காமராசர் வாழ்க்கை வரலாறு | Kamarajar Valkai Varalaru

Post views : [jp_post_view]

காமராசர் வாழ்க்கை வரலாறு || Biography Of Kamarajar

Kamarajar Valkai Varalaru

காமராசரின் வாழ்க்கை வரலாறு (kamarajar valkai varalaru) – Kamarajar History In Tamil – காமராசர் இவரை தெரியாத நபர்களை இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரும்பாடுபட்ட தமிழகத்தின் தலைசிறந்த மாமனிதர் காமராசர் ஆவார். மாணவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் மதிய உணவு திட்டம் மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் திறந்து வைத்த பெருமை, போன்ற எண்ணற்ற வகையான திட்டங்களை செயல்படுத்திய இவரை “கல்விக்கண் திறந்தவர்” என்று தந்தை பெரியார் பாராட்டியுள்ளார்.

காமராசரின் வரலாறு தமிழில் – Kamarajar History Of Tamil

காமராசர் பிறந்த நாள் – 15/07/1903

காமராசரின் பெற்றோர் பெயர்கள் – குமாரசாமி மற்றும் சிவகாமி

காமராசர் பிறந்த ஊர் – விருதுநகர்

காமராசர் மணிமண்டபம் உள்ள ஊர் – கன்னியாகுமரி

காமராசரின் பிறந்தநாள் எவ்வாறு கொண்டாடப்படுகிறது – கல்வி வளர்ச்சி நாள்

காமராசரின் மறைவு நாள் – அக்டோபர் இரண்டு

காமராசருக்கு வழங்கும் வேறு பெயர்கள் – பெருந்தலைவர், கருப்பு காந்தி, படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்மவீரர்

காமராசரின் அரசியல் ஈடுபாடு – Kamarajar Valkai Varalaru:

Kamarajar Valkai Varalaru – காமராசர் தினமும் செய்தித்தாள்களை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு, ஒரு அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவை வளர்த்துக் கொண்டார்.

மேலும் காமராசர் நெப்போலியன் லெனின் மற்றும் கரிபால் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை படித்து பேசுவதில் திறமை வாய்ந்தவராக மாற்றிக் கொண்டார்.

1937 – ஆம் ஆண்டில் காமராசர் சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1939 – இல் தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1954 – முதல் – 1963 ஆம் ஆண்டு வரை காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்தார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு எண்ணற்ற கட்சிக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கலந்து கொண்டு மக்களுக்கு எவ்வழி எல்லாம் நன்மைகளை செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வந்தார்.

மேலும்,Kamarajar Valkai Varalaru சுதந்திரம் கிடைக்காததற்கு முன்பு எண்ணற்ற இயக்கங்களில் சேர்ந்தும் போராட்டங்களை நடத்தியும் 11 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலேயே தம் வாழ்க்கையை கழித்தார்.

காமராசர் ஆட்சிக்குப் பின் ஏற்பட்ட நன்மைகள்:

• ராணிப்பேட்டை அம்பத்தூர் கிண்டி ஆகிய இடங்களில் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளையும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய சிறிய தொழில் பட்டைகளிலும் அமைக்கப்பட்டன.

• ஆவடியில் உள்ள ரயில்வே வாகன தொழிற்சாலை இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தான்.

• வேளாண்மை செய்யும் மாவட்டங்களுக்கு நீர் பாசன வசதிகள் மற்றும் எண்ணற்ற அணைகளை கட்ட திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வந்தார்.

• தற்போது இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் இவரால் தொடங்கப்பட்டது மேலும் கூட்டுறவு சங்கமே இல்லாத ஊர் இல்லை எனும் நிலையை உருவாக்கினார்.

• நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு என்று எண்ணற்ற திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தும் காட்டினார்.

• அதேபோல ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சோடா உப்பு தொழிற்சாலை, மற்றும் நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிற்சாலை திட்டங்கள் இவரால் செயல்படுத்தப்பட்டது ஆகும்.

காமராசரின் முதல்வர் பதவிக்கு காரணமாக இருந்தவர்கள்:

1945 இல் பிரகாசம், 1947 இல் ஓமத்தூர் ராமசாமி மற்றும் 1949ல் குருசாமி ஆகியோர் காமராசர் முதல்வர் பதவியேற மிக முக்கியமாக இந்த தலைவர்கள் ஆவர்.

1964 இல் இந்திய பிரதமராக இருந்த நேரு மறைந்த பின்பு லால் பகதூர் சாஸ்திரியையும் போட்டியின்றி பிரதமராக இவரே தேர்ந்தெடுக்க வைத்தார்.

1967-இல் லால் பாதூர் சாஸ்திரி மறைந்த பின்பு தமிழகத்தின் தலைவராய் இருந்த காமராஜர் இந்திரா காந்தி பிரதமர் ஆக்கினார்.

1954 இல் முதல் முதலாக காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனார்.

காமராசர் கொண்டு வந்த நலத்திட்டங்கள்:

• மாணவர்களின் கல்வி திறனை அதிகப்படுத்த கட்டாய கல்வி பயில வேண்டும் என்னும் நடைமுறை இவரது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.

• மேலும், மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பள்ளியில் படிப்பதற்காக சேர்ந்தனர்.

• இவரது ஆட்சி காலத்தில் உயர்நிலை பள்ளி வரை இலவச கல்வி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

• மாணவர்களுக்கிடையே சீருடை ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதை அறிந்த காமராசர் அனைவருக்கும் ஒரே சீருடை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

• ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி கல்லூரிகள், மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகள் ஆகிய தொடங்கப்பட்டன.

• தமிழகத்தில் மூடப்பட்டிருந்த சுமார் 6000 தொடக்கப் பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று ஆணையிட்டதுடன் அனைவரும் கட்டாயம் கல்வி பயில வேண்டும் எனும் சட்டத்தையும் நிறைவேற்றினார்.

• அனைத்து ஊர்களிலும் நூலகங்கள் மற்றும் சிறிய கிளை நூலகங்கள் ஆகியவற்றை தொடங்கவும் ஏற்பாடு செய்தார்.

• கல்விக்காக இத்தனை அரும்பாடுபட்ட காமராசர் அவர்களை தந்தை பெரியார் “கல்விக்கண் திறந்தவர்” என பாராட்டியுள்ளார்.

காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்:

• காமராசரின் பிறந்த நாளான ஜூன் 15ஆம் தேதி “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

• கன்னியாகுமரியில் 02/10/2000 ஆம் ஆண்டில் காமராசரின் பெயரில் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது.

• மதுரையில் உள்ள பல்கலைக்கழகத்தைமதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.

• காமராசர் வாழ்ந்த விருதுநகர் இல்லமும், சென்னையில் வாழ்ந்த இல்லமும், நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

• மேலும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை சாலையில் இவருக்கு ஒரு திரு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னை தேனாம்பேட்டையில் “காமராசர் அரங்கம்” ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

• மேலும் சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் விமான நிலையம் என பேரும் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

• 1976 இல் நடுவன அரசு காமராசருக்கு பாரத ரத்னா விருது அளித்தது.

• அதேபோல் நாடாளுமன்றத்தில் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவியுள்ளது.

Biography Of Kamarajar – காமராசரின் சமூக தொண்டுகள்:

தஞ்சாவூர் பண்ணையால் என்ற பாதுகாப்பு சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளர்களுக்கு 60 சதவீத பங்குகள் கிடைக்க செய்தார்.

அதிக நிலம் வைத்திருந்த முதலாளிகளிடமிருந்து நிலத்தைப் பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார்.

அதோடு அதிகபட்சமாக 30 ஏக்கர் வரை ஒரு நபர் நிலங்களை வைத்துக் கொள்ளலாம் என் சட்டமும் இயற்றப்பட்டது.

இலவச வீடு வழங்கும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ வசதி ஆகிய திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *