முடி அடர்த்தியாக வளர எண்ணெய் – Womens Higher Growth Tips In Tamil

முடி அடர்த்தியாக வளர எண்ணெய் | Womens Higher Growth Tips In Tamil

Womens Higher Growth Tips In Tamil

Womens Higher Growth Tips In Tamil – முடி அடர்த்தியாக வளர எண்ணெய்: பெண்களுக்கு பொதுவாக எந்த ஆசை இருக்கிறதோ இல்லையோ தங்களது முடியை நீளமாகவும் மற்றும் அடர்த்தியான அழகான கூந்தலாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆகவே உங்களுடைய கூந்தலை மிகவும் நீளமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதனை சிறப்பான முறையில் கவனித்து தினம் தினம் பராமரிப்பது பார்க்க வேண்டும்.

எத்தனை நாட்டு நாட்டு மருந்துகள் மற்றும் ஆங்கில மருந்துக்களை பயன்படுத்தினாலும் முடி கொட்டுவது மட்டும் நிக்கவே நிற்காது.ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தங்களுடைய முடி கொட்டுவதற்கு ஒரு சில காரணங்கள் மட்டுமே முதலில் கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

பின்னர் தேவையற்ற மன அழுத்தம் ஆவதை தவிர்க்கலாம். மேலும் உடலில் ஏற்படக்கூடிய வெப்பத்தினாலும் கூட முடி கொட்டலாம். எனவே இதிலிருந்து தவிர்த்து நம்முடைய முடியை பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பெண்களின் கூந்தலை பொறுத்தவரையில் கோரை முடி சுருட்டை முடி என இரண்டு வகையாக இருக்கும். மேலும் சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல், எண்ணெய் பசை உள்ள கூந்தல், பலவீனமான கூந்தல் ஆகிய வகைகளிலும் உண்டு.

முதலில் வறண்ட கூந்தல் பற்றி பார்ப்போம்

 • உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும் பொழுது அந்த ஈரத்தை துவட்ட இன்னமும் முடி சிக்கு நிறுத்ததாக மாறும்.
 • அந்த முடியை சீவுவது ரொம்பவே சிரமமாக இருக்கும் மேலும் அவ்வாறு செய்யும் பொழுது ஆரோக்கியம் மற்றதாக முடி இருந்தால் அது சீப்போர்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
 • இவ்வாறு நடக்கும் பல பெண்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.

மேலும் இந்த வகை கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் தன்மை காணப்படும் இதனால் கூந்தலில் தூசும் அழுக்கும் படிந்து காணப்படும்.

இத்தகைய கூந்தல் உடையவர்கள் முதலில் தினம் தினம் குளித்து தங்களுடைய முடியை அழுக்கு படாமல் பக்குவமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

எதனைப் பயன்படுத்தி குளிக்கலாம்

✍️ வறண்ட கூந்தல் உள்ளவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் மருதாணி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளலாம்.

✍️ அதனை குளிப்பதற்கு முன்னர் தங்களுடைய கூந்தலில் போட்டு சுத்தமாக கூந்தலை குளிப்பாட்டுவது நல்லது.

✍️ மேலும் இந்த எலுமிச்சை பழத்துடன் சீகக்காய் கலந்த ஷாம்பு வையும் பயன்படுத்தி குளிக்கலாம். மருதாணியை சேர்ப்பதை விட சீகைக்காய் பயன்படுத்தி குளிப்பது சற்று நல்ல ரிசல்ட் தரும்.

✍️ மேலும் ஒரு மாதத்திற்கு இதனை தொடர்ந்து செய்தால் உங்களுக்கு சிறந்த பலனை நீங்களே பார்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்

 • உங்களுடைய கூந்தலை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கூந்தலில் சிக்கு ஏற்படுவதை குறைக்கலாம். ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அடிக்கடி கூந்தலை அழித்துக் கொண்டே இருக்காதீர்கள். அவ்வாறு அடிக்கடி அலசிக்கொண்டே இருப்பதால் கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை அகன்று விடும்.
 • முடிந்த அளவு குளிர்ந்த நீரால் தங்களின் கூந்தலை அலசவும். பல்வேறு பெண்களுக்கு தங்களின் கூந்தலை மென்மையாகவும் சிக்குகள் இல்லாதவாறும் இருக்க செய்ய ஆசைப்படுவார்கள்.
 • அவ்வாறு எண்ணம் தோன்றுபவர்கள் இதை செய்து பாருங்கள், முதலில் சூரியகாந்தி எண்ணையை சிறிதளவு உங்களுடைய உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு அதனை உங்கள் கூந்தலின் முனைப்பகுதியிலோ அல்லது கூந்தலில் லேசாகவோ தேய்த்து கொண்டால், உங்கள் கூந்தல் வழக்கத்தை விட மென்மையாகவும் அடர்த்தியாகவும் காணப்படும்.

எண்ணெய் பசை கூந்தல் உடையவர்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்: எண்ணெய் பசை கூந்தல் கொண்டவர்கள் மிகுந்த எண்ணெய் தன்மை கொண்டதாக இருக்கும். அதிக எண்ணெய் தன்மை கொண்டிருப்பதால் அவர்களின் கூந்தலில் தூசும் அதிக அழுக்கும் படிந்து காணப்படும். ஆகையால் இத்தகைய கூந்தல் உடையவர்கள் தினம் தினம் குளிப்பது நல்லது.

எண்ணெய் பசை கூந்தல் உடையவர்கள்

✍️ நீங்கள் குளித்து முடித்த பிறகு உங்களுடைய கூந்தலை சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வினிகர் இவை இரண்டையும் ஒரு சிறிய கப்பில் ஒன்றாக கலந்து கடைசியாக குளித்து முடித்துவிட்டு அலசும் பொழுது இதனை உங்கள் கூந்தலில் அப்ளை செய்து அலச வேண்டும்.

✍️ முதலில் இரண்டு எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு அதன் சாறை ஒரு கப்பில் பிழிந்து கொள்ளுங்கள் பின்னர் ஒரு கப் தேயிலை நீரை சேர்த்து இரண்டையும் சிறிதளவு நீரில் கலக்கி கூந்தலை கடைசியாக அழுத்தும் போது பயன்படுத்துங்கள்.

என்னத்தன்மை உடைய கூந்தல் கொண்டவர்கள் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் இவர்கள் அதிக அளவு தினமும் தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிக நேரம் சீப்பை வைத்து சீவிக் கொண்டே இருக்கவும் கூடாது அதேபோல் வருத்த மற்றும் பொறித்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

வறண்ட கூந்தல் உடையவர்கள் என்ன செய்யலாம்

வறண்ட கூந்தல் உடையவர்கள்

Womens Higher Growth Tips In Tamil:  இந்த வகை கூந்தல் உடையவர்கள் தங்களது முடிகள் காய்ந்து வறட்சியில் முனைகள் அதாவது முடியின் முனைகள் இரண்டாக உடைந்து காணப்படும் இதனால் அவர்களுடைய முடியின் நிறமும் உறுதியான தன்மையும் இருக்காது இத்தகைய கூந்தல் உடையவர்கள் அவர்களுக்கு சற்று அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சி தன்மை அதிகமாக இருப்பதால் தினமும் இரண்டு முறையாவது தங்களுடைய கூந்தலுக்கு என்னை மசாஜ் போல் செய்து வர வேண்டும் மேலும் 10 அல்லது 20 நிமிடங்கள் வரை கூட மசாஜ் செய்து கொண்டே இருக்கலாம்.

பொதுவாக ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் இவ்வகை கூந்தலில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது எனவே உடலில் அதிகப்படியான உஷ்ணம் ஏற்படுவதை குறைத்து குளிர்ச்சியாக இடத்திலேயே இருக்க வேண்டும்.

எப்படி வறண்ட கூந்தலை சரி செய்யலாம்

வறண்ட கூந்தல் இதனை நினைத்து பல்வேறு பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். நீங்கள் பயன்படுத்தக் கூடியது மூன்றே மூன்று எண்ணை தான் கற்றாழை எண்ணெய், நல்லெண்ணெய் செம்பருத்தி எண்ணெய் ஆகியவை.

நீங்கள் எப்பொழுதெல்லாம் தலையை குளித்து முடிக்கிறீர்களோ கடைசியில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறை உங்களுடைய குளிக்கும் நீரில் சேர்த்து கலந்து அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் தலை குளித்து முடித்து விட்ட பிறகு ஈரமாக இருந்தால் பூஞ்சை பாக்டீரியா போன்ற நோய்களும் தொற்றிக்கொள்ள கூடும் எனவே உங்களுக்கு என்னை பசை சிறிதளவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் முடியை நன்றாக துவட்டி விட்டு அதன் பின்னர் சிறிது தேங்காய் எண்ணெய் ஏற்றி தடவிக் கொள்ளவும்.

மற்றும் பலருக்கு மிகவும் பலவீனமான கூந்தல் இருக்கலாம். இந்த வகை கூந்தல் உடையவர்கள் எளிதில் கூந்தல் உடையும் தன்மை உடையவனாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு உடலில் எந்தத் தெம்பும் இருக்காது.

இவ்வகை கூந்தல் உடையவர்கள் நீண்ட நேரம் வெயிலில் அளந்து கொண்டே இருப்பது மற்றும் நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது மற்றும் உப்பு தண்ணீரில் குளிப்பது குளித்துவிட்டு தலையை துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஒருவருடைய கூந்தல் பலவீனமாக மாறிவிடக்கூடும்.

நீங்கள் எவ்வகை கூந்தலுடன் இருந்தாலும் சரி முதலில் குளித்து முடித்தவுடன் தங்களுடைய தலையை தோண்டிக் கொள்வது நல்லது. அப்போதுதான் தலையில் உள்ள வேர் பகுதியில் நீர் இல்லாமல் சற்று பலமாக இருக்கும்.

அதற்கென்று மிகவும் பலமாக தங்களுடைய கூந்தலை அடிப்பதோ மற்றும் உராய்ந்து தேய்பதோ இருக்கக் கூடாது.

சில பெண்கள் குளித்து முடித்தவுடன் தங்களது தலையை ஒரு தவளை எடுத்து மடார் மடார் என்று அடித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு செய்வதனால் முடியின் உடைய வேர் பகுதி சற்று பலவீனம் அடைந்து கொட்டை தொடங்கிவிடும்.

மேலும் கூந்தலுக்கு சேதம் உண்டாகி பலவீனமாக அடைந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் முடிகள் அனைத்தும் கொட்ட தொடங்கும். எனவே, இவ்வகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் எண்ணெய் பூசி ஒரு டம்ளர் கருவேப்பிலை சாறு எடுத்து குடித்தால் முடி கருமையாக வளரும் மற்றும் அதற்கு பலமும் கிடைக்கும்.

கூந்தலை பலமாக்க செய்யக்கூடிய சில மருத்துவங்கள்

கூந்தலை பலமாக்க செய்யக்கூடிய சில மருத்துவங்கள்

 • தினமும் சாப்பிடும் போது ஏதேனும் ஒரு கீரையை எடுத்து சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும்.
 • நெல்லிக்காயை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதனை ஒரு வடிகட்டி வைத்து பிழிந்து எடுத்துக் கொண்டு, பின்னர் அதனை கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
 • பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் வரும். எனவே வைட்டமின் ஈ மாத்திரைகளும், வைட்டமின் ஈ சத்துள்ள பொருட்களையும் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
 • முதலில் மருதாணி இலையையும் கருவேப்பிலை இலையையும் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சம அளவு அதாவது மருதாணிகளையும் கருவேப்பிலைகளையும் எவ்வளவு எடுத்தீர்களோ அதே அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து அதனை காய்ச்சி முடியில் தடவி வந்தால் உங்கள் கூந்தலானது கருகருவென்று பளபளப்புடன் காணப்படும்.

நாம் நம்முடைய முகத்தை எவ்வாறு பாதுகாக்கிறோமோ அதனைப் போல நம்முடைய கூந்தலையும் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. நம்முடைய முகத்திற்கு எவ்வாறு மசாஜ் செய்கிறோமோ கூந்தலுக்கு மசாஜ் செய்யும் முறைகளும் உண்டு.

வாருங்கள் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

✍️ முதலில் நன்றாக கழுவி விட்டு ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறிய கரண்டி தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய்ப்பால் ஒரு சிறிய கரண்டி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், சுத்தமான தேங்காய் எண்ணையை மூன்று சிறிய கரண்டி அளவுக்கு கற்றாழை சாறை சற்று தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் எடுத்த வாழைப்பழத்தை நன்றாக மசுக்கி கொள்ளுங்கள் உங்கள் கைகளை வைத்து கூட மசுக்கலாம் இதற்கென்று ஏதேனும் கருவியை பயன்படுத்த தேவையில்லை.

பின்னர் இதில் தயிர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவை தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு தேங்காய் எண்ணெய் கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும் அல்லது நீங்கள் மிக்சியில் வேண்டுமானாலும் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

இப்போது இவை அனைத்தும் ஒரு கிரீம் போல இருக்கும். இதில் தண்ணீர் படாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

இதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் குளிக்க செல்கிறீர்களோ அப்போதெல்லாம் சிறிதளவு உங்கள் கூந்தலில் அப்ளை செய்து விட்டு குளிப்பது நல்லது.

இதனை நீங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் உங்கள் கூந்தலில் இந்த கிரீன் பிடிக்காது.

எனவே சிக்கு மற்றும் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது எந்த விதமான குளிர்ச்சியும் உண்டாக்காது என்பதால் அதிகபட்சமாக 40 நிமிடங்கள் வரை உங்கள் தலையில் இதை ஊற வைக்கலாம்.

தலையில் பேன் ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்

தலையில் பேன் ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்

பலரது தலைகளில் பேன் தொல்லை அதிகமாக இருக்கும்.

✍️ மிகவும் சுலபமான ஒரு வழி மருதாணி செடியில் இருக்கும் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

✍️ சிறிதளவு துளசியிலேயே நன்றாக அரைத்து விட்டு அதனை சிறிது தண்ணீர் விட்டு வடிகட்டி தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின்னர் சீயக்காய் போட்டு குளித்தால் பேன் வராது.

✍️ வேப்பம் பூவை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை லேசாக தீயில் பாட்டி தலையில் கட்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் சிறிது நாளில் பேன் தொல்லை நீங்கும்.

✍️ சீதா பலக்கட்டையை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள் அதனை இரண்டு நாட்கள் நன்கு வெயிலில் காய வையுங்கள்.

பின்னர் அதனை ஒரு பொடியாக்கி கொள்ளுங்கள். இரவு நீங்கள் தூங்கும் போது அதை தலையில் தடவி காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் குழியுங்கள் சிறிது நாளில் பேன் தொல்லை நீங்கிவிடும்.

ஒருவேளை உங்கள் கூந்தலில் அதிகமாக முடி கொட்டுகிறது மற்றும் சிக்கு பிடித்திருந்தால் ஏதேனும் ஒரு மருத்துவரை அணுகி சரி செய்து கொள்வது நல்லது.

சாதாரணமாக இருக்கும் உங்களுடைய முடியை சற்று மிருதுவாக வேண்டும் என்று ஏதேனும் ஆங்கில மருத்துவத்தை முயற்சி செய்து உங்கள் கூந்தலை நீங்களே பாழாகிக் கொள்ளாதீர்கள்.

பொதுநலன் கருதி வெளியிடுவது Mttamil.com

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

 • இந்த பொடுகு விஷயத்தை பொருத்தவரை ஆண் பெண் இருபாலருக்கும் அதிகப்படியான தீமைகள் ஏற்பட்டிருக்கும்.
 • அதாவது தங்களுடைய தலையில் அதிகப்படியான அரிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
 • இதனை சரி செய்ய ஒரு சில எளிமையான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
 • தேங்காய் பால் அரை கப் எலுமிச்சம் பழச்சாறு சிறிய தேக்கரண்டி அளவு மற்றும் ஊற வைத்து அரைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக ஊற வைத்து உங்கள் தலையில் அதை அப்ளை செய்து தினமும் குளித்து வர பொடுகு தள்ளி விரைவில் நீங்கும்.
 • மிளகு எண்ணெய் செம்பருத்தி பூ தயிர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் நீங்கும்.
 • அரைக்கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு ஒரு கப் ஆப்பிள் சாறு ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து தலை முழுவதும் நன்றாக தேய்த்து ஒரு 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 • முட்டையின் வெள்ளை கரு மற்றும் தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை, நீர் கரிசலாங்கண்ணி கீரை, எலுமிச்சம் பழச்சாறு இவற்றை ஒன்றாக அரைத்து சிறிது காலம் உபயோகித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி உங்கள் கூந்தல் நன்றாக வளர்ந்து கருகருவென்று இருக்கும்.

Leave a Comment