கணக்கன்பட்டி சித்தர் வரலாறு | Kanakkanpatti Siddhar History In Tamil

Post views : 20,557 views

கணக்கன்பட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு:

கணக்கன்பட்டி சித்தர்கணக்கன்பட்டி சித்தர் வரலாறு | Kanakkanpatti Siddhar History In Tamil – தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலைக்கு அருகில் உள்ள ஊர் தான் கணக்கன்பட்டி.

இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர் அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றி வந்தார். பச்சை நிறம் கொண்ட முழு கை சட்டையும் மற்றும் அழுக்கான வேட்டியை மட்டுமே இவர் எந்நேரமும் உடுத்தி காணப்படுவார்.

மேலும் இவர் ஒரு பெரிய மூட்டையை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் அதனை தூக்கிக் கொண்டே திரிவார். அந்த மூட்டையை எவரேனும் தொழ வந்தால் உறக்கமாக கத்தி அவர்களை விரட்டி விடுவார்.

கடவுளின் அனுக்கிரகத்தால் பல்வேறு வகையான அற்புதங்களை நிகழ்த்தி பின்னர் ஜீவ சமாதி அடைந்தார்.

Biography Of Kanakkanpatti Siddhar

கணக்கன்பட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு

கணக்கன்பட்டி சித்தரின் முழு பெயர் – பழனிச்சாமி

கணக்கன்பட்டி சித்தர் பிறந்த ஊர் – திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி

கணக்கன்பட்டி சித்தருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் – மூட்டை சுவாமிகள்

கணக்கன்பட்டி சித்தரின் தோற்றம் :

கணக்கன்பட்டி சித்தர் வரலாறு

• எந்நேரமும் பரட்டை தலை மேல் ஒரு துண்டை வைத்து முண்டாசு கட்டியிருப்பார்.

• பச்சை நிற கலர் கொண்ட முழுக்கை சட்டையும் மற்றும் ஒரு கிழிந்த கந்தலான வேட்டியையும் கட்டியிருப்பார்.

• பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆங்காங்கே சுற்றுத்
திரிவார்.

• பழனியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்னும் ஊரில் தெருக்களில் உள்ள வீடுகளிலும் அவ்வூரில் உள்ள அவ்வப்போது படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்.

• இவர் எங்கு சென்றாலும் ஒரு அழுக்கு மூட்டையை கையில் எடுத்துக் கொண்டு சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

• ஆரம்பத்தில் இவரைக் கண்ட அவர் ஊர் மக்கள் இவர் ஒரு பைத்தியம் என்று கல்லால் அடித்தும் விரட்டப்பட்டிருக்கின்றார்.

• இவ்வாறு இவர் அழுக்கு மூட்டையை கையில் வைத்து கொண்டு சுற்றி தருவதால் பழனி சுற்றுவட்டார மக்கள் இவரை மூட்டை சுவாமிகள் என்று அழைத்து வந்துள்ளனர்.

• பழனியில் மொத்தம் இரண்டு பேரும் மலைகள் உள்ளன அவற்றில் ஒன்று பழனி முருகன் கோவில் மற்றொன்று இடும்பன் கோவில் ஆகும்.

• பல்வேறு நாட்கள் அந்த இரும்பன் கோவில் தங்கி காலத்தை கழித்து வந்துள்ளார்.

கணக்கன்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்:

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகளிடம் யாராவது வந்து பணமோ பொருளோ அல்லது நல்ல உடையோ வாங்கி கொடுத்தால் அவர்களை கம்பெடுத்து அடித்து விரட்ட தொடங்குவார்.மேலும் யாரேனும் பணம் கொடுத்தாலும் அந்த பணத்தினையும் வாங்க மாட்டார்.

Read Also : தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள்

குழந்தைக்கு வாய் பேசும் சக்தியை வழங்கிய கணக்கன்பட்டி சித்தர்:

கணக்கன்பட்டி சித்தர் வரலாறு

வெளிநாட்டில் இருந்து வந்தது தம்பதி ஒருவர் தன்னுடைய மகனுக்கு வாய் பேச முடியாமல் அவதி உற்ற நிலையில் பழனி மலை முருகனை தரிசிக்க காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கணக்கன்பட்டி வழியே வந்து கொண்டிருந்த பொழுது, இந்த கணக்கன்பட்டி சித்தர் அவர்களை காரில் இருந்து வழி மறுத்து இறங்கச் சொன்னார். இவர்களும் செய்வதறியாது தெரிவித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கினார்.

உடனே இந்த கணக்கன்பட்டி மூட்டை சித்தர் காரில் இருந்து இறங்கிய பெண்மணி இடம் எதிரில் இருக்கும் கடையில் போய் ஒரு பிரியாணி வாங்கிக் கொண்டு வா என்று கூறியிருக்கிறார். அவரும் வேறு வழி இல்லாமல், ரோட்டிற்கு எதிரே உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்பெண் மற்றும் அவர்கள் குடும்பம் முழுவதும் ஒரு சுத்த சைவ குடும்பமாகும். பிரியாணியின் சுவையைப் பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தர் அந்த பெண்மணி.

பிரியாணி வாங்கி வந்தவுடன் சித்தரானவர் அதனை உன்னுடைய மகனுக்கு கொடு என்றார். தடுமாற்றத்துடன் அந்தப் பெண்ணோ தான் வாங்கி வந்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து பார்த்தார். என்ன ஒரு ஆச்சரியம் பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டலத்தில் சாம்பார் சாதம் இருந்தது.

இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தார் அவரை காலில் விழுந்து வணங்கி விட்டு பழனியை நோக்கி சென்றனர்.

வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதே எதிரில் ஒரு வாகனம் வேகமாக இவர்களை நோக்கி வந்திருக்கிறது அப்போது அதனை கண்ட அந்த சிறுவன் அம்மா வண்டி வருகிறது என்று கற்றுத் தொடங்கினான்.

இதுவரை வாய் பேசாதிருந்த தன்னுடைய மகன் அந்த சித்திரை கண்டதும் பாய் பேசியதை கண்டு ஆனந்தம் அடைந்து அவரை மறுபடியும் வந்து வணங்கி விட்டு சென்றனர்.

இவ்வாறாக கணக்கன்பட்டி சித்தர் வரலாறு பல்வேறு சுவாரசியமான செய்திகள் இந்த சித்தரை கண்ட பின்பு நடந்துள்ளதாக எண்ணற்ற மக்கள் கூறுகின்றனர்.

கணக்கம்பட்டி சித்தருக்கு நடத்தும் பூஜைகள்:

கணக்கன்பட்டி சித்தர்
கணக்கன்பட்டி சித்தர்

தற்போது கணக்கம்பட்டி சித்தரின் சக்தியை அறிந்த பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெளி நாட்டினர் தினமும் அவரை பார்க்க படையெடுத்து செல்கின்றனர்.

இதனால் எந்நேரமும் கூட்டமாக காணப்படும் நிலையில் தினமும் பூஜைகள் ஆனது செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை பௌர்ணமி மற்றும் புனர்பூஜை போன்ற நாட்களில் அபிஷேகம் ஆராதனை என்று அவருடைய தொண்டர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

கணக்கம்பட்டி சித்தர் கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவிலின் நடை திறந்திருக்கும்.

மேலும் காலை ஏழு மணிக்கு சிறப்பு மண்டல பூஜை இங்கு நடைபெறுகிறது.

கணக்கன்பட்டி சித்தர் மூட்டை சுவாமிகள் என்று அழைக்கப்பட காரணம்:

இவர் சுமார் 20 ஆண்டுகளாக பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கந்தலான உடையுடன் ஒரு மிகப்பெரிய மூட்டையை எந்நேரமும் கையில் வைத்துக் கொண்டு சுற்றி தெரிவார்.

மேலும் ஒரு முழுக்கை சட்டையை மடித்து விட்ட வாரும் தலையில் ஒரு முண்டாசுத் துணையையும் கட்டியிருப்பார். பெரும்பாலும் இவர் தன்னுடைய வேஷ்டியை எப்பொழுதும் மடித்து கட்டிய காணப்படுவார். மேலும் இவர் உடுத்தக்கூடிய துணிகள் அனைத்தும் கந்தலானதாகவே காணப்படுகின்றது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மிகப்பெரிய மூட்டையை எங்கு சென்றாலும் தன்னுடன் தூக்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். மேலும் அதில் என்ன உள்ளது என்று யாரேனும் பார்க்க வந்தால் அவர்களை அடித்து துரத்துவதையும் வேலையாய் வைத்திருக்கிறார்.

இவ்வாறு இவர் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இவரை மூட்டை சுவாமிகள் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

Read Also : மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *