பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | Pathinan Kilkanakku Noolgal

Post views : [jp_post_view]

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | Pathinan Kilkanakku Noolgal

Pathinan Kilkanakku Noolgal
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றால் என்ன:

Pathinan Kilkanakku Noolgal – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பது குறைந்த அடிகளை உடைய பாடல்களால் மிகப் பெரும் செய்திகளை கூறக்கூடிய 18 நூல்களின் தொகுப்பே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றது.

கி.பி 3-6 நூற்றாண்டு வரை மனிதர்கள் வாழ்ந்த காலம் சங்கம் மருவிய காலம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் தான் 18 வகையான நூல்கள் இயற்றப்பட்டது.

அதாவது அறம் பொருள் இன்பம் எனும் மூன்று பெரும் பொருள்களையும் நான்கு அடிகளுக்கு மிகாமல் எடுத்து உரைத்ததால் இது இருண்ட கால இலக்கியம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கு என்னும் சொல் எவ்வாறு உருவானது:

நான்கு அடிகளுக்கு மிகாமல் பாடல் அமைந்துள்ளதால் மயிலை நாதர் மற்றும் சில பேராசிரியர்கள் இதனை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்:

இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தமாக 18 வகையான அறங்களை சார்ந்த நீதி நூல்கள். இவற்றுள் 11 நூல்கள் அறம் சார்ந்த நூல்களாகவும் ஆறு நூல்கள் அகத்தினை சார்ந்த நூல்களாகவும் மற்றும் ஒரு நூல் புறத்தினை சார்ந்ததாகவும்.

👉 நாலடியார்

👉 நாண்மணிக்கடிகை

👉 இன்னா நாற்பது

👉 இனியவை நாற்பது

👉 திரிகடுகம்

👉 ஏலாதி

👉 முதுமொழிக்காஞ்சி 

👉 திருக்குறள்

👉 ஆசாரக்கோவை

👉 பழமொழி நானூறு

👉 சிருபஞ்ச மூலம்

👉 ஐந்திணை ஐம்பது

👉 ஐந்திணை எழுபது

👉 திணைமொழி ஐம்பது

👉 திணைமாலை நூற்றைம்பது

👉 கைந்நிலை

👉 கார்நாற்பது

👉 களவழி நாற்பது

👉 இன்னிலை

அறநூல் என்றாள் என்ன:

Pathinan Kilkanakku Noolgal

ஒரு மனிதன் சமூகத்தில் நன்னடத்தை ஒழுக்கம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த நெறிகள் ஆகிவற்றை எவ்வாறு பின்பற்றி நடக்க வேண்டும் என்பது தொடர்பான விஷயங்களை கூறுவதால் இது அறநூல் என்று அழைக்கப்படுகிறது.

அறநூல்கள் எத்தனை வகைப்படும்:

இந்த அறநூல்கள் மொத்தமாக 11 வகைப்படும்.

1. நாலடியார் – சமண முனிவர்கள் – 1+400

2. நாண்மணிக்கடிகை – விளம்பி நாகனார் – 106

3. இன்னா நாற்பது – கபிலர் – 1+40

4. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் – 1+40

5. திரிகடுகம் – நல்லாதனார் – 100

6. ஏலாதி – கணிமேதாவியார் – 80

7. முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார் – 100

8. திருக்குறள் – திருவள்ளுவர் – 1330

9. ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார் – 80

10. பழமொழி நானூறு – முன்னுரை அரையனார் – 1+400

11. சிருபஞ்ச மூலம் – காரியாசனார் – 97

இந்த அற நூல்களில் சிறிய அளவு பாடல்கள் கொண்ட நூல் இன்னா நாற்பது.மேலும் பாடல்கள் அதிக பாடல்கள் கொண்டது திருக்குறள் ஆகும்.

அகத்திணை நூல்கள் என்றால் என்ன:

அகம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு தன் மனம் உணர்ந்து காதலித்து, இல்லறம், நல்வழியில் நடத்துவதை கூறுவது அகம் என்று அழைக்கப்படுகின்றது. இது போன்ற விஷயங்களை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நூல்களுக்கு அகத்திணை நூல்கள் என்று பெயர்.

அகத்திணை நூல்கள் எத்தனை வகைப்படும்:

இந்த அகத்திணைகள் மொத்தமாக 6 வகைப்படும்.

1. ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார் – 1+50

2. ஐந்திணை எழுபது – மூவாதையார் – 70

3. திணைமொழி ஐம்பது – கண்ணன் சேர்த்தனர் – 50

4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார் – 3+150

5. கைந்நிலை – புல்லங்காடனார் – 60

6. கார்நாற்பது – கண்ணன் கூத்தனார் – 40

இந்த புறத்தினை நூல்களுள் சிறிய அளவு பாடல்கள் கொண்டது கார்நாற்பது மற்றும் பெரிய அடிகளை கொண்ட பாடல்கள் உடையது திணைமாலை நுற்றைம்பது.

புறத்திணை நூல்கள் என்றால் என்ன:

புறம் என்பது மிகப்பெரும் மதிக்கத்தக்க ஒரு அரசர் மற்றும் போர்க்கலைகள் உள்ள ஒழுக்க நெறிகள், புலவர்கள், அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தை எடுத்து கூறுவது புறம் என்று அழைக்கப்படுகின்றது.இது போன்ற விஷயங்களை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நூல்களுக்கு புறத்திணை நூல்கள் என்று பெயர்.

புறத்தினை நூல்கள் எத்தனை வகைப்படும்:

இந்த புறத்தினை நூல்கள் ஒருவகையை மட்டும் உள்ளது.

1. களவழி நாற்பது – பொய்கையார் – 1+40

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிய மேலும் சில சிறப்பான தகவல்கள்:

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலம் – கிபி மூன்று முதல் ஆறாம் நூற்றாண்டுக்குள் எழுதி பட்டிருக்கலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை – 8253

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அதிக பாடல்கள் கொண்ட நூல் எது – திருக்குறள் 1330 பாடல்கள் உள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே பாடலில் அதிக கருத்துக்கள் கொண்ட அதிகாரம் எவை – திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ( ஒவ்வொரு பாடலிலும் மூன்று முதல் ஆறு கருத்துக்கள் வரை உள்ளது)

அறத்திணை நூல்களில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 2798

அகத்திணை நூல்களில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 420

புறத்திணை நூல்களில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 40

• பதினெண் என்பதன் பொருள் – 18 நூல்கள் என்பதாகும்.

கீழ் என்பதன் பொருள் – குறைந்த அல்லது சிறிய அடிகளை உடைய பாடல்களைக் கொண்டது கீழ் என்று அழைக்கப்படுகிறது.

கணக்கு என்பதன் பொருள் – கணக்கு என்பது நூல், இலக்கியம், அறம் ஆகியவற்றை எடுத்துரைப்பது ஆகும்.

பதினொன் கீழ்க்கணக்கு உள்ள தொகை நூல் – நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் நூல் எது – நாலடியார்

நாலடியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் – நாலடி நானூறு, வேளாண் வேதம், குட்டி திருக்குறள்

பெருமுத்திரையரைப் பற்றி கூறும் நூல் எது – நாலடியார்

நான்மணிக்கடியை என்றால் என்ன – நான்கு மணிகள் கொண்ட அணிகலன்

பழமொழி நானூரில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 34

பழமொழி நானூறில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400

திரிகடுகம் என்றால் என்ன – திரி என்றால் மூன்று என்றும் கடுகம் என்றால் காரமான என்பதும் பொருள்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்துகளை குறிப்பிடும் நூல் எது – திரிகடுகம்

நாலடியாரில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – அறத்துப்பால்-13, பொருட்பால்-24, இன்பத்துப்பால் – 3

பதினெண் கீழ்க்கணக்கில் குறிப்பிட்டுள்ள மருந்து பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி, சிறு மல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, திருவளித்துணை, கண்டங்கத்திரி, ஏலம், இலவங்கம், நாககேஷரம்

மேலும் படிக்க: இலக்கணம் என்றால் என்ன

இந்தப் பகுதியில் நாம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றால் என்ன மற்றும் அதில் உள்ள அதிகாரங்கள். மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை யார் யார் பாடியுள்ளார்கள் என்பது போன்ற தெளிவான மற்றும் சுருக்கமான தகவல்களை பற்றி பார்த்தோம்.

இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த mttamil தளத்தை ஷேர் செய்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *