தெருக்கூத்து

தெருக்கூத்து

Table of Contents

தெருக்கூத்து

தெருக்கூத்து

தெருக்கூத்து என்றால் என்ன:

தமிழர்களின் வாழ்வில் இன்றியமையாததாக அமைந்தது தெருக்கூத்து ஆகும். இது இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான கருவிகளைக் கொண்டு இசை அமைத்து அதன் மூலம் மக்களை மகிழ்விப்பது தெருக்கூத்து என்று அழைக்கப்படுகிறது.

கலைகளின் வகைகள்:

• தெருக்கூத்து
• சாமியாட்டம்
• தேவராட்டம்
• கணியன் ஆட்டம்
• கதைப்பாடல்
• வில்லுப்பாட்டு
• பொய்க்கால் குதிரை
• மரக்கால் ஆட்டம்
• மயிலாட்டம்
• தோல்பாவை கூத்து
• பறையாட்டம்
• ஒயிலாட்டம்
• உடுக்கை
• இலாவணி
• பகல் வேடம்
• கரகாட்டம்
• ராஜா ராணி ஆட்டம்
• களரி
• சிலம்பாட்டம்

மேலே கூறப்பட்டுள்ள இந்த கூத்துக்கள் அனைத்தும் அரங்கங்கள் எதுவும் அமைக்கப்படாமல் திருக்குறளும் வயல்வெளிகளிலும் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது கோவில்களின் முற்றங்களிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஆகும்.

தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் வாழ்வோடு ஒன்று அமைந்த இந்த தெருக்கூத்தானது “கட்டைக்கூத்து” என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கதையாய் சொல்லுதல் ஆடல் பாடல் என அனைத்து வகையான கூற்றுக்களும் இந்த தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் அமைந்திருக்கும்.

மேலும் குறிப்பாக சொல்லப்போனால் தெருக்கூத்து ஆனது தொன்மம், நாட்டார் கதை மற்றும் சீர்திருத்த கதை, விழிப்புணர்வு கதை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தெருக்கூத்து நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றது. மேலும் இது நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் ஒரு கலை ஆகும்.

தெருக்கூத்தை முதல் முதலில் ஆரம்பித்தவர்கள் யார்:

வேளாண் தொழில் செய்யக்கூடிய மக்கள், பொழுது போக்காக ஆரம்பிக்கப்பட்டது பின்னர் ஒரு கலையாக மாறி தெருக்கூத்து என்று பெயர் பெற்றுள்ளது.

தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கருவிகள்:

முகவினை ஆர்மோனியம் மத்தளம் தாளம் ஆகிய பல்வேறு வகையான இசைக்கருவிகளைக் கொண்டு தெருக்கூத்து நாடகம் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடிக்கும் கலைஞர்கள் கிரீடங்கள் புஜகிருத்திகள் மார்பு தங்கம் மற்றும் கால் சலங்கை ஆகியவற்றை கொண்டு தங்களுடைய உடல்களில் கட்டி கூட்டத்தில் இருப்பவரை மகிழ்விப்பார்.

தமிழ்நாட்டின் தெருக்கூத்து நிகழ்ச்சிகள்:

• தமிழகத்தில் தெருக்கூத்து வழக்குப் பகுதியான காஞ்சிபுரம், செய்யாறு, திண்டிவனம், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் எப்பொழுதும் நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.

• தெருக்கூத்துக்கள் பல்வேறு வகையை காணப்படுகின்றன குறிப்பாக சொல்லப்போனால் தொண்டை மண்டலங்களில் நடக்கும் தெருக்கூத்துக்கள் மகாபாரத கதைகளை மையமாகக் கொண்டே நடத்தப்படுகின்றது.

• மேலும் இந்த தெருக்கூத்துக்களில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றது.

• தமிழகத்தில் உள்ள காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் பிரகலாதன் எனப்படும் கதையை மையமாகக் கொண்டு தெருக்கூத்து நடத்தப்படுகிறது.

கரகாட்டம் பற்றிய முழு விளக்கம்:

கரகாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும். இது தலைமேல் கரகத்தை வைத்து ஆடக்கூடியதால் இதற்கு கரகாட்டம் என்று பெயர் வந்துள்ளது. மேலும் சங்க இலக்கியங்களில் கூட கரகாட்டம் என்னும் சொல் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்து ஆண் பெண் ஆகிய இருவரும் வைத்து ஆடுவார்கள். கரகாட்டத்தை பொறுத்தவரையில் அதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தெய்வ வழிபாட்டிற்காக ஆளப்படும் கரகம் “சக்தி கரகம்” என அழைக்கப்படுகிறது. மற்றொன்று தொழில்முறை கரகத்தை வைத்து ஆடுவார்கள் இதற்கு “ஆட்டக்கரகம்” என்று பெயர்.

குறிப்பாக சொல்லப்போனால் கரகாட்டம் நிகழ்ச்சி ஆனது தென் மாவட்டங்களை சுற்றிய நிகழும். அதில் திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது இன்றியமையான ஒன்றாக கரகாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும் இந்த கரகாட்டம் நிகழ்ச்சியில் சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை உடைய சத்தக்குழல் மற்றும் நையாண்டி மேளம், பறை ஆகிய இசை கருவிகளும் பயிற்சி இசைக்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் இருந்தே மக்களால் விரும்பக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த கரகாட்டம் இன்று வரை இருந்து வருகிறது.

மேலும் இந்த கரகாட்டம் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டும் பெண்கள் ஆண்கள் வேடம் மட்டும் ஆடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் தான் நடிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

மயிலாட்டம் நிகழ்ச்சியை பற்றிய முழு விளக்கம்:

மயிலாட்டம் என்பது மயில் வடிவில் உள்ள ஒரு கூட்டிற்குள் ஒருவர் தன்னுடைய உருவத்தை மறைத்து நையாண்டி மேளத்திற்கு ஏற்பவரே ஆட்டம் ஆடுவது மயில் ஆட்டம் ஆகும்.

மேலும் மயில் வடிவத்தை அசைத்துக் கொண்டே தம்முடைய கைகளிலும் கால்களிலும் சலங்கை கட்டிக்கொண்டு ஆட்டக்காரர் ஆடுவார். நாம் மேலே பார்த்த கரகாட்டத்தில் துணை ஆட்டமாக இந்த மயிலாட்டம் ஆடப்படுகிறது.

காவடி ஆட்டம் பற்றிய முழு விளக்கம்:

காவடி ஆட்டம் என்பது திருவிழாக்களில் கடவுளுக்கு நேர்த்திக்கடன் ஆக வேண்டிக் கொண்டு இரு முனைகளிலும் சம அளவு கொண்ட கட்டையை தோளில் சுமந்து அதனை மயில் இறகு போன்றவற்றை அலங்கரித்து ஆடப்படும் ஆட்டம் காவடியாட்டம் ஆகும்.

மேலும் இந்த மயிலிறகு கட்டுரைகளை காவடிகளின் இரு புறமும், பொருத்தி அதனை மணிகளால் அழகு படுத்தியும் காவடிகளை உருவாக்குவார்கள்.

காவடி ஆட்டம் ஆனது தமிழர்களுக்கு மட்டுமே குறித்தான ஒரு ஆட்டம் ஆகும். இது இலங்கை மலேசியா உள்ளிட்ட புலம்பெயர்ந்த அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஒயிலாட்டம் நிகழ்ச்சியை பற்றிய முழு விளக்கம்:

ஒரே நிறத்தை உடைய துணியை முண்டாசு போல தலையில் கட்டிக்கொண்டு காலில் சலங்கைகளை அணிந்து கொண்டு கையில் வைத்துள்ள சிறிய துணையை இசைக்கேற்ப அங்கும் இங்கும் வீசியும் உடம்பை வளைத்தும் ஆடுவது ஒயிலாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

வரிசையாக நின்று ஆடக்கூடிய இந்த ஆட்டம் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆடுவார்கள்.

தேவராட்டம் நிகழ்ச்சியை பற்றிய முழு விளக்கம்:

தேவராட்டம் என்பது வானத்து தேவர்கள் ஆடக்கூடிய ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேவராட்டம் நிகழ்ச்சி ஆண்கள் மட்டுமே ஆடுவார்கள். இது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நபர்களின் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களின் போது ஆளப்படும் ஆட்டம் ஆகும்.

தேவராட்டம் போன்றே ஆடப்படுவது இது ஒரு கலை மற்றும் சேவையாகவும் கொள்ளப்படுகிறது மேலும் இசை சாரா கலையும் வழிபாட்டுக்களையும் இந்த தேவராட்டத்தில் நடக்கும்.

பொய்க்கால் குதிரை ஆட்டம் பற்றிய முழு விளக்கம்:

ஒருவர் குதிரை வடிவில் உள்ள உடம்புக்குள் நின்று கொண்டு பெரிய மரத்தால் ஆன பொய்யான கால்களை தம்முடைய கால்களில் கட்டிக் கொண்டு ஆடுவதால் இது பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் இதனை குதிரையின் மேல் ஏறி பயணம் செய்வது போன்ற கடிவாளத்தை ஆட்டியும் கால்களை மேலும் கீழுும் நான்கு புறமாக ஓட்டியும் ஆடுகின்றனர்.

இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆனது தமிழர்களின் பாரம்பரிய ஆட்டம் இல்லை என்றும் இது மராட்டியர் காலத்தில் தஞ்சாவூர் வந்த மராட்டியர்களால் இந்த கலை பரப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தப்பாட்டம் பற்றிய முழு விளக்கம்:

இது தப்பு என்பது தோலின் மூலம் செய்யப்பட்ட கருவியாகும். மேலும் இது இசைக்கு ஏற்ப ாடுகின்ற நிகழ்ச்சி தப்பாட்டம் என அழைக்கப்படுகின்றது.

பண்டைய காலம் தொட்டு தமிழர்களால் பரவலாக காணப்படும் இந்த நிகழ்ச்சி ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர் ஆனால் தற்போது பெண்களும் இந்த தப்பாட்டத்தை கொண்டு நடனமாடி வருகின்றனர்.

இந்த தப்பாட்டன் நிகழ்ச்சி தான் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வில் இன்றியதாக உள்ளது குறிப்பாக சொல்லப்போனால் கோவில் திருவிழா, விழிப்புணர்வு முகாம் ,திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவை அனைத்திற்கும் இந்த தப்பாட்ட நிகழ்சிகள் பயன்படுத்தப்படுகின்றது.

புலி ஆட்டம் நிகழ்ச்சி பற்றிய முழு விளக்கம்:

இந்த புலி ஆட்டம் நிகழ்ச்சி தான் தமிழக மக்களின் வீரத்தை சொல்லக்கூடிய ஒரே ஆட்டமாக இன்று வரை இருக்கின்றது.

இந்த புலி ஆட்டம் நிகழ்ச்சி ஆனது திருவிழாக்களின் போது புலி வேடமிட்டு அதாவது உடம்பு எங்கும் புலியைப் போன்ற வண்ணம் தீட்டிக்கொண்டு துணியாலான ஒரு வாலை பின்னே கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு கத்தியை வைத்து புலியை போன்று நடனம் ஆடுவார்கள்.

உடுக்கை ஆட்டம் பற்றிய முழு விளக்கம்:

உடுக்கை என்பது இசைக்கருவியை அடித்துப் பாடும் ஒரு கலை ஆகும். இக்கருவியால் பெயர் பெற்ற கலை எனில் இது பாடலை முதன்மை பெறும்.

மேலும் ஒரு கதையின்படி பின்னி பிணைந்து இருக்கக்கூடிய உடுக்கைக்கும் முழுமையான நிகழ்ச்சியில் இக்கலையில் ஒருவர் உடுக்கை அடிக்க ஒரு பெண்ணும் அல்லது பெண் வீடும் இட்ட ஆணோ கதையில் பாடி ஆடியும் வருவார்.

இவர்களின் பின்னணி பாடலுக்காக மூன்று அல்லது நான்கு நபர்கள் இவர்களை சுற்றிய இருப்பார்கள். கோவில் சார்ந்த கலையாக முதலில் அறியப்பட்ட இந்த உடுக்கை ஆட்டம் பின்னர் சமுதாயம் சார்ந்த பொழுது போக்கிற்காகவும் மாறி உள்ளது.

இந்த உடுக்கை அட்டை கதையானது பொதுவாக அண்ணன்மார் சாமி கதை காத்தவராயன் கதை நல்ல தங்காள் கதை மதுரை வீரன் கதை போன்றவை உடுக்கை அடி பாடல்கள் மூலம் சொல்லப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து கலைகளும் தற்போது வரக்கூடிய காலத்தில் அழிந்து வரக்கூடியதாக உள்ளது. இதற்கான காரணத்தைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

• தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை மக்கள் அதிக அளவு காண்பது.

• கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள் நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் இல்லாததால் மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து கலைகளும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.

• ஒருவேளை இந்த கலைகளை எவரேனும் கற்று வைத்திருந்தால் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் வறுமையில் வாடி அவர்களும் இந்த கலையை ஒதுக்கி வருவதற்காக உள்ளது.

• மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஊரக மக்களின் வாழ்வில் தங்களின் வாழ்க்கையோடு கலந்து இருக்கின்றன. இவை அனைத்தும் கற்றோராலும் மற்றொரு ஆளும் விரும்பப்படும் கலையாக உள்ளதால் உழைப்பாளர்களின் உணர்வை இந்த கலைகள் எடுத்து உரைக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை பற்றிய சிறப்பு:

• நாட்டுப்புற கலைகள் மக்களோடு நேரடி தொடர்பு உள்ளதால் இந்த கலைகளை அனைவரும் விரும்புவார்கள்.

• ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் இந்த கலைகள் நடத்துவதற்கான வாய்ப்பே இல்லாமல் போவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

• மக்களுக்கு மகிழ்ச்சி அளித்து அவர்களின் துன்பங்களை போக்குவதாக இந்த கலைகள் உள்ளது.

• மேலும் சமுதாயத்தில் இருக்கக்கூடிய எண்ணற்ற நிகழ்வுகளை வெளிக்கொணரும் சாதனமாகும் இந்த கலைகள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *