விநாயகர் சதுர்த்தி வரலாறு – விநாயகர் வரலாறு

Table of Contents

விநாயகர் சதுர்த்தி வரலாறு – விநாயகர் வரலாறு

விநாயகர் வரலாறு

விநாயகர் சதுர்த்தி வரலாறு:

விநாயகரின் பிறந்த நாளை கொண்டாடும் முக்கியமான விழா தான் விநாயகர் சதுர்த்தி என்பது ஆகும். ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதத்தின் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திருநாளில் விநாயகர் சதுர்த்தியானது மிகவும் கோலாகலமான முறையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்:

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் சுக்கிர சதுர்த்தி அன்று விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாட்கள் வைத்து வழிபட்டு, அவற்றை வண்ண பூக்களால் அலங்கரித்து பூஜை செய்து பஜனை செய்வார்கள். இதுபோன்று கடுமையான விரதத்தால் பூஜை செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

விநாயகர் சிலையை கடலில் கரைப்பது ஏன்?

விநாயகரை களிமண்ணில் செய்வதால் களிமண் நீரை தேக்கி வைக்கும் சக்தி கொண்டது. இதனால், இதை ஆற்றில் கரைக்கும் பொழுது தண்ணீரை உறிஞ்சி நிலத்தடிக்கு அனுப்புகிறது. இதன் காரணமாக, வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காணப்படுகிறது.

விநாயகரின் வேறு பெயர்கள் என்ன?

1. கணபதி

2. கஜமுகன்

3. பிள்ளையார்

4. ஆனைமுகன்

விநாயகர் சதுர்த்தி கட்டுரை:

விநாயகர் வரலாறு:- விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தினாள் அன்று விநாயகர் சதுர்த்தி அதி விமர்சனம்மாக கொண்டாடப்படுகின்றது. பொதுவாக மக்கள் எல்லாரும் விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி இவ்விழாவானது முந்தையம் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சி ஆட்சி காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்களின் வீடுகளில் பிள்ளையார் உருவ பொம்மை வைத்து பிள்ளையார் போட்டோவை அமைத்து வனங்குவார்கள்.

சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து இந்து மதத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அன்றையில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான பால கங்காதர திலகர் இவர் விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டுக்கு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தனர். அவை மட்டும் இல்லாமல் எல்லோரும் தங்கள் வாசித்திற்கு ஏற்ற போல் விளையாடு சிலைகளை செய்து போட்டோக்களை வைத்து தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து எல்லாரும் கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர்.

விநாயகர் பெருமைகள் || விநாயகர் தோற்றம் குறித்த புராண கதைகள்:

விநாயகர் வரலாறு:-  ஒரு நாள் தேவி பார்வதி அம்மாள் குளிக்க சென்ற போது. அங்கு காவலுக்கு தனது பணியாளர்கள் யாரும் இல்லாததால், தன்னுடைய உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை தேவி பார்வதி உருவாக்கி உயிர் கொடுத்து சிறுவனை காவலுக்கு நிக்க சொன்னார்.
யாரையும் நீ உள்ளே விட வேண்டாம் என்று அவர் சிறுவனுக்கு தேவை பார்வை அம்மாள் கட்டளை இட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமான் அவர்களே அப்போது அந்த சிறுவன் தடுத்து நிறுத்தினான் பின்னர் சிவபெருமான் கோவம் அடைந்து அந்த சிறுவனின் தலையை வெட்டி துண்டாகினார்.

அதன் பின்னர் பார்வதி தேவியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவ ராசியை தலையை துண்டித்து எடுத்து வருமாறு கட்டளையிட்டார்.

அவர்கள் அங்கிருந்து சென்று காடுகள் மலைகள் என்று தேடினர். அப்பொழுது அவர்கள் முதலில் பார்த்தது ஒரு யாலையை உடனே அவர்கள் சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்தனர். பின்னர் அவற்றின் தலையில் எடுத்துக் கொண்டு சிவபெருமான் அவர்களிடம் சென்றனர். அவர் உடனே அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து அந்த சிறுவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

தேவி பார்வதி குளிக்க சென்று அதன் பின்னர் வெளியே வந்து இந்தப் பிள்ளை யார் என்று கேட்டார். அதுவே சிறுவர்களுக்கு பிள்ளையார் என்று பெயர் ஆகிவிட்டது. அந்த சிறுவன் தான் பிள்ளையார்.

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமனம் செய்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ’ என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்’ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

சந்திரனன் சாபம்:

விநாயகர் வரலாறு:-  பூஜையில் பிரம்மன் அளித்த மாதங்களை கொழுக்கட்டை எடுத்து க்கொண்டு உயர கிளம்பி உலகெலாம் சுற்றி சந்திரலோகம் சென்றார். அப்போது பெருத்த தொந்தியுடன் ஒடிந்த தந்தமும் நீண்ட தும்பிக்கையும் கையில் கொழுக்கட்டையும் தாங்கி கொண்டு செல்கிறார் விநாயகரை கண்டு சந்திரன் வாய்விட்டு பிரகாசமாக சிரித்தான்.

சந்திரனை பார்த்த விநாயகர் அதிகம் கோபம் கொண்டு ஏ சந்திரனே நீ தான் பெரிய அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய் இன்று முதல் உன்னை யாரும் பார்க்க கூடாது. அப்படியே யாராவது உன்னை பார்த்தால் அவர்களுக்கு நீ வீண் அவகாசம் ஏற்படுவதாக என்று சபித்தார். அதன் பின்னர் சந்திரனும் ஒலி மழுங்கி தண்ணீருக்குள் அம்பாள் மலரில் மறைந்தான்.

சந்திரனின் சாபம் நீங்கிய விதம்:

விநாயகர் வரலாறு:-  சந்திரன் அல்லது கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று அவர்கள் முறையிட்டனர். பிரம்மனோ தானோ ருத்திரனும் முஸ்லிமோ தங்கள் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். நீங்கள் கணபதியை சரணடைவது தான் ஒரே வழி என்றும் அவரிடம் கூறிவிட்டார்.

தாங்கள் எந்த முறையில் வழிபட்டால் சந்திரன் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்டனர் அப்பொழுது ஒவ்வொரு கிருஷ்ண பஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்கு பிண் வருவது ) அப்பொழுது விரதம் இருந்து பல வகையிலான பழங்கள் கொழுக்கட்டை அப்பம் மோதகம் முதலியவற்றை கணபதிக்கு அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் என்று பிரம்மன் கூறினார்.
பிறகு தேவர்கள் பிரு கஸ்பதி குருயை சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தார்.

சந்தனம் இந்த முறையில் பூஜை செய்ய கணபதியும் மகிழ்ந்து பால கணபதியாக விளையாட்டு விளையாட அங்கே காட்சி தந்தனர். சந்திரனின் மனம் களிப்போற்று அவரை பணிந்து வணங்கினார்.

“தவம் காரணம் காரண காரணாநாம்

க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்”

என்று தன் செய்த தவறின் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே கூறினார். இது தான் சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்:

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விநாயகர் வரலாறு:-  ஒவ்வொரு ஆண்டு தோறும் ஆவணி மாத சுக்குல சதுர்த்தியை அன்று களிமண்ணால் செய்யப்பட்ட என் உருவத்தை கொண்டால் செய்து பாவலையுடன் அமைத்து பல பூக்களால் பூஜை செய்து விரைவில் கண்விழித்து முறையாக போதித்தால் அவ்வாறு செய்பவருக்கு அவன் தொடங்கிய காரியத்தில் எல்லாவற்றிலும் வெற்றியையும் சகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன் என்று விநாயகரே சந்திரனுக்கு கூறுவதாக சொன்னார்.

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை:

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம் சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கைக்கொள்கின்றனர்.

இதே போல மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பார்கள். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர்.

ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

விநாயகர் வரலாறு:-  வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

மேலும் மக்களின் வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம் ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம் அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, அல்லது குளத்திலோ, ஆற்றிலோ கொண்டு சென்றுவிட்டு கரைத்துவிடுவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி எப்படி வந்தது?

விநாயகர் சதுர்த்தி விழாவானது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது போன்று நாடு எங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் பிள்ளையாரை வைத்து வழிபடுகின்றனர்.

சதுர்த்தி திதி என்றால் என்ன?

சதுர்த்தி என்றால் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக க் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில் 15-நாட்கள் ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது நாள் “திதி சதுர்த்தி” ஆகும்

விநாயகர் சிலை கடலில் கரைப்பது ஏன்?

களிமண் நீரை உள்ளிழுத்து தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. இது ஆற்றில் படியும் போதும் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடிக்கு அனுப்புகிறது. இதனால், வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்தது. களிமண்ணுடன் தண்ணீர் சேர்ந்து செய்யப்படும் விநாயகர் சிலையை அன்றைய தினமே கரைத்தால் அந்த மண் ஆற்று நீரில் கரைந்து ஓடிவிடும்.

விநாயகரின் வேறு பெயர்கள் என்ன?

1. கணபதி

2. பிள்ளையார்

3. ஆனைமுகன்

4. கஜமுகன்

Leave a Comment