Bharathiar biography in Tamil

பாரதியார் பற்றிய யாருக்கும் தெரியாத முழு தகவல்கள் | Bharathiar biography in Tamil

Post views : [jp_post_view]

Table of Contents

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiar life history in Tamil

Bharathiar biography in Tamil

பாரதியார்

Bharathiar biography in Tamil – பாரதியார் நாட்டுப் பற்று மிகுந்த ஒரு விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். மேலும் இவர் ஒரு கவிஞர் இதழாளர் எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர். இவர் எழுதிய எண்ணற்ற கவிதைகள் மற்றும் விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டக்கூடிய வரிகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறது.

Bharathiar biography in Tamil

பாரதியாரின் முழு பெயர் – சுப்பிரமணியன் என்ற சுப்பையா

பாரதியார் பிறந்த ஊர் – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்

பாரதியார் பிறந்த ஆண்டு – 11/12/1882 ( தமிழ் – சித்திர பானு வருடம் கார்த்திகை 27 ஆம் நாள்)

பாரதியார் பிறந்த நட்சத்திரம் – மூல நட்சத்திரம்

பாரதியாரின் பெற்றோர் பெயர் – சின்னச்சாமி அய்யர் மற்றும் லட்சுமி அம்மாள்

பாரதியாரின் மனைவி பெயர் – செல்லம்மா

பாரதியார் திருமணம் செய்த ஆண்டு – 1897

பாரதியார் எத்தனை வயதில் இருக்கும் பொழுது திருமணம் செய்தார் – 14 அரை வயது இருக்கும் பொழுது ஏழு வயது உடையசெல்லம்மா” என்ற பெண்ணை திருமணம் செய்தார்

பாரதியார் எழுதிய நூல்கள் – பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு மற்றும் பல

பாரதியாரின் சிலை எங்கு உள்ளது – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில் ஏழு அடி உயரத்திற்கு அவருடைய திருஉருவ சிலையானது வைக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் பிள்ளைகள் பெயர் – தங்கம்மாள், சகுந்தலா

பாரதியார் வாழ்ந்த இல்லம் – எட்டயபுரம், சென்னை திருவல்லிக்கேணி மற்றும் புதுச்சேரி

பாரதியாரின் மணிமண்டபம் உள்ள இடம் – எட்டயபுரத்தில் மகளிர் காண பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மணிமண்டபம்

பாரதியார் படித்த பள்ளிக்கூடம் – அலகாபாத் சர்வ கால சாலை, காசியில் உள்ள இந்து சாலையில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி கற்றுத் தேர்தல். திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்தல்

பாரதியார் பெற்ற பட்டம் – பாரதி என்ற பட்டம்

பாரதியார் எழுதிய பத்திரிகையின் பெயர்கள் – சூரியயோதயம், கர்மயோகி, தர்மம் மற்றும் என் இந்தியா என்று ஆங்கில இதழ்

பாரதியார் இறந்த ஆண்டு – 11/09/1921

பாரதியாரின் தாயார் இறந்த ஆண்டு – 1887

பாரதியாரின் தந்தை இறந்த ஆண்டு – 1898

பாரதியாருக்கு பாரதி பட்டம் கிடைத்த ஆண்டு – 1893 (தன்னுடைய 11-வது வயதில்)

பாரதியாரின் பிறப்பு

சுப்பிரமணியன் என்கின்ற சுப்பையா ஆகிய இவர் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி மூல நட்சத்திரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாள் ஆகிய இருவருக்கும் மகனாய் பிறந்தார்.
இவருடைய இளம் வயதில் இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சுப்பிரமணியன் என்ற பெயரை வைத்தனர். மேலும் இவருடைய செல்லப் பெயராக சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

எட்டயபுரம் சமஸ்தானம் இவருடைய கவிப்புலமையை கண்டு வியந்து இவருக்கு பாரதி என்ற பட்டம் கொடுத்தது அதுவே நாளடைவில் இவருடைய பெயர் சுப்பிரமணிய பாரதியார் என மாறியது.

1887 ஆம் ஆண்டு பாரதியாரின் லக்குமி அம்மாள் மரணம் அடைந்தார். அப்போது பாரதியாருக்கு வயது 5.
தாயார் உடைய இறப்புக்குப் பின்னர் அவருடைய தந்தையான சின்னச்சாமி அய்யர் 1889 ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.

1893 ஆம் ஆண்டு எட்டயபுரம் சமஸ்தானத்தில், பெரும் புலவர்கள் மற்றும் ஞானிகள் கூடியிருந்த அவையில், சுப்பிரமணிய பாரதியின் கவி பாடும் திறனை வியந்து அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை அளித்தனர்.

பாரதி பட்டம் பெறும்பொழுது சுப்ரமணிய பாரதியாருக்கு பதினோரு வயது தான் இருந்தது. அதன் பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்து காலேஜில் ஐந்தாம் வகுப்பறை படித்தார்.

Bharathiar biography in Tamil

பாரதியாரின் திருமண வாழ்க்கை

சுப்பிரமணிய “பாரதி” தன்னுடைய 14 வயதில் 7 வயது “செல்லம்மா” செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு தங்கம்மாள் மற்றும் சகுந்தலா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தார்கள்.

பாரதியார் பற்றிய விரிவான விளக்கம்

மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும், இவர் ஒரு பெரிய கவிஞர், எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, பெரும் பத்திரிகையாளர் என்று பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்.

தன்னுடைய தண்ணிகரற்ற புலமையால் இந்திய மக்களின் மனதில் விடுதலை உணர்வை தூண்டியவர். மேலும் இந்தியாவில் மிகப்பெரும் வரலாற்று திருப்புங்கள் நிறைந்த காலகட்டத்தில் இவர் வாழ்ந்தார்.

தற்போதைய காலத்தில் கவிதைகளுக்கு இவர் முன்னோடியாக வாழ்ந்தவர். மேலும் தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தனக்கு நிகர் இல்லாத புலமை பெற்ற ஒரு பேரறிஞர் ஆவார்.

பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்னென்ன

காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓம் உத்தம தேசாபிமணி, நித்திய தீரன், மகாகவி, விடுதலைக் கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசிய கவி (ராமசாமி ஐயங்கார் சூட்டிய பட்டம்), பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணி சூட்டிய பட்டம்), நீடுதுயில் நீங்க பாடிவந்த நிலா (பாரதிதாசன்)

பாரதியார் கற்றுத் தேர்ந்த மொழிகள்

பாரதியார் தம் இளம் வயதிலேயே அவருடைய தந்தையிடமிருந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றை கற்று தேர்ந்தார். மேலும் அவர் மொத்தமாக இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழிகள் மற்றும் வடமொழிகள் வடமொழிகள் அடங்கிய 14 மொழிகளை சரளமாக பேசும் திறனையும் அறிந்து வைத்திருந்தார்.

பாரதியாரின் பணிகள்

• எட்டயபுரம் மன்னனின் அழைப்பை ஏற்ற பாரதியார் அவருடைய அரசவைக் கவிஞராக முதல் முதலில் பணியமர்த்தப்பட்டார்.

• பின்னர் பாடல்கள் எழுதி அதனை மக்களுக்கு பயன்படும் வகையில் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்ட அவர் 1904 ஆம் ஆண்டு “விவேக பானு” எனும் இதழில் அவருடைய தனிமை இறக்கம் என்ற பாடல் முதல் முதலில் வெளியிடப்பட்டது.

• பாரதியார் 1905 ஆம் ஆண்டு “சக்கரவர்த்தி” என்ற பெண்களை பற்றி எழுதக்கூடிய வார இதழ் ஒன்றை நடத்தினார்.

• அதற்குப் பின்னர் “இந்தியா” என்ற வார பத்திரிக்கை இதழையும், பாலபாரதம் என்ற ஆங்கில வழி இதழையும் நடத்தினார்.

விஜயா கர்மயோகி என்ற இதழையும் 1910 ஆம் ஆண்டு “சூரிய உதயம்” என்ற இதழையும் நடத்தினார்.

விவேக பானு என்ற பத்திரிக்கையின் தனிமை இறக்கம் என்ற பாடல் இந்தியாவிலேயே முதல் முதலாக பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

சுதேசி மித்ரன் என்ற நூலை ஆசிரியர் மற்றும் தினசரி இதழ்களில் வெளிவர செய்தார்.

• மதுரையில் உள்ள சேதுபதி என்ற உயர்நிலைப் பள்ளியில் சிறிது காலம் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

• பின்னர் சுதேசி மித்திரன் என்ற பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.

பாரதியார் கற்று வைத்திருந்த மொழிகள்

பாரதியார் மொத்தமாக 14 மொழிகளை கற்று வைத்திருந்தார். இதில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்றையும் அவருடைய தந்தையான சின்னச்சாமி ஐயரிடும் கற்றுத் தேர்ந்தார்.

மேலும் அலகாபாத் பல்கலைக்கழகம் சென்று அங்கு சமஸ்கிருத மொழி மற்றும் ஹிந்தி மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். அது மட்டும் இல்லாமல் பிரெஞ்சு மற்றும் வடமொழி ஆகிய பழ மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இவ்வளவு மொழிகளை அறிந்த பாரதியார் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக ஒரு கவிதை ஒன்றை எழுதினார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”

என்று பாரதியார் தம் கவிதைகளில் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு

சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாரதி அவருடைய உணர்ச்சிமிகு பாடல்கள் நாடு எங்கும் காட்டுத்தீ போல பரவத் தொடங்கினார். பாரதியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகுதே கண்ட பிரிடிஸ்காரர்கள் அவர் நடத்திய இந்திய பத்திரிகைகளுக்கு தடை விதித்து மேலும் அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

மேலும், இவர் நடத்திய சுதேசி மித்ரன் என்னும் இதழின் மூலம் எண்ணற்ற வீரர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆயத்தமாகியது உண்மை.

நாட்டின் விடுதலைக்காக மட்டுமில்லாமல் மகாகவி பாரதியார் நாட்டில் உள்ள மற்ற பிரச்சனைகள் அதாவது பொருளாதாரம், இனம், மொழி, சமுதாயம், பெண்களுக்கான விடுதலை ஆகிய எண்ணற்ற விஷயங்களில் பாடுபட்டு வந்தார்.

மேலும், சுதந்திரப் போராட்ட காலத்தில் “சக்கரவர்த்தினி” என்ற இதழ் மூலம் “வந்தே மாதரம்” என்ற பாடலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நாட்டுப்பற்றை தூண்டும் வகையில் ஊக்குவித்தார்.

பாரதியார் நடத்திய பத்திரிகைகளின் மூலம் தன்னுடைய எழுத்துக்களால் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

பாரதியாரின் சுதந்திரப் போராட்டம் முழக்கங்கள்

“விடுதலை விடுதலை விடுதலை” “தனியும் இந்த சுதந்திர தாகம்”

• “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”

• “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”

• “பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு”

தமிழ் மொழியை சிறப்பிக்கும் பாரதியாரின் கவிதைகள்:

 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்ல தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பிருக்கும் மேவு மா,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம்
விழி பெற்ற பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழ்ல அமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்பைக் கண்டார்.

பாரதியார் எழுதிய சுதந்திரப் போராட்ட கட்டுரைகள்

Bharathiar biography in Tamil

வந்தே மாதரம் என்போம் -எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

சரணங்கள்

1. ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே

(வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்

(வந்தே)

அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு -நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

பாரதியாரும் அரசியலும்

1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மற்றும் திலகரின் தீவிரவாத கோஷ்டிகளுக்கு ஆதரவு அளித்தார் பாரதியார்.

பின்னர் ஸ்ரீனிவாசச்சாரி மற்றும் வ.உ.சி ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்த கோஷ்டியை சூரத்திற்கு அழைத்துச் சென்றார்.

சிறிது காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் திலகர், அரவிந்தர், லஜபதி, ஆகியோரை பாரதியார் சந்தித்தார்.

பாரதியாரின் அரசியல் எதிரியான வி கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் பாரதி எழுதிய தேசிய கீதங்களில் மோகித்து போனார். மேலும் அவர் எழுதிய தேசிய கீதங்கள் நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் விடுதலைப் போராட்டத்தை தூண்டும் உணர்வை வெளிப்படுத்தியது.

பாரதியின் பாடல்கள் கிருஷ்ணசாமி ஐயருக்கு பிடித்துப் போகவே அவர் எழுதிய சுதேசி கீதங்கள் என்ற தலைப்பில் உருவான மூன்று பாடல்கள் அச்சடிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள பாரதியாரின் சிறப்பு

 

1. பாரதியார் எழுதிய நூல்கள் அனைத்தும் 1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

2. இந்தியாவிலேயே முதல்முறையாக தனிநபர் ஒருவர் எழுதிய இலக்கியங்கள் மற்றும் கவிதைகள் கட்டுரைகள் ஆகியவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

3. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர் படிப்பதற்காக பல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றையும், பாரதி என்ற மணிமண்டபத்தையும் அமைத்து தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.

4. மேலும் அந்த பாரதி மணி மண்டபத்தில் ஏழு அடி உயரத்திற்கு அவருடைய திருஉருவ சிலையானது வைக்கப்பட்டுள்ளது.

5. இந்த சிலையை 13/02/2000 ஆம் ஆண்டு பஞ்சாபின் அப்போதைய முதல்வராக இருந்த தர்பரா சிங் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் சில வாழ்க்கை குறிப்புகள்

• தற்போதைய தமிழ் கவிதைகளுக்கு முன்னோடி – பாரதியார்

• பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தை கொடுத்தவர் – ராமசாமி ஐயங்கார்

• விடுதலைப் போராட்டத்தின் போது முதன் முதலில் இந்தியாவின் விடுதலை, ஜாதி மதம் ஆகியவற்றை பற்றிய கட்டுரைகளை எழுதியவர் பாரதியார்

• பாரதி என்ற சங்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் – கல்கி

• பாரதி “நிவேதிதா தேவி” என்பவரை தம்முடைய ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்

• பாரதியாரின் பாடல்களை முதல் முதலில் வி.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் அச்சடித்து வெளியிட்டார்

• வந்தேமாதரம் என்ற பாடலை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து அதனை சக்கரவர்த்தனை என்ற இதழ் மூலம் பாரதியார் வெளியிட்டார்

• தான் அணிந்திருக்கக் கூடிய “பூணூலை” புதுச்சேரியை சேர்ந்த கனகலிங்கம் என்பவருக்கு அணிவித்தார்

• கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாரதியை “பாட்டுக்கொரு புலவன்” பாரதி என போற்றி புகழ்ந்துள்ளார்

• பாசம் என்பவர் மகாகவி பாரதியாரின் உருவப்படத்தை முதன் முதலில் வரைந்து வெளியிட்டார்

• பாரதியார் எழுதிய அனைத்து பாடல்களையும் “ஓமத்தூர் ராமசாமி ரெட்டியார்” என்பவர் முதல் முறையாக நாட்டுடைமை ஆக்கினார்

• எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இருக்கக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது

பாரதியார் இயற்றிய நூல்கள் மற்றும் கவிதைகள்

 

  • “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்”
  • “காக்கைக் குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”
  • “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”
  • “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”
  • “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
  • “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா”
  • “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
  • “ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில்” 
  • “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்”
  • “எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்”
  • “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”
  • “காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்”
  • “செப்புமொழி பதினெட்டு உடையாள் – எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”
  • “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்”
  • “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”

பாரதியாரின் சிறப்பு பெயர்கள்

  • உலககவி
  • தேசியக்கவி
  • சீட்டுக்கவி
  • ஷெல்லிதாசன்
  • காளிதாசன்
  • சித்தனாய் வந்த நித்திய சூரியன்
  • நித்தியதீரர்
  • மக்கள் கவி
  • முண்டாசுக் கவிஞர்
  • ஷெல்லிதாசன்
  • ஞானரதம்
  • சக்திதாசன்
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • விடுதலைக்கவி
  • முன்னறி புலவன்
  • தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதையின் தந்தை
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • மகாகவி
  • அமரக்கவி

பாரதியார் எழுதியுள்ள நூல்களின் சுவாரஸ்யமான தகவல்களை இப்போது நாம் பார்ப்போம்:

பாரதியார் எழுதியுள்ள மொத்த கவிதை நூல்களின் எண்ணிக்கை – 301

தேசிய கீதங்கள் என்ற பகுதியில் கீழ் எழுதிய நூல்களின் எண்ணிக்கை – 6

தேசிய கீதங்கள் என்ற பகுதியில் எழுதிய நூல்களின் பெயர்கள் – பாரத நாடு, தமிழ் நாடு, சுதந்திரம், தேசிய இயக்கப் பாடல்கள், தேசியத் தலைவர்கள், பிற நாடுகள்

பாரத நாடு என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல்களின் எண்ணிக்கை – 19

தமிழ்நாடு என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல்களின் எண்ணிக்கை – 6

சுதந்திரம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல்களின் எண்ணிக்கை – 6

தேசிய இயக்கப் பாடல்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல்களின் எண்ணிக்கை – 9

தேசியத் தலைவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூலின் எண்ணிக்கை – 9

பிற நாடுகள் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல்களின் எண்ணிக்கை – 4

தெய்வப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் எழுதிய நூல்களின் எண்ணிக்கை – 2

தெய்வப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் எழுதிய நூலின் பெயர்கள் – தோத்திரப் பாடல்கள், ஞானப்பாடல்கள்

தோத்திரப் பாடல்கள் என்ற நூலில் உள்ள கவிதை நூல்களின் எண்ணிக்கை – 78

ஞான பாடல்கள் என்ற நூலில் உள்ள கவிதை நூல்களின் எண்ணிக்கை – 23

பல்வகை பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் எழுதிய நூல்களின் எண்ணிக்கை – 6

பல்வகை பாடல்களில் உள்ள நூல்களின் பெயர்கள் – நீதி, சமூகம், தனி பாடல்கள், சான்றோர், சுயசரிதை, வசன கவிதை

நீதி என்ற நூலில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கை – 3

சமூகம் என்ற நூலில் உள்ள கவிதைகள் எண்ணிக்கை – 8

தனிப்பாடல்கள் என்ற நூலில் உள்ள கவிதைகள் எண்ணிக்கை – 15

சான்றோர் என்ற நூலில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கை – 9

சுய சரிதை என்ற நூலில் உள்ள கவிதைகள் எண்ணிக்கை – 2

வசன கவிதை என்ற நூலில் உள்ள கவிதைகள் எண்ணிக்கை – 6

முப்பெரும் பாடல்கள் நூலில் கீழ் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 23

பாஞ்சாலி சபதம் நூலின் கீழ் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 73

குயில் பாட்டு என்ற நூலின் கீழ் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 9

  • பாரத நாடு என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்
நாட்டு வணக்கம் பாரத நாடு
பாரத தேசம் எங்கள் நாடு
ஜெய பாரத் பாரத மாதா
எங்கள் தாய் வெறி கொண்ட தாய்
பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாரதமாதா நவரத்தின மாலை
பாரத தேவியின் திருத்தசாங்கம் தாயின் மணிக்கொடி பாரீர்
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
பாரத சமுதாயம் ஜாதிய கீதம் பகுதி 1
ஜாதிய கீதம் பகுதி 2

தமிழ்நாடு என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

செந்தமிழ் நாடு தமிழ் தாய்
தமிழ் தமிழ் மொழி வாழ்த்து
தமிழ் சாதி வாழிய செந்தமிழ்

சுதந்திரம் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

சுதந்திரப் பெருமை சுதந்திரப் பயிர்
சுதந்திர தாகம் சுதந்திர தேவியின் துதி
விடுதலை சுதந்திரப் பள்ளு

தேசிய இயக்கப் பாடல்கள்

சத்ரபதி சிவாஜி கோக்களே சாமியார் பாடல்
தொண்டு செய்யும் அடிமை நம்ம ஜாதி கடுக்குமா?
நாம் என்ன செய்வோம்! பாரத தேவியின் அடிமை
வெள்ளைக்கார வின்சென்ட் துறை கூற்று தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
நடிப்புச் சுதேசிகள்

தேசியத் தலைவர்கள்

மகாத்மா காந்தி பஞ்சகம் குரு கோவிந்தர்
தாதாபாய் நௌரோஜி பூபேந்திர விஜயம்
வாழ்க திலகன் நாமம் லாஜபதி
திலகர் முனிவர் கோன் லாஜபதியின் பிரலாபம்
வ.உ.சிக்கு வாழ்த்து

பிற நாடுகள்

மாஜினியின் சபதப் பிரதிக்கினை பெல்ஜியத்திற்கு வாழ்த்து
புதிய ருஷியா கரும்புத் தோட்டத்திலே

பாரதியார் தெய்வங்களைப் பற்றி எழுதிய பாடல் நூல்களின் தலைப்புகள்

• தோத்திரப் பாடல்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

விநாயகர் நான்மணிமாலை முருகா! முருகா!
வேலவன் பாட்டு கிளிவிடு தூது
முருகன் பாட்டு எமக்கு வேலை
வள்ளிப் பாட்டு பகுதி 1 வள்ளிப் பாட்டு பகுதி 2
இறைவா! இறைவா! போற்றி அகவல்
சிவசக்தி காணி நிலம் வேண்டும்
நல்லதோர் வீணை மகா சக்திக்கு விண்ணப்பம்
அன்னையை வேண்டுதல் பூலோக குமாரி
மகாசக்தி வெண்பா ஓம் சக்தி
பராசக்தி சக்திக் கூத்து
சக்தி வையம் முழுவதும்
சக்தி விளக்கம் சக்திக்கு ஆன்மா சமர்ப்பணம்
சக்தி திருப்புகழ் சிவசக்தி புகழ்
பேதை நெஞ்சே! மகாசக்தி
நவராத்திரி பாட்டு (உஜ்ஜயினி) காளி பாட்டு
காளி ஸ்தோத்திரம் யோக சித்தி
மகாசக்தி பஞ்சகம் மகாசக்தி வாழ்த்து
ஊழிக் கூத்து காளிக்கு சமர்ப்பணம்
காளி தருவாள் மகா காளியின் புகழ்
வெற்றி முத்துமாரி
தேச முத்துமாரி கோமதி மஹிமை
சாகாவரம் கோவிந்தன் பாட்டு
கண்ணனை வேண்டுதல் வருவாய் கண்ணா!
கண்ண பெருமானே கண்ணன் பிறப்பு
நந்த லாலா கண்ணன் திருவடி
வேய்ங்குழல் கண்ணம்மாவின் காதல்
கண்ணம்மாவின் நினைப்பு மனப் பீடம்
கண்ணம்மாவின் எழில் திருக்காதல்
திருவேட்கை திருமகள் துதி திருமகளைச் சரண் புகுதல்
ராதைப் பாட்டு கலைமகளை வேண்டுதல்
வெள்ளைத் தாமரை நவராத்திரிப் பாட்டு (மாதா பராசக்தி)
மூன்று காதல் ஆறு துணை
விடுதலை வெண்பா ஐயம் உண்டு
ஆரிய தரிசனம் ஞாயிறு வணக்கம்
ஞானபாநு சோமதேவன் புகழ்
வெண்ணிலாவே! தீ வளர்த்திடுவோம்!
வேள்வித் தீ கிளிப் பாட்டு
யேசு கிறிஸ்து அல்லா
சூரிய தரிசனம்

• ஞானப் பாடல்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகளின் பெயர்கள்

அச்சமில்லை ஜய பேரிகை
சிட்டுக் குருவியைப் போலே மனத்தில் உறுதி வேண்டும்
விடுதலை வேண்டும் ஆத்ம ஜயம்
காலனுக்கு உரைத்தல் மாயையைப் பழித்தல்
சங்கு அறிவே தெய்வம்
பரசிவ வெள்ளம் பொய்யோ? மெய்யோ?
நான் சித்தாந்தச் சாமி கோயில்
பக்தி அம்மாக்கண்ணு பாட்டு
வண்டிக்காரன் பாட்டு கடமை அறிவோம்
அன்பு செய்தல் சென்றது மீளாது
மனத்திற்குக் கட்டளை மனப் பெண்
பகைவனுக் கருள்வாய் தெளிவு
கற்பனையூர்

பல்வகை பாடல்கள்

• நீதி என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

புதிய ஆத்திச்சூடி பாப்பாப் பாட்டு
முரசு

• சமூகம் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

புதுமைப் பெண் பெண்ணியம் வாழ்க
பெண்கள் விடுதலை கும்மி பெண் விடுதலை
தொழில் மறவன் பாட்டு
நாட்டுக்கல்வி புதிய கோணங்கி

read also: திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்

• தனி பாடல்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

காலைப் பொழுது அந்திப்பொழுது
நிலாவும் வான்மீனும் காற்றும் மழை
புயற்காற்று பிழைத்த தென்னந்தோப்பு
அக்கினிக் குஞ்சு சாதாரண வருஷத்து தூமகேது
அழகு தெய்வம் ஒளியும் இருளும்
சொல் கவிதை தலைவி
கவிதை காதலி மது
சந்திரமதி

சான்றோர் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

தாயுமானவர் வாழ்த்து நிவேதிதா
அபேதாநந்தா ஓவியர்மணி இரவிவர்மா
சுப்பராம தீட்சிதர் மகாமகோபாத்தியாயர் வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
ஹிந்து மதாபிமான சங்கத்தார் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
சுயசரிதை கனவு
பாரதி அறுபத்தாறு

வசன கவிதை என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள்

காட்சி சக்தி
காற்று கடல்
ஜகத் சித்திரம் விடுதலை

முப்பெரும் பாடல்கள்

கண்ணன் பாட்டு நூலில் உள்ள கவிதை தலைப்புகளின் பெயர்கள்

கண்ணன் – என் அரசன் கண்ணன் என் தோழன்
கண்ணன் – என் தாய் கண்ணன் – என் தந்தை
கண்ணன் – என் சேவகன் கண்ணன் – என் சீடன்
கண்ணன் – எனது சற்குரு கண்ணன் – என் குழந்தை
கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை கண்ணன் – என் காதலன்
கண்ணன் – என் காதலன்,
உறக்கமும் விழிப்பும்
கண்ணன் – என் காதலன், காட்டிலே தேடுதல்
கண்ணன் என் காதலன், – பாங்கியைத் தூது விடுத்தல் கண்ணன் என் காதலன், பிரிவாற்றாமை
கண்ணன் – என் காந்தன் கண்ணம்மா – என் காதலி,
காட்சி வியப்பு
கண்ணம்மா என் காதலி, பின்னே
வந்து நின்று கண் மறைத்தல்
கண்ணம்மா – என் காதலி,
முகத்திரை களைதல்
கண்ணம்மா என் காதலி,
நாணிக் கண் புதைத்தல்
கண்ணம்மா – என் காதலி,
குறிப்பிடம் தவறியது
கண்ணம்மா – என் காதலி, யோகம் கண்ணன் என் ஆண்டான்
கண்ணம்மா எனது குலதெய்வம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *