எளிமையான தமிழ் கட்டுரைகள்

எளிமையான தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal

Post views : [jp_post_view]

Table of Contents

எளிமையான தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal

ஏழு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சில வீட்டு பாடங்களை பள்ளி ஆசிரியர்கள் வழங்குவது உண்டு. அவ்வகையில் இன்று நாம் கட்டுரை எழுதுவது எப்படி என்பதை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

எளிமையான தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal – இந்தப் பதிவில் நாம் வானவில், சிறுசேமிப்பு, வெற்றியின் அடிக்கல், சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் மொழி பற்றிய கட்டுரை தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் உங்கள் படிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எளிமையான தமிழ் கட்டுரைகள்
எளிமையான தமிழ் கட்டுரைகள்

1. வானவில் பற்றிய கட்டுரை | வானவில் பற்றிய கட்டுரைகள் தமிழ்

வானவில் எப்போது தோன்றும்:

இறைவன் படைப்புகளுள் விந்தையானது வானவில். வானவில்லில் உள்ள வண்ணங்கள் நம் கண்களையும் மனதையும் தம்பால் ஈர்ப்பு. வானவில் காலையிலும் மாலையிலும் காட்சி அளிக்கும். அதன் அழகைக் காண எல்லா வயதினரும் ஆர்வம் கொள்வர்.

வானவில் தோன்ற காரணம்:

பழங்கால மக்கள் வானவில்லை “இந்திரன் வில்” எனவும் “அர்ஜுனன் வில்” எனவும் கூறினர். வானவில் பகற்பொழுதில் மழைக்காலங்களில் காலையில் மேற்கிலும் மாலையில் கிழக்கிலும் தோன்றும். மழைத்துளிகளின் வழியாக கதிரவன் ஒலி ஊடுருவி செல்லும் பொழுது, அதன் ஒளிக்கட்டளைகள் சிதறி ஏழு நிறங்களை வானவில் காட்சி தரும். கதிரவன் மறையும் போது நீண்ட வானவில் தோன்றும்.

வானவில்லின் ஏழு வண்ணங்கள்:

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, கருநீலம், நீளம், செந்நிலம் என்பன வானவில்லில் தோன்றும் ஏழு வண்ணங்கள். சில சமயங்களில் இரு வானவில்கள் காட்சி தரும். ஒன்றனை தலை வானவில் என்றும், மற்றதை துணை வானவில் என்றும் சொல்வார்கள்.

உண்மையில் வானவில் தோன்றுவது ஒரு வானவில்லே ஆகும். மற்றொரு வானவில் ஒளியின் பிரதிபலிப்பாகும்.

வானவில்லின் காட்சி இன்பம்:

மழை நின்ற சமயத்தில் வானவில் தோன்றுவதால் சிறுவர் ஆடிப்பாடி மகிழ்வர். பெரியவர் வானவில்லை உற்று நோக்கி இன்புறுவர். வானவில் அனைவரையும் மகிழ்விக்கும் இயற்கையின் விந்தையாகும்.

Read Also: இலக்கணம் என்றால் என்ன

2. சிறு சேமிப்பு கட்டுரை | சிறுசேமிப்பு பற்றிய தமிழ் கட்டுரை

சேமித்தலின் இன்றியமையாமை:

எதனையும் சேமிக்கும் பண்பு நல்லது. அதனை அறிந்து உயிரினங்களான எறும்பு, தேனீ போன்றவை சிறுக சிறுக சேமிக்கின்றன. நம் ஈட்டிய பொருளை செலவிடுதல் எளிது. ஆனால், கிடைத்த பொருளை சிக்கனமாய் செலவு செய்து எஞ்சியதை சேமிக்க முயல வேண்டும்.

சேமித்தவை பிற்காலத்தில் பயன்படும்.“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”, “பணம் பத்தும் செய்யும்”, “பணம் இல்லாதவன் பிணம்”என்பன பணத்தின் இன்றியமையாமையை தெரிவிக்கின்றன.

