பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ் || Bharathidasan Life History In Tamil
பாரதிதாசன் வாழ்க்கை - Bharathidasan Biography:
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: பாரதிதாசன் தமிழ் மீது அதீத பற்று கொண்டவர். இளம் வயதிலேயே புதுவையின் அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். விடுதலைப் போராட்ட வீரர், எண்ணற்ற தமிழ் நூல்களை இயற்றிய உத்தமர். திருக்குறளுக்கு உரை எழுதியவர். மேலும் பல நாடகங்களையும் எழுதியவர்.
பாரதிதாசன் பற்றிய சிறு குறிப்புகள் - Biography Of Bharathiar In Tamil:
பாரதிதாசனின் பிறந்தநாள் - 29.04.1891
பாரதிதாசனின் முழு பெயர் - சுப்புரத்தினம்
பாரதிதாசன் பிறந்த ஊர் - புதுச்சேரி மாநிலம்
பாரதிதாசனின் பெற்றோர் பெயர் - கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்
பாரதிதாசனின் மனைவி பெயர் - பழனி அம்மையார்
பாரதிதாசன் எழுதிய நூல்கள் - பாண்டியன் பரிசு, இசை அமுது, எதிர்பாராத முத்தம், சேர தாண்டவம், புரட்சிக்கவி, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இரண்டு வீடு, குறிஞ்சி திட்டு, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம், காதல் நினைவுகள் மற்றும் பல
பாரதிதாசன் எழுதிய சிறுகதைகள் - சௌமியன், நல்ல தீர்ப்பு, அமைதி, ரஸ்புடின், இன்பக்கடல், அம்மையச்சி, படித்த பெண்கள், இரணியன் அல்லது இணையற்ற வீரன், தங்க கிளி பரிசு, பிசிராந்தையார்
பாரதிதாசனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் - இயற்கை கவிஞர், தமிழ்நாட்டு ரசூல் கம்சதேவ், பகுத்தறிவு கவிஞர், புதுவைக்குயில், பாவேந்தர், புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி
பாரதிதாசன் என்னும் பெயர் வர காரணம்:
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: பாரதிதாசனின் உண்மையான இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். பின்னர் தன்னுடைய தந்தையின் மீது கொண்டிருந்த பற்றால் அவருடைய பாதி பெயரை இணைத்து க கனகசுப்புரத்தினம் என்று வைத்துக் கொண்டார்.
சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாரதியின் எழுச்சிமிகு சொற்களைக் கேட்டு அவர் மீது அளவற்ற அன்பினால் தன்னுடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசனின் பிறப்பு:
புரட்சி கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் வருடம் ஏப்ரல் 29-ஆம் தேதி புதுவையில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரப்பில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.கவிஞரின் இயற்பெயர் சுப்ரதினம் ஆகும். பின்னர், தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து கனக சுப்புரத்தினம் என மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் திருமண வாழ்க்கை:
பாரதிதாசன் 1920-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி பழனி அம்மையாரை மணம் முடித்தார். இவர்களுக்கு, மன்னர் மன்னர் என்ற மகனும் சரஸ்வதி, வசந்தா, இரமணி போன்ற பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய விரிவான விளக்கம்:
பாரதிதாசன் பாரதியை தன்னுடைய மானசீக குருவாக ஏற்றார். மேலும் பாரதி எழுதிய அனைத்து நூல்களையும் விடாமல் படித்து விடுவார். பாரதியைப் போல் எண்ணற்ற நூல்களையும் நாடகங்களையும் அவ்வப்போது ஏற்றி வந்தார்.
எத்தனையோ படைப்புகள் பாரதிதாசன் எழுதியிருந்தாலும் சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு விதமான படைப்புகளை தினமும் வெளியிட்டு வந்தார்.
பாரதிதாசனின் இளமைப் பருவம்:
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: பாரதிதாசன் தன்னுடைய 16 வது வயதில் புதுவையில் உள்ள அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். மேலும் இவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தொடக்கக் கல்வி திரு புலி சாமியார் என்பவரிடமும் மேலும் பெரியசாமி என்பவரிடமும் தமிழ் முழுமையாக பயின்றார். இவருடைய சோமசுந்தர பாரதியார் என்பவர் புரட்சிக்கவி என்ற பட்டத்தையும் 25 ஆயிரம் ரூபாயையும் பரிசாக அளித்தார்.
தன்னுடைய இளம் வயது முதல் எண்ணற்ற நூல் படைப்புகளை படைத்திருக்கிறார். அவ்வகையில் 1930 ஆம் ஆண்டு முதல் 1980ஆம் வயது வரை எண்ணற்ற தமிழ் படைப்புகளை பாரதிதாசன் எழுதியிருக்கிறார்.
பாரதிதாசனின் பணிகள்:
பாரதிதாசன் அவர்கள் தமிழ் மீது அயராது பற்று கொண்டதாக இருந்தார். தனது மானசீக குருவாக சுப்பிரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டார்.
பாரதிதாசன் அவர்கள் தன்னுடைய 16-வது வயதில் புதுகை அரசு கல்லூரியில் பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.
ஒருமுறை பாரதிதாசனின் நண்பனின் திருமணத்தில் பாரதியார் பாடலை பாடினார் பாரதிதாசன். அந்த திருமணத்தில் பாரதியாரை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு, பாரதியாரிடம் இருந்து பாராட்டுகளையும், ஆசீர்வாதத்தையும் பெற்றார்.
பிறகு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பி அவர் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
கொய்யா மரத்தினை பற்றிய பாரதிதாசனின் வர்ணனைகள்:
கொய்யா மரத்தின் இலைகள் காட்டு முயலின் காதுகள் போன்று உள்ளன. அடி மரம் யானையின் தும்பிக்கையை போன்று உள்ளது
கிளை உயர்ந்து வளர்ந்துள்ளது. தங்க நிற பழங்கள் வரிசையை காய்த்துள்ளனர்.
கொய்யா மரத்தில் பழத்தை காணும் போது அதை பொய்யும் பழம் என்போம் அதாவது அதனை பறிக்கும் பழம் என்போம். அதை கையில் பறித்து வாயில் இட்டு மென்று தின்னும் போது கொய்யாப்பழம் என்போம் என கொய்யாப்பழத்தின் பெயரை புதுமையாய் வர்ணித்துள்ளார் பாரதிதாசன்.
பாரதிதாசனும் காமராஜரும்:
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: பாரதிதாசனின் அளவு கடந்த அரசியல் ஈடுபடும் மற்றும் மக்களுக்கு செய்யும் தொண்டுகளை கண்டு வியந்து போன அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பெயரை வழங்கினார்.
25-ஆயிரம் ரூபாய் சன்மானமும் கொடுத்து பாரதிதாசனை கௌரவ படுத்தினார்.
பாரதிதாசன் எழுதிய நூல்களின் பெயர்கள்:
Bharathidasan Life History In Tamil
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- குறிஞ்சி திட்டு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- இசையமுது
- முல்லை காடு
- விடுதலை வேங்கை
- கலை மன்றம்
- அழகின் சிரிப்பு
- தமிழ் இயக்கம்
- குயில்
- தமிழச்சியின் கத்தி
- பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசனின் சிறப்பு பெயர்கள்:
- பாவேந்தர்
- புரட்சிக்கவி
- பாரதிதாசன்
- தமிழ் கவி
- தமிழரின் கவி
- தமிழின் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி
பாரதிதாசனின் படைப்புகள்:
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசை பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆயிற்றின் மூலம் வெளியிட்டார்.
அவற்றில் சில,
* அம்மைச்சி நாடகம்.
* கழைக்கூத்தியின் காதல் நாடகம்.
* கலை மன்றம்.
* கற்புக் காவியம், குயில்.
* சத்தி முத்தப் புலவர் நாடகம்.
* நீலவண்ணன் புறப்பாடு.
* பிசிராந்தையார் நாடகம்.
* பெண்கள் விடுதலை.
* விடுதலை வேட்கை.
* ரஸ்புடீன் நாடகம்.
• இதைத் தவிர திருக்குறளின் பெருமையை விளக்கி “செப்பலோசையில்” அமையப்பெற்று 5-கட்டளை “கலித்துறைப்” பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிதாசன் பற்றிய சில சிறப்புகள்:
✍️ வானம்பாடி கவிகளுக்கு இவரே முதல் எழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
✍️ பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
✍️ புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்க பாடியது “எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா” என்ற பாடல்.
✍️ ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா பண்டாரத்தை சேர்ந்த கனவு சுப்புரத்தினம் எழுதியது.
✍️ 1970 ஆம் ஆண்டு “பிசிராந்தையார்” நாடக நூலுக்கு சாகித்திய அகாடமி விருதும் மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் பரிசும் வழங்கப்பட்டது.
✍️ அமைதி ஊமை என்ற நாடகத்திற்கு தங்க கிளி என்ற பரிசு வழங்கப்பட்டது.
✍️ பெரியார் பாரதிதாசன் அவர்களுக்கு புரட்சி கவிஞர் என்ற பட்டமும், அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சி கவி என்ற பட்டமும் வழங்கினார்கள்.
✍️ இந்திய தபால் துறையின் மூலமாக 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அவரது உருவப் படத்தில் ஒரு நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு செய்த சிறப்புகள்:
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: தமிழக அரசு பாரதிதாசனை என்றும் நினைவில் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கவிஞருக்கு பாரதிதாசன் என்னும் விருதினை வழங்கி பெருமைப்படுத்துகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்ற ஒரு மாநில சிறப்பு பெற்ற பல்கலைக்கழகமும் உள்ளது.
பாரதிதாசனின் இறப்பு:
1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று இப்புவி உலகை விட்டு மறைந்தார்.
பாரதியின் புகழுரை கவிதைகள்:
Bharathidasan Life History In Tamil
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்ப தமிழன்கள் உயிருக்கு நேர்“
“பைந்தமிழ் தேர் பாகம்
செந்தமிழ் தேனி
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதை குயில்
இந்நாட்டினை கவிழ்க்கும் பகையை
கவிழ்க்கும் கவி முரசு
நீடுத் துயில் நீங்க பாடி வந்த நிலா
காடு கமலும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன்
என்னவென்று சொல்வேன் என்னவென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியார் தகுதி பெற்றதும்“
“மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் பானை போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாய் இருளைப் போக்கி
சக மக்கள் என்றென்பது உணர்வதற்கும்,
இனிது இனிதாய் எழுந்த உயிர் எண்ணம் எல்லாம்
இலகுவது புலவர் தெரு சுவடிச்சாலை
புனித முற்று மக்கள் பொதுவாழ்வு இரண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் தமிழருக்கு தமிழ் மொழியில் சுவடி சாலை சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும்“
“எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம் இன்று தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்கும் என்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்“
பாரதிதாசன் குறிப்பு || bharathidasan kurippu
பாரதிதாசன் எந்த ஊர் ?
பாரதிதாசன் “பாண்டிச்சேரியில்(புதுவையில்)”, பிறந்து
தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய பெறும் புகழ் மிக்க பாவலர் ஆவார்.
பாரதிதாசன் எங்கு எப்போது பிறந்தார்?
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: புரட்சி கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் வருடம் ஏப்ரல் 29-ஆம் தேதி புதுவையில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரப்பில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.கவிஞரின் இயற்பெயர் சுப்ரதினம் ஆகும்.
எதிர்பாராத முத்தம் இது யாருடைய நூல் ?
பாவேந்தர் பாரதிதாசனின் “எதிர்பாராத முத்தம்” கவிதை நூலாகும்.
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது ?
1969-ஆம் ஆண்டு பாரதிதாசனின் மறைவிற்குப் பின்னால் அவர் இயற்றிய “பிசிராந்தரையார்” என்னும் நூலுக்கு “சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.
பாவேந்தர் என்று அழைத்தவர் யார் ?
புதுவை கவிஞர், புதுமை கவிஞர், புரட்சிக் கவிஞர், கனக சுப்ரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் அவர்கள் ன, அவருடைய பாடல்கள் புதுமையான புரட்சிகரமான கருத்துக்களை கொண்டிருந்த காரணத்தாலும், அன்றைய கவிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டதாலும் பாவேந்தர் என்று அழைக்கப்பட்டார்.
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது ?
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்: பாரதிதாசன் இயற்றிய நாடக நூல்கள் - சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்தி முற்றப் புலவர், அமைதி ஊமை, இரணியன் அல்லது இணையற்ற வீரன், படித்த பெண்கள், இன்பக்கடல், நல்ல தீர்ப்பு, அம்மைச்சி, ரஸ்பிடின், அமைதி.
புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்? || பாரதிதாசனுக்கு வழங்கப்பட்ட பட்டம் எது?
பாண்டியன் பரிசு, குறிஞ்சி திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், குயில், பெண்கள் விடுதலை போன்ற படைப்புகளை கொடுத்ததற்காக “புரட்சிக்கவிஞர்” என்ற பட்டத்தை பெரியார் வழங்கினார். “புரட்சிக்கவி” என்ற பட்டத்தை அறிஞர் அண்ணா பாரதிதாசனுக்கு வழங்கினார்.
(மேலும் பாரதிதாசனை பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள Wikipedia - வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
Read Also:- பாரதியார் பற்றிய முழு தகவல்கள்
