யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி - How To Start You Tube Channel In Tamil

Post views : [jp_post_view]

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி - How To Start You Tube Channel In Tamil

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி || How To Open You Tube Channel

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி : தற்போதைய காலகட்டத்தில் யூடியூப் பார்க்காத மனிதர்களை இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

உதாரணமாக, சொல்லப்போனால் நமக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த youtube வழியாக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

இதேபோல் நமக்குத் தெரிந்த விஷயங்களை நாமும் youtube வழியாக பதிவிட்டு எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்பது எத்தனை பேருக்கு முதலில் தெரியும்.

படிக்கத் தெரியாத நபர்கள் கூட யூடியூப் மூலமாக தினமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் எனவே யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி மற்றும் youtube சேனல் தொடங்குவது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி:-

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வலைதளம் தான் youtube ஆரம்ப காலத்தில் இதில் அதிகப்படியான வீடியோக்கள் பதிவிடப்படாமல் இருந்தது. அதனால் அதன் உள்ளே இருந்த அனைவரும் எளிமையாக பணம் சம்பாதிக்க தொடங்கியிருந்தனர் ஆனால் தற்போது, எண்ணற்ற நபர்கள் youtube இல் வீடியோக்கள் பதிவிட்டு கொண்டிருப்பதால் அவர்களை விட புதுமையான ஒரு விஷயத்தை செய்வதன் மூலமே நாம் youtube மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

Youtube ஐ பொறுத்த வரையில் எந்த ஒரு செய்தியையும் நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் அங்கே வீடியோவாக இருப்பதால் அதனை நாம் எளிமையாக கேட்கும் திறன் கொண்டு எந்த ஊர் தகவல்களையும் விரைவாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

யூடியூப் சேனல் தொடங்குவதற்கு என்னென்ன தேவை என்பதை பற்றி பார்ப்போம்.

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி :-

• உங்களுடைய ஸ்மார்ட் போனில் Gmail மொபைல் வாங்கியவுடன் ஓபன் செய்து இருப்பீர்கள்.

• இவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களுடைய மொபைலில் உள்ள Google Pay ஸ்டோருக்கு சென்று
Gmail ID உருவாக்கிக் கொள்ளுங்கள்.

• இப்போது உங்கள் மொபைலில் youtube என்ற App இருக்கு சென்று செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள்.

• அங்கே சென்றதும் Profile ஐ கிளிக் செய்யுங்கள். அதனை கிளிக் செய்ததும் இப்பொழுது youtube சேனல் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.

• அதனை கிளிக் செய்து விட்டு உங்களுக்கு அதாவது உங்களுடைய youtube சேனலுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்படுகிறீர்களோ அந்த பெயரை அதற்கு வைத்துவிட்டு ஓகே செய்தால் போதும் எளிமையாக இரண்டு நிமிடத்தில் ஒரு youtube சேனலை கிரியேட் செய்துவிடலாம்.

யூடியூப் சேனலில் வீடியோ போடுவது எப்படி:-

முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் எந்த வீடியோவை யூடியூபில் அப்லோடு செய்ய விரும்புகிறீர்களோ அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் யூடியூப் செயலுக்குள் உள்ளே சென்று அங்கே நடுவில் இருக்கும் பட்டனை Upload Videos என்ற பகுதி இருக்கும் அதற்கு உள்ளே சென்று நீங்கள் தேர்வு செய்த வைத்துள்ள வீடியோவை அப்லோட் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *