இந்திய வேளாண்மை துறை – Indian Department of Agriculture

Indian Department of Agriculture

Table of Contents

பொருளாதாரம் முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு – Indian Department of Agriculture

நம் நாட்டின் பொருளாதார வாழ்வில், வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது பொருளாதார அமைப்பிற்கு இதுவே முதுகெலும்பாகும். இந்திய பொருளியலில் வேளாண்மையை பிழைப்பூட்டும் முதன்மையான அடிப்படை ஆதாரமாகும்.

இந்தியா ஒரு விவசாய நாடாகவே தொன்று தொட்டு விளங்கி வருகிறது. இன்றும் நாட்டின் எதிர்காலம் வேளாண் உற்பத்தி போக்கை பொருத்தே அமையும். நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பற்றி கீழ்காணும்மாறு விளக்கலாம்.

நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்களிப்பு

இன்றைய நாட்களிலும் கூட நாட்டு வருமானத்தில் வேளாண்மை பெறும் பங்களிக்கிறது. 1950 முதல் 1951 மற்றும் 1979 முதல் 1980 ஆம் ஆண்டுகளில், பல்வேறு வேளாண்மை பண்டங்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் அதனை பராமரித்தல், அத்துடன் தொடர்புடைய துணை செயல்பாடுகள் வாயிலாக நாட்டு வருமானத்திற்கு 40 சதவீதத்திற்கு அதிகமான வருமானம் கிடைத்திருக்கிறது.

ஐம்பதாம் ஆண்டுகளில் உண்மையில் சொல்லப்போனால் நாட்டு உற்பத்தி வெளியிட்டில் பாதி பகுதியை வேளாண்மை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த பிரிவின் மூலமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. என்பது மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் இந்த சதவீதம் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவின் வேளாண்மை உற்பத்தியானது தற்போது இது 25 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.

வாழ்க்கைக்கு ஒரு அடிப்படை ஆதாரமாக அமையும் வேளாண்மை

வாழ்க்கைக்கு பிழைப்பூட்டும் ஆதாரமாக வேளாண்மை திகழ்கிறது. பத்து நபர்களில் ஒவ்வொரு ஆறு நபரும் வேளாண்மை சார்ந்த வாழ்கின்றனர்.

தொழிலில் வளர்ந்த நாடுகளாகிய இங்கிலாந்து, அமெரிக்க, ஐக்கிய நாடுகள் போன்றவைகளில் இந்திய நாட்டுடன் ஒப்பிடும்போது வேளாண்மை சார்ந்த மக்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது.

1921 முதல் 2001 ஆகிய ஆண்டுகளில் வேளாண்மையை சார்ந்த உழைப்பு சக்தியின் அளவானது இரு மடங்கு அதிகமாகி விட்டது. இந்தத் துறையின் குறைந்த வேலை வாய்ப்பு, மறைமுக வேலையின்மை, மற்றும் குறை உற்பத்தி வேலை வாய்ப்பு ஆகிய தீமைகள் பற்றி பிடித்து பெரும் தொல்லைகுட்படுத்தியுள்ளது.

வேளாண்மை மூலம் வேலை வாய்ப்பு அளித்தல்

வேளாண்மை இந்திய மக்களுக்கு பெரும் அளவில் ஏராளமாக வேலை வாய்ப்பு அளிக்கிறது. கிராமப்புறங்களில், வேளாண்மையையும் அதனை சார்ந்த தொழில்களையும் 70% மக்கள் சார்ந்துள்ளனர்.

இன்றும் குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் 97 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் இருந்து 235 மில்லியன் ஆக நிலத்தை சார்ந்த தொழில் ஈடுபட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

வேளாண்மையில் தொழில்துறை முன்னேற்றம்

வேளாண்மை தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா பொருட்களை வழங்குகிறது. அதாவது பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், வனஸ்பதி தோப்பு வகைகள் போன்றவை விவசாயத்தை சார்ந்து தொழில்களாகும்.

மேலும், பல சிறு தொழில்கள் மற்றும் கைத்தறி பருத்தி ஆலைகளான நெசவாளிகள், நெல் அதாவது உமிழ் நீக்கும் ஆலைகள், நார் மற்றும் காதி தொழில்கள் தங்களின் கச்சா பொருட்களுக்கும் வேளாண்மையை சார்ந்துள்ளன. மறைமுக ஏனைய பொருள் விவசாயத்தை சார்ந்த தொழில்கள் நடத்தி வருகின்றனர்.

பன்னாட்டு நிறுவனத்தில் வேளாண்மையின் வாணிபம்

பன்னாட்டு வாணிபத்தில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதியில் தேயிலை, என்னை பிண்ணாக்கு, கனி மற்றும் காய்கறி வகைகள் வாசனைப் பொருட்கள், புகையிலை, பருத்தி, காபி சர்க்கரை பதப்படாத, கம்பளி மற்றும் தாவர எண்ணெய் போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஏற்றுமதி மூலம் நல்லதொரு பங்கு பெற்று தருவதோடு இறக்குமதியின் ஒரு முக்கிய பிரிவாகவும் இது உள்ளது. இந்த வேளாண்மை துறை ஆனது நிகர வெளிநாட்டு செலவணியை ஈட்டி தந்து, மூலதன ஆக்கத்திற்கும், விவசாயம் சாராத பிற தொழிலுக்குமான இறக்குமதிக்கு இது பெரிதும் உதவுகிறது.

வேளாண்மையில் முதலீட்டு ஆக்கமும் முதலீடும்

நாட்டின் முதல் ஆக்கத்தில், உற்பத்தி சொத்தானது விவசாய சொத்துக்களாகிய நிலம் நீர்ப்பாசன வசதிகள் டிராக்டர்கள், உளவு கருவிகள், ஏர் அல்லது கலப்பை, ஆழ்துளை கிணறுகள் மற்றும் சரக்கு பாதுகாப்பு வசதிகள் போன்ற வடிவங்களில் உள்ளது.

நாட்டு வருமானத்தில் 25 சதவீதத்தை வேளாண்மை ஈட்டி தருவதால் இத்துறையை சேமிப்பிற்கும் பொருளாதாரத்தின் முதல் ஆக்கத்திற்கும் அடிப்படை மூலதனமாக விளங்குகிறது.

வேளாண்மையில் உணவு மற்றும் வைக்கோல் அல்லது தீவனத்தின் பங்களிப்பு

இந்தியாவில், வேளாண்மையை அனைத்து மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. பல கோடி கால்நடையை பராமரிக்க வைக்கோல் மற்றும் தீவனங்களை வேளாண்மை அளிக்கிறது.

வேளாண்மையால் பொருளாதாரத்தின் திட்டம்

இந்திய பொருளாதாரத்திற்கு வேளாண்மையே முதுகெலும்பாகும். வேளாண்மையின் செழிப்பு நாட்டின் செழிப்பைக் குறிக்கும். நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பல உண்மைகள் குறியீட்டு சுட்டிக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து தொழிலானது பெருமளவு விவசாய பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் அடங்குகிறது.

வேளாண்மை பொருட்கள் வெளிநாட்டு வாணிபத்தில் பெரும்பங்கு வைக்கிறது. வேளாண் – வளர்ச்சி, வறுமை – ஒழிப்பு திட்டத்தில் ஒரு நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

பன்னாட்டு நிறுவனத்தில் தரப்பட்டியலில் இடம் பெறுதல்

உலக அளவில், இந்திய வேளாண்மை துறை சில குறிப்பிட்ட பண்டங்களில் நல்ல தரத்தில் இடம் பெற்றுள்ளன.

நிலக்கடலை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தையும், அரசு உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

நாட்டு பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு விவசாயம் முன்னேற்றம் மிக முக்கிய அத்தியாவசியமானது என்று குறிப்பிடும் போது தான் இந்தியாவின் முக்கியத்துவம் எழுகிறது.

அறிஞர் இயக்குனர் நர்க்ஸ் என்போரின் கூற்றுப்படி, அதிக மக்களை வேளாண்மையிலிருந்து பிரித்தெடுத்து அவர்களை புதிதாக ஆரம்பிக்கும் தொழிற்சாலைகளிலும் கிராமப்புறங்களில் செயல்படும் பொதுப்பணிகளிலும் வேலைக்காமத்துதல் வேண்டும்.

இவ்வாறாக செய்வதன் வாயிலாக விவசாய உற்பத்தினை ஒருபுறம் அதிகரிப்பதோடு மறுபுறத்தில் சிறிய ஒவ்வொரு உழைப்பாளர்களுக்கு சிறிய புதிய தொழில் அமைப்புகளும் அமைத்துக் கொள்ளலாம்.

இந்திய வேளாண்மை மிகப் பெரிய மற்றும் முக்கியமான துறை மட்டுமின்றி மிகப் பின்தங்கிய நிலையிலும் உள்ளது. முழு பொருளாதரமும் வளர்ச்சியடைய விவசாயம் வளர்ச்சி மிக மிக முக்கியத்துவம் ஆகும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மை அளிக்கும் நான்கு வகையான பங்குகளை சைமன் கிருஷ்ணன் அவர்கள் கீழ்காணுமாறு விளக்குகிறார்.

 • பொருட்களின் பங்களிப்பு ( உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிடைக்க செய்தல்)
  • அங்காடியின் பங்களிப்பு (விவசாயம் சாரா உற்பத்தி துறையில் உற்பத்தியாளர் பொருட்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் அங்காடியை ஏற்படுத்திக் கொடுத்தல்.)
  • உற்பத்தி காரணங்களில் பங்களிப்பு ( வேளாண் சாராதுறை உழைப்பையும் முதலையும் கிடைக்கச் செய்தல்)
  • அயல்நாட்டு வாணிபத்திற்கு பங்களிப்பு

வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறையில் உள்ள தொடர்பு

ஒரு நாட்டு வளர்ச்சி அடையும் பாதையில் செல்லும்போது வேளாண்மையும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இடையே உள்ள ஒன்றோடு ஒன்று சார்ந்த நிலை கீழ்க்கண்ட தொடர்ச்சிகளில் வலுப்படுகிறது.

 1. உற்பத்தி தொடர்ச்சி
  2. தேவை தொடர்ச்சி
  3. சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்ச்சி
 • வேளாண்மை துறையில் உற்பத்தி தொடர்ச்சியின் பங்களிப்பு

தொடர்ச்சி வேளாண்மையையும் தொழிலும் உற்பத்தி ஈடுபடுவதற்கான ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் ஏற்படுகிறது.

அதாவது பருத்தி, சனல், கரும்பு போன்ற வேளாண் பொருட்களை வேளாண் சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிப்பதன் வாயிலாகவும், ரசாயன உரங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரம் போன்ற தொழிலில் உற்பத்தியை வேளாண்மை துறைக்கு அளிப்பதாலும், கடந்த 50 ஆண்டுகளில் இத்தொடர்ச்சி வலுக்கிறது மேலும் இது வேளாண்மை துறை நவீனமாக்குகளையும் பிரதிபலிக்கிறது.

 • வேளாண்மையில் தேவை தொடர்ச்சியின் பங்களிப்பு

இந்த இரண்டு துறைகளுக்கிடையே வெகு வலுவாக தேவை தொடர்ச்சி உள்ளது. வருமானம் மற்றும் தொழில்மயமாக்குதல் விளைவானது, உணவு மற்றும் விவசாய கட்சா பொருட்களின் தேவையை பாதிக்கிறது என்பது பொதுவாக உணர்த்தப்பட்டுள்ளது.

 • வேளாண்மையில் சேமிப்பு மற்றும் முதலீட்டில் உள்ள பங்களிப்பு

கிராம வருமானம், தொழிற்சாலையின் நுகர்வு பொருட்களாகிய ஆடைகள், கால்மிதிகள், சர்க்கரை, சமையலெண்ணெய், தொலைக்காட்சி பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்றவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இணையாக குறிப்பிடத்தக்கது.

சமீப காலத்தில் நடத்திய ஆய்வு “கிராமப்புற கடைவீதிகளில் நுகர்வானது நகர்ப்புற அங்காடியை தாண்டி விடுகிறது” என்று முடிவு செய்கிறது.

வேளாண்மை வளர்ச்சித் துறையின் கூற்றுகள்

வேளாண் உற்பத்தியின் பெருக்கமானது இரண்டு விதங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தக் கூடும்.

 1. விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பில் அதிகரிப்பு
 2. வேளாண்மை உற்பத்தி திறனில் அதிகரிப்பு

இந்திய வேளாண்மையின் உற்பத்தி திறன்

இந்தியா விவசாய நாடாக இருப்பினும் அது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இப்பிரச்சனையின் நடுமையமாக உற்பத்தி குறைவும் உற்பத்தி திறன் குறைவும் அமைந்துள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்தியாவின் உற்பத்தித்திறன், மிகக் குறைவாகவே உள்ளது. இன்றைய நாட்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் பல நிலைமைகள் அதிகமாக மாற்றம் அடையவில்லை.

மக்கள் தொகை பற்றிய காரணங்கள்

வேளாண்மையின் குறைந்த விளைச்சலுக்கான சில முக்கிய காரணம், நிலத்தின் மீது மக்கள் தொகையால் ஏற்படுகின்ற அளவுக்கு அதிகமான நெருக்கம் அல்லது பாரசுமை அதிகரிக்கும், கூடுதல் உழைப்பாற்றலை தொழில்துறை தன்னிடமாக ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தொழில்துறை வளர்ச்சி வீதமானது தேவையை விட மிகக் குறைவாக உள்ளது. இதன் நுழைவாக அதிகரிக்கும் மக்கள் தொகை பிழைப்பிற்காக நிலத்தையே சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன.

நில உடமைகள் சிறு துண்டுகளாக்கப்பட்டு சிதறிப் போகின்றன. முன்னேற்றத்திற்கான பயிற்சி மற்றும் பணிகளின் அளிப்பு தேவைக்கு குறைவாகவே இருக்கின்றது.

இதனால் குறைந்த மற்றும் மறைமுக வேலையின்மை ஏற்படுகின்றன. இத்தகைய தீமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேளாண்மையின் உற்பத்தி திறனை குறைக்கின்றன.

வேளாண்மையின் உற்பத்தி திறனை குறைப்பதற்கான பொதுவான காரணங்கள்

வேளாண்மையில் அதிகப்படியான தொழிலாளர்கள்

மிக குறைந்த உற்பத்தி திறனுக்கான மிக முக்கிய காரணம் மக்கள் அதிக எண்ணிக்கையில் வேளாண் தொழிலில் குவித்தல் ஆகும்.

மக்கள் தொகை அதிகரிக்கும் போது, நிலத்தின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த இயற்கையான அதிகரிப்பை தொழில்துறையால் ஈர்த்துக் கொள்ள இயலவில்லை.

ஊக்கமற்ற கிராமப்புற சூழ்நிலை

இந்த உழவர்கள் பொதுவாக ஏழைகளாகவும், அறியாமை நிறைந்தவர்களாகவும் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும், பழமைவாதிகளாகவும் கல்வி அறிவு பெற்றவர்களாகவும் பழமையான பழக்கவழக்கங்களாலும் சாதி பாகுபாடு முறைகளாலும் கூட்டு குடும்ப பிணைப்புகளால் கட்டப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

பழமையில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் மிகப்பெரிய சாபமாக அமைந்து அவர்கள் தங்களது பழங்கால உழவு முறைகளிலேயே மன நிறைவு அடையும் படியாக கட்டி வைத்துள்ளது.

புதிய தொழில்நுட்ப உற்பத்தி முறைகள் வேகமாக கடைபிடிக்கும் ஒரு சில புலவர்கள் தவிர்த்து, பெரும்பாலான அதிகபட்ச உழவர்கள் பொருளாதார முன்னேற்றங்களை பற்றி அறிந்து கொள்ளவும் பின்பற்றவும் ஊக்கமற்று காணப்படுகின்றனர்.

வேளாண்துறை சார்பற்ற பணிகள் குறைவு

நிதி வசதி மற்றும் அங்காடி வசதிகள் போன்ற வேளாண்மை சார்பற்ற பணிகள் போதிய அளவில் கிடைக்க பெறாமல் குறைவான உற்பத்தி திறனுக்கு மற்றும் ஒரு காரணமாகும்.

இந்த வசதிகள் இந்தியாவில் மிக குறைவாக உள்ளது. அங்காடி வசதியானது அதிக குறைபாடுகள் நிறைந்ததாகவும் அதிக செலவுகள் கொண்டதாகவும் காணப்படுகிறது.

நவீன பண்ட காசோலைகள் நம் நாட்டு பணியிலேயே அமைக்கப்பட்டு அவைகள் போதுமானதாக இல்லை. தானியங்கள் சேமித்து வைக்கும் முறையானது குறைகள் நிறைந்ததாகவும், அதிக செலவுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றன.

உழவர்களுக்கான கடன் வசதிகள் இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளது. புலவர்கள் முழுக்க முழுக்க நிறுவனம் சாராத தனியார் கடன் வழங்குவோர்களையே அவர்கள் அன்றாட தேவைகளுக்கு நம்பி உள்ளனர்.

நிறுவன அமைப்பு காரணங்கள்

நில உடைமையின் அளவு

இந்தியாவில் சராசரி நில உடமையின் அளவானது மிக குறைவான அளவில் உள்ளது. 80 சதவீத அளவு நில உடமை இரண்டு ஏக்கருக்கு குறைவாகவே உள்ளது.

இத்துடன் நிலங்கள் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவை பரவலாக கிடைக்கின்றன. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலத்தின் அளவு வெகு சிறிதாக குறைக்கப்பட்டதால் அல்லது துண்டாக்கப்பட்டதால் சாதாரண கலப்பை ஏற்கூட அங்கு பயன்படுத்தப்பட முடியாமல் உள்ளது.

மேலும் சராசரி உள்ள உடைமைகள் மிக சிறிதாக உள்ள காரணத்தினால், அறிவியல் ரீதியான சாகுபடி முறைகளையும் மேம்பட்ட கருவிகளையும் தரமான விதிகளையோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இச்சிறிய அளவிலான நிலங்கள் பலவித பெருமளவு நட்டத்தை விளைவிக்கிறது. காலம் உழைப்பு கால்நடை சக்தியை நீர் பாசன வசதிகளை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான தடையில் உழவர்களிடையே சண்டை சச்சரவுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் சரியான வேலி அமைப்புகள் இல்லாமல், பயிர் வகைகள் வீணாக்குதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குத்தகை அமைப்பு முறையின் குறைபாடுகள்

இந்தியாவில் காணப்படும் புத்தக அமைப்பு மிகவும் ஊக்கமற்ற நிலையில் காணப்படுகின்றன. இக்குத்தகை முறைகள் தமக்குள்ளேயே தேக்கநிலை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்ததாக உள்ளது.

இதன் முக்கிய இயல்பு இடை தலைவர்களின் தலையீடு நிலை, முழுமையாளர்களின் சுரண்டல் போக்கு, துண்டுகள் ஆக்கப்பட்ட நிலங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகையின் அழுத்தம் ஆகியவனாகும்.

வேளாண்மையில் உள்ள தொழில்நுட்ப காரணங்கள்

 • ஏழ்மையான இடுப்பொருட்களும், முறைகளும்

சாகுபடும் முறைகள் பழமையானதாகவும், திறமையற்றதாகவும் உள்ளன. மரபு வழி பயிரிடும் முறைகளே பின்பற்றப்படுகின்றன. இதனால் சுக செலவும் குறைந்த உற்பத்தி திறனும் ஏற்படுகின்றது.

பல்லாண்டு காலமாக உற்பத்தி முறையில் எந்த மேம்பாடு மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை, வேளாண்மையின் முதலீடுகள் ஆகிய இயற்கை உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள், வீரிய விதைகள், நீர் பாசன விதைகள், கருவிகள் மற்றும் பிற சொத்துக்கள் ஆனது மிக குறைவான நிலையில் உள்ளது.

 • பற்றாக்குறையான பாசன வசதிகள்

இந்திய வேளாண்மையின் அழிவிற்கு முக்கிய காரணம் நாடு முழுவதிலும் உள்ள உழவர் பெருமக்கள் மழையை நம்பி இருக்கின்றனர். ஆங்காங்கே சிலர் மட்டும் இயற்கை நீர் பாசன வசதிகளை பயன்படுத்தக்கூடும்.

 • உழவர்கள் கடனில் மூழ்கிய நிலை

“இந்திய உழவர்கள் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடலில் இறந்து,கடன் விட்டுப் போக பிற்படுத்து உள்ளான்” என்று கூறப்படுகிறது. அவர்களது தீராத கடனுக்கான காரணங்கள் தலைமுறைக்கான கடன்கள், நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் கடன்கள், வருமானத்தை ஈடு செய்ய ஏற்படும் கடன்கள் மற்றும் வீணான செலவுகள் ஆகும்.

 • போதுமான ஆராய்ச்சியின்மை

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முறைகளின் நன்மைகள் பற்றிய போதுமான விளக்கங்கள் இன்னும் அனேக உழவர்களை சென்றடையவில்லை. அவைகளை உழவர்கள் விவசாயத்தில் கையாளவும் இல்லை. விரிவாக்கம் ஒரு சிலருக்கு மட்டுமே என குறிக்கப்பட்டது. ஆகவே கிராமப்புறங்களில் நவீன உணவு முறைகள் வேறு இட்டு வளர வேண்டும்.

வேளாண்மையில் குறைகளை நீக்கும் வழிமுறைகள்

மேலே விலக்கப்பட்ட வேளாண்மையின் குறைந்த உற்பத்தி திறனுக்கான காரணங்கள் கீழ்காணும் வழிமுறைகளை சுட்டிக்காட்டுகிறது.இந்திய வேளாண்மையின் பல்வேறு குறைபாடுகளை கீழ்கண்டவாறு தீர்வு காணலாம்.

 • நாட்டளவில் ஆன கூட்டுறவு கூட்டு விவசாயம் முறை துவக்கப்பட வேண்டும்.
 • மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
 • தரமான உரங்கள் கிடைக்கச் செய்தல்
 • உயர்தர விதைகளை பயன்படுத்துதல்
 • பாசன வசதிக்கு மாற்று முறைகள் அமைத்தல்
 • விவசாய கடன் வசதியை அதிகரித்தல்
 • புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் நிலங்களை மேம்படையச் செய்தல்
 • நில உடைமைகளை ஒருங்கிணைத்தல்
 • புதிய கருவிகளை பயன்படுத்துதல்
 • மண் பாதுகாப்பு மற்றும் தீவிரமான சாகுபடி
 • அங்காடி அமைப்பில் முன்னேற்றம்
 • விவசாய ஆராய்ச்சிக்கும், பயிர் பாதுகாப்பிற்கும் ஊக்கம் அளித்தல்

இந்தியாவில் இத்தகைய முன்னேற்ற முறைகளை நம்முடைய திறமைக்கு தக்கவாறு செய்ய வேண்டும். கிராம மக்களின் எதிர்காலம், உணவு பிரச்சனைக்கான தீர்வுகள் மற்றும் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி விவசாயத்தையே சார்ந்துள்ளன.

Leave a Comment