கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு || Kalaignar M.Karunanidhi History in Tamil

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு || Kalaignar M.Karunanidhi History in Tamil

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு:

இந்திய அரசியலில் ஏராளமானவர் சாதனை படைத்துள்ளனர் அதிலும் குறிப்பாக தமிழக மாநில அரசியலில் எண்ணற்ற தலைவர்கள் பல சரித்திரங்களை உருவாக்கி உள்ளனர். அந்த வழியில் வந்த ஒரு மூத்த அரசியல்வாதி தான் “முத்துவேல் கருணாநிதி” அவர்கள், அவரைப் பற்றிய ஒரு விரிவான பதிவை இத்தோப்பில் நாம் காணலாம்.

வாழ்க்கை வரலாறு சுருக்கம் || கருணாநிதி தந்தை பெயர்

பெயர் – முத்துவேல் கருணாநிதி

இயற்பெயர் – தட்சிணாமூர்த்தி

பிறப்பு – 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி.

பெற்றோர்கள் – முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார்.

பிறந்த இடம் – திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமம்.

மனைவிகள் – பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள்

பிள்ளைகள் – மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மற்றும் கனிமொழி.

இறப்பு – 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக தன்னுடைய 94-ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

கருணாநிதி பிறப்பு || கலைஞர் கருணாநிதி வரலாறு கட்டுரை || கருணாநிதி பூர்வீகம்

முத்துவேல் கருணாநிதி அவர்கள் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற திருக்குவளை என்ற குக்கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் என்ற தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.

கருணாநிதி அவர்களுக்கு, பெற்றோர்கள் வைத்த பெயர் ‘தட்சிணாமூர்த்தி’ ஆகும். ஆனால், பின்பு நாளடைவில் கருணாநிதி அவர்கள் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு, மு.கருணாநிதி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

ஆரம்ப கால கல்வி வாழ்க்கை:

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு: மு.கருணாநிதி அவர்கள் தனது ஆரம்பகால பள்ளி படிப்பை திருக்குவளையில் உள்ள தொடக்கப் பள்ளியில் தான் தன்னுடைய ஆரம்ப கால பள்ளி படிப்பை படித்தார். அதன் பிறகு, உயர்நிலை பள்ளி படிப்பிற்காக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாட்டாண்மை கழக உயர்நிலைப்பள்ளியில் படிப்பினை தொடர்ந்தார்.

ஆனால், கருணாநிதியால் இவரது உயர்நிலை பள்ளி படிப்பை முழுமையாக படித்து முடிக்க முடியவில்லை. என்னதான் கருணாநிதி பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றாலும், தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் நாடகம், கவிதை, இலக்கியம், வரலாறு இவற்றையெல்லாம் எழுதும் மற்றும் படிக்கும் திறமை மிக்க வல்லவராக இருந்தார்.

திருமண வாழ்க்கை:

மு.கருணாநிதி அவர்களின் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் ஆவார். 1948-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அதன் பிறகு, கருணாநிதி அவர்கள் தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமின்றி, ராசாத்தி அம்மாள் என்ற பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். கருணாநிதிக்கு மொத்தம் 3-மனைவிகள் ஆகும்.

பிள்ளைகள்:

1. பத்மாவதி அம்மாள் – மு.க.முத்து

2. தயாளு அம்மாள் – மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு

3. ராசாத்தி அம்மாள் – கனிமொழி

அரசியல் வாழ்க்கை:

கலைஞர் கருணாநிதி அவர்கள், ஆரம்ப காலகட்டங்களில் கதைகள், நாடகங்கள் கவிதைகள், இதழ்கள் மற்றும் சினிமாவில் வசனங்கள் எழுதும் பணியை செய்து வந்தார். அப்போதுதான் சமூக நலன்கள் குறித்த விழிப்புணர்வை பற்றி அழகர்சாமி பேசும் பேச்சைக் கேட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கருணாநிதி மனதில் ஏற்பட்டது.

முரசொலி நாளிதழ் || manavar nalanil kalaignar katturai in tamil

இதனால், எப்படியாவது அரசியலில் நுழைய வேண்டும் என்று எண்ணிய கருணாநிதி, மாணவர்களுக்கு என்று ஒரு தனியான மன்றம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு, “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்று பெயரிட்டார்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி “முரசொலி” என்ற பத்திரிகையை எழுதி அதனை வெளியிட்டார். முரசொலி பத்திரிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலிருந்து, கருணாநிதி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கினார்.

முரசொலி மட்டுமில்லாமல், “தமிழரசு, குடியரசு மற்றும் முத்தாரம்” ஆகிய இதழ்களையும் எழுதி வெளியிட்டார்.

கள்ளக்குடி போராட்டம்:

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு: இந்த நிலையில் தான் கள்ளக்குடியில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கருணாநிதி அவர்கள், கலந்து கொண்டு தன்னை ஒரு அரசியல் போராளியாக மாற்றிக் கொண்டார். இந்தப் போராட்டத்தின் மூலம் தன்னை ஒரு முழுமையான அரசியல்வாதியாக உருவாக்கிக் கொண்டார் கருணாநிதி.

1957-ஆம் ஆண்டு முதல் முறையாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

1961-ஆம் ஆண்டு தி.மு.க கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.பிறகு, காலப்போக்கில் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

1962-ஆம் ஆண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய கடின முயற்சியால் சிறிது சிறிதாக ஒரு செல்வாக்கு நிலைக்கு வந்த கருணாநிதி 1967-ஆம் ஆண்டு தி.மு.க கட்சி தமிழ்நாட்டை ஆட்சி செய்த போது ஒரு மதிப்புமிக்க செல்வந்தராக இருந்தார் கருணாநிதி.

அந்த நிலையில் தான் 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால், முதலமைச்சர் பதவிக்காக கட்சியில் இருந்த மூத்த உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அண்ணாதுரை பணியாற்றிய முதலமைச்சர் பதவி மு.கருணாநிதியை தேடி வந்தது. 87-வயது நிறைந்த கருணாநிதி அன்றிலிருந்து தி.மு.க கட்சியின் மதிப்பு மிக்க ஒரு ஆணிவேராக தமிழக அரசியலில் ஒரு முக்கிய பணியாற்றினார்.

தமிழக முதல்வராக கருணாநிதி:

1. 1967-ஆம் ஆண்டு அண்ணாதுரை மறைவிற்குப் பிறகு முதல் முதலாக தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்றார்.

2. 1971-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக தனது பணியினை தொடங்கினார்.

3. 1989-ஆம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவிற்குப் பிறகு மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. 1996-ஆம் ஆண்டு நான்காவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

5. 2006-ஆண்டு தமிழக மக்களால் ஐந்தாவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுபோன்று, திரு. மு.கருணாநிதி 5-முறை நம் தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

இறப்பு:

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு: நம் தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தன்னுடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஏராளமான வசதிகளை செய்து கொடுத்த திரு.மு.கருணாநிதி அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய 94-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

கருணாநிதி பெற்ற விருதுகள் || kalaignar katturai in tamil

1. கருணாநிதி அவர்களின் “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு தமிழ் பல்கலைக்கழகம் “ராஜ ராஜன் விருதை” வழங்கி பெருமைப்படுத்தியது.

2. அண்ணாமலை பல்கலைக்கழகம் கருணாநிதியை கௌரவித்து “டாக்டர் பட்டம்” வழங்கியது.

3. தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் கருணாநிதிக்கு “டாக்டர் பட்டம்” வழங்கி கௌரவப்படுத்தினர்.

4. தமிழ்நாடு முஸ்லிம் மக்கள் கட்சி சார்பாக கருணாநிதி அவர்களுக்கு, “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

5. “தூக்கு மேடை நாடகத்தின்“போது கருணாநிதி அவர்களுக்கு, எம்.ஆர்.ராதா அவர்கள் “கலைஞர்” என்ற பட்டத்தை அளித்தார்.

6. 1970-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் மு.கருணாநிதி அவர்கள் கௌரவ உயர் பதவியாளராக இருந்தார்.

7. 2009-ஆம் ஆண்டு “உலகக் கலை படைப்பாளி” என்ற விருது இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

திரைப்படத் துறையில் பங்களிப்பு மற்றும் படைப்புகள்:

திரைப்படம் – 75 திரைப்படங்களுக்கும் மேல் கதை, திரைக்கதை, வசனம், போன்றவை எழுதி இருக்கிறார்.

கவிதைகள் – 210 கவிதைகளை படைத்துள்ளார்.

நாடகங்கள் – 20

சிறுகதைகள் – 15

நாவல்கள் – 15

மடல்கள் – “நண்பனுக்கு” “உடன்பிறப்பே” என்கிற தலைப்புகளில் 7000-க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியுள்ளார்.

• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின், படைப்புகள் 178-நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

• மு.கருணாநிதி அவர்களின் முதல் திரைப்படம் “ராஜகுமாரி” ஆகும். இதில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.

• மு.கருணாநிதிக்கு புகழையும், பெருமையும் தேடித்தந்த மற்றொரு திரைப்படம்தான் “பராசக்தி” இதில் சிவாஜி கணேசன் அறிமுக நாயகனாக நடித்திருப்பார்.

கருணாநிதியை பற்றிய சில வரிகள் || கலைஞர் கருணாநிதி சாதனைகள் கட்டுரை

1924 – ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் குக்கிராமத்தில் முத்துவேலர் மற்றும் அஞ்சுக அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.

1942 – அவருடைய கடின உழைப்பில் “முரசொலி” என்ற நாளிதழ் வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

1950 – கருணாநிதி கதை, வசனம் எழுதிய “மந்திர குமாரி” என்னும் திரைப்படம் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் வெளியானது.

1952 – தமிழகத்தில் கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்த ஒரு மதிப்புமிக்க திரைப்படம் தான் “பராசக்தி” இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அறிமுக நாயகனாக நடித்தார்.

1957-தமிழக மாநில சட்டமன்ற உறுப்பினராக திருச்சிராப்பள்ளியில் குளித்தலையில் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1961 – தி.மு.க கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

1962 – தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967 – பொதுநல அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1969 – முதல் முதலில் தமிழகம் முதலமைச்சராக பதவியேற்று தனது பணியினை தொடங்கினார்.

1970 – உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு முக்கிய பிரதிநிதியாக இருந்தார்.

1971 – இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1987 – மலேசியாவில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டை நடத்தி வைத்தார்.

• 1989 – 1991 இந்த காலகட்டங்களில் அப்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக தன்னுடைய ஆட்சியை நிறுவினார்.

1996 – நான்காவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக தன்னுடைய பதவியை ஏற்றார்.

2006 – தமிழகத்தின் மாநில தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக சாதனை படைத்தார்.

2010 – “உலக தமிழ் செம்மொழி” மாநாட்டின் அதிகாரப்பூர்வமான பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.

2011 – தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவி அ.தி.மு.கவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

2018 – ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக தன்னுடைய 94-ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

கலைஞர் எப்போது இறந்தார்?

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு: நம் தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தன்னுடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஏராளமான வசதிகளை செய்து கொடுத்த திரு.மு.கருணாநிதி அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய 94-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி பிறந்த ஊர் எது?

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், இந்திய நாட்டில் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவாரூர் என்ற மாவட்டத்தில் திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

கலைஞர் பிறந்த தேதி என்ன?

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அன்று முத்துவேலர் மற்றும் அஞ்சு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.

Read also:- ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

Leave a Comment