முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் | Forehead Hair Growth in Tamil

முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் | Forehead Hair Growth in Tamil

Forehead Hair Growth in Tamil

முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்

Forehead Hair Growth in Tamil :இன்றைய பெண்கள் அழகு பராமரிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் கூந்தல் பராமரிக்க தான். முடி உதிர்வு, முடி வளர்ச்சியின்மை, முடியின் அடர்த்தி குறைவு, இளநரை, வறட்சியான முடி, நுனி வெடிப்பு என்று பல பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்ற காரணித்தினால் தான் கூந்தல் பிரச்சனையில் மிக முக்கிய கவனம் செலுத்துகிறார்கள்.

அந்த வகையில் தற்போது அதிகரித்து வருகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் முன் நெற்றி யில் குறைந்துவரும் முடி அடர்த்தி ஆகும். அதை சரி செய்ய என்ன என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முடியின் வளர்ச்சி குரைவது – Forehead Hair Growth in Tamil

முடியின் வளர்ச்சி குறைவதை முன்கூட்டியே சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்த நொடியெ கூடுதல் கவனம் ஆனது செலுத்தி கூந்தலை பராமரிப்பதன் மூலம் அதை சரி செய்ய முடியும் . இதனால் முடி ஆனது வேறு விதமான பிரச்சனைகளுக்கு பாதிக்காது.தற்போது உயர்ந்து வரும் முன் நெற்றி வழுக்கை பிரச்சனையை நேரடியாக காண்பிக்காது.

ஆரம்பத்தில் அதிகப்படியான முடி உதிர்வை உண்டாக்க செய்யும்.சில பேருக்கு தலையின் உச்சியில் அல்லது பக்க வாட்டிலும் கூட சில இடங்களில் முடியின் வளர்ச்சியினை தடை செய்யும். தினமும் கண்ணாடி முன் நின்று கானும்ம் போழுது அல்லது முடியை சிக்கின்றி சீவும் போது உணர முடியும். அப்போதே இதை தடுத்து நிறுத்தினால் முன் நெற்றி வழுக்கையை விழுவதை கண்டிப்பாக தடுக்க முடியும்.

முடி உதிராமல் நிற்பதர்க்குஎன்ன செய்யலாம் – hair growth tips for forehead in tamil

முடி உதிராமல் தடுத்து நிற்பதர்க்கு ,முதலில் தடுத்து நிறுத்தினால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த தான் இயற்கை முறையில் வீட்டிலேயே எண்ணெய் காய்ச்சி தடவலாம். அதற்கு தேவை யான மூல பொருள்களும் எளிதாகவே கிடைக்க கூடியவை. இரண்டு வாரத்துக்கு தேவையான எண்ணையை எப்படி தையார் செய்வது என்று பார்க்கலாம்.தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்- தலா 50 மி.லி , கருஞ்சீரகம், வெந்தயம் தலா- 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – அரை கப், கறுவேப்பிலையை நிழலில் உலர்த்தி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது பின்பு கருஞ்சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக்கி கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெயுடன் இந்த பொடியை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு இரும்பு வாணலியில் இந்த எண்ணெயை ஊற்றி கொண்டு ஒரு கொதி விட்டு இறக்கி விட வேண்டும். பொதுவாக எண்ணெய் காய்ச்சும் போது எண்ணெயை அதிகம் சூடுபடுத்த கூடாது என்பதால் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் விட்டு அதற்குள் இந்த எண்ணெயை வைத்து சூடேற்றலாம்.

எப்படி வேலை செய்யும் – Forehead Hair Growth in Tamil

ஆலிவ் எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் முடி வளர்ச்சிக்கு அதிகம் ஊட்டம் தரக்கூடியது ஆகும். ஆலிவ் ஆயிலில் இருக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக இருக்கிறது. இவை கூந்தலின் மயிர்க்கால்களில் படும்போது அதன் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.முடியின் வளர்ச்சிக்கும் இளநரை வராமல் காக்கவும் சிறப்பாக துணைபுரிகிறது கறுவேப்பிலை.

இவை முடி வளர்ச்சிக்கும் கருமைக்கும் உதவுகிறது. வெந்தயம் குளிர்ச்சியை தரும் பொருள் என்ப தால் பலருக்கும் இதை எண்ணெயில் கலந்து தடவுவதற்கு தயக்கம் இருக்கும். ஆனால் உடன் கருஞ் சீரகம் சேர்ப்பதால் இந்த எண்ணெயின் குளிர்ச்சி குறைந்துவிடுகிறது என்பதால் தினமும் கூட பயன் படுத்தலாம்.

எப்போது ? – Forehead Hair Growth in Tamil

தினமும் இரவு படுக்கும் போது முடியை சிக்கல் இல்லாமல் சீவி எடுத்து எண்ணெயை உள்ளங்கை யில் தேய்த்து கொள்ளுங்கள். முடியின் மயிர்க்கால்களில் விரல்களை கோர்த்து வட்டவடிவமாக மசாஜ் செய்யுங்கள். முக்கியமாக உச்சந்தலையிலிருந்து முன் புற நெற்றியில் தேய்த்து மசாஜ் செய் யுங்கள். மறுநாள் காலை தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டாம்.

தலைக்கு குளிப்பதாக இருந் தால் இந்த எண்ணெயை சூடாக்கி கை நிறைய அள்ளி ஆயில் மசாஜ் செய்யுங்கள். பிறகு வெது வெதுப்பான நீரில் முடியை மைல்டான ஷாம்பு கொண்டு அலசுங்கள்.இதனால் முதலில் முன் புற நெற்றியிலிருந்து முடி உதிர்வது நிற்கும். சிறிது சிறிதாக வழுக்கை போன்ற தோற்றம் மறையக் கூடும். பிறகு படிப்படியாக அந்த இடத்தில் முடி வளர்ச்சியும் தென்படும்.

தீர்வு – hair growth tips for forehead in tamil

முடி உதிர்தலை கட்டுப்படுத்த பராமரிப்போடு உணவிலும் மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். உடலில் போதுமான இரும்புசத்து, ஊட்டச்சத்து குறைபாடுகளில் பாதிக்கப்படுவதில் முடி உதிர்த லும் ஒன்று. அதனால் உணவு பழக்கங்களிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. அதோடு முன் நெற்றியில் முடியின் அடர்த்தி குறைந்தாலே அது வழுக்கை என்று முடிவு செய்து விட வேண்டாம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

ஏனெனில் இவை வழுக்கை அல்ல. இழந்த முடியை கவனத்துடன் மேற்கொள்ளும் பராமரிப்பு மீட்டு கொடுத்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.முகம் அழகாக இருக்க வேண்டுமென்றால் கூந்தலும் அழகாக இருக்க வேண்டும் என்பவர்கள் கூந்தலையும் முறையாக பராமரிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆரோக் கியமான அழகு அழகான கூந்தல் என்று வளைய வரலாம்.

முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் !

நல்ல ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமா? அப்ப முட்டை யூஸ் பண்ணுங்க

எனவே தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியானது குறைந்து, நெற்றி திடீரென்று பெரிதாக ஆரம்பித்தால், அப்போது அவ்விடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்குமாறான செயல்களில் ஈடுபட வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிலர் தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, அதிக பணம் செலவழிப்பார்கள். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு பின்பற்றினால், நிச்சயம் முடியின் வளர்ச்சியானது அதிகரித்து, அழகான நெற்றியைப் பெறலாம். இப்போது நெற்றில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஆயில் மசாஜ் – hair growth tips for forehead in tamil

தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி, மசாஜ் செய்து வர வேண்டும்.

இதனால் ஆயில் மசாஜானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய் – Forehead Hair Growth in Tamil

விளக்கெண்ணெய் கூட முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முதன்மையானவை. அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். குறிப்பாக விளக்கெண்ணெயை நெற்றில் அதிகம் தடவ வேண்டாம். இல்லாவிட்டால், அது பருக்களை ஏற்படுத்திவிடும்.

ஹென்னா பேக்

ஹென்னாலை தலைக்கு பயன்படுத்தும் போது, நெல்லிக்காய் பொடி, சீகைக்காய், பொடி, பிராமி, தயிர் மற்றும் இதர பொருட்களான கறிவேப்பிலை பொடி, செம்பருத்தி இலை, வெந்தயம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து, நெற்றியில் சொட்டையாக உள்ள இடத்திலும், தலைக்கும் ஹேர் பேக் போட வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பிராமி – Forehead Hair Growth in Tamil

பிராமி இலையானது ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். அதற்கு பிராமி பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, நெற்றியில் முடி வளராத இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்

சீவும் போது கவனம் தேவை – Forehead Hair Growth in Tamil

போனிடைல் போடும் போதோ அல்லது கொண்டை போடும் போதோ, முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம். மேலும் எப்போதும் பின்புறம் நோக்கி தலையை சீவ வேண்டாம். இதனால் மயிர்கால்கள் வலுவிழந்து, பின் நாளடைவில் தலையின் முன்புறம் வழுக்கையானது ஏற்பட்டுவிடும். இப்படி சீவுவது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் வழுக்கையை ஏற்படுத்தும்.

பாக்ஸ் ஹேர் ஸ்டைல்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கை பொருட்களை கொண்டு முடியைப் பராமரிப்பதுடன், பெரிய நெற்றியை மறையும் வரை, பாங்க்ஸ் ஸ்டைலை பின்பற்றுவது நல்லது.

இரும்புச்சத்துள்ள உணவுகள் 

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பச்சை இலை காய்கறிகள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Leave a Comment