Figs Benifits In Tamil – அத்திப்பழம் நன்மைகள் || பெண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள் – Athipalam benefits tamil for female

Table of Contents

Figs Benifits In Tamil அத்திப்பழம் நன்மைகள் || பெண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள்

Figs Benifits In Tamil

பெண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள்:

உலகில் இயற்கையின் மூலிகை தாவரங்கள் எவ்வளவு பயன் தருகிறதோ அதுபோன்று அதில் உள்ள பழங்களும், காய்களும் உடலுக்கு அதிக அளவு பயன் தருகிறது அதில் ஒரு பழம்தான் அத்திப்பழம்.

இந்த அத்திப்பழத்தை இரவில் நன்றாக தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தை அதிகரிக்க செய்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிக அளவு கொடுக்கிறது‌.

இதை தவிர பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகளவு இரத்த போக்கு மற்றும் வலிகளை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

அத்திப்பழம் எப்போது சாப்பிட வேண்டும்:

அத்திப்பழத்தை நாம் நன்றாக உலர வைத்து சாப்பிட வேண்டும்.இதை தவிர இரவில் ஊற வைத்துவிட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிடும் போது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி வயிறு சுத்தமாகிறது.

அத்திப்பழம் சாப்பிடும் முறை:

அத்திப்பழத்தை 3 அல்லது 4-பழங்கள் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அவற்றை சாப்பிட வேண்டும். இது தவிர ஓட்ஸ் அல்லது ஸ்மூர்த்தி போன்ற உணவுகளுடன் கலந்து அத்திப்பழத்தை சாப்பிடலாம்.

அத்திப்பழம் நன்மைகள் – Figs Benifits In Tamil : அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இதை நாம் அன்றாட உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

குறிப்பாக, அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் நன்றாக ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தை அதிகரிக்க செய்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் வலிகளை சரி செய்கிறது.

இந்த அத்திப்பழத்தின் நன்மைகளையும், அதை எவ்வாறு நாம் சாப்பிடலாம்? எந்த நேரத்தில் சாப்பிடலாம் அதனுடைய பயன்கள் போன்றவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அத்திப்பழம் எப்போது சாப்பிட வேண்டும்:

Figs Benifits In Tamil :- அத்திப்பழம் எண்ணற்ற நன்மைகளை நம் உடலுக்கு தரக்கூடிய ஒரு சுவை வாய்ந்த பழமாகும் இந்த அத்திப்பழம் நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அத்திப்பழத்தை உலர வைத்து நாம் சாப்பிடலாம். அதைவிட அத்திப்பலங்களை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பல ஆரோக்கியமான நன்மைகளை நாம் பெற முடியும்.

அத்திப்பழம் உண்ணும் முறை:

ஒரு பாத்திரத்தில் 2 அல்லது 3 அத்திப்பழங்களை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அவற்றை சாப்பிட வேண்டும். அத்திப்பழங்களை ஸ்மூர்த்தி அல்லது ஓட்ஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம்.

உணவில் அத்தி பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துக்களும் நம் உடம்பிற்கு கிடைக்கிறது. இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்குகிறது.

அத்திப்பழத்தின் வகைகள்:

அத்திப்பழத்தின் வகைகள்

1. நாட்டு அத்திப்பழம்

2. சீமை அத்திப்பழம்

என்று, அத்திப்பழம் இரண்டு வகைப்படும்.

அத்திப்பழம் நன்மைகள்:

1. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

Figs Benifits In Tamil :-  அத்திப்பழம் நாம் சாப்பிடுவதனால் அத்திப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து கட்டுப்படுத்துகிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் எந்த விதமான தங்கு தடையுமின்றி செல்வதால் நம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமா இருக்கும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அத்திப்பழம் குறைகிறது.

2. ஆரோக்கியமான முறையில் கருவுறுதல்:

அத்திப்பழத்தில் இரும்பு, மாங்கனிசு, மெக்னீசியம் போன்ற பல கனிமங்கள் கலந்துள்ளது. இது போன்ற கனிமங்கள் அனைத்தும் பெண்கள் ஆரோக்கியமான முறையில் கரு உருவாவதற்கு மிகவும் உதவுகிறது.

இந்த பழத்தில் உள்ள நார் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோனின் நிலையை சமநிலைப்படுத்துகிறது. இதனால், தான் பெண்கள் கர்ப்ப காலங்களில் பலவீனமாக இருக்கும் போது அத்திப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

3. எலும்புகளை உறுதியாக்கும்:

எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்து தான் கால்சியம். இந்த அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனிசு போன்ற தாதுக்கள் அதிகளவில் காணப்படுவதால் இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை உறுதியாக்கி வலுப்படுத்துகிறது.

4. உடல் எடையை குறைக்க:

உடல் எடையை குறைக்க பயன்படும் முக்கியமான ஊட்டச்சத்து தான் இரும்பு. இதில் இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், நார் சத்துக்கள் அதிகம் உள்ள பழமாக அத்திப்பழம் கருதப்படுகிறது.

இதனால், இந்த அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். கலோரியின் அளவையும் நம் உடம்பில் அத்திப்பழம் கட்டுப்படுத்துகிறது. எனவே, நாம் உடல் எடையை குறைக்க விரும்பினால் கண்டிப்பாக அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் நம் உடல் எடை குறைவதை நாமே அறிய முடியும்.

5. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு:

Figs Benifits In Tamil :-  உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு அத்திப்பழம் மிக முக்கியமான ஒரு பழமாக பரிந்துரை செய்யப்படுகிறது. அத்திப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் நம் உடலுக்கு அதிகளவு ஆற்றலை தரக்கூடியது.

இதில், உள்ள குளோரோஜினிக் அமிலம் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து, குறைக்கவும் உதவுகிறது. இதனால், சாலட் மற்றும் ஸ்மூர்த்திகளில் அத்திப்பழங்களை சேர்த்து பயன்படுத்தலாம்.

6. இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதற்கு:

இரத்த அழுத்தத்தை சமநிலை மற்றும் கட்டுப்படுத்துவதற்கு பொட்டாசியம் என்ற தாது முக்கியமாக செயல்படுகிறது. எனவே, இந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ள காரணத்தினால் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க மிகவும் உதவுகிறது.

உடலுக்கு சோடியம் அதிகளவு தீங்கு விளைவிக்கும் குறிப்பாக இரத்த அழுத்தத்திற்கு மிகவும் தொல்லை தரக்கூடிய ஒரு ஊட்டச்சத்தை தான் சோடியம். இதனால், இந்த சோடியத்தினால் ஏற்படும் விளைவுகளை பொட்டாசியம் சமநிலைப்படுத்துகிறது. அதனால் தான் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

7. வெண்புள்ளிகள், தோளில் நிறமாற்றம்:

Figs Benifits In Tamil :-  சீமை அத்திப்பழம் சாப்பிட்டால் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. காட்டு அத்திப்பழத்தை தினமும் அரை கிராம் அளவு ஒரு நேரம் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம், வெண்புள்ளிகள், தோளில் நிற மாற்றம் ஆகியவை விரைவில் குணமடையும். இதனையே, பவுடராக அரைத்து பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் பூசலாம்.

8. மலச்சிக்கலை தீர்க்கிறது:

அத்திப்பழம் அதையளவு நார்ச்சத்து மிக்கது. இதனால், குடலின் உட்பகுதியை நன்றாக சுத்தம் செய்து, ஆசனவாய் வெடிப்பு மற்றும் மூல வியாதி வராமல் தடுத்து எந்தவித கஷ்டமும் இன்றி எளிதில் மலத்தை வெளியேற்றுகிறது.

9. இரத்த சோகை குணமடைதல்:

பொதுவாக பெண்களுக்கு அதிகளவில் இரத்தசோகை பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால், அவர்கள் பாலுடன் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து எளிதாக குணமடையலாம்.

10. வயிற்று வலி குணமடைதல்:

அத்திப்பழங்களில் காணப்படும் நார்ச்சத்து நமது உடம்பில் உள்ள செரிமான மண்டலத்தை சீராக வைத்து வலுவாக்குகிறது. இதன் காரணமாக, தீராத வயிற்று வயிற்று வலியால் சிரமப்படுவர்களுக்கு அத்திப்பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

மேலும், வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி செரிமான மண்டலத்தை வலுவாக்க பெரிதும் உதவுகிறது. இது போன்று, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் தீர்வாக அத்திப்பழம் உள்ளது.

பெண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள்:

பெண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள்

• இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 6 அத்திப் பழங்களை சாப்பிட்டு வந்தால் பெண்கள் உடல் கவர்ச்சிகரமாக இருப்பதற்கும், முழு ஊட்டச்சத்து அளவையும் இந்த அத்திப்பழம் தருகிறது.

• இரத்த சோகை பொதுவாக பெண்களுக்கு தான் அதிக அளவில் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அத்திப்பழத்தை தினமும் 1 அல்லது 2 சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.

• தினமும் அத்திப்பழத்தை பெண்கள் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் தீர்வாக அமைகிறது.

• அத்திப்பழத்தில் இரும்பு, மாங்கனிசு, மெக்னீசியம் போன்ற பல கனிமங்கள் கலந்துள்ளது. இது போன்ற கனிமங்கள் அனைத்தும் பெண்கள் ஆரோக்கியமான முறையில் கரு உருவாவதற்கு மிகவும் உதவுகிறது.

• இந்த பழத்தில் உள்ள நார் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோனின் நிலையை சமநிலைப்படுத்துகிறது.

• இதனால், தான் பெண்கள் கர்ப்ப காலங்களில் பலவீனமாக இருக்கும் போது அத்திப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

உலர் அத்திப்பழம் நன்மைகள்:

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 47% அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த அத்திப்பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் 0.2 கிராம் கொழுப்பு சத்து தான் நம் உடலுக்கு போய் முழுமையாக சேர்கிறது.

இதனால், நம் உடல் எடையை எளிதில் குறைந்து பல பிரச்சனைகள் வராமல் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது.

அத்திப்பழம் தீமைகள்:

• சர்க்கரை நோய், பித்தப்பையில் கல் போன்ற நோய் இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.

• அத்திப்பழம் அதிக அளவு வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

• அறுவை சிகிச்சை ஏதேனும் செய்து இருந்தால் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

• சிலர் இதை சாப்பிட்டால் ஒவ்வாமை காரணமாக தோலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

• குடல் இயக்கங்களில் குறைபாடுகள் ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. ஏனெனில், சர்க்கரை அளவை என்னதான் குறைத்தாலும், அதிகமாக இது குறைக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆஸ்மா ஏற்பட காரணமாக இருக்கிறது. ஏனெனில், சிலருக்கு ஒவ்வாமை அலர்ஜி மற்றும் ஆஸ்மா பிரச்சனைகள் இருக்கும். இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் நிச்சயமாக அத்தி பழம் சாப்பிட்டதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஆண்களுக்கு அத்திப்பழம் நன்மைகள் || அத்திப்பழம் ஆண்மை:

• ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு மிகச் சிறந்த மருந்து ஆகும்.

• பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மையே அதிகரிக்க பெரிதும் உதவியது.

• அத்திப்பழத்தினை தேனில் கலந்து ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் விரைவாக ஆண்மை பெருக உதவுகிறது.

• பெருங்குடலில் ஆங்காங்கே சிதறி காணப்படும் திடமான கழிவு பொருட்களை பக்குவப்படுத்தி அதனை இலக்கி, சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி உடலை மிருதுவாகச் செய்கிறது.

• தினமும் 2 அல்லது 3 அத்திப்பழங்களை நாம் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த உற்பத்தி அதிகமாகுகிறது.

• சிறுநீரகத்தில் கல்லடைப்பு, கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்து சிறுநீர் போக்கை அதிகப்படுத்துகிறது.

41-நாட்கள் அத்திப்பழம் ஜூஸ் குடித்து வந்தால் விந்தணுக்கள் அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

அத்திப்பழம் ஜூஸ் பயன்கள்:

• அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதனால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி, அதிக இரத்தப்போக்கு, கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபடுவதற்கு அத்திப்பழ ஜூஸ் உதவுகிறது.

• கர்ப்பிணி பெண்கள் அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதனால் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்துகிறது.

• குழந்தை பிறப்பதற்கு முன்பு கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தம் அழுத்தம் அதிகமாக ஏற்படாமல் இருக்க அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதை மிகவும் நல்லது.

• பசியின்மை மற்றும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

41-நாட்கள் அத்திப்பழம் ஜூஸ் குடித்து வந்தால் விந்தணுக்கள் அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

• தோளில் உண்டாகும் பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல், அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதனால் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்தத்தை அதிகரிக்க செய்து, இரத்தத்தில் கிருமிகளை அழிக்கிறது.

• இன்று பலருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை இரத்தசோகை ஆகும். இது இரத்தத்தில் கிருமிகள் இருப்பதால் ஏற்படும் பிரச்சனை. இதற்கு, அத்திப்பழம் ஜூஸ் குடித்தால் அதில் இரும்பு சத்துக்கள் அதிகம் இருப்பதனால் இரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது.

அத்திப்பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:

1. வைட்டமின்-A

2. வைட்டமின் -B

3. வைட்டமின் – C

4. வைட்டமின் – K

5. கால்சியம்

6. பாஸ்பரஸ்

7. பொட்டாசியம்

8. இரும்பு சத்து

9. மெக்னீசியம்

10. மாங்கனிஸ்

11. காப்பர்

12. ஜிங்க்

13. தாமிரம்

மருத்துவ குறிப்பு:

அத்திப்பழம் எப்போது சாப்பிடலாம்?

Figs Benifits In Tamil :-  அத்திப்பழத்தை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடலாம். இரவில் நன்றாக நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

அத்திப்பழம் யார் சாப்பிடக்கூடாது?

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு இயற்கையாகவே ஒவ்வாமை அலர்ஜி காரணமாக அத்திப்பழத்தை சாப்பிட முடியாமல் போய்விடுகிறது.

அத்திப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

Figs Benifits In Tamil :-  தினமும் சுமார் இரண்டு அல்லது மூன்று உலர்ந்து இருக்கக்கூடிய அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும் அதன் பிறகு காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அந்த அத்திப்பழங்களை நாம் சாப்பிடலாம்.

இந்த அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்திற்கு சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றாக இந்த அத்திப்பழம் கருதப்படுகிறது.

Read also:- பப்பாளி பழத்தின் நன்மைகள் தீமைகள்

Leave a Comment