இலக்கணம் என்றால் என்ன – Ilakkanam Entral Enna

இலக்கணம் என்றால் என்ன – Ilakkanam Entral Enna

இலக்கணம்

இலக்கணம் இந்த வார்த்தையை நாம் முன்னர் எங்கேயோ கேட்டது போல் ஒரு ஞாபகம் இருக்கும். தற்போது போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இதனை தெரிந்து கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

எனவே நாம் இந்த mttamil.com – ல் இலக்கணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய முழுமையான விவரங்களை பார்க்கலாம் வாருங்கள்.

இலக்கணம் என்றால் என்ன – What Is Ilakkanam

Ilakkanam Means : இலக்கணம் என்பது எந்த ஒரு மொழியையும் பிழையின்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் துணையாய் இருப்பது ஆகும்.

இலக்கணம் எத்தனை வகைப்படும் – Ilakkanam Ethanai Vagai Padum:

பொதுவாக நம்முடைய தமிழ் மொழியில் இலக்கணங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவை: 1. எழுத்து, 2.சொல், 3.பொருள், 4.யாப்பு, 5.அணி

1.எழுத்து இலக்கணம் என்றால் என்ன:

Eluthu Ilakkanam Means – ஒரு மொழியில் உள்ள எண்கள், பெயர்கள் ஆகிய 12க்கும் அதிகமான பகுதிகளை எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் எழுத்தானது ஒளி வடிவம் மற்றும் வரிவடிவம் என இரண்டு வடிவங்களில் உள்ளது. ஒளி வடிவம் என்பது ஓர் எழுத்தை நாம் உச்சரிக்கும் பொழுது எழுகின்ற ஒளியை குறிக்கின்றது. இந்த ஒலி வடிவம் எப்போதும் மாறாது இருக்கும்.

ஆனால் வரி வடிவம் என்பது எப்போதும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டு இருப்பதாக அமையும்.

எழுத்து இலக்கணம் எத்தனை வகைப்படும்:

எழுத்து இலக்கணம் ஆனது மொத்தமாக 12 வகைப்படும் அவை கீழே உள்ள அட்டவணியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  எண் எழுத்து இலக்கணத்தின் வகைகள்
1. எண்
2. பெயர்
3. முறை
4. பிறப்பு
5. உருவம்
6. மாத்திரை
7. முதல்
8. ஈறு
9. இடைநிலை

 

10. போலி
11. பதம்
12. புணர்வு

 

Ilakkanam Entral Enna

2.சொல் இலக்கணம் என்றால் என்ன:

Sol Ilakkanam Means – தமிழ் மொழியில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோம் பொருள் தருவது சொல் இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும், இந்த சொல் என்ற எழுத்திற்கு பதம், மொழி, கிழவி, வார்த்தை என்ற வேறு பெயர்களை கொண்டும் குறிப்பிடப்படுகிறது.

சொல் இலக்கணம் எத்தனை வகைப்படும்:

சொல் இலக்கணமானது மொத்தமாக நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றது.அவை கீழே உள்ள அட்டவணியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 எண் சொல் இலக்கணத்தின் வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்

 

Ilakkanam Entral Enna

3.பொருள் இலக்கணம் என்றால் என்ன:

Porul Ilakkanam Means – பொருள் என்பது ஒழுக்க முறை. வாழ்விற்கு சிறப்பு தரக்கூடிய கூற்றுக்களை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பொருள் இலக்கணம் ஆனது தமிழ் மொழிக்கு உரித்தான ஒரு தனி சிறப்பு பெற்ற இலக்கணம் ஆகும். அதாவது பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் இல்லை. தமிழுக்கு தனிச்சிறப்பு வழங்குவது இந்த பொருள் இலக்கணம் ஆகும்.

பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்:

பொருள் இலக்கணம் ஆனது மொத்தமாக இரண்டு வகைப்படும்.அவை கீழே உள்ள அட்டவணியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 எண் பொருள் இலக்கணத்தின் வகைகள்
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

 

Ilakkanam Entral Enna

4.யாப்பு இலக்கணம் என்றால் என்ன:

Yappu Ilakkanam Means – பாவலர்கள் தங்களுடைய உள்ளத்தில் தோன்றும் உயர்வான கருத்துக்களை பாடல்களாக பாடுகின்றனர். குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக் கவிதைகள் என்பர். அந்த மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த யாப்பு இலக்கணம் ஆனது சங்க கால நூல்களான தொல்காப்பியம் யாப்பெருங்கலும் யாப்பெருங்கலக் கார்கள் ஆகிய நூல்களில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் செயல்களின் அமைப்பு, ஓசை, மக்களின் வகைகள் ஆகியவை விரிவாக இதில் கூறப்பட்டுள்ளன.

யாப்பு இலக்கணம் எத்தனை வகைப்படும்:

யாப்பு இலக்கணம் ஆனது மொத்தமாக ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை கீழே உள்ள அட்டவணியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

   எண் யாப்பு இலக்கணத்தின் வகைகள்
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தலை
5. அடி
6. தொடை

 

5.அணி இலக்கணம் என்றால் என்ன:

ஒரு செயலின் கருத்தை அழகு படுத்துவது அணி எனப்படும். சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துக் கூறுவது அணி இலக்கண இயல்பாகும்.

அணி என்பதற்கு அழகு என்பது பொருள் ஆகும்.

ஒரு புலவர் அல்லது கவிஞர்கள் தங்களுடைய கற்பனை திறமையை கொண்டு ஏற்றும் பாடல்களில் அழகை சேர்க்கின்றனர். இந்த அழகை விளக்குவது தான் அணி இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

அணி இலக்கணம் எத்தனை வகைப்படும்:

அணி இலக்கணமானது மொத்தமாக 14 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை கீழே உள்ள அட்டவணியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    எண் அணி இலக்கணத்தின் வகைகள்
1. இயல்பு நவிற்சி அணி
2. உயர்வு நவிற்சி அணி
3. தற்குறிப்பேற்ற அணி
4. தீவக அணி
5. நிரல்நிறை அணி
6. தன்மையணி
7. உவமை அணி
8. உருவக அணி
9. சொற்பின் வரும் நிலை அணி

 

10. பொருள் பின் நிறைவு அணி
11. வஞ்சகப் புகழ்ச்சி அணி
12. பிறிது மொழிதல் அணி
13. வேற்றுமை அணி
14. இரட்டுற மொழிதல் அணி

 

மேலே கூறப்பட்டுள்ள இந்த பதிவில் நாம் இலக்கணம் மற்றும் அதன் வகைகள், அந்த வகைகளில் உள்ள உட்பிரிவுகள் ஆகியவை பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொண்டோம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த இணையதளத்தை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

 

Leave a Comment