மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு | Maraimalai Adigal Life History

Post views : [jp_post_view]

மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு | Maraimalai Adigal Life History

மறைமலை அடிகள்
மறைமலை அடிகள்

மறைமலை அடிகள்:

மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு | Maraimalai Adigal Life History – பேராசிரியராக பணியாற்றி தமிழ் பழமொழி மற்றும் ஆங்கிலத்தையும் நன்கு கற்று தேர்ந்தவராய் இருந்தார். தனித்தமிழ் தந்தை என்று அழைக்கப்பட்டவர். மேலும் தனித்தமிழ் இயக்கத்தையும் தோற்றுவித்தவர். நம் தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் முடியவில்லை என்றால் நாம் தாய் மொழியாகிய தமிழை காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தவர்.

மறைமலை அடிகள் வரலாறு:

மறைமலை அடிகளின் இயற்பெயர் – வேதாச்சலம்

மறைமலை அடிகள் பிறந்தநாள் – 15/07/1876

மறைமலை அடிகள் பிறந்த ஊர் – திருக்கழுக்குன்றம்

மறைமலை அடிகளின் பெற்றோர் பெயர் – சொக்கநாத பிள்ளை மற்றும் சின்ன அம்மையார்

மறைமலை அடிகளின் மகள் பெயர் – நீலாம்பிகை

மறைமலை அடிகளின் புனைப்பெயர் – முருகவேல்

மறைமலை அடிகளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – தனித்தமிழ் மலை, தமிழ்க் கடல், பல்லாவரம் முனிவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை, தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி, தன்மான இயக்கத்தின் முன்னோடி

மறைமலை அடிகள் மொத்தம் எழுதி உள்ள நூல்கள் – 54

மறைமலை அடிகள் தொடங்கிய அமைப்பின் பெயர் – சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

மறைமலை அடிகள் யாரிடம் தமிழ் கற்றார் – நாராயணசாமி பிள்ளை

மறைமலை அடிகள் இளமைக்கால கல்வி பயின்ற இடம் – நாகை மாவட்டத்தில் உள்ள வெஸ்லியன் தொண்டு நிறுவனம்

மறைமலை அடிகள் என பெயர் வர காரணம்:

பல ஆண்டுகளாக பிள்ளை பேரு இல்லாத சொக்கநாத பிள்ளை மற்றும் அவருடைய தாயான சின்னம்மாள் ஆகிய இருவரும் திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசாலையும், அம்மை சொக்கமையாரையும் வேண்டி நோன்பு இருந்து 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி மறைமலை அடிகள் பின்னர் தம் பிள்ளைக்கு வேதாச்சலம் என பெயரிட்டார்.

அதற்குப் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக 1916 ஆம் ஆண்டு தம் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார்.

மறை – என்றால் வேதம் என்று பொருள்

மலை – என்றால் அசலம் என்று பொருள்

மறைமலை அடிகளின் இளமைப் பருவம்:

மறைமலை அடிகள் நாகையில் வெஸ்லியன் என்னும் தொண்டு நிறுவன கல்லூரியை சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் அவரது தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ் புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழை கற்றார்.

மறைமலை அடிகள் சைவ சித்தாந்தத்தை “சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற புகழ்பெற்ற “சோமசுந்தர நாயக்கர்” என்பவரிடம் கற்று தேர்ந்தார்.

மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு – Life History Of Maraimalai Adigal

1905 – ம் “சைவ சித்தாந்த மகா சமாசம்” என்ற அமைப்பை தோற்றுவித்தார்.

பல ஆண்டுகள் பேராசிரியராகவும், தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்தும் பணியாற்றிய பின் பல்லாவரத்தில் ராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை தோற்றுவித்தார்.

தனித்தமிழ் மீது ஈடுபாட்டால் அதனை “பொதுநூலை கழகம்” என பெயர் மாற்றினார் மறைமலை அடிகள்.

திருமுருகன் என்ற அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி பல நூல்களையும் வெளியிட்டார்.”மணிமொழி நூல் நிலையம்” என்னும் நூல் நிலையத்தை உருவாக்கினார் மறைமலை அடிகள்.

மேலும் பல்லாவரம் முனிவர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார் மறைமலை அடிகள்.

பின்னர் சென்னைக்கு வந்த பிறகு கிறிஸ்தவ கல்லூரியில் வீகோ சூரியநாராயணா சாஸ்திரியிடம் உடன் தமிழாசிரியராக பணி புரிந்தார்.

Biography of maraimalai Adigal – மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு:

✍️ மறைமலை அடிகள் ஒரு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் ஆவர்.

✍️ தமிழ் ஆய்வாளர் தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

✍️ உயர்தனி செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதி பிறரையும் ஊக்குவித்தவர் என்று பெருமைக்குரியவர்.

✍️ தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர். மேலும் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி தமிழை செழுமையாக வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவர்.

✍️ தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று மறைமலை அடிகள் அழைக்கப்படுகிறார்.

✍️ பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடி தலைவர்களாக திகழ்ந்தனர்.

✍️ இவர்கள் இருவரும் குல, சமய வேறுபாடு இன்றி பொதுமக்களுக்கு கடவுள் மற்றும் சமய மற்றும் உண்டாகும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவராக திகழ்ந்தனர்.

✍️ சைவ திருப்பணியையும் சீர்திருத்த பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர் மறைமலை அடிகள் ஆவார்.

✍️ மறைமலை அடிகளார் நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் மொழியை கற்று அறிந்தார்.

✍️ பல ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய பின் பல்லாவரத்தில் ராமலிங்க வல்லாளரின் கொள்கைப்படி 22/04/1912 – ஆம் ஆண்டு “சமரச சுத்த சன்மார்க்க” என்ற அமைப்பை தொடங்கினார் மறைமலை அடிகள்.

மறைமலை அடிகளார் பற்றிய சிறப்பு செய்திகள்:

• தனித்தமிழ் தந்தை என்ற அழைக்கப்பட்டார்.

• தனித்தமிழ் நடையின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்.

• தனித்தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள்.

• தனித்தமிழ் இயக்கத்தையும் தோற்றுவித்தவர் இவரே.

• தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

• தனித்தமிழ் என்ற நூலின் ஆசிரியரும் இவரே.

• மறைமலை அடிகள் மொத்தமாக 54 நூல்களை எழுதியுள்ளார்.

மறைமலை அடிகள் எழுதிய நூல்களின் பெயர்கள்:

1. தமிழர் மதம்

2. வேளாளர் யாவர்

3. சைவ சமயம்

4. அம்பலவாணர் கூத்து

5. மரணத்தின் பின் மனிதனின் நிலை

6. வலோன் நாகரிகம்

7. தொலைவில் உணர்தல்

8. தென் புள்ளத்தார் யார்

9. சோமசுந்தர காஞ்சிபுரம்

10. மக்கள் ஆயிரம் ஆண்டுகள் எப்படி வாழ்வது

11. பண்டைய கால தமிழரும் ஆரியரும்

12. தமிழர் மதம்

13. பழந்தமிழ் கொள்கையே சைவ சமயம்

14. வேளாளர் நாகரிகம்

15. தமிழ்நாட்ட வரும் மேல் நாட்டவரும்

16. இந்தி மொழி அனைவருக்கும் பொதுவான மொழியா

17. சிவஞானபோத ஆராய்ச்சி

18. சோமசுந்தர நாயக்கர் வரலாறு

19. சோமசுந்தரம் காஞ்சியகம்

20. மாணிக்கவாசகர் வரலாறு

21. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

22. மாணிக்கவாசகர் மார்சி

23. திருவாசகத்திற்கு விரிவுரை

24. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

25. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

26. மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை

27. மனித வசியம்

28. யோக நித்திரை

29. தொலைவில் உணர்தல்

30. மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை

31. சகுந்தலா நாடகம்

32. ஞான சாகரம் மாளிகை

33. முற்கால பிற்காலத் தமிழ்

34. முல்லைப்பாட்டு, பட்டினம் பாலை, திருக்குறள் ஆகிய நூல்களின் ஆராய்ச்சி

35. மறைமலை அடிகள் பாமணி கோவை

36. மறைமலை அடிகள் கடிதங்கள்

37. உரைமணி கோவை

38. அறிவுரை கோவை

39. அறிவுரை கொத்து

40. சிந்தனை கட்டுரைகள்

மறைமலை அடிகள் எழுதிய நாவல்களின் பெயர்கள்:

கோகிலாம்பாள் கடிதங்கள், குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

மேலும் மறைமலை அடிகளார் நான்கு வகையான ஆங்கில நூல்களையும் எழுதி உள்ளார். தமிழ் மொழிக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் மறைமலை அடிகளார்.

மறைமலை அடிகளின் இறப்பு:

செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி 1950ஆம் வருடத்தில் தம் புவி வாழ்வை துறந்து இறைவனடி சேர்ந்தார் மறைமலை அடிகளார்.

(மேலும்: மறைமலை அடிகளார் பற்றி தெரிந்து கொள்ள Wikipedia – வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

மேலும்: தேச தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *