அகவிலைப்படி என்றால் என்ன | agavaipadi endral Enna
அகவிலைப்படி:
அகவிலைப்படி என்றால் என்ன – agavaipadi endral Enna: அகவிலைப்படி என்றால் பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பது ஆகும்.
அகவிலைப்படி கணக்கிடும் முறை:
2017 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் அறிக்கையில், அப்பொழுது அகவிலைப்படியை அடிப்படை சம்பவத்துடன் இணைத்து ஒவ்வொரு கிரேடு அடிப்படை சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அப்போதுள்ள அகவிலைப்படி புள்ளிகள் பூஜ்ஜியம் ஆகிவிடும். அதற்குப் பிறகு விலை ஏற்றத்தின் படி புள்ளிகள் இடப்படும். அதற்கு ஏற்றவாறு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி விலைகள் மாறும்.
அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வு காரணமாக வாங்கும் சக்தி குறையும். வாங்கும் சக்தி குறைந்தால் விற்பனை சக்தியும் குறைவு ஏற்படும். இதற்கு ஒரு தீர்வாக அமைந்தது அகவிலைப்படி.
அகவிலைப்படி விலைவாசி நிர்ணயம்:
விலைவாசி நிலையாக இருப்பது நல்லது. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. காரணம் சந்தை பொருளாதாரக் கொள்கைகள். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ இயலாது.
எனவேதான் விலைவாச உயர்வை ஓரளவுக்கு ஈடுகெட்ட கொடுக்கப்படும் தொகை அகவிலைபடி ஆகும்.
இதனால் உணவுப்பொருள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் மீதான விலைவாசி உயர்வு ஓரளவிற்கு சமாளிக்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன:
• அகவிலைப்படி என்பது பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பது. மேலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதனை ஈடுகாட்டு ஊழியர்களுக்கு அளிப்பது இந்த அகவிலைப்படி தான்.
• பணம் வீக்கம் காரணமாக விலைவாசி ஏற்ற மற்றும் இறங்கும் தருவாயில் அதை சமாளிக்கும் விதமாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள விகிதத்தின் படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி தரும் பணம் அகவிலைப்படி என கூறலாம்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும்:
அரசு ஊழியர்களை பொருத்தவரையில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அகவிலைப்படி ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
2023 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதியம் உயர்வு:
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஆனது அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி ஊதியம் கொடுத்து வருகிறார்கள். அதுவே இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் 1/1/2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும் என அதிகாரப்பூர்வ அரசு வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி விளக்கம்:
பொதுவாக எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை செய்பவர்கள் அவர்களுடைய சம்பளம் என்பது – அடிப்படை படி மற்றும் அகவிலைப்படி இவைகள் அனைத்தும் அடங்கியதே அகவிலைப்படி ஆகும்.
அடிப்படைப்படி எப்போதும் மாறாமல் இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அரசு மற்றும் அரசு சாரா ஊழியர் வருடாந்திர சம்பள உயர்வு பெறும்போது மட்டுமே இந்த அடிப்படை படியானது உயரும்.
அகவிலைப்படி ஆங்கிலத்தில் முழு விளக்கம்:
Dearness allowance என்று அகவிலைப்படி ஆங்கிலத்தில் கூறுவார்கள். மேலும், இந்த Consumer price index அடிப்படையாகக் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உண்டாகிறது.
இவ்வாறு இருக்கும் அடிப்படை படியை நிலையாக வைத்து அகவிலைப்படையின் சதவீதத்தை படி சம்பளம் உயரம் அல்லது குறையும்.
அகவிலைப்படி சம்பள உயர்வு உதாரணம்:
வீரக்குமார் என்பவர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் மேலும் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அந்த மாதத்தில் நான்கு சதவீதம் உயர்ந்தால், அவருக்கு அந்த மாதத்தில் இருந்து 52 ஆயிரம் ஆக கிடைக்கும்.
Read Files: பாரதியார் பற்றிய யாருக்கும் தெரியாத முழு தகவல்கள்

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .