தஞ்சாவூர் பெரிய கோவிலை பற்றிய முழு தகவல்கள் | Thanjavur Periya Kovil

தஞ்சாவூர் பெரிய கோவிலின் வரலாறு :
Thanjavur Periya Kovil – இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த ஒரு கோவில்தான் கற்களால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் கடந்த அழியாத கோவிலாகும். சோழர்கள் காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் என்ற பேரரசரால் கிபி 1005 – ம் ஆண்டில் தொடங்கப்பட்டு கிபி 1010 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
Thanjavur Periya Kovil கோவில் ஆனது கடந்த 2010ஆம் ஆண்டில் தன்னுடைய ஆயிரம் ஆவது ஆண்டில் எந்த ஒரு சிறு சேதாரமும் இன்றி இன்றுவரை நிலைத்து நிற்கின்றது.
மொத்தமாக இக்கோவில் கட்டப்பட்டு தற்போது நடக்கும் 2022 ஆண்டு முதல் இதுவரையில் 1013 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
Biography of Thanjavur temple in Tamil
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் – சோழப் பேரரசர் ராஜராஜ சோழன்
தஞ்சாவூர் பெரிய கோவில் கட்ட தொடங்கப்பட்ட ஆண்டு – கி.பி 1005 ம் ஆண்டு
தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு – கி.பி 1010 ம் ஆண்டு
தஞ்சாவூர் பெரிய கோவில் கட்ட மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆகின – வெறும் ஐந்து ஆண்டுகளில் இக்கோவிலானது கட்டி முடிக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் உயரம் – 216 அடி (66 மீட்டர் )
தஞ்சாவூர் பெரிய கோவிலின் நந்தியின் நீளம் மற்றும் உயரம் – 16 அடி ( 4.9 மீட்டர்) நீளம் மற்றும் 13 அடி (4.0 மீட்டர் ) உயரமும் உள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பத்தின் மொத்த எடை – 80 டன் ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.
ராஜராஜ சோழனின் வரலாறு – biography of rajarajeshwaran
- தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசர்களில் மிகவும் பெரும் படை பலம் மற்றும் கட்டிடக்கலைகளில் முதன்மையாக விளங்கிய அரசர் ராஜராஜ சோழன் ஆவார்.
- முதலாம் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் தமிழ் வழியில் வந்த பேரரசர் அருண்மொழிவர்மன் இவர்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டுவதற்கு அதாவது கிபி 1002 ஆம் ஆண்டில் முதல் முதலில் அடிக்கல் நாட்டு வைத்தார்.
- இக்காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் கடல் கடந்து ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு முறை ராஜராஜசோழன் இலங்கைக்கு சென்றிருந்த பொழுது அங்குள்ள கோவிலை கண்டு வியப்படைந்து அதன் பின்னரே அவர் ஆட்சி செய்து கொண்டிருந்த தஞ்சாவூருக்கு வந்து கோவிலை கட்ட திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- சோழர் வலிகளில் வந்த பேரரசர்களில் மிகப்பெரியவர் சுந்தர சோழன் மற்றும் வானவன் மகாதேவியின் மகனான முதலாம் ராஜராஜன்.
- இவர்கள் காலம் கிபி 985 ஆண்டு முதல் கிபி ஆயிரத்தி பன்னிரெண்டாம் ஆண்டு வரை வாழ்ந்தார்கள்.
- முதலாம் ராஜராஜ சோழன் அவருடைய 19ஆவது வயதில் இக்கோவிலை கட்ட தொடங்கி அவருடைய 25ஆம் வயதில் அதாவது மொத்தமாக 27 5 நாட்களில் இக்கோவிலானது கட்டி முடிக்கப்பட்டது என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் வெறும் ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கக்கூடிய இக்கோவிலை எப்படி கட்டி முடித்தார்கள் என்பது இன்னும் எந்த ஒரு விஞ்ஞானிகளாலும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஒரு விஷயமாக உள்ளது.
Read Also : தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History
இந்தியாவின் மக்கள் தொகை – Population of India
தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிறப்புகள் – Thanjavur temple history in Tamil
இதுவரை உலகில் எவரும் செய்யப்படாத ஒரு விஷயம் என்னவென்றால் வெறும் பாறைகளை மட்டுமே வைத்து இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே இது ஒரு பாறை கட்டிடக்கலையை சார்ந்த ஒரு கோவிலாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் சரியான வகையில் திட்டமிட்டு அதாவது கோவிலின் அடித்தளம் பூமியின் அச்சின் சாய்வை கருத்தில் கொண்டு மிகவும் தொழில்நுட்பமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்டமான கட்டிடக்கலை கோவிலானது பூமியின் சுழற்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் இதுவரை சக்தி வாய்ந்த ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் இக்கோவிலானது எந்த ஒரு அசைவும் இன்றி தமிழர்களின் பெயரை சொல்லக் கூடிய வகையில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கோவிலின் ஆலயம் இருமுனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது.
கோயிலின் கோபுரத்தில் உள்ள மிகப்பெரிய பாறை ஆனது என்பது கண்கள் கொண்ட ஒரே ஒரு பாறையால் செய்யப்பட்டுள்ளது.
அக்காலத்தில் இதனை எவ்வாறு கோவிலின் மேல் கொண்டு வைத்திருப்பார்கள் என்பதை பற்றி எந்த ஒரு விஞ்ஞானிகளாலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
பெரிய கோவிலின் கோபுரத்தின் நிழல் – Thanjavur temple shadow
இக்கோவிலின் கோபுர நிழலானது பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளதால் எந்த திசைக்கு சென்றாலும் கோபுர நிழலானது எங்கும் தென்படாது.
சூரியன் நடு உச்சியில் இருக்கும் பொழுது அதாவது மதிய வேலைகளில் கோபுரத்தின் கோபுரம் நிழலானது கீழே விழுவது கிடையாது.
பெரிய கோவிலின் கருவறை லிங்கம் – Thanjavur temple lingam
✍️ இந்த தஞ்சாவூர் பெரிய கோவிலின் தெய்வம் சிவபெருமான் ஆவார். இக்கோவிலுக்கு ஏற்றவாறு கோவிலுக்கு உள்ளே உள்ள லிங்கத்தின் சிலையானது 12 அடி உயரம் கொண்டதாக உள்ளது.
✍️ கோவிலில் உள்ள நந்தி சிலை தான் தென்னிந்தியாவிலேயே மிக உயரமான சிலையாகும்.
✍️ மேலும் இவ்வாலயத்தை சிறப்பிக்கும் வகையில் பார்வதி தேவி, விநாயகர், கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி மற்றும் வராகி ஆகியோர் கொண்ட சிலைகளும் உள்ளது.
✍️ இக்கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள நந்தி சிலையானது இவ்வுலகிலேயே மிக மிக பெரிய அந்தி சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
✍️ மகாநந்தி என பெயர் கொண்ட இந்த நந்தி சிலையானது நுழைவு வாயிலின் 16 கால் மண்டபம் கொண்ட மிகப்பெரிய அரங்கிற்குள் சிலையானது வைக்கப்பட்டுள்ளது.
✍️ சுமார் 80 டன்னுக்கும் அதிகமாக உள்ள ஒற்றைப் பாறையை கொண்டு இக்கோவிலின் நந்தி சிலையானது செய்யப்பட்டுள்ளது.
✍️ இக்கோவிலின் நந்தி சிலையானது கோவில் கட்டப்பட்ட காலத்தில் சிறிய சிலையாக வைக்கப்பட்டுள்ளது எனவும், பின்னர் கிபி பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தை சேர்ந்த நாயக்க பேரரசுகளால் கோவிலுக்கு ஏற்றவாறு நந்தி சிலையையும் மிகப்பெரிய வடிவில் அமைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பின்னர் நந்தி சிலையானது வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
✍️ மேலும் இந்த நந்தி சிலையானது வளர்ந்து கொண்டே செல்கிறது என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.
Thanjavur Periya Kovil Timings – தஞ்சாவூர் பெரிய கோவிலின் திறக்கப்படும் நேரம்:
வாரத்தின் ஏழு நாட்களும் இக்கோவில் திறக்கப்பட்டிருக்கும்.
• காலை 6 மணி முதல் 12 30 மணி வரை
• மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இந்த நேரத்தில் மட்டுமே கோவில் கருவறையானது திறக்கப்பட்டு இருக்கும் எனவே நீங்கள் செல்லும் பொழுது இந்த நேரத்திற்குள் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Thanjavur temple biography – தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் சன்னதிக்குள் பிரகதீஸ்வரர் எனப்படும் சிவபெருமான் அமைந்துள்ளார்.
வரலாற்றின் பழமையான மற்றும் சிறப்பு மிக்க இக்கோவில் இன்று அளவும் மாபெரும் இயற்கை சீற்றங்களாலும் சேதம் அடையாமல் நிலைத்து நிற்கின்றது.
மேலும் ராஜ ராஜனார் வைத்த இந்த நந்தி சிலையானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை எடுத்துவிட்டு புதிதாக ஒரு நந்தி சிலையை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த நன்றி சிலையானது கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் கட்டுமான பணிகள் :
Thanjavur Periya Kovil – கோவிலை கட்டியதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த கோவிலானது முழுக்க முழுக்க கிரைனைட் கற்கள் மற்றும் பாறைகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் இக்கோவிலை சுற்றி சுமார் 50 மைல்களுக்கு எந்த ஒரு மலைகளுமே கிடையாது என்பதே உண்மை.
அவ்வாறு இருக்க எவ்வாறு இவ்வளவு பாறைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள் அதனை எவ்வாறு சிலைகளாக வடித்து கோபுரமாக வடிவமைத்து இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுதே ஆச்சரியமாகத்தான் உள்ளது.
கோவிலின் கட்டுமான பணிக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
எந்த ஒரு நவீன வசதியும் இல்லாத காலத்தில் அதாவது வாகனங்கள் எதுவும் இல்லாத சமயத்தில் யானைகள் குதிரைகள் மற்றும் யாளிகளின் உதவியுடன் 50 மயில்களுக்கு அப்பால் உள்ள மலைகளை குடைந்து பாறைகள் ஆனது வெட்டப்பட்டு கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு சிலைகளாக வடிக்கப்பட்டு இருக்கின்றன.
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் கோவிலானது வெறும் கோவிலாக மட்டும் பார்க்கப்படாமல் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வரலாறு மற்றும் தொன்மையான நாகரீகம் ஆகியவற்றை விளக்கும் வகையிலேயே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
உலகிலேயே தொன்மையான மொழியாம் தாய் மொழி தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு Thanjavur Periya Kovil – மிகவும் தெள்ளத் தெளிவாக யார் யார் கட்டினார்கள் எந்தெந்த வேலைகள் கோவிலுக்கு அவர்களால் செய்யப்பட்டுள்ளது என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் நாம் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .