மாவீரன் செண்பகராமன் வாழ்க்கை வரலாறு – Biography Of Senbaga Raman

செண்பகராமன் பிறப்பு – Biography Of Senbaga Raman
• மாவீரர் செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திங்கள்கிழமை அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதியான புத்தன் சந்தை என்னுமிடத்தில் பிறந்தார்.
• இவருடைய தந்தை சின்னச்சாமி பிள்ளை மற்றும் அவருடைய தாயார் நாகம்மாள்.
• இவருடைய பேருக்கு ஏற்றவாறு தன்னுடைய இளமை பருவத்திலேயே அனைத்து விதமான கலைகளையும் கற்றுத் தேர்ந்து சிறப்பாக விளங்கினார்.
• அது மட்டும் இல்லாமல் இளமையிலேயே ஏட்டுப்படிப்புகளையும் சிலம்பம் வாழ் வீச்சு போன்ற கலைகளை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
செண்பகராமன் பள்ளி பருவம் :-
• செண்பகராமன் பள்ளி படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.
• மேலும் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மன்னார் உயர்நிலைப் பள்ளியில் ஆரம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
செண்பகராமனின் சுதந்திரப் போராட்டம் – Biography Of Senbaga Raman
செண்பகராமன் தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது வட இந்தியாவில் பால கங்காதர திலகர் என்னும் விடுதலை போராட்ட வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்.
மேலும் “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்ற முழக்கங்களை வட இந்தியா முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார்.
அதேபோல தென்னிந்தியாவில் வ. உ. சிதம்பரனார் சுதேசி என்னும் கப்பலை போட்டி சென்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஆன சுப்பிரமணிய சிவா மக்களிடையே சுதந்திரத்தை பற்றியும் விடுதலை உணர்வை பற்றியும் தன் பேச்சால் சுதந்திர வேட்கையை தூண்டினார்.
பாரதியார் தமது எழுத்தால் மக்களை எழுச்சி கொள்ள வைத்தார் சுதந்திர கனவு செண்பகராமனையும் பற்றியது.
• தம்முடன் பயின்ற பள்ளி மாணவர்களை செண்பகராமன் சேர்த்துக்கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்” இன்று சங்கத்தை ஏற்படுத்தி வந்தே மாதரம் என முழங்கினார்.
• பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு “ஜெய்ஹிந்த்” என்ற முழக்கத்தை எழுப்பினார் எனவே ஜெய்ஹிந்த் செண்பகராமன் எனவும் அழைக்கப்பட்டார்.
• ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆங்கிலேயே ஆட்சியின் காவல்துறையினர் செண்பகராமனை கண்காணிக்க தொடங்கினார்கள்.
செண்பகராமனின் வெளிநாட்டு பயணம்
சர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மனியர் நான் ஒரு விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடக்கும் போது கண்காணிக்கும் பொற்றலாக செயல்பட்டு கொண்டிருந்தார்.
செண்பகராமன் அனைத்து மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் இந்த சர்வல்டர் வில்லியம் என்ற ஆங்கிலேயர் ரோடு தொடர்பு ஏற்பட்டது.
மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்த செண்பகராமன் அந்த ஜெர்மனியர் துணையோடும் மற்றும் தன் பெற்றோர்கள் அனுமதி பெற்றுக்கொண்டு, யாருக்குமே தெரியாமல் ஐரோப்ப நாடு சென்றுவிட்டார்.
• ஐரோப்பா சென்டர ராமன் முதலில் இத்தாலி நாட்டிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று பல்வேறு வகையான பட்டங்களை பெற்று தேர்ச்சி பெற்றார்.
• மேலும் பல்வேறு வகையான ஐரோப்பிய மொழிகளையும் கற்று தேர்ச்சி அடைந்தார். ஸ்விட்சர்லாந்து நாட்டில் மாணவராக தம் பயின்று கொண்டிருந்தபோது இந்திய நாட்டில் ஆங்கிலேயர்கள் எவ்வாறு மக்களை அடக்கி ஆட்சி செய்தனர் என்று பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
• பின்னர் ஜெர்மன் நாட்டிற்கு கல்வி பயில சென்றார். ஜெர்மன் நாட்டு தலைநகரான பிர்லீனுக்கும் சென்று பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் செண்பகராமனின் பங்கு
• அந்த டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் செண்பகராமன் இந்தியா வந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க தொடங்கினார்.
• தெரு எனில் இந்தியா சர்வதேச குழுவை நிறுவினர் அறிவிப்பு நாடுகளின் பாரதத்தை குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய் பிரச்சாரத்தை இக்குழுவின் வாயிலாக முறியடித்தார்.
செண்பகராமன் தொடங்கிய பத்திரிக்கை நிறுவனம்
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக வெடித்துக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது “ப்ரோ இந்தியா” என்ற பெயரில் பத்திரிகை நிறுவனத்தை ஒன்றை தொடங்கினார் சென்பக ராமன்.
அந்த பத்திரிகையில் தினம்தோறும் இந்தியர்களின் நிலைமையையும் ஆங்கிலேயர்களின் பொய்ப் பிரச்சாரத்தையும் வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா, சீனா, தென்னாபிரிக்கா, பர்மா முதலான நாடுகளுக்கு பயணம் செய்து உலக மக்களிடையே இந்தியாவில் நடக்கும் கொடுமைகளையும் அநியாயங்களையும் பற்றி பேசி விழிப்புணர்வை உண்டாக்கினார்.
உலகப் போரில் செண்பகராமனின் பங்கு
1914 இல் உலகப்போர் ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டை எதிர்த்து ஜெர்மனி போரிடத் தொடங்கியது.
இங்கிலாந்தின் கடற்படையை கலங்க வைக்க ஜெர்மனி நீர்மூழ்கி கப்பலே பயன்படுத்தி வந்தது.
எம்டன் என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவி பொறியாளராக பொறுப்பேற்றார். வங்காள விரிகுடாவிற்கு வந்த எம்டன் கப்பல் சென்னை மாநகர் எதிரே கடலில் நின்றது.
உயர் நீதிமன்றத்தையும் சென்னை கோட்டையையும் நோக்கி குண்டு மழை பொழிய தொடங்கியது அந்தக் கப்பல். அப்போது ஆங்கிலேய அரசுக்கு சொந்தமாக இருந்த இரண்டு மாபெரும் என்னைக் கிழங்குகள் தீப்பற்றி எரிய தொடங்கின.
உயர் நீதிமன்றத்தின் ஒரு முன் சுவர் அடியோடு பேருந்து கீழே விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட பல்வேறு குண்டுகள் வெடிக்காமல் மண்ணுக்குள் புகுந்தது. இப்போது அதன் வீரியம் குறைக்கப்பட்டு அந்த குண்டுகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் காட்சி பொருளா வைக்கப்பட்டுள்ளது அதனை இன்று சென்றாலும் நாம் பார்க்கலாம்.
ஹிட்லருக்கு எதிராக செண்பகராமனின் பங்கு
அதே சமயத்தில் ஹிட்லர் ளால் உருவாக்கப்பட்ட நாசி இயக்கம் ஜெர்மனியில் வளர்ந்து வந்திருந்தது. அப்போது ஹிட்லர் மட்டுமே சர்வாதிகாரியாக திகழ்ந்து கொண்டிருந்தார்.
ஒருமுறை ஹிட்லர் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால் நாட்டை திறமையாக ஆட்சி புரியும் தகுதி இந்தியர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே என்று இந்தியரை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.
அவ்வாறு ஹிட்லர் கூறியதை கேட்டு நாட்டுப்பற்று மிக்க செய்பவராமன் கொதித்து எழுந்தார்.
ஹிட்லருக்கு எதிராக திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தார் செண்பகராமன்.
தங்கள் தலைவரே மன்னிப்பு கேட்க செய்த செண்பகராமன் ஹிட்லரை அந்தப் படையினரை வெறுத்தனர்.
பின்னர் நாசிர்கள் திட்டிய சதித்திட்டத்தில் செண்பகராமன் வீழ்ந்தார். ஒருமுறை அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் நாசியர்கள் திட்டமிட்டபடி நஞ்சை கலந்து வைத்தனர்.
அந்த நஞ்சு நாளடைவில் அவரை நோயாளியாக படுக்கையில் விழ வைத்தது. தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அவருக்கு, சிறிது நலம் பெற்றிருந்தார் செண்பகராமன்.
அப்போதும் அவரை விடாத நாசிகள் அவரை தாக்கத் தொடங்கினார் அதுவே அவரை மரணப் படுக்கையில் விழ வைத்தது.
செண்பகராமனின் மரணம்
செண்பவராமன் உயிர் பிரிவதற்கு முன்னால் நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலை கரைத்த திருவனந்தபுரத்தில் உள்ள அரண்மனை ஆற்றில் கரைக்க வேண்டும்.
மீதமுள்ள சாம்பலின் ஒரு பகுதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் துவ வேண்டும் என்று தம் விருப்பத்தை வெளியேற்றி இருந்தார்.
1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி அன்று செண்பகராமனின் உயிர் பிரிந்தது.
செண்பகராமனின் மனைவி யார் ஜான்சி தம் கணவர் சாம்பலை பாதுகாத்து வைத்திருந்தார். அது 32 ஆண்டுகளுக்குப் பின்னர் 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் விரும்பியப்படியே காரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
மேலும் நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவப்பட்டது. கடைசியாக அவர் விருப்பமும் நிறைவேற்றி வைக்கப்பட்டது.
சிறிது நகைச்சுவை கதை பற்றி பார்ப்போம்
புலவர் ஒருவர் கொடை வள்ளலாக திகழ்ந்த செல்வந்தரை பார்க்க சென்று இருந்தார். புலவரது கவித்திறனை கண்ட செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தான் கொடுக்க விரும்பும் பரிசிலான தங்கத்தை தங்க தட்டு ஒன்றில் வைத்து வழங்கினார்.அப்போது புலவரின் உள்ளத்தை அந்த தங்க தட்டு மிகவும் கவர்ந்தது.
எனவே தங்கத்தட்டையும் சேர்த்து பெற விரும்பினார் அந்த புலவர். பின்னர் செல்வந்துரை பார்த்து பணத்தட்டு யாருக்கு என்று கேள்வி கேட்டார்.
கேள்வியில் “பணத்தட்டு என்பது பணத்தை உடைய தட்டு எனவும்” “பணத்தட்டுப்பாடு எனவும்” இரு பொருளாக நின்று இருந்தது செல்வந்தர் இந்த கேள்வியை கேட்டு திகைத்து நின்றார்.
பின்னர் செல்வந்தர் அந்த புலவரிடம் இதில் இருக்கும் பணம் உங்களுக்கு பணம் தட்டு எனக்கு என்று சொன்னால் பணம் தட்டுப்பாடு தமக்கு ஏற்பட்டுள்ளதாக ஆகிவிடும் என்று எண்ணினார் அந்த செல்வந்தர்.
எனவே, பணத்தட்டுப்பாடு அந்த புலவருக்கு தான் என தோன்றும்படி செல்வந்தர், பணத்தட்டு புலவருக்கு தான் என்று கூறினார். பணத்தற்றுடன் தங்கத்தட்டையும் புலவருக்கு வழங்கியதாக அறிவித்தார் புலவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் பேச்சு சாதுறைத்தனத்திற்கு அவருக்கு இந்த பரிசு கிடைத்தது.
ஆர்வம் மிகுந்த கதை
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் முதுபெரும் தமிழ் புலவர். இவர் கட்டுரைகள் எழுதுவதிலும் நகைச்சுவை தழும்பு பேசுவதிலும் மிக மிக வல்லவர். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருக்கும் போது கூட அவரது பேச்சில் நகைச்சுவை வெளிப்பட்டது.
அவர் ஒரு முறை நோய்வாய் பட்டிருந்தபோது அவர் மகள் அங்கிருந்து நன்கு கவனித்து வந்தார். அப்போது பால் மட்டுமே அவருக்கு உணவாக கொடுக்கப்பட்டது ஆடையின்றி அமைவதற்காக பாலை துணியில் வடிகட்டி மகள் கொடுத்து வந்தார்.
ஒரு நாள் அப்படி வடிகட்டிய பாலை குடித்த போது அவர் முகம் சுளித்தார். பால் கசந்தால் நோயின் தீவிரம் மிகுதி விடும், அதனால் தந்தையர் முகம் சுளிப்பதைக் கண்ட மகளார் பால் கசிகிறது அப்பா என்று கேட்டார் பண்டிகை மணியோ நிதானமாக “பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை” என்றார் அதாவது பாலை வடிகட்டிய துணி கசக்கி தூய்மைப்படுத்தப்படவில்லை என்று அவர் நகைச்சுவைப்பட கூறியதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
கிருபானந்த வாரியாரின் காமெடி பேச்சுக்கள்
ஆன்மீக செல்வந்தர் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றும் போது சிறுவர் இடம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் சிறுவர்களுக்கு பக்தி நூல் ஒன்றை பரிசாக அளிப்பார்.
அவர் ஒரு முறை முருகப்பெருமானை பற்றி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது ஒரு முறை ஒரு சிறுவனை பார்த்து தம்பி முருகனின் தந்தை யார் என கேட்டார்.
அச்சிறுவன் முந்தைய நாள் இரவு திருவிளையாடல் படம் பார்த்தான். அந்த நினைவோடு இருந்த அவன் சிவாஜி எனக் கூறினான். அப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவபெருமானாக நடித்திருந்தார். சிறுவனின் பதிலைக் கேட்ட அனைவரும் அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர்.
ஆனால் கிருபானந்த வாரியார் அவனை அருகில் வருமாறு அன்புடன் அழைத்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர் கூறியதாவது, இந்த சிறுவன் இந்த காலத்திற்கு ஏற்றார் போல பண்போடு பதில் கூறினான். நாம் காந்தியை காந்திஜி என்றும், நேருவை நேருஜி என்றும் அழைப்பதனை போல, சிவனை சிவாஜி என்று கூறியுள்ளான் என்றார்.
அனைவரும் அவர் பேச்சில் இருந்த நாயத்துடன் கூடிய நகைச்சுவை உணர்ந்து சிரித்தனர்.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .