கர்மா என்றால் என்ன – Karma Word Meaning In Tamil
கர்மா என்ற வார்த்தைக்கு உண்மையில் அர்த்தம் என்ன? Karma Word Meaning In Tamil
Karma Enral Enna in Tamil :கர்மா என்ற வார்த்தை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படும் ஒன்றாகவே உள்ளது. சிலர் கர்மா என்பதை தலைவிதியென்றும், சிலர் அது மிக கெட்ட விஷயம் என்றும் புரிந்துகொள்வதைப் பார்க்கிறோம்! உண்மையில் கர்மா என்றால் என்ன? கர்மா நம்மில் எப்படி சேற்கிறது? அதிலிருந்து விடுபடுவது தான் எப்படி? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையாய் இந்தப் பதிவு இருக்கும்.
கர்மா என்பது என்ன? Karma meaning in Tamil
Karma Enral Enna in Tamil : எதாதத்தில் கர்மா என்றால் செயல் என்று அர்த்தம் ஆகும். செயல் என்பது இந்த நான்கு விதமாகவே நடக்கிறது. உடலின் செயல், மனதின் செயல், உணர்வின் செயல், சக்தியின் செயல் ஆகும். உங்கள் தீர்மானத்துக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒரு செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
Karma Enral Enna in Tamil – Karma Enral Enna in Tamil
ஆன்மிகப் பயிற்சிகள் சிலவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், அந்த நினைவுகளுக்கும் உங்களுக்கும் எதோ ஓர் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள முடிவதை நிச்சியமாக கவனிப்பீர்கள். உங்களின் தோற்றத்திலேயே ஒரு புதுப்பொலிவு வருவதை உணர்வீர்கள்.
மற்றொரு கோணத்தில் கர்மா என்பது நினைவுகளின் சேகரம் ஆகும். உங்களது உடலின் ஒவ்வொரு செல்லும் அபாரமான நினைவாற்றல் கொண்டது. பல லட்ச வருடங்களின் நினைவுகளை அது சுமக்கிறது. உங்கள் சருமத்தின் நிறம், உங்களது முகத்தின் வடிவம், உங்கள் உயரம், எல்லாமே நினைவுகளின் சேகரம்தான். உங்களது மூதாதையர் எப்படித் தோற்றமளித்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்ற நினைவுகளின் பதிவுகளை அடிப்படையாக வைத்து உங்கள் வாழ்க்கையை அது நடத்திக்கொண்டிருக்கிறது.
Karma Word Meaning In Tamil : உங்களது மூதாதையரின் உருவம் பற்றிய நினைவுதான் உங்கள் கொள்ளுப்பாட்டிக்கு இருந்ததைப் போன்றதொரு மூக்கை உங்களுக்கு அளித்திருக்கிறது. நீங்கள் வசிக்கும் தேசத்தின் சீதோஷ்ண நிலைதான் உங்களது சருமத்தின் நிறத்தைத் தீர்மானித்தது. நீங்கள் நாடு மாறிவந்து, வேறு தட்ப வெப்பநிலையில் தங்கும்போது கூட, புதிய பகுதிக்கேற்ற சருமத்தின் நிறம் உங்களுக்குக் கிடைக்க அந்த நினைவு மறைய வேண்டும். அதற்கு பல லட்சம் வருடங்களாவது ஆகும். நினைவுகளின் தாக்கம் அந்த அளவுக்கு உங்களைக் கட்டுப்படுத்தி வைக்கும்.
நினைவுகளிலிருந்து விடுபடாவிட்டால், வாழ்க்கை ஒரேவிதமாக ஒரே வட்டத்துக்குள் சிக்கிச் சுழலும். முன்னேறும் பாதை ஆனது அதற்கு விளங்காது. இன்னும் உங்கள் கற்காலத்து மூதாதையர் பேராசையுடன் உங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், உங்களுடைய தனித்தன்மை கொண்ட வாழ்க்கையை நீங்கள் எங்கே வாழ்ந்து பார்ப்பது?
இதைத்தான், “இறந்தவர்கள் இறந்தவர்களாகவே இருக்கட்டும்” (“Leave the dead to the dead”) என்றும் ஆங்கிலத்தில் சொல்வார்கள். அவர்களை இறக்கவிட்டால்தான், உங்களது உயிர் முழுமையாக மலர முடியும். புதிய வாய்ப்புகளைக் காண முடியும். ஆனால், அந்த அவ்வளவு சுலபத்தில் அவர்கள் உங்களிடமிருந்து விலகிவிட மாட்டார்கள். அப்படியே அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.
ஒருவரை சந்நியாசம் வாங்கிக்கொள்ள முடிவு செய்தால், அந்த நபர் அவருடைய மூதாதையருக்கும், தாய் தந்தையருக்கும் கர்மச் சடங்குகளை நிகழ்த்துவார். அவர்களில் யாராவது உயிரோடு இருந்தாலும், இது நிச்சயம் நிகழும். அதற்காகவே சந்நியாசம் பெறுபவர் அவர்களுடைய மரணத்தை விரும்புகிறார் என்று அர்த்தமில்லை. அவர்களுடைய நினைவுகளின் தளைகளை முழுவதுமாகவும் அறுக்கிறார்கள் என்றே அர்த்தம்.
Karma Word Meaning In Tamil : உங்கள் உடல் மட்டுமல்ல, அறிவு என்பதும் நினைவுகளின் சேமிப்புதான். மற்றவருக்குத் தெரியாத நினைவுகளை வைத்துக்கொண்டு, உங்களை அவர்களிடம் புத்திசாலியாக்கிக் காட்டிக்கொள்ள முடிகிறது. இந்த வசதியால்தான், பல பள்ளி ஆசிரியர்களின் பிழைப்பு இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
புதிய வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் கவனமும் புத்திசாலித்தனமும் அவசியம். ஒரேவிதமான வாழ்க்கையை வாழ்வதற்கு நினைவுகள் போதும். பல பணியிடங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையில், சுயநினைவு மங்கிய நிலையில், புத்திசாலித்தனமற்ற ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது சுலபம்.
ரஷ்யாவில் மந்தமாகத் தெரிந்த தொழிலாளி ஒருவரை தொழிற்சாலை ஆய்வாளர் அருகே அழைத்தார்.
“வோட்கா ஒரு மடக்கு குடித்தால் உன்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியுமா?”
“முடியும் என்று நினைக்கிறேன்..” என்று பதில் வந்தது.
“ஐந்து மடக்கு குடித்தால்?”
“ஏன், அதற்கென்ன? இப்போது கூட வேலை செய்துகொண்டுதானே இருக்கிறேன்?” என்றார், அந்தத் தொழிலாளி.
இப்படித்தான், பல லட்சம் மடக்கு வோட்காவைக் குடித்தவர்கள் போல் நீங்களும் மறுபடி மறுபடி ஒரேவிதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறீர்களே, அதுதான் கர்மா.
சுழற்சியை உடைப்பதே ஆன்மீகம்:
Karma Tamil Meaning: செக்குமாடு சுற்றி சுற்றி வருவதுபோல மீண்டும் மீண்டும் சுழல்கிறீர்கள். குழந்தையாக இருக்கும்போது விளையாட்டு, இளமையில் வேறு நாட்டம்… நாற்பது வயதைத் தாண்டினால், குழப்பமான மனநிலை. அறுபது வயதில் ‘என்ன நடக்கிறது எனக்கு? எதற்காக இந்த வாழ்க்கை?’ என்ற கேள்வி. இதைப்போய் ஒருசிலர் ஆன்மீகம் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படியல்ல, இது வெறும் சுழற்சிதான்.
இப்படித்தான் உங்கள் மூதாதையர்களின் அதே பழைய சக்கரம் உங்கள் மூலமாக இப்போது சுழன்று கொண்டிருக்கிறது.
Karma Enral Enna in Tamil :ஆன்மீகம் என்றால் உங்கள் தாத்தாவும், அப்பாவும், அம்மாவும் உங்கள் மூலமாக ஜீவிப்பதற்கு அனுமதிக்காமல் உங்களது வாழ்க்கையை ஒரு புத்தம்புது உயிராக, ஒரு புதிய சாத்தியமாக நீங்களாகவே உருவாக்கிக்கொள்வதுதான் – இதுதான் ஆன்மீகம். இந்த சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்.
வட்டங்களில் சுழலும்போது முன்னோக்கி நகரமாட்டீர்கள் அல்லவா? வட்டங்களில் சுழல்கிறீர்கள் என்றால் எங்கும் சென்று சேராமல் ஒரே இடத்தில் தேங்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.