உலகின் முதல் குடைவரை கோவில்

தமிழகத்தில் உள்ள கோவில்கள் – Temples in Tamil Nadu

Post views : 136 views

தமிழகத்தில் உள்ள கோவில்கள்

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள்
சுற்றுலா தளங்கள்

தமிழகத்தில் உள்ள கோவில்கள் – Temples in Tamil Nadu – தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் உலகிலேயே தமிழ் இனம் மட்டும்தான் மிகவும் பழமையான நாகரீகத்தைக் கொண்டது என்பது அனைவரும் நன்கு அறிவர். பல்வேறு வகையான வியக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களும் சிற்பங்களும் தமிழகத்தில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் சுற்றுலா தளங்கள் என்று கூறினால் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி கொடைக்கானல் போன்றவைகள் தான். இங்கு இயற்கை காட்சிகள் நிறைந்து இருந்தாலும். கட்டிடக்கலைகள் என்று சொல்லக்கூடிய கோவில்கள் இங்கு அதிகம் காணப்படுவதை கிடையாது.

வாருங்கள் இப்போது நாம் தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை பற்றி பார்ப்போம்.

1. உலகின் முதல் குடைவரை கோவில்

உலகின் முதல் குடைவரை கோவில்

மிகப்பெரிய பாறைகளை குடைந்து கட்டப்படும் கோவில்களே குடைவரை கோவில்கள் என்று அழைக்கப்படும். இவ்வாறு உலகின் முதன் முதலில் கட்டப்பட்டுள்ள கொடைவரை கோவில் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.

விநாயகருக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த திருக்கோவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உள்ள பிள்ளையார்பட்டி என்கின்ற ஊரில் அமைந்துள்ளது. நீங்கள் இதுவரை எங்கும் பார்க்க முடியாத பாறைக்குள் அமைந்துள்ள கோவிலை இங்கு நீங்கள் பார்க்கலாம்.

பிள்ளையார்பட்டியின் சிறப்பு :-

பிள்ளையார்பட்டி

இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்றும், மேலும் அப்போது ஆட்சி செய்த பல்லவ மன்னனான மகேந்திர வர்மா என்ற மண்ணால் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

பாறைகளைக் குறைந்து சுமார் இரண்டு மீட்டர் நீளத்திற்கு விநாயகப் பெருமான் திருஉருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் விநாயகர் என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உடையது.

சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வு தகவலின் படி தெரிய வருகிறது. என்னதான் பல்லவர்கள் குடைவரை கோவில் அமைத்திருந்தாலும், அதற்கு முன்னர் பாண்டிய மன்னர்கள் கட்டிடக்கலையை மிகுதியாக தெரிந்து வைத்திருந்தனர்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மிகப்பெரிய உருவில் காட்சி தரக்கூடிய இப்பிள்ளையார் கோவிலுக்கு பிள்ளையார்பட்டி என்கின்ற ஊர் தற்போது தான் அமைந்துள்ளது ஆனால் இதற்கு முன்பு, அந்த ஊருக்கு பல்வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன.

(உலகின் முதல் குடைவரை கோவிலை காண செல்ல வேண்டும் என்றால் நீங்கள் பிள்ளையார்பட்டிக்கு சென்றால் நிச்சியம் உங்களுக்கு புதுவித அனுபவமும் மன மகிழ்ச்சியும் மேலும் கேட்டதை கேட்டபடி கொடுக்கும் விநாயகப் பெருமானின் தரிசனத்தையும் பெறலாம்.)

 

மூலிகைச் செடிகளின் பயன்கள் – Mulikai Tree Benefits

 

2. 1000 ஆண்டுகள் நிலைத்திருக்கும் தஞ்சாவூர் பெரிய உடையார் கோவில்

ஞ்சாவூர் பெரிய உடையார் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் உலகில் எண்ணற்ற அதிசயங்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் என்னும் தமிழனால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூரில் இருக்கும், தஞ்சை பெரிய கோவில் என்னும் இத்திருக்கவிலை காணாத வெளிநாட்டவர்கள் இல்லையே என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு இத் திருக்கோவிலின் பெருமை உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. சோழர் காலத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழன் எனும் மன்னன், இத்திருக்கவிலை கட்டி உள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் இக்கோவில் சோழர்கள் ஆட்சி செய்த போது தஞ்சாவூரின் உள்ள காவேரி ஆற்றில் தென்கரையில் கட்டப்பட்டுள்ளது.

கோவிலில் உள்ளே பிரகதீஸ்வரர் எனப்படும் சிவன் எழுந்தருளி இருக்கிறார்.

ராஜராஜ சோழனின் சிறப்புகள் :-

ராஜராஜ சோழனின் சிறப்புகள்
ராஜராஜ சோழன்

கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜ சோழன் உலகில் உள்ள எண்ணற்ற இடங்களை தம்முடைய போர் திறமையால் தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார்.

ஆனால் இவரைப் பற்றி எந்தவிதமான தகவல்களையும் இதுவரை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்பது ஒரு உண்மையான விஷயம்.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் சோழர் வம்சம் வழிவந்த தமிழ் சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனால் இத்திரு கோவில் கட்டப்பட்டுள்ளது. கிபி 1003 -1004 வருடத்துக்குள் தொடங்கி சுமார் ஆறு முதல் ஏழு வருடங்கள் வரை தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவில் கிபி 1010 ஆண்டு நாக்கில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 வருடத்தின் முடிவில் இக்கோவில் கட்டப்பட்டு சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து எந்தவித சிறு சேதாரமும் ஏற்படாமல் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

உலகிலேயே இத்திருக்கோவில் ஒன்றுதான் அதனுடைய கோபுரத்தின் நிழல் தரையில் விழுகாமல் இருக்கிறது. அந்த அளவிற்கு பழங்கால தமிழர்கள் இதனை வடிவமைத்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் எத்தனையோ பூகம்பங்கள் பேரழிவுகள் ஏற்பட்ட நிலையிலும் இத்திருக்கோவில் சுமார் 1000 வருடங்களாக எந்தவித சேதாரம் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கக் கூடிய ஒரு மிகப்பெரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய தமிழகத்தின் பொக்கிஷம் ஆகும்.

1729,1843 ஆண்டுகள் வாக்கில் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராத்திய மன்னர்கள் இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழாக்களை செய்துள்ளனர்.

 

திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar History In Tamil

 

தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிறப்புகள் :-

தற்போது தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் கோவிலுக்கு முன்பு அமைந்திருக்கும் மிகப்பெரிய நந்தி சிலையின் பாறைகளை எவ்வாறு வடிவமைத்தார்கள் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சௌராஷ்ட்ரா என்கிற நகருக்கு பக்கத்தில் நர்மதா நதிக்கரை ஓடுகிறது. இந்த நதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள சுமார் 50 டன்களுக்கு மேலாக வரக்கூடிய இந்தப் பாறையை அங்கிருந்து எடுத்து தஞ்சாவூருக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

அப்போதைய எந்தவித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில் இதனை எப்படி செய்து இருப்பார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம் தான்.

தற்போது எந்த ஒரு சிறு வேலையை செய்வதாக இருந்தாலும் ட்ராக்டர், ஜேசிபி, கிரைம் ஆகியவற்றை பயன்படுத்தும் நாம், யோசித்துப் பாருங்கள் 50 டன் அளவுள்ள பாறையை எவ்வாறு இங்கு கொண்டு வந்திருப்பார்கள் என்று.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் தஞ்சை பெரிய கோவிலின் அமைந்திருக்கும் கோபுரத்தின் உள்ள மகுடத்தின் அளவு எவ்வளவு தெரியுமா..!! சுமார் 120 டன் எடையுள்ள ஒரு மிகப்பெரிய பாறை கோபுரத்தின் உச்சத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ள இந்தப் பாறை இவ்வளவு பாரத்தையும் அந்த கோபுரம் தாங்கிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது என்பதே தமிழரின் பெருமையை எடுத்துரைக்கிறது.

(ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம்முடைய தமிழர்களை வாழ்க்கை வரலாறு அவர்களின் கட்டிடக்கலை ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு முறை தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையின் முழு பயனை அடைவீர்கள்.)

3. மகாபலிபுரம் உள்ள திருக்கோவில் பற்றி பார்ப்போம்

மகாபலிபுரம் உள்ள திருக்கோவில்
மகாபலிபுரம் உள்ள திருக்கோவில்

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலா தளமாக மகாபலிபுரம் அமைந்துள்ளது. ஏனெனில் இக்கோவிலில் மிகப் பழங்கால சிற்பங்களும், குகை கோவில்களும், புறாதான சின்னங்களும் அமைந்துள்ளது.

கற்களை கொண்டு மட்டுமே நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இத்திருக்கோவில் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பண்டைய தமிழர்களிலேயே பல்லவ மன்னர்கள் மட்டும்தான் கண்களுக்கு புலப்பட்ட கற்களை எல்லாம் எடுத்து கவின்மிகு கருஞ்சீர்பங்களாக மாற்றி தமிழர்களின் கலாச்சாரத்தையும், பெருமையையும், புகழையும் உலகிற்கு உணரும்படி செய்தவர்கள்.

மேலும் பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள். அவர்கள் ஆண்ட பகுதி தொண்டை மண்டலம் என்ற தனி பிரிவாகவே பிரிக்கலாம்.

இவர்கள் காலத்தில் தான் வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இத்தனை பேரும் சாதனைகளை செய்த பல்லவ மன்னர்கள் பல்வேறு வகையான மண்டபங்கள் ரதங்கள் கடற்கரை அருகில் உள்ள கோவில்கள், சிற்பங்கள் மற்றும் குடைவரை கோவில்கள் என தமிழர்கள் தான் என அனைவராலும் அறிய வேண்டும் என்று செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

இத்தகைய கோவிலை கட்டிய பல்லவ மன்னர்களுக்கு ஒரு சிறு கதையும் உண்டு பல்லவ மன்னர்களுள் ஒருவரான நரசிம்ம வருமானின் சிறிய வயதில் அவருடைய தந்தையுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருக்கும் பாறையைப் பார்த்த நரசிம்மவர் இந்த பாறை யானை போல தெரிகின்றதே என்றும் மலையின் மீது இருந்து கீழே விழும் நிழலானது ஒரு மிகப்பெரிய கோவிலை போன்று காட்சியளிக்கிறது என்றும் தன்னுடைய தந்தையிடம் ஆசையாய் கூறியிருக்கிறார்.

இதனைப் பார்த்து வியப்புற்ற பல்லவ மன்னன் தன்னுடைய மகனின் ஆசைப்படியே அங்குள்ள அனைத்து பாறைகளையும் சிற்பங்களாகவும் மாபெரும் சிங்கம் யானை நந்திகள் ஏனைய எண்ணற்ற உருவங்களையும் செதுக்குமாறு உத்தரவிட்டார்.

இதுவே மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள மாபெரும் கோவில்கள் உருவாக காரணமாக இருந்தவையாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

கண்களால் பார்க்கும் பொழுதே வியப்புடைய கூடிய இத்தகைய கோவில்கள் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் நம்முடைய முன்னோர்கள் எப்படித்தான் செதுக்கி இருப்பார்கள் என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் மயிர் கூச்சல் இடுகிறது.

தமிழ்நாட்டு சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் :-

தமிழகம் என்பது மிகத் தொன்மையான நாகரீகத்தை உடையது மேலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மிகப்பெரிய மாநிலம் ஆகும். மிகப்பெரிய வரலாற்றையும், தனித்துவமான பண்பாட்டையும், பல்வேறு வகையான அழகிய நில அமைப்புகளையும் கொண்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சுற்றுலாத் துறையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 2008 ஆண்டில் 5 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டை சுற்றி வந்திருக்கின்றனர்.

தமிழ்நாடு என்பது பண்டைய தமிழர்கள் ஆட்சி செய்த கையில் முல்லை குறிஞ்சி நெய்தல் பாலை மருதம் என்று ஐந்து வகையாக பிரித்து உள்ளார்கள். இந்த ஐந்து வகைகளிலும் ஒவ்வொரு மன்னர்கள் தனித்தனியாக ஆட்சி செய்து.

உலகிலேயே தமிழகம் மட்டும் தான் தங்களுடைய பாரம்பரிய சின்னத்தை நிறைந்த இடமாக உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலிலும் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள மாமல்லபுரம் சிற்ப கோவில்களும் உலகிலேயே மிகப் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே காஞ்சிபுரத்தில் மட்டும்தான் ஆயிரம் கோவிலுக்கும் அதிகமாக உள்ளது எனவே இது ஆயிரம் கோயில்களின் தங்க நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து மதம் ஒன்றையே பிரதிபலிக்கக் கூடிய காஞ்சிபுரம் நகரத்தில் பட்டு ஒன்றே பழமையான விஷயமாக இன்றும் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. மேலும் கைலாசநாதர் கோவிலில் மிகவும் பிரபலமான ஒரு கோவில் ஆகும்.

மேலும் மதுரை தஞ்சாவூர் சுவாமி தோப்பு மற்றும் காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் உள்ள கோயில்களால் அந்நகரங்கள் அனைத்தும் கோவில் நகரங்களாக பெருமைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பினை கொண்ட தமிழ்நாட்டில் தமிழக மக்களே அவற்றை சுற்றிப் பார்த்தது கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் கடைசியில் எதையும் கொண்டு போகப் போவதில்லை. நம்முடைய முன்னோர்கள் விட்டுச் சென்ற புராதான நினைவுகளையாவது சுற்றி பார்த்துவிட்டு செல்லலாம்.

 

உங்கள் முகத்தை வசீகரமாக சில எளிமையான வழிமுறைகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *