சித்த மருத்துவம் – சித்த மருத்துவத்தின் வரலாறு

சித்த மருத்துவம் – சித்த மருத்துவத்தின் வரலாறு

சித்த மருத்துவத்தின் வரலாறு

சித்த மருத்துவத்தின் ஆரம்பம்:

சித்த மருத்துவம் என்பது தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ் மருத்துவ முறையாகும். இதனை பண்டைய காலத்தில் வாழ்ந்த ஞான அருள் பெற்ற சித்தர்கள் இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து கண்டுபிடித்து அந்தந்த நோய்க்கு ஏற்றது போல் மருந்துகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர்.

சித்த மருத்துவம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்று யாராலும் கூற இயலாது. ஏனெனில், இது தொன்று தொட்டு பரவி வரும் பாரம்பரிய மரபு மருத்துவ முறையாகும்.

இந்த சித்த மருத்துவம் உருவாக 18-சித்தர்கள் என்று அழைக்கப்படும் சித்தர்கள் மிகக் கடுமையாக உழைத்து நோய்களுக்கான மருந்தினை கண்டுபிடித்து மக்களை குணப்படுத்தினார்கள். இந்த சித்த மருத்துவ முறை தமிழ் பேசும் நம் இந்திய நாடுகளிலும் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களாலும் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவ பொருட்கள்:

நமக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற செடி, கொடி, வேர், இலை, மரம், புல், பூண்டு, காய், பழம், பிஞ்சு, விதை முதலிய மூலிகை தாவரங்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், ஐயம், பவளம் முதலிய தாது பொருட்களை கொண்டும் பலகறை, நண்டு, சங்கு முதலிய சீவப் பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரி சாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுக்கள், பொடிகள், கசாயங்கள், குளித்தைலங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு நல்ல தண்ணீர், ஊற்று நீர், கிணற்றுநீர், கடல் நீர், ஏரி நீர் முதல் பல நீர் வகைகள் கொண்டு, பால், தேன், சீனி, நெய் முதலிய கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய எண்ணெய் வகைகளை கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய மருத்துவ முறை தான் இந்த சித்த மருத்துவம்.

மருத்துவ முறையைப் பொறுத்தவரையில் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. தெற்கே சித்த மருத்துவ முறைகளும், வடக்கே ஆயுர்வேத மருத்துவ முறைகளும் அதிக அளவில் வளர்ச்சி பெற்றது.

Read Also:- அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்

பாரம்பரிய சித்த மருத்துவம்:

பண்டைய கால முறைப்படி சித்த மருத்துவ முறைகள் சிவனிடம் இருந்து பார்வதிக்கு கொடுக்கப்பட்டதாகும், அதன் பின்பு நந்தி தேவருக்கும், பின்பு சித்தர்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. ஆதிகாலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியாளராக திகழ்ந்து விளங்கினார்கள்.

சித்த மருத்துவம் பாரம்பரிய முறைப்படி முதல் முதலில் 18-சித்தர்களின் மூத்தவர் என போற்றப்படும் அகத்தியர் மூலம் இந்த உலகிற்கு அறிமுகமானது. இன்றும் கூட பல புத்தகங்களில் அகத்தியரின் மருத்துவ குறிப்பு காணப்படுகிறது. அது தான் இன்றைய சித்த மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம் வேறுபாடு:

சித்த மருத்துவ கோட்பாடுகள் மற்றும் முறைகள் ஆயுர்வேத முறைகளை ஒத்து காணப்படும். வேதியல் கூற்றுப் படி நம் உடல் கூறுகள் அனைத்தும் இயற்கையை சார்ந்து இருக்கும். நம் உடலானது நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு என ஐந்து அடிப்படை கூற்றுகளால் ஆனது.

அதேபோன்று நம் உடல் எடுத்துக் கொள்ளும் உணவும், மருந்தும் மேற்கூறிய ஐந்து அடிப்படை இயற்கை கூற்றுகளால் உருவாக்கப்பட்டது. மனிதனுக்கு அடிப்படை ஆதாரம் உணவு மட்டுமே ஆகும். இதுவே உடலில் உள்ள திசுக்களை வளர்த்து வலிமைப்படுத்தும்.

அதுபோன்று, தேவையற்ற கழிவு பொருட்கள் உருமாறி நமக்கு உடலின் சமநிலையை குறைக்க தவறும் பட்சத்தில் உடலில் நோய்கள் உருவாகிறது. இதனால், நம் உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப மருத்துவமும், தியானமும் நமக்கு உதவுகிறது.

சித்த மருத்துவத்தில் நோய் கண்டறிதல்:

சித்த மருத்துவத்தில் முதலில் நோய்க்கான காரணங்கள் கண்டறியப்படுகிறது. நாடி, நரம்பு, கண்கள், வாய், தோளின் நிறம், சிறுநீர், நாக்கு ஜீரண முறைகளின் செயல்பாடுகள் முதலில் ஆராயப்படுகிறது.

