்டப்பட்டு கைமாறிக் கொண்டே இருந்திருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒரு மிகப்பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் இந்த குலத்திற்கு பெயர் பொற்றாமரை குளம்.சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தை எடுத்து அதனை பூமியில் ஓர் இடத்தில் கீறியதாகவும் அவ்வாறு கூறும் பொழுது சிறு குளம் ஏற்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.சிவபெருமான் தன் மீது கொண்ட பக்தியினால் ஒரு நாரைக்கு இந்த குளத்தில் ஒரு மீன்களோ அல்லது வேறு பல உயிர்களை வாழாது என்றும் இந்த குளத்தில் எந்த ஒரு சிறு உயிர்களும் இல்லாதிருப்பது அனைவரையும் வியக்கத்தக்கது.
கடைசியில் இப்போது இருக்கும் அந்த நான்கு கோபுரங்களும் நாயக்க மன்னர்களால் கட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்ட தெரிகிறது.
1000 ஆண்டுகள் கட்டப்பட்டுள்ள மீனாட்சி அம்மன் கோவில்
இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது என்பதை சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.
1.கோவில் உள்ளே அமைந்திருக்கும் சுவாமி கோபுரம் கிபி 1168 முதல் 1675 வரை கட்டி உள்ளார்கள்.
2.நான்கு புறங்களும் அமைந்திருக்கும் ராஜகோபுரம் ஆனது கிபி 1216 முதல் 1338 ஆண்டுகள், முன்புறம் இருக்கும் ராஜகோபுரம் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது.
3.கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் அம்மன் சன்னதி கோபுரம் கிபி 1627 முதல் 1628 ஒரே ஆண்டில் கட்டி முடித்து இருக்கிறார்கள்
4.அடுத்தபடியாக மேற்கு இருக்கும் மிகப்பெரிய முன்வாயில் ராஜகோபுரம் கிபி 1315 முதல் 1345 வரையில் சுமார் 30 ஆண்டுகள் ஒரே ஒரு கோபுரம் மட்டும் கட்டப்பட்டிருந்தது.
5.வடக்கு ராஜகோபுரம் கிபி 1564 முதல் 1572 வரை கட்டப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக கட்டப்பட்டு வந்த இத் திருக்குறளின் சிறு சிறு பணிகள் கடைசியாக 1975 ஆம் ஆண்டு சேர்வைக்காரர் மண்டபம் என்னும் மண்டபம் கடைசியாக கட்டப்பட்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் கிபி 1168 முதல் 1975 ஆம் ஆண்டு வரை இத்தனை வருடங்களாக ஒரு கோவிலை கட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
Read Also :- தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள்
பாண்டிய மன்னர்களின் வரலாறு

தற்போது தமிழ்நாட்டில் உள்ள தென் பகுதி மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளை அனைத்தையும் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.
சங்க காலத்தில் தோன்றிய பாண்டிய தேசத்தில் வாழ்ந்த மன்னர்கள் தமிழுக்கென்று மாபெரும் சங்கங்களை கட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். உலகில் எவராலும் செய்ய முடியாத அதாவது தம் பேசும் மொழிக்கு முன்னுரிமை கொடுத்த ஒரே மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் மட்டும்தான்.
இவர்கள் தங்களுடைய சின்னமாக இரண்டு மீன்களை வைத்திருக்கின்றனர். பாண்டியர் மன்னர்களை பெருமைப்படுத்தும் வகையில் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளும் மீன் சின்னமானது பொறிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய பெருமைக்குரிய பாண்டிய மன்னர்களின் பெயர்களை பற்றி பார்ப்போம். மாறன் வழுதி சடையவர்மன் என்று பொட்டுகளை சேர்த்துக் கொண்டனர். ஆனால் இவர்களின் குலத்தின் பெயர் பாண்டியர்கள் என்று சொன்னால் தான் அனைவராலும் அறியப்படும்.பாண்டிய மன்னர்களின் வரலாறு சுமார் கிபி 900 ஆண்டுகளிலிருந்து அனைத்து சான்றுகளும் தெளிவாக கிடைக்கப் பெற்று இருக்கிறது.
மதுரையை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். தான் பேசும் தமிழ் மொழிக்கு இயல் இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழுக்கு கடைச்சங்கம் அமைத்து வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால் மாபெரும் குமரிக்கண்டமானது கடலுக்குள் மூழ்கி விடப்பட்டதாக மாபெரும் ஆராய்ச்சிகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குமரிக்கண்டத்தின் சுவடுகளை இன்றும் நாம் தெளிவாக பார்க்க முடியும்.
பண்டைய காலத்தில் தோன்றிய நாகரிகமானது ஆற்றங்கரை ஓரத்தில் தோன்றி இருப்பதாகவும். ஆறுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும் பல்வேறு வகையான, பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.
இக்கோவில் கட்டிய ஆரம்ப காலத்தில் கோவிலின் பெயரானது திரு ஆழ்வாய் உடைய நாயனார் என்று வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இத்திருக்கோவில் அமைந்திருக்கும் அம்மனின் பெயர் “திருக்காம கூட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்” என்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
காலங்கள் மாறிக்கொண்டே இருந்ததால் தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று இக்கோவிலுள்ள தெய்வங்கள் அழைக்கப்படுகின்றனர்.மீனாட்சி அம்மனை திருமணம் செய்வதற்காக ஈசன் திருமண கோலத்தில் வந்ததால் சுந்தரேஸ்வரர் என்றும் சொக்கன் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.
திருக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம்

மேலும் இந்த ஆலயத்தின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணிலடங்காத சிறப்புக்கள் கொண்ட இக்கோவிலில் ஒரு ஆயிரம் கால் மண்டபமும் உள்ளது.
இந்த மண்டபத்திற்கு உள்ளே எண்ணற்ற பழங்கால தெய்வங்களின் சிலைகள் மற்றும் திரு உருவப் படங்கள் மற்றும் பண்டைய கால நாணயங்கள் ஆகியவை காணப்படுகிறது.
மேலும் இதன் உள்ளே சுந்தரேஸ்வரர் எவ்வாறு மீனாட்சி அம்மனை கரம் பிடித்தார் என்பதை பற்றிய முழு ஓவிய படம் அமைந்துள்ளது இந்த ஆயிரம் கால் மண்டபத்தின் மிகப்பெரிய சிறப்பாகும்..
மீனாட்சி அம்மனின் திருவிழா நடக்கும் நாள்

சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு மாபெரும் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படும். மதுரையை ஆட்சி செய்யும் செங்கோலை ஏந்திய பட்டத்து அரிசியாக முடி சூட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை மாதத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாவானது தொடங்கும்.
தினம் தினமும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வளம் வந்து கொண்டிருப்பார்கள். திருவிழாவின் ஐந்தாவது நாளில் தங்கத்தால் ஆன குதிரையில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
திருவிழா நடைபெறும் ஏழாவது நாளில் யாழின் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அதிகார நந்தி வாகனத்தில் சுந்தரேஸ்வரர் காட்சியளித்தும் காணக் கிடைக்காத அற்புத காட்சிகள்.மொத்தம் பத்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நகைகளை அணிவித்து மீனாட்சியம்மனை அழகாக ஜோடித்திருப்பார்கள்.
அதுவும் பட்டாபிஷேக நாள் என்று கொஞ்சம் கூடுதலாக நாய்களை போட்டு பக்தர்களுக்கு மிகப்பெரும் கோலாகலத்துடன் காட்சிகளை தருவார்.வெள்ளி சிம்மாசனம் தங்க சிம்மாசனம் தங்கத்தால் ஆன குதிரை என்று மதுரை நகரை வலம் வரும் மீனாட்சி அம்மனைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
Read Also :- மூலிகைச் செடிகளின் பயன்கள்
மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு
இந்த கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இக்கோவிலில் 8 கோபுரங்களும் இரண்டு விமானங்களும் உள்ளது. எட்டு வெள்ளை நிற யானைகளும் 64 சிவலிங்கங்களும் 32 கருஞ்சீர்பங்களும் கருவறை விமானங்களை தாங்கி நிற்கிறது.
இத்திருக்கோவில் தெற்கு வடக்காக 792 அடியும் கிழக்கு மேற்காக 842 அடியும் உள்ளது. கோவிலுக்கு முன்பாக இருக்கும் நான்கு கோபுரங்களும் மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கோயிலுக்குள்ளேயே பத்து மிகப்பெரிய அழகுமிக்க மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அஷ்ட சக்தி மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் ஒவ்வொரு மண்டபத்திற்கும் ஒவ்வொரு தனித்தனி சிறப்புக்கள் அமைந்துள்ளது மேலும் அவை வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டு முழுமையாக்கப்பட்டுள்ளன.இந்த மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க காலை 5:30 மணியில் இருந்து மதியம் 12:30 மணி வரை அம்மனை தரிசிக்கலாம்.
மேலும் வருடத்தில் உள்ள 12 மாதங்களும் அதாவது மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சித்திரை மாதத்தில் மட்டுமே முழுமையான திருவிழா கொண்டாடப்படும் அதுவும் சித்திரை பௌர்ணமி நாளில் இந்திரன் வந்து மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரனையும் வணங்குவதாக புராணங்கள் கூறப்படுகிறது.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .
I think the admin of this website is actually working
hard in support of his website, for the reason that here every material is quality based
stuff.