மரம் வளர்ப்போம் கட்டுரை

மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai 

Post views : [jp_post_view]

மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai 

மரம் வளர்ப்போம் கட்டுரை

Maram Valarpom – மரம் வளர்ப்போம் கட்டுரை: மரங்கள் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை இல்லை, உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் சுவாசிக்க மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகளுக்கும் மரத்தை சார்ந்தே இருக்கிறோம். மக்கள் தொகைப் பெருக்கம் மரங்களின் தேவையை அதிகரித்ததோடு மரங்களின் அழிவிற்கும் காரணமாகிவிட்டது. நாம் அழித்த மரங்களை நாமே மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம்.இன்றைய தேதியில் ஒருவர் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேவை என்று இறங்கிவிட்டாலே அவர் முதலில் செய்ய வேண்டியதாகப் பரிந்துரைக்கப்படுவது மரம் நடும் வேலையைத்தான். அரசியல்வாதிகளும்கூட இப்போதெல்லாம் லட்சக்கணக்கான மரங்களை நட்டோம், கன்றுகளை வழங்கினோம் என்று அடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மரங்களின் தேவை
  3. மரங்களை அழிக்கும் மனிதனின் மடமைத்தனம்
  4. மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
  5. மரங்களை அழிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்
  6. மரங்களைப் பாதுகாப்போம்
  7. முடிவுரை

முன்னுரை:

மரம் வளர்ப்போம் கட்டுரை: இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் ஒன்றாகவும்⸴ இயற்கை அன்னை மடியில் வளர்ந்த முதல் குழந்தைகளாகவும் மரங்கள் இருக்கின்றன. நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரங்களும் தான் நம் சமுதாயத்தையும்⸴ அடுத்துவரும் சமுதாயத்தையும் வாழ வைக்கும்.

மரங்களின் உதவியின்றி மனிதகுலம் வாழ்வது கடினம். உயிர் வாழ்வதர்க்கு இன்றியமையாத மரங்களை நாம் வளர்க்க வேண்டும். இதனை மறந்து மனிதன் மரங்களை வெட்டி சுயலாபம் காண்கின்றான்.

இதனால் பல விளைவுகளையும் எதிர் நோக்கிய வண்ணமுள்ளான். அவ்வகையில் மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

மரங்களின் தேவை:

மற்ற கோள்கள் எதிலும் இல்லாத தனி சிறப்பே பூமியில் நீர் இருப்பதும், மழை பொழிவதும் ,தாவரங்கள் வளரக்கூடிய சூழ்நிலை இருப்பது தான். மரங்கள் பூமிக்கும் மனிதர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கின்றன.

மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையினை பொழிவிக்கின்றன. அத்துடன் வேகமான காற்று மோசமான சூரிய கதிர்வீச்சு போன்றனவற்றை உறிஞ்சி மனிதர்களை பாதுகாக்கின்றன. மனிதர்கள் இழைப்பாற நிழல் கொடுக்கின்றன.

பூகோளவெப்பமயமாதல் போன்ற நிலமைகள் உருவாக மரங்கள் அழிவடைவது தான் மிக முக்கிய காரணம் ஆகும் .

மரங்கள் சுவாசிக்க காற்று தருகின்றன. பொழிகின்ற மழையை தேக்கி வைக்கின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன. உண்பதற்கு காய்கனிகளையும், கிழங்கு தானியங்களையும் தருகின்றன.

அழகான பூக்களை தந்து இப்பூமியை அழகாக்கின்றன. மன அழுத்தம் நிறைந்த இவ்வாழ்க்கையில் பலபேரின் மன அமைதிக்கு இவ்வியற்கையே காரணாகும்.

காய்ந்து விறகாக எரிபொருளாகவும் மருந்து மூலிகைகளாகவும் வாழ்விடங்களை அமைக்க மரங்களாகவும் உதவுகின்றன.

மனிதர்கள் மாத்திரம் அன்றி பலகோடி பூச்சிகளும் ஊர்வனவும் பாலூட்டி விலங்குகளும் பறவைகளும் வாழ்விடம் கொடுத்து உணவளிக்கும் பூமியின் மிகப்பெரும் உயிர்ப்பெருந்திணிவு காடுகளாகும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவம் எண்ணற்றவையாகும்.

மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai

மரங்களை அழிக்கும் மனிதனின் மடமைத்தனம்:

மரம் வளர்ப்போம் கட்டுரை: ன்று உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் மனித சுயநலத்திற்காகவும், மனித தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டுவிட்டன. இன்றும் அழிக்கப்பட்ட வண்ணமேயுள்ளன.

குறிப்பாக சேனைப் பயிர்ச்செய்கை⸴ கட்டுமானத் தேவைகள்⸴ குடியிருப்பு⸴ தொழிற்சாலைகள் அமைத்தல்⸴ சாலை விரிவாக்கம்⸴ விமான நிலையங்கள் அமைப்பு⸴ சுரங்கப் பாதைகள் அமைப்பு போன்ற பல காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன.

இவ்வாறு மரங்களை அழிப்பதனால் அதன் பயன்கள் மறைந்து எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன.

காட்டுத்தீ⸴ சூறாவளி⸴ வெள்ளப்பெருக்கு⸴ வறட்சி போன்ற இயற்கை காரணங்களாலும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

மனிதன் மரங்களின் முக்கியத்துவத்தினை அறியாது அவற்றினை அபிவிருத்தி நடவடிக்கை எனும் பெயரில் அழித்து வருகின்றமையானது ஒரு இழி செயலாகும்.

இச்செயல்ப்பாடு அதிகம் அபிவருத்தியடையந்து வரும் நாடுகளில் உயர்வாக காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் மரங்களின் முக்கியம் அறிந்து அதனை அழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி மரங்களை பாதுகாத்து வருகிறது.

தென்னாசியா போன்ற வளர்முக பிராந்தியங்கள் நகராக்கம், அபிவிருத்தி, வேலைத்திட்டம் என்ற பெயரில் இருக்கின்ற காடுகளை அழித்து நாசமாக்கி வருகின்றனர்.

காடுகளில் வேட்டையாடல் பெறுமதியான மரங்களை விற்று பணம் பார்த்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மரங்களை அழிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்:

முற்காலத்தில் போல் இல்லாது மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மரங்களை வெட்டுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது.

பயிர்ச்செய்கை நேரத்தில் வரட்சியும் அறுவடை நேரத்தில் புயலும் தோன்றுகின்றது. நாள்தோறும் வெப்பம் அதிகரிக்கின்றது. பயிர் நிலங்கள் தரிசு நிலங்களாகின்றன. பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் வறண்டு போகின்றன.

இதனால் விலங்குகளும்⸴ பறவைகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. மண்சரிவு ஏற்படும் போது வளமான மண் எடுத்துச் செல்லப்படுகின்றது.

மரம் நடுதல் தொடர்பான முயற்சிகள்:

மரங்களே எம் மண்ணின் வரங்கள் இவற்றை எம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். அவர்கள் பாதுகாத்த மரங்கள் தான் இன்று எமக்கு நிழலாகி பயன் தந்து கொண்டிருக்கிறது.

நாமும் மரங்கள் நடவேண்டும் அண்மையில் காலமான தென்னிந்திய திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் நினைவாக ஒரு கோடி மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தை அமுல்படுத்திய மகத்தான பணியை ஆற்றி சென்றார்.

அவர் விட்டு சென்ற பணியை நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டும். இன்றைக்கு உருவாகும் நகரங்கள் அதிகம் பசுமை நகரங்களாகவே உருவாக்கப்பட்டுவருவது சிறப்பான ஒன்றாகும்.

மரங்களைப் பாதுகாப்போம்:

அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட சாலையெங்கும் மரங்கள் நட்டான் என்பதே அதிகம் நினைவிலுள்ளது. அவ்வகையில் நாமும் மரங்களை நட்டு அதனைப் பாதுகாக்க வேண்டும்.

சுபகாரியங்களை மேற்கொள்ளும் போது அதன் நினைவாக மரங்களை நடலாம். அதன் பயனை நாம் பெற்றுக் கொள்ளலாம். சிறுவயதிலிருந்தே மரங்களின் அவசியத்தையும்⸴ அதன் பயனையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் மனிதர்கள் மரங்களை நேசிப்பார்கள். ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக பல மரக்கன்றுகளை நடவேண்டும்.

முடிவுரை:

சராசரியாக ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை என்று கணித்திருக்கிறார்கள். உலகமக்கள் சனத்தொகையிலும் அதிகமாக மரங்கள் இப்பூமியில் காணப்படவேண்டும் ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும்.

காடுகளை நாம் செயற்கையாக உருவாக்க வேண்டிய சூழலை இங்கு உருவாக்கியது யார்? நாம் தான்.

இயற்கையாக உருவாகியவை தான் இந்த பெரும் விருட்சங்கள் நிறைந்த இக்காடுகள் இவற்றை அழிப்பதை நிறுத்தி பாதுகாப்போம்.

எல்லா வளங்களையும் அழித்து நாமும் அழிந்து எமது வருங்கால சந்ததியினரின் அழிவுக்கு நாமே வித்திடாமல் மரங்களை காப்போம் எம் வாழ்வை காப்போம்.

உண்மையிலேயே மரம் நட்டால் மழை வருமா

எந்த மரம் எடுத்து கொன்டாலும் இலைகள் இருக்கும். அந்த இலைகளில் துளைகள் இருக்கும். துளைகள் என்றால் ஓட்டைகள்தானே என்று இலைகளில் எங்கே ஓட்டைகளைக் காணோமென்று தேடத் தொடங்கிவிடாதீர்கள். அது நுண்ணோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளும் அளவில் மிக நுண்ணியதாக இருக்கக்கூடிய நுண்துளைகள். அது இலைகளில் மட்டுமில்லை, மரத்தின் தண்டுகளிலும் இருக்கும். விளக்க எளிமையாக இருப்பதற்காக நாம் இப்போதைக்கு இலைகளை வைத்தே பேசுவோம். அந்த நுண்துளைகளின் மூலம்தான் மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது.

இலைகளிலுள்ள துளைகள் மரம் சுவாசிப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. மரங்களின் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. என்ன, மரங்களுக்கு வியர்க்குமா.கேட்பதற்கே விசித்திரமாக இருக்கின்றதா! ஆம், இயல்பாகவே மரங்களுக்கும் வியர்க்கும்.நம் உடலிலிருந்து ஏன் வியர்வை வடிகின்றது. மனித உடல் வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்கின்றது. அதுபோலத்தான் மரங்களும். மரங்கள் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை. அதைத் தன் ஆற்றல் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஆனால், இந்தச் செயல்முறை மழையாக மாறுவதற்குத் திரும்பிய பக்கமெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே போனால் மட்டும் போதாது.

முக்கிய மரவகைகள்

வேப்பமரத்தின் மிரளவைக்கும் அதிசயங்கள் :

வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள், வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .

அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர்.

தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை உணர்ந்தும் , உணராமலும் – அறிந்தும் , அறியாமலும் கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் . வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக் காணலாம் .

வேப்பமரம் நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .

ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை . செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *