தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
தந்தை பெரியார் பற்றிய முழு விளக்கம் - பெரியார் வரலாறு கட்டுரை :
• ஈ.வெ.ரா என்பதன் விரிவாக்கம் “ஈரோடு வெங்கடப்பர் மகன் ராமசாமி” என்பதாகும். இதுவே பிற்காலத்தில் பெரியார் என்று மாறியது.
• பெரியார் முதன் முதலில் பகுத்தறிவாளர் என்ற சங்கத்தை தோற்றுவித்தார்.
• பெரியாரின் தந்தை வெங்கடப்பர் மற்றும் தாயார் பெயர் சின்னத்தாயம்மாள் ஆவார்.
• பெரியாருக்கு இளம் வயதிலிருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பது அவருக்கு மிகவும் பிடித்த செயலாக இருந்தது. அதனால் தம்முடைய இளமை காலத்தில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் தொண்டராக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு பணியாற்றத் தொடங்கினார்.
• நாட்டில் கள்ளு கடை இருப்பதை பெரியார் வெறுத்து ஒதுக்கினார். அதனால் தானே முன் நின்று அனைத்து கடைகளிலும் மறியல் செய்தார். மேலும் கள் இறக்குவதை தடுப்பதற்காக தனக்கு சொந்தமாக இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார்.
• ஜாதிக்கு முதல் முதலில் குரல் கொடுத்தவர் பெரியார் மட்டுமே. குறிப்பாக சொல்லப்போனால் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற மக்களின் மீது இருக்கும் பாகுபாடுகள் அனைத்தையும் அகற்றி “மக்கள் அனைவரும் மனித ஜாதி” என்ற செயல்பாட்டை கொண்டு வந்தார்.
• மேலும் பெரியார் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் குறிப்பாக சொல்லப்போனால் குழந்தைகளை கூட வாங்க போங்க என்று மரியாதையாக அழைக்கக்கூடிய பண்பை உடையவர்.
• பெரியார் சுயமரியாதை மற்றும் மரியாதை ஆகிய இரண்டையும் தமிரு கண்களாக கருதி அனைவருக்கும் அதனை பயிற்றுவித்தும் வந்தார்.
• தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்தார் பெரியார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை கண்டு கொந்தளித்து பெரியார் உடனே கேரள சென்று அங்கு மிகப்பெரிய போராட்டத்தை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டார். இதனால் பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டம் கிடைத்தது.
• ஒருவர் கல்வி அறிவால் மட்டுமே சாதி பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து பெரியார். மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வேற்றுமைகளை நீக்க மற்றும் தீண்டாமை கொடுமைகளை அகற்றுவதற்காக அனைத்து மக்களும் கல்வி பயின்று இருக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வர போராடினார்.
• பெண்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் மற்றும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான வேலைகளை செய்தால் மட்டுமே பெண்களுக்கு உண்டான மரியாதை சமுதாயத்தில் கிடைக்கும் என்றார்.
• பெண்களுக்கு அழகிய உடையோ அல்லது ஆபரண நகைகளோ தேவையில்லை என்றும் அவர்களுக்கு அறிவும் சுயமரியாதையும் தான் மிகவும் முக்கியம் என்றார்.
• அதோடு மட்டுமில்லாத அடுத்தபடியாக பெண்களுக்கு அரசு பணி இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய முக்கியமான இடங்களிலும் பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்றார் பெரியார்.
• நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருவருடைய திறமை அல்லது அறிவு என்பது வளர்ந்து கொண்டே செல்லும் எனவே புதிய விஷயங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
• இதனால் 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் பெரியார்.
பெரியார் எதை எதை எதிர்த்தார்:
தந்தை பெரியார் குழந்தை திருமணம், மணக்கொடை, கள்ளு குடித்தல், தேவதாசி முறை, குலக்கல்வி திட்டம் மற்றும் இந்தி மொழி திணிப்பு ஆகிய விஷயங்களை எதிர்த்து மிகக் கடுமையாக போராடினார்.
பெரியார் தோற்றுவித்தவைகள்:
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு: பெரியார் பெண்களின் மீது அதீத பற்று கொண்டிருந்தமையால் அவர்கள் அனைவருக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் மற்றும் பெண்களுக்கு சொத்துரிமை குடும்ப நலத்திட்டம் கலப்புத் திருமணம் சீர்திருத்த திருமண சட்டம் ஏற்பு ஆகியவை தோற்றுவித்தார் பெரியார்.
பெரியார் தோற்றுவித்த இயக்கம்:
பெரியார் சுயமரியாதை இயக்கம் என்ற இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.
பெரியார் நடத்திய இதழ்கள்:
குடியரசு, விடுதலை, ரிவோல்ட் மற்றும் உண்மை ஆகிய இதழ்களை பெரியார் நடத்தி வந்தார்.
இந்த அறிவு உலகின் திறவுகோல் பகுத்தறிவு பாதைகளுக்கு வழிகாட்டியாய் இருந்தார் பெரியார். மேலும் மனிதநேயத்தின் அழைப்பு மணி ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி சமுதாய சீர்கேடுகளை பல்வேறு வழிகளில் எதிர்த்து வந்தார் பெரியார்.
பெரியாருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள்:
• பகுத்தறிவு பகலவன்
• சுயமரியாதைச் சுடர்
• வைக்கம் வீரர்
• பெண்ணின போர் முரசு
• ஈரோட்டுச் சிங்கம்
• புத்துலக தொலைநோக்காளர்
• தெற்காசியாவில் சாக்ரடிஸ்
இந்த சிறப்பு பெயரை 27-06-1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனோஸ்க்கா நிறுவனமானது தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கி தந்தை பெரியாரை சிறப்பித்துள்ளது.
தந்தை பெரியாரின் கூற்றுகள்:
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு: நாட்டில் இன்றியமையாததாக அனைத்து மக்களையும் உயர்வு தாழ்வு என இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருப்பது இந்த சாதி ஒன்றே ஆகும். எனவே இந்த சாதி உணர்வு அல்லது ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மேலும் இது மற்றவர்களின் உரிமைகளை தட்டி பறிக்கிறது. மனிதர்களுக்கு மனிதர்களையே இழிவு படுத்துவதற்காக இருக்கிறது. எனவே இந்த சாதி கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றார் பெரியார்.
தனி ஒரு மனிதன் சாதி இருந்து விலக வேண்டும் என்றால் அவன் கல்வியில் மிகுந்த அறிவுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெரியார் அறிவியலுக்கு புறம்பான செய்திகளையும், மூடநம்பிக்கையான விஷயங்களையும் பள்ளி படிக்கும் மாணவ மாணவியருக்கு கற்றுத் தரக்கூடாது என்று கூறினார்.
மேலும் பள்ளிக்கூடங்களில் தன்னம்பிக்கை மற்றும் சுய சிந்தனை ஆற்றலை வளர்க்கக்கூடிய கல்வி பாடங்கள் கற்றுத் தர வேண்டும் என்றால் பெரியார்.
மேலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டங்களை அந்தந்த வருடங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்றால் பெரியார். எந்த ஒரு மொழியோ, நூலோ அல்லது இலக்கியமோ எதுவாக இருந்தாலும் ஒரு தனி மனிதனுக்கு மானம் பகுத்தறிவு வளர்ச்சி மற்றும் நற்பண்பு ஆகிய ஆகிய தன்மைகளை பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார் பெரியார்.
திருக்குறள் நூலை அனைத்து மக்களும் படித்து தெரிந்து இருக்க வேண்டிய ஒரு கட்டாய நூல் என்பதை உணர்ந்த பெரியார். திருக்குறளை படிப்பதன் மூலம் ஒரு மனிதர் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய உணர்ச்சிகளை பெறுவார்கள் என்றார்.
ஒருமுறை சேலத்தில் பெரியாருக்கு என்று ஒரு கூட்டம் கூடப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிகமானோர் பெண்களை கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பெரியாரின் இறப்பு:
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு: பெரியார் தம்முடைய வாழ்நாள் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களுக்காக உரையாற்றி சமுதாய தொண்டாற்றி வந்தார். பெரியார் தன்னுடைய 93 வது வயதில் 24-12-1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
பெரியாரின் நடைபயணம் பற்றிய செய்திகள்:
• பெரியார் தம்முடைய வாழ்நாட்களில் சுமார் 8600 நாட்கள் நடைப்பயணங்களாக நடந்து சென்றுள்ளார்.
• மேலும் இந்த 8600 நாட்களில் சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார்.
• பெரியார் தம்முடைய வாழ்நாள் முழுவதும் சுமார் 21 ஆயிரத்து நானூறு மணி நேரம் மக்களுக்காக உரையாற்றியுள்ளார்.
பெரியாருக்கு வழங்கப்படும் சிறப்புகள்:
• 1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அவை சமுதாய சீர்திருத்த செயல்பாட்டிற்காக “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு முதன் முதலில் வழங்கப்பட்டது.
• மேலும் இந்திய அரசு பெரியாரை கௌரவிக்கும் விதமாக 1978 ஆம் ஆண்டு அவரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
பெரியாரின் பெண் விடுதலை அடிப்படைத் தேவைகள்:
பெரியார் பெண்களுக்கு ஏற்படும் இழிவான செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களுக்கு கல்வி சொத்துரிமை மற்றும் பெண் உரிமை மேலும் அரசு பணி ஆகியவை பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக போராடி வந்தார்.
பெரியாரின் பெண்களுக்கு எதிராக அகற்றப்பட வேண்டிய சிந்தனைகள்:
• குழந்தை திருமணம் மணக்கொடை மற்றும் கைமை வாழ்வு ஆகியவை பெண்களின் வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டும்.
• ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஒற்றுமையாக மட்டும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
• ஒழுக்கம் மற்றும் கல்வி என்பது ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் சம அளவு வழங்க வேண்டும் அப்போதுதான் ஆண் பெண் இருவாளரும் சுயமரியாதைடன் இருப்பார்கள்.
• பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பதால் நாட்டில் ஏற்படக்கூடிய ஆற்று நடப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் முடங்கி கிடக்கிறார்கள் எனவே பெண்களுக்கு அணைத்து விதமான சுதந்திரத்துகளையும் வழங்குங்கள்.
• ஒரு பெண் கல்வி பெறுவது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை மட்டுமல்ல சமுதாயத்திற்கு எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது ஆகும். எனவே பெண்கள் கட்டாயம் கல்வி பயில வேண்டும் மற்றும் பெண்கள் கற்றாழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
• ஆண்கள் பெண்கள் அனைவரையும் பாரபட்சம் காட்டாமல் கல்வி பயில வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு உலகப் படிப்பையும் ஆராய்ச்சி படிப்பையும் தாராளமாக கொடுக்க முடியும் என்றார்.
• பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று புதிய உலகை படைக்க வேண்டும். பெண்கள் தம்முடைய குடும்பம் மற்றும் கணவர்களுக்கு உழைத்துக் கொண்டிருக்காமல் சமூகத்திற்கும் தொண்டாடி சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்றார்.
• சமூகத்தில் பரவி கிடைக்கக்கூடிய வரதட்சணை என்ற பெயரில் நடக்கக்கூடிய கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்று எண்ணினார்.
• பெண்களை அடிமையாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாததால் எனவே அவர்களுக்கு சொத்துரிமை வழங்கி பெண் அடிமையை போக்க வேண்டும் என்றார். மேலும் இந்த செயலுக்காக அவர் பல்வேறு கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தி வந்தார்.
• ஒரு பெண் தம்முடைய 12 அல்லது 13 வது வயதில் மணமுடிக்கும் பழக்கம் அந்த காலத்தில் இருந்து வந்துள்ளது. இதனை ஒழுத்து கட்டுவதற்காக அவர் ஆடும் பாடுபட்டு வந்தார். மேலும் அவர் சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனையை விளையாட்டு தான் திருமணம் என்று பெண் திருமணத்தை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.
• ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவர் மறுமுறை மறுமணம் செய்யக்கூடாது என்ற சட்டம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதனை எதிர்க்கும் விதமாக அனைத்து பெண்களும் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை ஏற்ற வழிவகை செய்தார்.
• ஆண்கள் பணியாற்றக்கூடிய அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அரசு பணிகளை பெற வேண்டும் என்றார்.
