பித்தம் குறைய வீட்டு மருத்துவம் – பித்தம் குணமாக பாட்டி வைத்தியம் – Pitham Kuraiya Vettu Maruthuvam

Table of Contents

பித்தம் குறைய வீட்டு மருத்துவம் – Pitham Kuraiya Vettu Maruthuvam

Pitham Kuraiya Vettu Maruthuvam

Pitham Kuraiya Vettu Maruthuvam:- நமது உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று பித்தம். பித்தம் என்பது “உஷ்ணம்” ஆகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒருவகை நீர்தான் பித்தம் என்று கூறுகிறோம். நம் உடலில் செரிமானத்திற்கு உதவுவது இந்த பித்த நீ தான் குறிப்பாக, அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்தநீர் சுரந்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த பித்த நீர் உடம்பில் சமநிலையில் இருந்தால் தான் பசி ஏற்படும், செரிமானம் நடைபெறும். பித்தம் நம் உடம்பில் எதனால் ஏற்படுகிறது, அதை நாம் எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

பித்தம் குறைய என்ன சாப்பிடலாம்:

1) கொய்யாப்பழம்:

பித்தத்திற்கு ஒரு தீர்வாக கொய்யாப்பழம் உள்ளது. நம் கொய்யா பழம் சாப்பிடுவதால் காலரா, சளி, மூச்சு பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தொற்றுகள், பற்சொத்தை, வயிறு வீக்கம், இரத்தப்போக்கு, நீர் சத்துயின்மை மற்றும் பித்த நீர் பிரச்சனை போன்ற பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது.

2) எலுமிச்சை பழம்:

நம் எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் நம் உடம்பில் பித்தம் என்ற ஒன்று ஏற்படாது. உதாரணமாக எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சாதம், எலுமிச்சை ஊறுகாய், எலுமிச்சை சாறு இதுபோன்று நம் எலுமிச்சையை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது பித்த நீர் அதிக அளவில் உடம்பில் சேராமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் கலந்து இருக்கும் பித்தத்தை முழுமையாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. கிராமப்புறங்களில் பித்தம் தலைக்கு ஏறினால் எலுமிச்சை இலையை மோரில் நனைத்து அந்த மோரை குடிப்பார்கள்.

3) இந்துப்பு:

Pitham Kuraiya Vettu Maruthuvam:- வழக்கமாக நம் உணவில் பயன்படுத்தும் உப்பு சோடியம் நிறைந்தது. இது பித்தத்தை ஏற்படுத்தி தலை சுத்தல், கிறுகிறுப்பு, பித்த வாந்தி,மயக்கம், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை உண்டாக்கும்.

இந்த இந்து உப்பு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும், இளநீரிலும் நன்றாக ஊற வைத்து அதன் பிறகு பதப்படுத்தப்பட்டு நமக்கு விற்கப்படுகிறது. இதை நாம் பயன்படுத்துவதால் அதிக அளவு பசியை தூண்டுகிறது. இந்த உப்பிலும் சோடியம் குளோரைடு உள்ளது.

4) சீரகம்:

Pitham Kuraiya Vettu Maruthuvam:- சீரகம் ஒரு நறுமணப் பொருளாகும். அதுமட்டும் இன்றி, நோய் விரட்டும் தன்மை கொண்ட உணவுப் பொருளாகவும் கருதப்படுகின்றது. பித்தத்தால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்தும் தன்மை சீரகத்திற்கு உண்டு. பித்தத்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த சீரகம் பயன்படுகிறது.

பித்தம் என்பது உடலின் வெப்பநிலையை பாதுகாக்கும் பணி செய்கிறது. பித்த நோய்களுக்காகவே கடைகளில் “சீரக சூரணம்” என்று விற்கப்படுகிறது. இதை நாம் வாங்கி பயன்படுத்தலாம். சீரகம் பித்தத்தை சரி செய்யும் மருந்து. பித்தத்தால் ஏற்படும் உயர் மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. பித்த நீர் அதிக அளவு சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.

5) இஞ்சி:

நம் உடலில் பித்தம் அதிகரித்தால் முதலில் வரும் பிரச்சனை தான் அஜீரண கோளாறு. இந்த அஜீரணத்துக்கு சிறந்த மருந்தாக இஞ்சி செயல்படுகிறது. இது பித்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல், வாயு சம்பந்தமான பிரச்சனைகளையும் உடம்பிலிருந்து அகற்றுகிறது.

பித்தம் குறைய பாட்டி வைத்தியம்:

இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இரண்டு நாட்கள் தேனில் ஊற வைத்து பின் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்துவிடும்.

பித்தத்தால் உடலில் ஏற்படும் நோய்கள்:

• அஜீரணம்

• மன அழுத்தம்

• மஞ்சள் காமாலை

• உயர் இரத்த அழுத்தம்

• அல்சர்

• தோல் சுருக்கம்

• முடி உதிர்வு

பித்தம் அதிகமானால் அறிகுறிகள்:

• தலைவலி, தலை சுற்றுதல், கிறுகிறுப்பு ஏற்படும்.

• மயக்கம், கசப்பு தன்மையில் வாந்தி எடுத்தல்.

• பசியின்மை, வாயு பிரச்சனை.

• உதடு, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வெடிப்பு ஏற்படும்.

• உடல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்படும்.

• வாய் எப்பொழுதும் கசப்பு தன்மையுடன் இருக்கும்.

• நாக்கு மற்றும் உடல் வறட்சியாக காணப்படும்.

பித்தத்தின் அறிகுறிகள் இது போன்று காணப்படும்.

பித்தம் குறைய பழங்கள்:

1) எலுமிச்சை பழம்:

நம் எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் நம் உடம்பில் பித்தம் என்ற ஒன்று ஏற்படாது. உதாரணமாக எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சாதம், எலுமிச்சை ஊறுகாய், எலுமிச்சை சாறு இதுபோன்று நம் எலுமிச்சையை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது பித்த நீர் அதிக அளவில் உடம்பில் சேராமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.

2. கொய்யாப்பழம்:

பித்தத்திற்கு ஒரு தீர்வாக கொய்யாப்பழம் உள்ளது. நம் கொய்யா பழம் சாப்பிடுவதால் காலரா, சளி, மூச்சு பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தொற்றுகள், பற்சொத்தை, வயிறு வீக்கம், இரத்தப்போக்கு, நீர் சத்துயின்மை மற்றும் பித்த நீர் பிரச்சனை போன்ற பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது.

3) வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர் சத்து காணப்படுவதால் இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நீர் சத்து சமநிலையில் இருக்கும்.இதனால், இத்த நீரும் சமநிலையில் இருக்கும்.

4) தர்பூசணி:

தர்பூசணி பழத்தில் அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால் நம் இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நீர் சத்தின் அளவு சம அளவில் காணப்படும் இதனால், பித்த நீர் தொடர்பான பிரச்சனைகள் நமக்கு வராமல் தடுக்கும்.

5) திராட்சை:

திராட்சை பழத்தை நான் அடிக்கடி கிடைக்கும் தருணத்தில் சாப்பிடுவதன் மூலம் நமக்கு பித்தம் தொடர்பான எந்தவித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. ஏனெனில், திராட்சையில் வைட்டமின்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பித்தத்தை சம நிலையில் வைக்க அதிக அளவு உதவுகிறது.

பித்தம் குறைய வழிகள்:

• உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் எடுத்துக் கொள்ளாதது தான் இந்த பித்தம் உருவாக முதல் காரணம். இதனால், தினசரி நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

• கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிக அளவு கொண்டால் நம் உடலில் பித்தம் அதிகமாகும். ஏனெனில், கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் அந்த உணவுகள் செரிமானமாக மிகவும் தாமதமாகிறது. எனவே, எண்ணெயில் சமைத்த கொழுப்பு உணவு பொருட்களை அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

• மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பித்தம் அதிகமாகும். இதற்கு காரணம் இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பித்தம் உருவாக காரணமாகிறது. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை நாம் முழுமையாக கை விடுவதன் மூலம் பித்தம் மட்டுமில்லாமல், நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.

• காரத்தன்மை உள்ள உணவுகள், அதிக அளவு புளிப்பு தன்மை உள்ள உணவுகள், எண்ணெயில் சமைத்த மற்றும் பொறித்த உணவுகள் அதிகளவு நாம் சாப்பிடுவதன் மூலம் உடலில் பித்த நீர் அதிகமாக சுரக்கிறது. எனவே, இந்த உணவுகளை நாம் குறைத்துக் கொள்வது மிக சிறந்தது.

• நாம் தினசரி சரியான அளவு தூங்காமல் தூக்கமின்மை ஏற்பட்டால் உடல் உஷ்ணம் அதிகரித்து பித்தத்தையும் ஏற்படுத்தும். எனவே, தினமும் நாம் சரியான அளவு நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.

• மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் பித்தம் அதிகரிக்கும். எனவே, நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது சிறந்தது.

• தேனீர், டீ, காபி அதிகளவு நாம் பருகுவதன் மூலம் உடல் உஷ்ணம் மிக மிக அதிகரித்து பித்தத்தமும் அதிகமாக காரணமாக இருக்கிறது. டீ, காபி போன்றவற்றை அருந்துவதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

தலைப்பித்தம் அறிகுறிகள்:

• தலைவலி, லேசான தலைசுற்றல், கிறுகிறுப்பு போன்றவை ஏற்படும்.

• படபடப்பு

• தூக்கமின்மை

• மயக்கம்

• வாய் கசப்பு மற்றும் வாந்தி எடுத்தல்

பித்தம் குறைய மாத்திரை:

பித்தம் குறைய “யூர்ஸ் 150 மி.கி மாத்திரை” ( Urs 150 MG Tablet ) ஒரு பித்த அமிலம் ஆகும். எனவே, இது பித்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

பித்தம் குறைய யோகாசனம்:

பித்தம் குறைய “அதோ முக ஸ்வனாசனம்” என்ற யோகா முறையை நாம் தினசரி 5-முறை செய்து வந்தால் சுத்தம் குறைய ஆரம்பிக்கும். மன அழுத்தம் மற்றும் மனசோர்வு நீங்கும்.

பித்தம் குறைய ஆயுர்வேத மருந்து:

கசப்புத் தன்மை கொண்ட உணவுகளையும், இனிப்பு தன்மை கொண்ட உணவுகளையும் தகுந்த அளவு எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள பித்தத்தின் அளவு குறைந்து சீரான சமநிலையில் இருக்கும்.

பித்தம் என்றால் என்ன?

Pitham Kuraiya Vettu Maruthuvam:- கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒருவகை நீர்தான் பித்தம் என்று கூறுகிறோம். நம் உடலில் செரிமானத்திற்கு உதவுவது இந்த பித்த நீ தான் குறிப்பாக, அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்தநீர் சுரந்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த பித்த நீர் உடம்பில் சமநிலையில் இருந்தால் தான் பசி ஏற்படும், செரிமானம் நடைபெறும்.

பித்தத்துக்கு என்ன மருந்து?

இஞ்சிச்சாறு எலுமிச்சை சாறு போன்றவை குடித்து வந்தால் பித்தம் நீங்கும். எலுமிச்சை சாதம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

பித்தப்பை எந்த பக்கம் உள்ளது?

பித்தப்பை நமது வயிற்றின் வலது பக்கத்தில், கல்லீரலுக்கு கீழே உள்ள ஒரு சிறிய, பேரிக்காய் வடிவில் உள்ள ஒரு உறுப்பு ஆகும்.

முதல் பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்?

Pitham Kuraiya Vettu Maruthuvam:- கசப்புத்தன்மை கொண்ட உணவுகளையும், இனிப்பு உணவுகளையும் எடுத்துக் கொண்டால் உடலின் பித்தத்தின் அளவு குறையும் என கூறுகிறது ஆயுர்வேதா மருத்துவம். ஆப்பிள், திராட்சை, வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், தர்பூசணி, பால் ஆகிய உணவுகள் நம்முடைய உடலின் பித்த நிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவும் உணவு உணவுகள் ஆகும்.

பித்தம் தலைக்கு ஏறினால் என்ன செய்வது?

“பச்சை நெல்லிக்காயை” தேனுடன் கலந்து சாப்பிட்டால் தலை சுற்றுதல் நின்று விடும்.

Read Also:- சித்த மருத்துவம் பயன்கள்

Leave a Comment