சித்த மருத்துவம் பயன்கள்:

• ஆபத்தான நிலையில் நமக்கு ஏற்படும் அவசரகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியாது.

• இதைத் தவிர மற்ற அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த மருத்துவம் முறையின் மூலம் குணப்படுத்த முடியும்.

• தோல் வியாதிகள், கல்லீரல் வீக்கம், சொரியாசிஸ், சிறுநீரகத் தொல்லை, வயிறு பிரச்சனைகள், ஒவ்வாமை, சாதாரண காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் சித்த மருத்துவ முறையின் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.

• சித்த மருத்துவம் நோயை குணப்படுத்த மட்டும் செயல்படாமல் ஒரு நோயாளியின் சுற்றுப்புறம், பாலினம், வகுப்பு, வயது, பழக்கவழக்கங்கள், மனநிலை, தங்கும் இடம், உணவு மற்றும் கட்டுப்பாடு, தோற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவற்றிற்கு ஏற்றது போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோயின் தன்மை குறைந்து நோயாளியின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்படுகிறது.

• சித்த மருத்துவ முறையில் நாம் பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து பெறப்பட்டவை. இதனால், நம் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

சித்த மருத்துவத்தில் வேதியலின் பங்கு:

சித்த மருத்துவ முறையில் வேதியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. செடிகள், உலோகங்கள் மற்றும் கனிமகள் ஆகியவற்றின் தன்மைகளை முழுவதும் இந்த துறையில் ஆராயப்படுகிறது.

இது போன்ற வேதியல் மாற்றங்களையும் சித்தர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் இது போன்ற உலோகங்களை காட்சி வடித்தல், ஆவி ஆக்குதல், கலவை செய்தல், உருக்கி கலத்தல், புளிக்க வைத்தல், பொங்கவைத்தல் முதலான வேதியியல் முறைகளை அன்றைய காலகட்டங்களிலேயே பயன்படுத்தி உள்ளனர்.

தங்கம் பிரித்தெடுத்தல், சுத்தப்படுத்துதல், நீர்மநிலையாக்குதல் ஆகிய முறைகளை சித்தர்கள் பயன்படுத்தினார்கள். தங்கத்தையும், வெள்ளியையும் சுத்தமாக்கும் முறைகளை அரபியர்களுக்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே சித்தர்கள் இந்த நுணுக்கங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

மருந்து தயாரிப்பில் பல யுத்திகள் செயல்படுத்தப்பட்டது. உதாரணமாக கொதித்தல், கரைத்தல், வடிகட்டுதல், படிய செய்தல், வேதிப்பொருட்களை சேர்த்தல் ஒரு சில இரகசிய முறைகளும் இதில் அடங்கும். நெருப்பில் எளிதாக வாயு நிலைய அடையக்கூடிய பாதரசம், கந்தகம், ஆர்செனிக், வெர் மில்லியன் போன்ற பொருட்களை வினை புரியாமல் செய்வது இன்றும் நம்மை வியப்படைய செய்கிறது.

சித்த மருத்துவத்திற்கு தேசிய கல்வி நிறுவனம்:

சித்த மருத்துவத்திற்கு சென்னையில் ஆயுஸ் துறையின் கீழ், ஆரோக்கிய மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆதரவுடன், ஒரு தேசிய கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சுமார் 14.78 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் மாணவர்களுக்கு சித்த மருத்துவமனையில் முதுகலை பட்டம் படிப்பிற்கு ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. இது இந்திய அரசாலும், தமிழக அரசாலும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 46-மாணவர்கள் இந்த கல்வி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம், சிறப்பு மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய் நாடல் மற்றும் நஞ்சு & மருத்துவ நீதி நூல் முதலிய பாடங்களை அடிப்படையாகக் கொண்டு முதுகலை பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனம் சென்னையில் உள்ள MGR மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம் குறிப்புகள்:

சித்த மருத்துவத்தின் தந்தை யார்?

சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் “அகத்தியர்” ஆவார். இவர் 18-சித்தர்களின் மூத்த சித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மருத்துவம் எது?

தமிழ் மருத்துவம் என்று அழைக்கப்படுவது “சித்த மருத்துவம்” ஆகும்.

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது நமக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற செடி, கொடி, வேர், இலை, மரம், புல், பூண்டு, காய், பழம், பிஞ்சு, விதை முதலிய மூலிகை தாவரங்களைக் கொண்டு அந்தந்த நோய் ஏற்றது போல் மருந்து கண்டுபிடித்து அந்த நோயை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ முறை ஆகும்.

Read Also:- தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

Leave a Comment