சேமித்தல் பிற்கால வாழ்க்கைக்கு பயன்படும்:

இளமையின் வளமையில் நாம் முயன்று பொருளை ஈட்டுகிறோம். அவ்வாறு அருமையாக சேர்த்த பொருளை வீணே செலவு செய்தல் கூடாது. பெருகிவரும் வெள்ளத்தை தேக்கி வைக்கிறோம். தேக்கிய நீரை பல நோக்கு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

நாம் இவ்வாறு பணத்தை சேமிக்க வேண்டும். நாம் பிற்கால வாழ்விற்கும் முதுமை பருவத்திற்கும் எதிர்பாராத செலவினங்களுக்கும் சேமிக்க வேண்டும். நாம் சேமித்த படம் நாட்டு நல பணிகளுக்கும் சமுதாயப் பணிகளுக்கும் பயன்படும்.

சேமிப்புக்கு ஏற்ற நிறுவனங்கள்:

நாம் அரசின் சிறுசேமிப்பு நிலையங்கள், அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள், சேமிப்பு ஆவணங்கள், அஞ்சலக சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணத்தை சேமிக்கலாம். இவ்வாறு சேமித்தவை நமக்கு எய்ம்பினால் வைப்பாய் அமையும். பிற்கால மேல் படிப்பிற்கும் பயன்படும்.

சிக்கனப் பண்பு சீரான வாழ்க்கைக்கு அடிப்படை:

சிக்கன பண்பு சிறந்த பண்புகளில் ஒன்று. சேமிப்பு நம் மனதை தூய்மைப்படுத்தும். பிற்கால வாழ்வை ஒளிமயமாக்கும். சேமிப்பு நமக்கு நன்மை நல்வதோடு சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்.‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது போல், நாம் சிறுக சிறுக சேமிப்பது நாட்டு நலப் பணிகளுக்கு உற்றுழி உதவும், ஊன்றுகோலாய் அமையும்.

சேமிக்கவும் காண்பிக்கவும் வேண்டுவன யாவை:

காசினை சேமிக்க வேண்டும். அதனை சிக்கனமாய் செலவு செய்து காண்பிக்க வேண்டும்.

மின்சாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்:

தேவைப்படும்போது விளக்கினை எறிய செய்து மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். தேவையற்ற போது விளக்கினை அனைத்து விட வேண்டும்.

எதிர்கால தலைமுறையில் அச்சம் போகும் வழி:

வீணாக்காதவாறு எரிசக்தியை மிச்சப்படுத்த வேண்டும்.அவ்வாறு செய்வதை எதிர்காலத் தலைமுறையின் அச்சம் போக்கும் வழியாகும்.

உலகை இணைக்கும் வழி:

உலகை இணைப்பதற்கான வழி, ஆற்றலையும், அறிவையும் பெருக செய்யும் அறிவியல் சிந்தனையை வளர்ப்பது ஆகும்.

தமிழ் மொழி நிலைக்க வழி:

ஆழ்கடல் கடந்தும் நம் தமிழ் மொழி இளைக்க வழி யாது எனில் பெருமைமிக்க நம் மொழியில் அறிவியல் சிறந்து விளங்க செய்வதை ஆகும்.

இளைஞர்கள் எந்த துறையில் உருபெற செய்ய வேண்டும்:

இளைஞர்கள் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, கணிப்பொறி ஆகிய துறைகளில் மேலும் உருபற செய்ய வேண்டும்.

3. வெற்றியின் அடிக்கல் – எளிமையான தமிழ் கட்டுரைகள்

வெற்றி எப்போது நேரில் வந்து சாயும்:

துணிச்சலை துணையாய் கொண்டு எதிர் படும் தோல்வியை தூக்கி எரித்துவிட்டு சென்றாள். நினைத்து செயலை செய்து முடிக்கலாம். அப்போது வெற்றி நேரில் வந்து சாயும்.

வெற்றியை அடைய முயற்ச்சியே அடிக்கல்:

தம் முயற்சிக்கு தடையாய் இருந்த ஏழ்மையை வீழ்த்தி, அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார் ஆபிரகாம் லிங்கன். ஆகவே வெற்றியடைய முயற்சியை அடிக்கல் என தெரிந்து கொள்ளுங்கள்.

ஆபிரகாம் லிங்கனை பற்றிய தகவல்கள்:

‘உழைப்பின் வாரா உறுதிகள் உழவே’ என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர், ஆப்ரிகாம் லிங்கன். இவர் மரம் வெட்டி பிழைக்கும் ஏழை ஒருவருக்கு மகனாய் பிறந்தார். அவருடைய குடும்பம் வறுமையில் தத்தளித்ததால் இவர் தமது படிப்பை இடையிலேயே நிறுத்த நேர்ந்தது. ஆப்பிரிக்கா லிங்கன் அமெரிக்க நாட்டு அதிபர் தேர்தலுக்கு நின்று இருமுறை தோற்றார். எனினும் சோர்ந்து விடாமல் அமைதியாய் உழைத்துக் கொண்டே இருந்தார். உழைப்பு பயன் தந்தது, அடுத்த முறை தேர்தலில் வென்று அமெரிக்க நாட்டு அதிபர் ஆனார்.

தம்முடைய முயற்சியால் வெற்றி பெற்ற இருவரின் குறிப்பு:

• அலெக்சாண்டர்:

இவர் கிரேக்க நாட்டில் மாசிடோனியா என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதில் இவர் மனதில் உலகையே வெல்ல வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தை தம் அயரா முயற்சியால், உழைப்பால் தம் 32 ஆம் வயதுக்குள் சாதித்து காட்டினார்.

ஐரோப்பா, அமெரிக்க, ஆசியா என்னும் மூன்று கண்டப் பகுதிகளையும் தம் உழைப்பால் அவரால் வெல்ல முடிந்தது.

• ஜிடி நாயுடு:

தமிழ்நாட்டின் “அதிசய மனிதர்” என்று போற்றப்பட்ட இவர் கோவையில் ஏழை சிறுவராய் அலைந்து கொண்டிருந்தார். இவர் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணியை தொடங்கினார். தம் தளரா உழைப்பால் அத்துறையில் உலக மேதையாய் பெரும்பெரும் புகழ்பெற்று பெருவாழ்வு வாழ்ந்தார். உலகம் போற்றும் அதிசய மனிதராய் திகழ்ந்தார்.

4. சுற்றுச்சூழல் காத்திடுவோம் – எளிமையான தமிழ் கட்டுரைகள்

நம்மை சுற்றியுள்ள இயற்கை சூழலை நம்மால் கேடுராமல் காத்து நலமான வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும். இதனை வெற்று வார்த்தையை கொல்லக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பலவாகும்.

கண்ணில் படுகிற பொருட்களை எல்லாம் குவித்து தீ மூட்டி எரிக்கிறோம். அதனால் பூமிக்கு மேலே உள்ள ஓசோன் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது.

விழிப்பாய் இருக்கும் முறைக்கு ஒரு சான்று, குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பின் குளிர செய்து குடிப்பதாகும்.

5. தமிழ் மொழி பற்றிய கட்டுரை – எளிமையான தமிழ் கட்டுரைகள்

தமிழ் மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளது:

தமிழ் மொழியில் இருநூற்று 47 எழுத்துக்கள் உள்ளன.

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்:

தமிழ் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் அவை முதல் எழுத்து, சார்பெழுத்து என்பதாகும்.

முதல் எழுத்துக்கள் என்றால் என்ன:

மொழி இயங்குவதற்கும் ஒரு எழுத்துக்கள் தோன்றுவதற்கும் முதன்மையான எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் எனப்படும்.

முதல் வரை உள்ள உயிர் எழுத்துக்கள் 12ம், க் முதல் ன் வரை உள்ள மெய்யெழுத்துக்கள் 18 ஆக 30 எழுத்துக்களும் முதல் எழுத்துக்களாம்.

உயிர் மெய் எழுத்துக்கள்:

உயிர் எழுத்துக்கள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18 சேர்ந்து பிறக்கும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

சார்பெழுத்துக்கள் என்றால் என்ன:

முதல் எழுத்துக்களை சார்ந்து தோன்றும் எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என்பர்.

சார்பெழுத்து தோன்றும் விதம்:

‘ணி’ என்பது ‘ண்’ என்னும் மெய்யும் ‘இ’என்னும் உயிரும் சேர்ந்து (ண்+இ – ணி) பிறந்த எழுத்தாகும். எனவே ணி என்னும் எழுத்து உயிரையும் மெய்யையும் சார்ந்து தோன்றுவதால் அது சார்பெழுத்து என்று அழைக்கப்படுகின்றது.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்:

சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய் ஆயுதம் உயிரளபெடை, ஒற்றளப்படை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் மற்றும் ஆயுத குறுக்கம் ஆகும்.

Read Also: பாரதியார் பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *