Some Simple Tips To Make Your Face Charming

முகம் சிவப்பழகு பெற | Get red face

Post views : [jp_post_view]

Table of Contents

உங்கள் முகம் சிவப்பழகு பெற சில எளிமையான வழிமுறைகள் – Get red face

Some Simple Tips To Make Your Face Charming
Some Simple Tips To Make Your Face Charming

முகம் சிவப்பழகு பெற | Get red face

தற்போதைய நவீன காலத்தில், உடல் நலத்திற்கு தீங்கான பல்வேறு விஷயங்களை நாம் சேர்த்துக் கொள்கிறோம். உதாரணமாக, நம்முடைய முகம் பளபளப்பாக பிறருக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், Facial, Face Wash, மற்றும் இணையதளத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு பொருட்களை வாங்கி நாம் பயன்படுத்தி நம்முடைய முகத்தினை நாமே எடுத்துக் கொள்கிறோம்.

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நீண்ட நாட்களுக்கு நாம் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும் நம்முடைய உடல் நலத்தை பேணிக் காப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும்.

 

பல்வேறு கெமிக்கல்கள் கலக்கப்பட்ட creams, Powders, Oils ஆகியவற்றை நம்முடைய முகத்தில் போட்டு பளபளப்பாக தற்போது வேண்டுமானால் தெரிய வைக்கலாம். ஆனால் வருங்காலத்தில், நம்முடைய இயற்கையான முகத்தில் பல்வேறு கெமிக்கல்களை சேர்ப்பதால் முகம் களை இழந்து தோல் சுருக்கம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

எனவே இத்தகைய கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி தினமும் நம்முடைய முகத்தை வசீகரமாக்கலாம்.எனவே நான் சொல்லப்போகும் இந்த, விஷயங்களை நீங்கள் தினமும் செய்வதன் மூலம் உங்கள் முகம் மிகவும் பளபளப்பாக மாறும்.

 

வீட்டில் கிடைக்கக்கூடிய சாதாரண பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

 

உங்கள் முகத்தை வசீகரமாக சில எளிமையான வழிமுறைகள் – நம்முடைய முகத்தை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்.

 

✍️ பொதுவாக நம்முடைய முகத்தை மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம். அதாவது, வறண்டு போன முகம், எண்ணெய் பசை போன்ற முகம், மற்றும் சாதாரண முகம்.

 

✍️ இந்த மூன்று முகங்களில் சாதாரண முகம் கொண்டவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் மற்ற இரண்டு முகம் கொண்டவர்கள் தங்களுடைய சருமத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகிறது.

 

காலநிலை மாற்றத்தை பொறுத்து நம்முடைய முகத்திலும் மாற்றம் ஏற்படும். வெயில் காலங்களில் நாம் வெளி எங்கேயாவது செல்லும் பொழுது அல்லது ஏதேனும் வேலைக்கு செல்லும் பொழுது நம்முடைய உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும்.இவ்வாறு நடக்கும் பொழுது வறண்ட முகம் கொண்டவர்கள் மேலும் தங்களுடைய முகம் வறண்டு போய் தோல் சுருக்கம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.

 

வறண்ட முகம் உள்ளவர்கள் இதை செய்யவும் – Dry Face People Should Be Try This Tips

 

சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஆரஞ்சு பழத்தை வைத்து நாம் இதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம்.

 

1. முதலில் ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி நன்றாக காய வைத்து கொள்ளவும்.

2. காய்ந்த ஆரஞ்சு பழத்தின் தோலை நன்றாக பொடி ஆக்கிக் கொள்ளவும்.

3.பின்னர்,சிறிதளவு பால் ஆடையை அந்த பொடியில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

4. இப்பொழுது இதை இரண்டையும் உங்களுடைய முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். சுமார் 15 நிமிடம் அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.

 

இப்பொழுது உங்களுக்கு வித்தியாசம் தெரியும் பழைய முகத்திற்கும் இப்பொழுது இருப்பதற்கும்.

இதை நீங்கள் செய்து பார்த்துவிட்டு கீழே கமெண்ட் பாக்சில் வந்து கமெண்ட் செய்யுங்கள். இது போன்ற கருத்துக்களை பதிவிடும் மேலும் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி அதனை உங்களுடைய முகத்தில் தேய்த்து வர உங்கள் முகம் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.

 

முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்யலாம் – What can be done to prevent wrinkles on the face

Some Simple Tips To Make Your Face Charming:

• ஒரு கோழி முட்டையை எடுத்துக் கொள்ளவும்.

• அதில் உள்ள மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.

• இப்பொழுது இதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.

• இவை இரண்டையும் சேர்த்த பிறகு உங்கள் முகத்தில் நன்றாக அனைத்து இடங்களிலும் தடவிக் கொள்ளவும்.

• இவ்வாறு தடவிய சிறிது நேரத்தில் உங்களுடைய முகம் நன்றாக இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

• அந்த சமயத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் உங்களுடைய முகத்தை கழுவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்களுடைய முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து போய் பழையபடி அழகான முகமாக தோன்றும்.

 

எண்ணெய் மற்றும் பசை போன்ற முகம் உள்ளவர்கள் தங்களுடைய சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் – People with oily and sticky face

 

Tips No 1.

• இந்த எண்ணெய் பசை போன்ற முகம் கொண்டவர்களே மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

• அதாவது வெயில் காலம் வந்து விட்டாலே உங்களுடைய முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளிகள் அதிகமாக ஏற்படும்.

• இதனால் அதிகப்படியானோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவது உண்டு.

• வேப்பிலை உள்ள கொழுந்தை பறித்துக் கொள்ளவும்.

• இதனை அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் முல்தானி மெட்டு என்ற பவுடரை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

• இந்த முல்தானி மெட்டு பவுடர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

• இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உங்களுடைய முகத்தில் தடவி சிறிது நேரத்தில் கழுவி விடவும்.

• இவ்வாறு செய்து கொண்டே வருவதால் உங்களுடைய முகத்தில் என்னை பசை நீங்கி பருக்கள் வருவதும் குறையும். மேலும், கரும்புள்ளிகளும் மறைந்து போய்விடும்.

 

Tips No 2.

இந்த இரண்டாவது டிப்ஸ் மிகவும் பயனுள்ளது ஆனால் சற்று பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே அதிகம் கவனம் தேவை.

• சிறிதளவு காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டியை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

• இதை இரண்டையும் உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு 20 நிமிடம் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

• இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வழவழப்பு ஏற்பட்டு வசீகரமாக மாறும்

இந்த செயல்முறையை சாதாரண முகம் கொண்டவர்கள் எந்த பாதிப்பும் இருக்காது. இருந்தாலும் சற்று கவனத்துடனே இந்த செயல்முறையை செய்து பாருங்கள்.

 

Tips No 3.

உங்களுடைய முகத்தை மிருதுவான முகமாக மாற்றுவது எப்படி:-

• சிறிதளவு கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

• மேலும் முல்தானி மொட்டு என்ற பொடியையும் இந்த கடலை மாவு மற்றும் எண்ணெயுடன் இவை மூன்றையும் நன்றாக சேர்த்து கெட்டியாக குலைத்துக் கொள்ளுங்கள்.

• இந்த பேஸ்ட்டை அப்படியே உங்கள் முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவுங்கள்.

• இவ்வாறு தினமும் செய்து வர உங்களுடைய முகம் பளபளப்பாக தோன்றும்.

 

Tips No 4.

• முல்தானி மெட்டி பொடியை சிறிதளவு பன்னீருடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

• இதனை உங்கள் முகத்தில் தடவிய பிறகு ஒரு 20 நிமிடம் கழித்து பச்சை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள்.

• இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக மாறும்.

 

Tips No 5.

நம்முடைய முகத்திற்கு மிகவும் சிறந்த அதாவது பருக்களை நீக்கி கரும்புள்ளிகளையும் நீக்கி வளவளப்பாக சருமத்தை கொடுக்கக் கூடியது முல்தானி மொட்டு என்ற பவுடர் மட்டுமே.

• வாரத்திற்கு ஒரு முறை முல்தானி மொட்டு பொடியை தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ சேர்த்து கலக்கி குளித்து வரவும்.

• இவ்வாறு செய்வதால் சருமத்திற்கு எந்த விதமான தீங்கும் நேராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

இயற்கையாக உடல் நலத்தை காக்கக்கூடிய சில குறிப்புகள் – Naturally Health Tips

Some Simple Tips To Make Your Face Charming:

✍️ அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

 

✍️ சிறிதளவு புதினா இலையை எடுத்துக் கொண்டு, அதனுடன் ஓட்ஸ் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் உள்ள பருக்கள் மீது மட்டும் தடவும்.

 

✍️ இவ்வாறு செய்துவிட்டு ஒரு 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர பருக்கள் நீங்கி அழகான வசீகரமான முகமாக தோன்றும்.

 

✍️ சந்தனம் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சீக்கிரம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி அழகான முகம் தோன்றும்.

 

✍️ ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அதன் தோலை முழுமையாக நீக்கிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவிற்கு தேன் மற்றும் ஓட்ஸ் பொடியை சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி ஒரு இருபது நிமிடத்திற்கு பிறகு அதனை குளிர்ந்த நீரில் கழுகு கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் வறண்ட சருமம் சரியாகி விடும்.

 

✍️ முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவது மிகவும் சுலபமான வேலை. ஒரு ஆப்பிள் பழத்தை நறுக்கி உங்கள் முகத்தில் முழுமையாக தடவினாலே போதும் முகத்தில் உள்ள பசை போன்ற தன்மை நீங்கிவிடும்.

 

✍️ வரண்டு போன முகத்தை பொலிவுட்டு படியாக மாற்றுவது மிகவும் எளிது. சிறிதளவு மோரை உங்களுடைய முகத்தில் தடவிக் கொண்டு ஒரு 15 நிமிடம் கழித்து கழுவினால் போதும் மீண்டும் பழையபடி மாறிவிடும்.

 

✍️ கேரட்டை அரைத்துக் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து அதனை முகம் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

 

உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க, இயற்கையாக விளையக்கூடிய பழங்கள் மற்றும் தினமும் அதிக அளவு தண்ணீர் குடித்தாலே போதும் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் சரியாகிவிடும்.

 

தலைமுடி நன்றாக வளர – Hair Grows Well

 

• வெந்தயக் கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்.

• இவை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போன்று அழைக்கவும்.

• இதனை உங்களுடைய தலைமுடியில் போட்டு குளித்து வர உங்களுடைய முடி நீளமாகவும் மற்றும் பட்டு போன்று மின்னும்.

 

வயிற்றுப் புண்ணை உடனடியாக சரி செய்ய – To Cure Stomach Ulcer Immediately

Tips No 1.

பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.

• பழுத்த தக்காளி பழத்தை சமைக்காமல் வெறும் வாயில் போட்டு சாப்பிட்டு வர வயிற்றுப்புண் உடனடி குணமாகும்.

• மேலும் இந்த தக்காளி பழத்தை அரைத்து ஜூஸ் போடவும் செய்து குடிக்கலாம்.

• இவ்வாறு செய்வதால் உடனடி பலனாக உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள புண்கள் ஆறி பழைய நிலைமைக்கு வரும்.

 

Tips No 2.

இன்றைய காலத்தில் பாகற்காயை பலரும் சாப்பிடுவதில்லை. இதனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பல்வேறு நபர்களுக்கு தெரியாமலேயே போகின்றது.

காய்கறிகளிலேயே பாகற்காய்க்கு மட்டும்தான் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை நீக்குவதற்கு மிகப்பெரிய சக்தி உண்டு.

வாருங்கள் அதனை எப்படி செய்து சாப்பிட்டால் அல்சர் நீங்கும் என்று பார்ப்போம்.

• முதலில் ஒரு பாகற்காயை எடுத்து சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி அதனை வெயிலில் காய வைக்க வேண்டும்.

• பின்னர் அதனை நன்றாக பொடி போன்ற அரைத்துக் கொள்ளவும்.

• பின்னர் அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சூடான ஒரு டம்ளர் நீரில் கலக்கி தினமும் குடித்து வரலாம்.

• இவ்வாறு செய்வதால் உங்களுடைய அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

 

இருமலை வராமல் தடுக்க சில குறிப்புகள் – Here Are Some Tips To Prevent Coughing

 

மழைக்காலம் வந்துவிட்டால் போதும் இருமலும் சளியும் உடனே நம்மை தேடி வந்து விடும். பலருக்கு ஆங்கில மருத்துவத்தில் ஊசி மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் உடனடி சரியாகிவிடும்.

மற்றும் பலருக்கு எவ்வளவு தான் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் நிற்காமல் இருமல் வந்து கொண்டே இருக்கும்.

இதனை நாம் இயற்கை முறையில் சரி செய்ய முடியும்.

• நேந்திரம் பழத்துடன் மிளகுத்தூள் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வரவும்.

• இவ்வாறு செய்ய இருமல் வராமல் தடுக்கலாம்.

 

மேலும் சில மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக – Extra Tips For You:-

 

1. அத்தி மரத்து இலையை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் வில்வம் சேர்த்து இரண்டையும் நன்றாக காய வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வர கை கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகிய இரண்டும் சரியாகும்.

 

2. இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களிலேயே, நெல்லிக்காய்க்கு தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. இதனை நாம் பச்சையாகவோ அல்லது பொடியாகவோ சாப்பிடலாம். இதனால் நம்முடைய உடல் நலம் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும்.

 

3. சர்க்கரையுடன் சிறிதளவு தயிர் கலந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக நம்முடைய உடல் புத்துணர்வு அடையும்.

 

4. அருகம்புல்லை வெறும் வாயில் போட்டு அதனுடைய சாரை மட்டும் விழுங்கி வர உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, பூரண குணமடையும்.

 

Read Also:- Navi Instant Personal Loan And Life Insurance

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *