ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய முழு தகவல்கள்

Table of Contents

ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய முழு தகவல்கள்

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் என்றால் என்ன:

Aimperum Kappiyam In Tamil – ஐம்பெரும் காப்பியங்கள்: பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை பொருட்களையும், ஒருசேர அமைத்து காணப்படுவது ஐம்பெரும் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றது.

சங்க காலத்தில் எழுதப்பட்ட ஐந்து பெரும் நூல்களை ஒன்றாக இணைத்து கூறப்படுவது ஐம்பெரும் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்மொழி இனிய மொழி. இலக்கிய வளம் மிக்க மொழி. பண்டைக் காலத்தில் குறைந்த அடிகளையுடைய பல தனிப்பாடல்கள் புலவர்களால் பாடப்பெற்றன. அவை உணர்ச்சிகளை வெளிப்படுத்தின; சுவை மிக்க நிகழ்ச்சிகளை வருணித்தன; ஒருவரது வாழ்வின் அரிய சாதனையை வெளிப்படுத்தும் பகுதிகளைக் கூறின. அப் பாடல்களைத் தொகுத்துத் தொகை நூல்களாகப் பிற்காலப் புலவர் அமைத்தனர். அவை ‘எட்டுத் தொகை நூல்களாயின.

நூற்றுக்கும் மேற்பட்ட அடிகளையுடைய வேறு சில பாடல்களைப்பாட்டு என்று கூறித் தொகுத்தனர். அவை பத்துப் பாட்டு நூல்களாயின. அவை எல்லாம் தமிழிலுள்ள பழமையான இலக்கியங்கள்.

இலக்கிய வரலாற்றில் அடுத்ததாக ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் உருவாயின. அவை காப்பியங்கள் எனப்பட்டன.

தமிழில் முதன்முதலாகச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின. அதன் பின்னர்த் தோன்றிய காப்பியங்களையும் இணைத்து அவற்றின் பெருமை நோக்கி ‘ஐம்பெருங் காப்பியங்கள்’ என்றும், ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ என்றும் புலவர் பிரித்து அழைத்தனர்.

சிந்தாமணியைத் திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் பாடியுள்ளார். காப்பியத் தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல்,வீரம் பற்றியும் அவன் வீடுபேறு அடைந்தமை பற்றியும் இந்நூல் கூறுகின்றது. இதில் ஆசிரியருடைய கற்பனைத் திறனும் வருணனைத் திறனும், படிப்பவர் உள்ளத்தைக் கவரும்வண்ணம் அமைந்துள்ளன.

சோழ நாட்டுப் பெருமையைப் புகார்க் காண்டத்திலும், பாண்டிய நாட்டுப் பெருமையை ண்டத் மதுரைக் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப்படுத்தி யுள்ளார். தம் கற்பனை வளத்தாலும், கவிதை வன்மையாலும் இந் நூலைச் சிந்தையை அள்ளும் செந்தமிழ்க் காப்பியமாக அமைத்துள்ளார்.

Aimperum Kappiyam In Tamil

சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தைத் தொடர்ந்து எழுந்ததொரு காப்பியம் மணிமேகலை. மாதவியுடன் கோவலன் வாழ்ந்த காலத்தில், அவர்கட்குப் பிறந்தவளே மணிமேகலை. இவள் துறவு பூண்டு, புத்த சமயத்தைச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையினை விரிவாகக் கூறுவதே இந் நூல். இதனைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியுள்ளார்.

சமண மதச் சார்புடைய நூல் வளையாபதி. பௌத்த மதச் சார்புடைய நூல் குண்டலகேசி. இவ்விரு நூல்களும் தற்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. மேற்கோள்களாகக் காட்டப் பெற்றுள்ள ஒரு சில செய்யுள்களே கிடைத்துள்ளன.

ஐஞ்சிறு காப்பியங்களுள் சூளாமணியைத் தோலாமொழித் தேவர் இயற்றினார். இது கவிதை நயத்தில் சிந்தாமணியைப் போன்றதொரு நூலாகும். நீலகேசி என்ற நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. இஃதொரு சமண மத நூலாகும். உதயணன் வரலாற்றைக் கூறும் நூலே உதயண குமார காவியமாகும். ‘உயிர்க் கொலை தீது’ என்பதை வலியுறுத்த எழுந்த நூலே யசோதர காவியம். நாககுமார காவியம் என்றொரு நூல் பெயரளவில் குறிக்கப்படுகிறதே தவிர, இதனைப் பற்றி வேறொரு குறிப்பும் தெரியவில்லை.

இலக்கியங்களைக் காலக் கண்ணாடி என்பர். தமிழ் இலக்கிய வரலாற்றில், காலந்தொறும் சிறந்த இலக்கியங்கள் தோன்றி, நம் தாய்மொழியை வளமாக்கின. பிற்காலத்தில் தோன்றியவற்றுள் இராமாயணம், பெரிய புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், சீறாப் புராணம் என்பன குறிப்பிடத்தக்க காப்பியங்களாகும்.

தமிழ் அல்லது ஐம்பெரும் காப்பியங்கள் பெயர்கள்:

 • சிலப்பதிகாரம்
 • மணிமேகலை
 • சீவக சிந்தாமணி
 • வளையாபதி
 • குண்டலகேசி
 • சிலப்பதிகாரம் என்றால் என்ன:

Aimperum Kappiyam In Tamil

கண்ணகி என்ற பெண்ணின் சிலம்பினால் உருவான வரலாற்றை கூறுவதால் இது சிலப்பதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. சிலம்பு என்றால் பெண்கள் காலில் அணியும் ஆபரணம் ஆகும்.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் பெயர் இளங்கோவடிகள்

இளங்கோவடிகளின் இயற்பெயர் குடக்கோ சேரல்

இளங்கோவடிகள் எந்த நாட்டை சேர்ந்தவர் சேர நாடு

இளங்கோவடிகள் வாழ்ந்த நூற்றாண்டு கிபி இரண்டாம் நூற்றாண்டு

இளங்கோவடிகள் எந்த சமயத்தை சேர்ந்தவர் சமண சமயம்

இளங்கோவடிகளின் பெற்றோர்கள் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான் மற்றும் நற்சோனை

இளங்கோவடிகளின் தாயான நற்சோனை இவர் சோழ நாட்டு இளவரசி

நற்சோனையின் தமையன் பெயர் சேரன் செங்குட்டுவன்

சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு

சிலப்பதிகாரம் எந்த மரபை சார்ந்தது சேர மன்னர் மரபைச் சேர்ந்தது

சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்

இரட்டைக் காப்பியங்கள் எது சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

சோழ மன்னன் எப்படி இருப்பார் தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்து காணப்படுவார்

சிலப்பதிகாரத்தை பற்றிய முழு தகவல்கள்:

இன்னுலை கிபி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் என்ற கவிஞர் இயற்றினார். மேலும், இதுவே தமிழில் முதல் காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள்:

 1. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.

விளக்கம்: அரசியலில் பிழை செய்த மன்னனை பற்றி குறிக்கிறது.

 1. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவார்.

விளக்கம்: பாட்டுடைத் தலைவியான கண்ணகியை பற்றி குறைக்கிறது.

 1. ஊழ்வினை ஊர்ந்து வந்து ஊட்டும்

விளக்கம்: பாட்டுடைத் தலைவன் ஆனா கோவலனை பற்றி குறிப்பிடுகிறது.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள்:

 • மதுரையில் கணவனை இழந்த கண்ணகி மதுரையிலிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக சுருளி மலை சென்று வேங்கை கானல் என்கிற இடத்தை அடைந்தாள்.
 • சிலப்பதிகாரம் நூலில் எட்டு வகையான தானியங்களை பற்றி இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
 • மேலும் சிலப்பதிகாரம் மூவேந்தர் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியது

சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்:

 • பழங்கால தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கருவுலமாக சிலப்பதிகாரம்.
 • அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் அனைவரும் அரச குடும்பங்களைச் சார்ந்த தலைவர் மற்றும் தலைவிகளை புகழ்ந்து பாடுவதில் வல்லவராய் இருந்தனர். ஆனால் சிலப்பதிகாரம் மட்டுமே அரசு குடி அல்லாத ஒரு பெண்ணை காப்பியத்தின் தலைவியாக வைத்து பாடுவதால் இது குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுகிறது.

Aimperum Kappiyam In Tamil

 • தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்களையும் அவர்கள் ஆண்ட காண்டங்களான புகார் மதுரை வஞ்சி முதல் என காரணங்களையும் பற்றி கூறுவதால் இது மூவேந்தர் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.
 • ஒரு பெண்ணானவள் ஒரு நாட்டின் அரசனையை எதிர்த்து வழக்காடியதால் இது புரட்சி காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒற்றுமை காப்பியம், புதுமை காப்பியம், வரலாற்று காப்பியம் எனும் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்ட இசைக் கருவிகளின் பெயர்கள்:

 • குழல்
 • யாழ்
 • மத்தளம்
 • முடிவு
 • இடக்கை வாத்தியம்

சிலப்பதிகாரத்தின் நூல் அமைப்பு:

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை 3

சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்களின் பெயர்கள் புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்

சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை 30

புகார் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை 10

மதுரை காண்டத்தில் உள்ள காதைகள் எண்ணிக்கை 13

வஞ்சி காண்டத்தில் உள்ள காதைகள் எண்ணிக்கை 7

சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த அடிகள் 5001

சிலப்பதிகாரத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரங்களின் பெயர்கள்:

 1. இந்திரனுடைய மகன் சைந்தன்
 2. கணிகை குலப்பெண்ணான மாதவி
 3. கோவலனின் தந்தையான மாசாத்துவான் மற்றும் கண்ணகியின் தந்தையான மாநாயக்கன்
 4. கோவலன் தோழன் ஆனா மாடலன் மற்றும் கண்ணகியின் தோழியான தேவந்தி
 5. கோவலன் மற்றும் கண்ணகிக்கு கவுந்தியடிகள் மதுரையில் அடைக்கலம் கொடுத்த மாதரி.

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் மற்றும் விளக்கம்:

 1. முத்தமிழ் காப்பியம்

தமிழில் முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் அழகிய நடையில் எடுத்துரைத்ததால் இது முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது.

 1. உறையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள்

சிலப்பதிகாரத்தில் பாடல்களின் இடையே உரைநடையும் அமைந்திருப்பதால் இது உரையிடையிட்ட பாட்டுடைச் செயல் என அழைக்கப்படுகிறது.

 1. இயல், இசை, நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்

இசை, நாடக வெண்பாக்கள் நிறைந்து வருவதால் இந்த பெயர் சிலபதியாரத்திற்கு வந்துள்ளது.

 1. குடிமக்கள் காப்பியம்

சிலப்பதிகாரத்தின் தலைவனான கோவலன் மற்றும் சிலபதிகாரத்தின் தலைவியான கண்ணகி ஆகிய இருவரும், சாதாரண குடிமக்கள் என்பதால் இந்நூலிற்கு குடிமக்கள் காப்பியம் என பெயர் பெற்றது.

 1. ஒற்றுமை காப்பியம் மற்றும் புதுமை காப்பியம்

தமிழின ஒற்றுமையையும் சமய ஒற்றுமையையும் வலியுறுத்தியதால் இது ஒற்றுமை மற்றும் புதுமை காப்பியம் என அழைக்கப்படுகிறது.

 1. சிலப்பதிகாரம்

கண்ணகியின் சிலம்பினை மையமாகக் கொண்டு இக்கதை அமைந்துள்ளதால் இது சிலப்பதிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

 1. மூவேந்தர் காப்பியம் மற்றும் புரட்சி காப்பியம்

சிலம்பதிகாரம் என்பதை பூவே சாமிநாதர் சிலப்பதிகாரம் என பேரை மாற்றினார். மேலும் மூவேந்தர் காப்பியம் பைந்தமிழ் காப்பியம் பத்தினி காப்பியம் முதன்மை காப்பியம் தேசிய காப்பியம் என பல்வேறு பெயர்கள் சிலபதிகாரத்திற்கு வழங்கப்படுகிறது.

சோழ நாட்டின் புகழ் பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளது:

Aimperum Kappiyam In Tamil

சோழ மன்னன் என்பவன் தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்து காணப்படுவார். மேலும் சோழனின் வெண்கோட் குடை போல நிலவும் குளிர்ச்சியுடன் உலகுக்கு இன்பம் தருகிறது.

சோழ நாட்டில் என்றும் வற்றாத காவிரி ஆறானது ஓடிக்கொண்டிருந்தது. சோழன் ஆணை ஆனது சக்கரம் போல கதிரவனும் பொன் போன்ற சிகரங்களுடைய இமயமலையை வலது புறமாக சுற்றி வருகிறது.

மாதம் மும்மாரி மழை பொழிந்து மக்களை மழை நீரானது காப்பதைப் போல சோழ மன்னன் மக்களை காத்து வந்தார்.

மேலும் சோழத் தமிழர்களிடம் 36 வகையான முரசுகள் பயன்பாட்டில் இருந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment