வாணி ஜெயராம் வாழ்க்கை வரலாறு – Vani Jayaram History in Tamil

வாணி ஜெயராம் வாழ்க்கை வரலாறு – Vani Jayaram History in Tamil

Vani Jayaram History in Tamil

வாணி ஜெயராம் வாழ்க்கை வரலாறு:

Vani Jayaram History in Tamil:- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற 19-இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ள ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட சினிமா பின்னணி பாடகி தான் வாணி ஜெயராம். இவர், “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்படுகிறார். 1971-ஆம் ஆண்டு ‘குட்டி’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இவரது சினிமா பயணம் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக இந்திய சினிமா துறையில் புகழ்பெற்றவர்.

Vani Jayaram History in Tamil:

பெயர் – வாணி ஜெயராம்

இயற்பெயர் – கலைவாணி

பிறப்பு – 1945-ஆம் வருடம் நவம்பர் 30-ஆம் தேதி வேலூரில் பிறந்தார்

பெற்றோர்கள் – ஐயங்கார் – பத்மாவதி

மற்ற பெயர்கள் – ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி

தொழில் – பாடகி

இறப்பு – 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி (அகவை 77)

பிறப்பு:

வாணி ஜெயராம் 1945-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் ஒரு இசை குடும்பத்தில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.

சினிமா துறையில் இசை பயணம் தொடக்கம்:

Vani Jayaram History in Tamil:- சினிமா துறையில் முதன் முதலில் 1971-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்டி’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தான் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அன்று தொடங்கி கிட்டத்தட்ட 4-தலைமுறைகளாக சினிமா துறையில் பின்னணி பாடியாக புகழ்பெற்று விளங்கினார்.

முதன் முதலில் தமிழ் திரை உலகில் 1974-ஆம் ஆண்டு வெளிவந்தர் “தீர்க்க சுமங்கலி” என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலை ம.சு.விசுவநாதன் இசையில் பாடி புகழ்பெற்றார்.

அதன் பிறகு வரிசையாக ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம் போன்ற பாடல்களை தமிழ் திரை உலகில் பாடி சரித்திரம் படைத்தார்.

இவர் திரைத்துறையில் திரையிசை, கஜல், பாப், பஜனை, நாட்டுப்புற பாடல்கள் என ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். என்னதான் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, ஒடியா, மராத்தி, பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் பின்னணி பாடல்களை பாடி புகழ்பெற்றுள்ளார்.

வாணி ஜெயராம் இந்திய திரைப்பட பாடல்கள் மட்டுமில்லாமல் பக்தி பாடல்கள் மற்றும் தனி ஆல்பம் போன்ற பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இதனால், வாணி ஜெயராம் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்படுகிறார்.

3-முறை சிறந்த பின்னணி பாடகி என்பதற்கான இந்திய தேசிய விருதுகளை வாணி ஜெயராம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களின் விருதையும் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

திருமண வாழ்க்கை:

இசையை பெரிதும் ஆதரிக்கும் குடும்பத்தில் வாணி ஜெயராம் திருமணம் செய்து கொண்டார். இவரது மாமியார் பத்மா சுவாமிநாதன் ஒரு சிறந்த சமூக ஆர்வலரும், கர்நாடக இசை பாடகியும் ஆவார்.

வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்:

• 1974-ஆம் ஆண்டு வெளிவந்த “தீர்க்க சுமங்கலி” என்ற திரைப்படத்தில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலை முதன்முதலில் பாடினார்.

• என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

• நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

• என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்

• ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

• வேறு இடம் தேடிப் போவாளோ

• கேள்வியின் நாயகனே

• யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

• கவிதை கேளுங்கள் கருவில்

• என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம்

இறப்பு:

Vani Jayaram History in Tamil:-  வாணி ஜெயராம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-தேதி அன்று தன்னுடைய 77-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

வாணி ஜெயராம் பெற்ற விருதுகள்:

தேசிய விருதுகள் :

1. 1975-ஆம் ஆண்டு சில பாடல்களுக்காக அபூர்வ ராகங்கள் தேசிய விருது வழங்கப்பட்டது.

2. 1980-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது சங்கராபரணம் என்ற பாடல்களுக்காக வழங்கப்பட்டது.

3. 1991-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது “அனத்திநீயர ஹர” என்ற பாடலுக்காக வழங்கப்பட்டது.

4. “கண்டசாலா” தேசிய விருது வழங்கப்பட்டது.

4. 2023-ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மாநில விருதுகள்:

1. 1972-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான குஜராத் மாநில விருது “கூங்காட்” வழங்கப்பட்டது.

2. 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது “அழகே உன்னை ஆதரிக்கிறேன்” வழங்கப்பட்டது.

3. 1979-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான நந்தி விருது “சங்கராபரணம்” வழங்கப்பட்டது.

4. 1982-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஒடிசா மாநில திரைப்படம் விருது “தேப்ஜானி” வழங்கப்பட்டது.

பிற விருந்துகள்:

1. 1972-ஆம் ஆண்டு “போல் ரே பாபி ஹரா” திரைப்படத்தில் பழமையான பாடலின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகி “மியான் தான்சென்” விருது வழங்கப்பட்டது.

2. 1979 – ஆம் ஆண்டு மீரா திரைப்படத்தின் “மேரே டூ கிரிதர் கோபால்” என்ற பாடல்கள் “பிலிம் வேர்ல்ட்” மற்றும் “சினி ஹெரால்ட்” விருதுகளை பெற்று தந்தது.

3. 1991 – ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட இசைக்கான “கலைமாமணி” விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

4. 1992- ஆம் ஆண்டு இளைய கலைஞருக்கான “சங்கீத் பீட் சம்மான்” விருது வழங்கப்பட்டது.

5. 2004 – ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

6. 2005 – ஆம் ஆண்டு 4-தென்னிந்திய மொழிகளிலும் திரைப்பட இசைக்கான சிறந்த பங்களிப்பிற்கான “கமுகரா” விருது வழங்கப்பட்டது.

7. 2006 – ஆம் ஆண்டு முத்ரா அகாதமில் சென்னையின் “முத்ரா” விருது வழங்கப்பட்டது.

8. 2007 – ஆம் ஆண்டு “தென்னிந்தியா மீரா” விருது வழங்கப்பட்டது.

9. 2012 – ஆம் ஆண்டு இவரது இசைக்கான திறமைக்காக “சுப்பிரமணிய பாரதி விருது” வழங்கப்பட்டது.

10. 2014-ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி “ரேடியோ மிர்ச்சியின்” வாழ்நாள் சாதனையாளர் விருது ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது.

11. 2014-ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகர் “ஏசியாவிசன்” விருது வழங்கப்பட்டது.

12. 2014-ஆம் ஆண்டு கண்ணதாசன் கழகத்தின் மூலம் கோவையில் “கண்ணதாசன்” விருது வழங்கப்பட்டது.

13. 2015 – ஆம் ஆண்டு “ரெயின்ட்ராப்ஸ் ஆன் மகளிர்” சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

14. 2016-ஆம் ஆண்டு “ரெட் எஃப்எம் மியூசிக்” விருது வழங்கப்பட்டது.

15. 2017- ஆம் ஆண்டு சிறந்த பாடகிகான “வனிதா திரைப்பட விருதுகள்” வழங்கப்பட்டது.

16. 2017-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான “மலையாளம்” விருது வழங்கப்பட்டது.

17. 2018-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி எம்.எஸ்.சங்கர நேத்ராலியா வழங்கிய “சுப்புலட்சுமி” விருது வழங்கப்பட்டது.

18. 2018-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் “பிரவாசி எக்ஸ்பிரஸ்” விருதுகள் வழங்கப்பட்டது.

காலக்குறிப்பு:

வாணி ஜெயராம் யார்?

Vani Jayaram History in Tamil:-  வாணி ஜெயராம் 1945-ஆம் வருடம் நவம்பர் 30-ஆம் தேதி வேலூரில் ஐயங்கார் – பத்மாவதி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் கலைவாணி. இவர், இந்திய பன்மொழி திரைப்பட பின்னணி பாடகி ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மலையாளம், ஹிந்தி போன்ற 19-இந்திய மொழிகளுக்கு மேல் திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். வாணி ஜெயராம் இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார்.

Read Also:- ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

Leave a Comment