தமிழ் கடவுள் முருகன் உண்மை வரலாறு || Murugan history in tamil

Table of Contents

தமிழ் கடவுள் முருகன் உண்மை வரலாறு || Murugan history in tamil

Murugan history in tamil

முருகனின் தோற்றம் || முருகன் ஏன் தமிழ் கடவுள்

Murugan history in tamil: தமிழகத்தில் எத்தனை கடவுள்களை மக்கள் வழிபட்டாலும் அதிக அளவில் முதன்மை கடவுளாக வழிபடுவது முருகப் பெருமானை மட்டுமே…!  இந்துக் கடவுளான சிவன் மற்றும் பார்வதி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த முருகன்.

சிவபெருமான் தன்னுடைய முகத்தில் இருந்து நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்டார். அதனை உள்வாங்கிய வாயு பகவான் சரவண பொய்கை ஆற்றில் அதனை விட்டார். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த நெருப்புக்குள் ஆறு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தார்கள். இதனை அறிந்த பார்வதி அம்மையார் ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர இணைக்கும் போது “ஆறுமுகங்கள்” கொண்ட அதிசய உருவமாக முருகப்பெருமான் தோன்றினார்.

முருகன் மனைவிகள்:

• முதல் மனைவி இந்திரனின் மகளான “தெய்வானை” ஆகும்.

• இரண்டாவது மனைவியாக குறத்தி வம்சத்தை சேர்ந்த “வள்ளி” என்ற பெண்ணை மணமுடித்தார்.

முருகனின் சிறப்புகள் || முருகன் பெருமை

• முருகன் தமிழக மக்களால் அதிக அளவில் வணங்கப்படுவதால் இவர் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

• அதுமட்டுமின்றி, முருகன் ஒரு சைவ சமயத்தை சேர்ந்த இந்து கடவுளாக வழிபடப்படுகிறார்.

• பழங்காலத்தில் ஐநிலங்கள் என அழைக்கப்படும் நிலங்களின் மூத்த நிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவனாக முருகன் வழிபடப்படுகிறார்.

• தமிழகத்தில் எண்ணிலடங்கா முருகன் கோயில்கள் ஒவ்வொரு சிறு கிராமத்திலும் கூட அமைக்கப்பட்டு மக்களால் வழிபட பட்டு வருகிறது.

• தமிழகத்தில் ஆறு பெரும் கோவில்கள் முருகனின் சிறப்பை போற்றும் விதமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு பெருமளவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

முருகன் என பெயர் வர காரணம்:

Murugan history in tamil:  முருகு என்ற வார்த்தைக்கு அழகு இளமை என்று பொருளாகும் எனவே முருகன் என்றால் அழகன் என்று பொருளாக கருதப்படுகிறது.

வல்லின, மெல்லின, இடையின போன்ற மூன்று மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிர் எழுத்தும் சேர்ந்து முருகு என்று வருவதால் இம்மூன்றும் கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி போன்றவற்றை குறிக்கிறது.

முருகன் 1008 பெயர்கள் || முருகனின் வேறு பெயர்கள்

1. கார்த்திகேயன்

2. சரவணன்

3. முருகன்

4. குமரன்

5. ஆறுமுகன்

6. வேலன்

7. அயலவன்

8. காங்கேயன்

9. குகன்

10. சேயோன்

11. சேனாதிபதி

12. கந்தன்

13. கடம்பன்

14. கதிர் வேலன்

15. சுவாமிநாதன்

16. சண்முகன்

17. தண்டாயுதபாணி

18. சுப்பிரமணியன்

19. வடிவேலன்

20. மயில்வாகனன்

21. ஆறுபடை வீடுடையோன்

22. முத்தையன்

23. சிவகுமரன்

24. கந்தசாமி

25. விசாகன்

26. வள்ளபற்பெருமான்

27. செந்தில்நாதன்

28. ஆண்டியப்பன்

29. வேலாயுதன்

30. வேந்தன்

32. சுரேசன்

33. செவ்வேல்

34. செல்வ குமரன்

35. கதிர்காமன்

36. தண்டபாணி

முருகனை வணங்கும் சில மந்திரங்கள்:

• கருணை கடல் கந்தா போற்றி…!!

• காக்க காக்க கனக வேல் காக்க…!!

• ஓம் சரவணபவ போற்றி…!!

• வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…!!

முருகனின் அறுபடை வீடுகள்:

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழனி

4. சுவாமிமலை

5. திருத்தணி

6. பழமுதிர்ச்சோலை

தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மற்ற முருகன் கோயில்கள்:

1. குன்றக்குடி

2. மருதமலை

3. சோலைமலை

4. வடபழனி

5. எட்டுக்குடி

6. திருமலைக்கேணி

7. சிவன்மலை

8. சென்னிமலை

9. பாதாள செம்பு முருகன்

10. சேலம் 146-அடி முருகன் கோவில்

11. வெள்ளிமலை

12. குன்றத்தூர்

அறுபடை வீடுகளின் சிறப்புகள்:

1. திருப்பரங்குன்றம்

Murugan history in tamil:  முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான வீடு திருப்பரங்குன்றம் ஆகும். இந்த கோவில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

அசுரனை கொன்ற முருகன் இந்த கோவில் தான் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.

இந்தக் கோவிலில் முருகனின் வேலுக்கு கூட சிறப்பான அபிஷேகம் செய்யப்படுகிறது.

2. திருச்செந்தூர்

Murugan history in tamil:  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலின் கடலில் நீராடினால் மனதில் ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி அமைதியான மன நிம்மதி ஏற்படும்.

இந்த கோவிலின் மூலவர் கடலை நோக்கியபடி காட்சியளிப்பது மிகவும் பிரதான ஒரு காட்சியாக பார்க்கப்படுகிறது.

3. பழனி

  • முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடாக மக்களால் அதிகளவில் வழிபடப்படும் தளம்தான் இந்த பழனி முருகன் கோவில்.
  • இந்த கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு 70-கிலோமீட்டர் தொலைவில் பழனி என்னும் மலையில் அமைந்துள்ளது.
  • தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம், சூரசம்ஹாரம், முருகன் திருகல்யாணம் போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தேரோட்டம் நடைபெறும். இந்த நிகழ்வின் போது கோடி கணக்கான மக்கள் கூட்டம் முருகனை வழிபடுகின்றனர்.
  • இந்த கோயிலுக்கு யானை பாதை, ரோப் கார்கள், இரயில் இயந்திரங்கள் என மூன்று விதமான பாதைகளில் சென்று முருகனை தரிசனம் செய்யலாம்.
  • தண்டாயுதபாணி என்ற பெயரில் இங்கு முருகன் மக்களால் வணங்கப்படுகிறார். இந்த கோவிலை 18-சித்தர்களின் ஒருவரான போகர் உருவாக்கியுள்ளார்.
  • முக்கியமாக மார்கழி 1-ஆம் தேதி அன்று பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து 48-நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக காவடி எடுத்து சென்று முருகனை வழிபட்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவு செய்கின்றனர்.

4. சுவாமிமலை:

Murugan history in tamil:  முருகனின் நான்காம் படை வீடாக மக்களால் வழங்கப்படும் வீடு தான் சுவாமிமலை சுவாமிநாத திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இங்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை முருகப்பெருமான் சிவனுக்கு எடுத்துரைத்தார் அதனை சிவன் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

தன்னுடைய மகன் குருவாக வீற்றிருக்க தான் ஒரு சிஷ்யன் போல் சிவ பெருமான் அமர்ந்து கேட்கும் செயலாக காட்சியளிக்கின்றனர். இதனால், சிவகுருநாதன் என்ற பெயரால் முருகப்பெருமான் அழைக்கப்பட்டார்.

5. திருத்தணி:

Murugan history in tamil: திருத்தணி முருகப்பெருமாள் கோவில் முருகனின் ஐந்தாம் படை வீடாக மக்கள் வழிபடப்படுகிறது. இந்தக் கோவில் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து வென்ற முருகப்பெருமான் திருத்தணி மலையின் மீது வந்து தன்னுடைய கோபத்தை தணித்து சாந்தமான நிலையில் காட்சி அளித்தார் என்பது ஐதீகம்.

இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த சந்தனத்தை தண்ணீரில் கரைத்து குடிப்பதால் சகல பிணிகளும் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

6. பழமுதிர்ச்சோலை:

முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடாக மக்களால் வணங்கப்படும் கோவில்தான் இந்த பழமுதிர்ச்சோலை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோவில். இந்த கோவில் மதுரை மாவட்டத்தில் சோலை மலையில் அமைந்துள்ளது.

இங்கு நடைபெறும் அதிசயம் என்னவென்றால் சாதாரணமான காலங்களில் நாவல் பழம் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் தான் பழக்கம். ஆனால், இங்கு காணப்படும் நாவல் மரத்தில் முருகனின் அருளால் சஷ்டி மாதம் என போற்றப்படும் ஐப்பசியில் நாவல் பழம் பழுக்கும் அதிசயத்தை நாம் பார்க்கலாம்.

7. மருதமலை:

மேற்கூறிய ஆறு படைகளைத் தவிர மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் முருகன் கோவிலாக மருதமலையும் பார்க்கப்படுகிறது. இந்த மருதமலை மிகவும் முக்கியமான கோயம்புத்தூர் சுற்றுலா தலங்களில் ஒன்றாக மக்களால் மிகவும் ரசித்து பார்த்து வணங்கப்படுகிறது.

இங்கு, முருகப்பெருமான் தண்டாயுதபாணி, மருதாசல மூர்த்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

கோயம்புத்தூர் செல்லும் அனைவரும் கண்டிப்பாக பார்த்து வழிபடக்கூடிய ஒரு சுற்றுலா தலமாக இந்த மருதமலை கோவில் பிரசித்தி பெற்றுள்ளது.

8. வடபழனி:

அருள்மிகு முருகன் கோவில் பலவற்றில் சென்னையில் மிகவும் பிரபலமான கோவில் எதுவென்றால் அது இந்த வடபழனி முருகன் கோவில் தான்.

இக்கோவிலில் வழிபட்டு வந்தால் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்கள் பெண்களுக்கு திருமணம் கூடிய விரைவில் நடைபெறும் குழந்தை பாக்கியம் பெறவும் இத்தன முருகன் அதிகளவில் வழிபடுகின்றனர்.

தென்பழனிக்கு செல்ல வசதி இல்லாதவர்கள் இந்த வடபழனி கோவிலில் வந்து தங்களுடைய குறைகள் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்கின்றனர்.

9. எட்டுக்குடி:

முருகனின் அறுபடை வீடுகளைத் தவிர இந்த எட்டுக்குடி முருகன் கோவில் மிகவும் பக்தர்களிடையே புகழ்பெற்ற ஒரு கோவிலாக விளங்குகிறது. இந்த கோவில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் ஊருக்கு அருகே எட்டுக்குடி என்னும் இடத்தில் உள்ளது.

இந்த கோவிலின் சிறப்பு பக்தர்கள் முருகனை எவ்வாறு பார்க்கிறார்களோ அவ்வாறு காட்சியளிக்கிறார் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

உதாரணமாக முருகப்பெருமானை குழந்தை வடிவில் பார்த்தால் குழந்தையாகவும், பாலன் வடிவில் பார்த்தால் பாலனாகவும், முதியவராக பார்த்தால் முதியவராகவும் காட்சி தருவதாக பக்தர்கள் அவர்களுடைய அனுபவத்தில் கூறுகின்றனர்.

10. குன்றத்தூர்:

இந்தக் குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் எனும் சிறு குன்றின் மீது அமைந்துள்ளது.

இந்த கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் கிட்டதட்ட 80 படிகளுக்கு மேலாக ஏறி சென்று முருகனை தரிசனம் செய்ய வேண்டும்.

கருவறை உள்ளே முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய திருமூர்த்தங்கள் காட்சியளிக்கின்றனர். இதனால், கருவறைக்கு வெளியில் இருந்தபடி மூவரையும் ஒரே சமயத்தில் கண்டு தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. ஏனென்றால், இங்கு சிலையின் வடிவம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் முருகன் வரலாறு pdf:

முருகன் பிறந்தநாள் எது? || முருகன் பிறந்த தினம்

கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி திருக்கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் தை மாதம் வரும் பௌர்ணமி தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. இது போல்தான் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது.

இந்த வைகாசி விசாகம் என்னும் திருநாள்தான் முருகன் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

முருகனின் படைத்தலைவர் யார்?

முருகனின் படைத்தலைவனான வீரபாகுவின் வழி வந்தவர்கள் என்று கூறுகின்றனர் சேனைத்தலைவர்கள்.

தமிழ் கடவுள் முருகன் யார்?

இந்துக் கடவுளான சிவபெருமானுக்கும் பார்வதி தேவி அம்மையாருக்கும் மகனாக தோன்றியவர் தான் இந்த முருகப்பெருமான். தமிழர்களால் அதிக அளவில் வணங்கப்படுகிறார் இதனால் இவர் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகிறார்.

ஐந்திணைகளில் முதல் திணையான குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகன் வழிபடப்படுகிறார். முருகு என்ற சொல்லிற்கு அழகு மற்றும் இளமை என்று பொருள்படும்.

முருகனுக்கு உகந்த நாள் எந்த நாள்?

முருகனுக்கு மிகவும் உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்து வந்தால் மிகச் சிறந்தது மற்றும் நன்மைகள் அதிகரிக்கும்.

பழமுதிர்ச்சோலை எந்த மாவட்டம்?

பழமுதிர்ச்சோலை இந்திய நாட்டில் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வீரபாகு யார்?

தமிழ் கடவுள் முருகனின் ராணுவ தளபதிகளில் ஒருவர் தான் இந்த வீரபாகு. முருகனை பாதுகாப்பதற்காக சக்தி தேவியின் காலில் இருந்த ஆபரணங்களில் இருந்து 9-தளபதிகள் பிறந்தனர். இந்த 9-தளபதிகளில் வீரபாகுதான் மூத்தவர் ஆவார்.

திருத்தணியில் என்ன பேமஸ்?

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் தன்னுடைய கோபங்களை தணிப்பதற்காக திருத்தணி மலையில் மன நிம்மதிக்காக காட்சியளித்தார். சினம் தனித்த இடம் என்பதால் இதற்கு திருத்தணிகை என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

பின்னர், நாளடைவில் இது திருத்தணி என்ற பெயர் வழக்கில் மாறியது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக மிகவும் பழமை வாய்ந்த ஒரு கோவிலாக மக்களால் வணங்கப்படுகிறது.

சாமிமலை எந்த மாவட்டம்?

Murugan history in tamil:  முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் வீடாக மக்களால் வணங்கப்படும் சாமி மலை சுவாமிநாத திருக்கோவில் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் என்ற மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் 6-கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

Read Also: இராமயண கதை வரலாறு

Leave a Comment