தீபாவளி உண்மை வரலாறு – Diwali History in Tamil

தீபாவளி உண்மை வரலாறு – Diwali History in Tamil

தீபாவளி உண்மை வரலாறு

தீபாவளி உண்மை வரலாறு:

தீபாவளி உண்மை வரலாறு:- நம் இந்தியாவில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப ஒவ்வொருவரும் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகைகள் எதற்காக கொண்டாடுகிறோம்? எப்படி உருவானது? என்று இன்று இருக்கும் பலருக்கும் அதற்கான காரணம் தெரிவதில்லை.

இந்த பண்டிகைகளில் முக்கியமான ஒரு பண்டிகை தான் தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகை தினத்தில் அனைவரும் புத்தாடைகளை உடுத்தி, பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இந்தியா முழுவதும் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை எப்படி உருவானது என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி கட்டுரை:

Diwali history in tamil: தீபாவளி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தீபாவளி என்ற சொல் “தீபம்” மற்றும் “ஆவளி” என்று இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவானது. அதாவது, இதற்கு “தீபங்கள் வரிசை” என்று பொருளாகும்.

முன்னோர்கள் தீபாவளியை “தீ ஒளி” என்று கூறுகின்றனர். தீமையை அகற்றி நன்மை பிறக்கும் நாளாக இது கருதப்படுகிறது. இந்த தீபாவளி கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் புராண கதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி உண்மை வரலாறு || Diwali history in tamil essay:

புராண கதையின் படி திருமாலின் வராக (காட்டுப் பன்றி) அவதாரத்திற்கும், பூமாதேவி சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தவர் தான் இந்த நரகாசுரன். நரகாசுரனின் இயற்பெயர் “பவுமன்” ஆகும்.

இவன் இன்றைய அசாம் மாநிலத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் பகுதியை ஆட்சி செய்து வந்தான். பின்பு தனக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று எண்ணி பிரம்மனை நோக்கி பல ஆண்டு காலம் தவம் இருந்தான்.

இதனால், அவனின் வேண்டுதலை ஏற்று பிரம்மன் அவன் முன் தோன்றினார். பிரம்மனிடம் எனக்கு எந்த உயிர்களாலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். ஆனால், பிரம்மன் இவ்வுலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களுக்கும் என்றோ ஒரு நாள் மரணம் நிச்சயம் இதுதான் எழுதப்பட்ட விதி என்று கூறினார். இதனைக் கேட்ட நரகாசுரன் எனக்கு என்னுடைய தாயின் கையால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று பிரம்மனிடம் வரத்தினை பெற்றார்.

மனிதன் உருவத்தில் இருந்து ஒரு அசுரன் போன்று மாறினான். இதனால், இவனுக்கு “நரகாசுரன்” என்று பெயர் ஏற்பட்டது.

தீபாவளி உண்மை வரலாறு:- அதன்பிறகு, கடவுள்களின் அன்னையாக போற்றப்படும் அதிதியின் காது வளையங்களை திருடினான். எண்ணற்ற பெண்களை சிறைபிடித்து மிகவும் துன்புறுத்தி வந்தான். அளவு கடந்த அட்டகாசங்களை செய்து மக்களையும், தேவர்களையும் அதிக அளவில் கொடுமைப்படுத்தி துன்புறுத்தினான்.

இதனால், தேவர்களும், பாலகர்களும் விஷ்ணுவிடம் வேண்டி நராகசுரனை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு விஷ்ணு என்னுடைய எட்டாம் அவதாரமான கிருஷ்ணர் என்னும் அவதாரத்தில் அவனை வதம் செய்து உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.

பிறகு கிருஷ்ணன் நரகாசுரனை எதிர்த்து போர் தொடுத்தார். இருவருக்கும் இடையே கடுமையான போர் நிலவியது. நரகாசுரன் தன் தாயின் கையால் தான் தனக்கு மரணம் ஏற்படும் என்று பிரம்மனிடம் வரம் பெற்றுள்ளார் என்பதை அறிந்த கிருஷ்ணன். போரில் சத்திய பாமாவே (பூமா தேவி) தேரை இயக்க சொன்னார்.

தன் தாய் தான் தேரை இயக்குகிறாள் என்பதை மனதில் அறியாத நரகாசுரன் தன்னுடைய வில்லிலிருந்து ஒரு அம்பை கிருஷ்ணனை நோக்கி விட்டான். அந்த தருணத்தில் அந்த அம்பு கிருஷ்ணன் மீது பட்டு கிருஷ்ணன் மயங்கி விழுவது போல் சத்யபாமா முன் நாடகம் ஆடினார்.
இப்படி கிருஷ்ணர் மயங்கி இருப்பதை கண்ட பூமாதேவி அம்மையார் மேலும் கோபம் கொண்டு நரகாசுரனை அளித்தார்.

அதன் பிறகு நரகாசுரன் பிடியில் இருந்த அதிதியின் காது வளையங்களையும் அனைத்து பெண்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணன். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்த கிருஷ்ணன். எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இதனால், தான் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து நாம் குளிக்கும் பழக்கம் வந்தது என்ற ஐதிகமும் உள்ளது.

தன்னுடைய தாயின் கையால் வீழ்ந்த நரகாசுரன் இறக்கும் தருவாயில் “என்னுடைய இறப்பிற்கு யாரும் அழக்கூடாது, வருத்தப்படக்கூடாது” என்னுடைய இறப்பை கோலகலமாக அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். “16-வகை பலகாரங்கள்” படைத்து செல்வ செழிப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

இதுபோன்று, நரகாசுரனின் அழிவை தேவர்கள் மட்டும் கொண்டாடாமல் மக்களும் கொண்டாட வேண்டும் என்று நினைத்த அவனுடைய தாய் சத்தியபாமா கிருஷ்ணரிடம் வரம் பெற்றதால் தீபாவளி என்ற ஒரு பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்:

வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசத்தில் ராமன் பத்து தலை கொண்ட இராவணனிடம் போரிட்டு தன் மனைவி சீதையை மீட்டு தம்பி லட்சுமணனுடன் 14-ஆண்டு காலம் வன வாசன் முடித்து அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்திய மக்கள் ஊர் முழுவதும் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள் இந்த திருநாளை “தீபாவளியாக” கொண்டாடப்படுவதாக சிலரால் கருதப்படுகிறது.

தீபாவளி பற்றிய 10 வரிகள் || Diwali history in tamil pdf

• தீபாவளி பண்டிகை இந்து மக்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

• தீபாவளி பண்டிகை உருவானதற்கு பல காரணம் உண்டு. குறிப்பாக புராண கதைகள் இதை விளக்குகிறது.

ராமாயணக் கதையில் ராமர் – இராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தன் தம்பி லட்சுமணனுடன் 14-ஆண்டு காலம் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய போது அயோத்தி மக்கள் அனைவரும் ஊர் முழுவதும் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனையே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

• இன்னொரு வரலாறாக கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த தினத்தை கோலாகலமாக இனிப்புகள் செய்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. என்று இன்னும் சிலர் கூறப்படுகின்றன.

• தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தில் கோவில்களில் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கான, சான்றுகள் திருப்பதி திருமலை “வேங்கடவன் கோவிலில்” உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. அதுபோன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேர் திருவிழாவின் போது வான வேடிக்கையுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது என்பதை அங்கு இருக்கும் சுவர் ஓவியங்கள் நாம் தெரிந்து கொள்ளலாம்.

• தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுகின்றனர்.

• தமிழகத்தில் இந்த தீபாவளி திருநாளில் புது மண தம்பதிகளால் அதிக அளவில் “தல தீபாவளி” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

• இந்த தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் வரும் அம்மாவாசை தினத்தன்று அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15-ஆம் தேதி வரையில் உள்ள ஏதேனும் ஒரு நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது.

• இந்துக்கள் மட்டுமில்லாமல், சமணர்களும், சீக்கியர்களும் இப்பண்டியை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

• சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களால் அதிக அளவில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

• இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிசி மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் தீபாவளி தினத்தன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

• இந்து, சைனம், சீக்கிரம் மற்றும் பௌத்தம் போன்ற மதத்தின் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் இந்த தீபாவளி பண்டிகை ஆகும்.

கால குறிப்புகள் || Diwali history in tamil wikipedia

தீபாவளி அர்த்தம்:

தீபாவளி = தீபம் + ஆவளி = தீபங்களின் ஆவளி. இதற்கு, “தீபங்கள் வரிசை” என்று பொருளாகும். தீப ஒளித் திருநாள் நம் மனதில் இருக்கும் இருளை நீக்கி இறைவனின் அருள் கிடைக்க கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

தீபாவளி எந்த மாசம்?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்?

தீபாவளி உண்மை வரலாறு:- தீபாவளி பண்டிகை தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் பொதுவாக இந்த நிகழ்வு சூரிய உதயத்துக்கு முன்பாக குளித்தால் நல்லது. நகர சதுர்த்தி எனப்படும் தீபாவளி பண்டிகை என்று உஷத் காலத்தில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.

நரகாசுரன் என்பவன் யார்?

மகாவிஷ்ணு பெருமாளின் வராக அவதாரத்திற்கும்,பூமாதேவிக்கும் பிறந்தவர் தான் நரகாசுரன் ஆவார். இவன் தன் தாயின் கையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று பிரம்ம வரம் பெற்றார். அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக மாறி நரகாசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி யார் பண்டிகை?

தீபாவளி உண்மை வரலாறு:- ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஊர் இந்து பண்டிகை தான் தீபாவளி பண்டிகை ஆகும். இந்துக்கள் மட்டும் இன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இந்த பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்களால் தீபாவளி பண்டிகை அதிகளவில் கொண்டாடப்படுகிறது.

2024 தீபாவளி எந்த தேதி?

தீபாவளி பண்டிகை 2024 அக்டோபர் 31-ஆம் தேதி வியாழக்கிழமை தினத்தன்று ஐப்பசி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Read Also:- தமிழ் கடவுள் முருகன் உண்மை வரலாறு

Leave a Comment