பல்லி விழும் பலன் | Palli Vilum Palan
பல்லி விழும் பலன் :
பல்லி விழும் பலன் – பல்லி விழும் பலன்கள்: பொதுவாகப் பல்லி நம் உடலின் மீது எங்காவது விழுந்து விட்டால், அதனால் நன்மை அல்லது தீமை ஏதேனும் ஏற்படுமோ இன்று பல்லி விழும் பலன் தேடுவது ஒன்று.
இன்று நாம் இந்தப் பதிவில் பல்லி நம்முடைய உடலில் எந்தப் பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்று தெளிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன்:
பொதுவாகப் பல்லியைப் பற்றிய சாஸ்திரத்தில் அது கத்துவது மற்றும் அதன் உடல் மீது விழுந்தால் என்னென்ன நன்மை அல்லது தீமைகள் நடக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
• தலையில் பல்லி விழுந்தால் ஆண் பெண் என இருவருக்கும் மோதல்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது வேறு பல துன்பங்கள் ஏற்படுவதை குறிக்கும்.
• பல்லி ஆண்களின் இடது கண் மீது விழுந்தால் நல்லது நடக்கும் என்றும், அதுவே பெண்களின் இடது கண் மீது விழுந்தால் அவருடைய கணவரின் அன்பு கிட்டும் என்றும் குறிக்கும்.
• தலையின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கலகம் ஏற்படும்.
• ஆண்களுக்கு உதட்டின் மேற்புறத்தில் பல்லி விழுந்தால் மோதலுக்குத் தயாராக இருக்கவும் அதுவே கீழ் உதட்டின் மீது விழுந்தால் புதிய பொருட்கள் கிடைக்கும் என்றும் குறிக்கும்.
• ஆண் பெண் என இரு பாலர்களுக்கும் வலது பாத காலின் மீது பல்லி விழுந்தால் நோய்வாய்ப்படுவார்கள் என்றும், அதுவே இடது பாத காலின்மீது விழுந்தால் அது அவருக்குக் கெட்டது நடக்க போவதை குறிக்கும் என்றும் சொல்வார்கள்.
• ஆண் மற்றும் பெண்களுக்கு வலது மணிக்கட்டின் மீது பல்லி விழுந்தால் கெட்ட சகுனம் ஏற்படும் என்றும் அதுவே இடது மணிக்கட்டின் மீது பல்லி விழுந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்றும் குறிக்கும்.
• ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வலது தோள்பட்டை மீது பல்லி விழுந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் அதுவே இடது தோள்பட்டை மீது பல்லி விழுந்தால் பெரிய இன்பமான செய்தி ஒன்று கிடைக்கும்.
• ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வலது கையின் விரல்கள் மீது பல்லி விழுந்தால் பரிசு பெறுவீர்கள் என்றும் அதுவே இடது கையின் விரல்கள் மீது பல்லி விழுந்தால் ஏதேனும் கவலையான விஷயங்கள் வந்து சேரும்.
• ஆண்களுக்குக் கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் ஒருவருடன் உண்டான பகை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இடது கழுத்தின் மேல் பக்கத்தில் பல்லி விழுந்தால் நிச்சயம் வெற்றி எதிலும் வெற்றி கிடைக்கும்.
Palli Vilum Palan In Tamil – பல்லி விழும் பலன்
ஆண், பெண் | பல்லி விழும் பலன் |
தலையின் இடது பக்கம் | வலி |
தலையின் வலது பக்கம் | கலக்கம் |
நெற்றியின் இடது பக்கம், | புகழ் |
நெற்றியின் வலது பக்கம் | அதிர்ஷ்டம் |
வயிற்றின் இடது பக்கம் | மகிழ்ச்சி |
வயிற்றின் வலது பக்கம் | தானிய வகைகள் வந்து சேரும் |
முதுகின் இடது பக்கம் | கவலை |
முதுகின் வலது பக்கம் | நஷ்டம் |
கண்ணின் இடது பக்கம் | பயம் |
கண்ணின் வலது பக்கம் | மகிழ்ச்சி |
இடது தோள்பட்டை | சுகம், வெற்றி |
வலது தோள்பட்டை | பெரும் நஷ்டம் செலவு |
மணிக்கட்டின் இடது பக்கம் | புகழ் |
மணிக்கட்டின் வலது பக்கம் | பீடை |
தொடையின் இடது பக்கம் | சஞ்சலம் |
தொடையின் வலது பக்கம் | துக்கம் |

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .