இரண்டாவது – இராமரிஷி வனம் – தொடர்ச்சி
(முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
(இரண்டாவது பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
மகாபாரதம் கதை தமிழ் பகுதி – 3 – படைகளெல்லாம் மண்ணோடே சாய்த்து வெட்டி, அண்ணருக்குப் பட்டங்கட்டி அரசாண்டிருங் களப்பா தருமருக்குப் பட்டங் கட்டி தரணியை யாண்டிடுங்கள். எப்போதும் போலே இராச்சியத்தை யாண்டிடுங்கள் பெற்றாள்வயிறதனில் இட்டேன் பெரு நெருப்பை குந்தியம்மாள் தன் வயிற்றில் கொடிய தணல் வைத்தேனே.
அன்றெழுதுங்கர்த் தனவன் அழித்தெழுதப் போவதில்லை. விதிவசத்தை யாராலும் வெல்ல வேமுடியாது. இனிப்பிழைப் பேனென்று நீ எண்ணாதே தம்பியரே, கிட்ட நீவாராதே எட்ட நில்லு தம்பியரே,
போய் வாருமென்றானே.
போர் க்கடங்கா வீமனவன் அவ்வார்த்தை தான் கேட்டு அர்ச்சுனன் துக்க முற்று கண்ணீரைச் சோர விட்டுக் காளையர்ச்சுனர். மெத்த சலித்துடம்பு விசாரம் பெரிதாகி அண்ணாவே யென் வீமா அடியேனொரு வார்த்தை எழுத்துப் படியல்லால் எவரால் விலக்கவசம் தலையிலெழுத்தது தான் தவறாது.
தம்பியரே பாம்பின் வயிற்றிலே நீர் பாராமல் மாண்டதும் அரவத்தின் வயிற்றிலே நீர் ஆணழகர் மாண்டதுவும், அண்ணன் தருமருடன் அடியேனொரு வார்த்தை உரைத்தேனேயானாக்கால், உள்ள மிகப் பதறி துள்ளிப் பதைத்துயிரை துடி துடித்து விட்டிடுவார். எப்படி நானுரைப் பேன் என்னுடைய அண்ணாவே போக மனம் வருமோ போர் வேந்தே அண்ணாவே உன்னை விட்டு நான் பிரிந்து உயிருந்தரிப் பேனோ இப்பெரிய பாம்புதனை இக்ஷணத்திற் கொன்றிடுவேன்.
வயிற்றைக் கிழித்திடுவேன், வந்திடு மண்ணாவே என்றேயெழுந்தானே எழில் சேரர்ச்சுனனும் வில் வளைத்து நாரி பூட்டி வில்லை குணத் தொனி செய்து அம்புறாத் தூணியிலே, அஸ்திரம் எடுக்கையிலே பாரமலைப் பாம்பு பார்த்ததே அர்ச்சுனனை கான மலைப் பாம்பு கண்டதே அர்ச்சுனனை.
அப்போது மலைப் பாம்பு ஆவலுடன் ஓடி வந்து அர்ச்சுனரைத் தான் பார்த்து அருகே தானோடி வந்து வாள் விஜயனைப் பார்த்து, வாயைத் திறந்து வந்து எடுத்து விழுங்கிற்று இயலான அர்ச்சுனனை பார்த்தனெனு மர்ச்சுனனை பாம்புவிழுங்கியது எடுத்து விழுங்கியது.
ஏப்பம் விட்டுத் தானிருக்கும். அப்போது வில்வளைத்த அர்ச்சுனனு மேது செய்தான் அரவத்தின் வயிற்றில் அர்ச்சுனனும தான் விழுந்தான். அண்ணாவே அண்ணாவே அடியேனும்வந்துவிட்டேன்.
பஞ்சபாண்டவர் வனவாசம்:
தானு மிங்கே வந்து விட்டேன். நலம் பெரிய அண்ணாவே அண்ணன் தருமராஜருக்கு ஆர் போயுரைப் பார்கள். எழுத்துப் படியல்ல வோ இருவருக்கு மொன்றாச்சு
வில் விஜயா வேதன் விதித்த விதிப்படியே, என்றேயிரு வருமாயிருந்து புலம்புகிறார்.
தக்க புகழுடைய தருமரவரேது சொல்வார் தம்பி நகுலா நீ தாம முடியானே. என் செய்வேனென் செய்வே னென்று புலம்புகையில் வெற்றி மதயானை வீமனவனேது சொல்வான். அநேக நெடும் பொழுது ஆன பிறகாக வெற்றி மதயானை வீமனைத் தான் தேடி போன தோரர்ச்சுனனைப் பின்னேவரக் காணேன்.
இன்னம் வரக் காணேன் ஏதொன்றும் நானறிய இக்காட்டில் ராட்சதர்கள் எத்தனையோ கோடியுண்டு எவரோடே சண்டையிடுகிறா ரென்றறியேன். காணவும் போகிறேனோ, கட்டழகர் தம்பியரை பார்க்கவும் போகிறேனோ. பார் மன்னரிருவரையும் தேடியழைத்துச் சீக்கிரம் வருவீரோ பார்த்தே அழைத்துப் பரி நகுலா வருவீரோ என்றே உரைத் தங்கே எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வார்த்தை தான் கேட்டு எழுந்தான். நகுலனுமே படுசுட்டி ஒட்டியாணம் பசும் பொன்னாற் சமுதாடும் நீண்டிடும் கால்களுக்கு நெரிஞ்சிப் பூச்சல்லடமாம், மண்டியிடுங் கால்களுக்கு மாதளம் பூச்சல்லடமாம். தூக்கி வைக்கும் கால்களுக்கு, துத்திப் பூச்சல்லடமாம்.
சல்லடங்கள் போட்டுமல்லோ தட்டி விரிந்து கட்டி தட்டி வரிந்து கட்டித் தாமரைப் பூச்சுங்கு விட்டு தன்னாயு தங்களையே தானெடுத்துச் சீர் நகுலன் காடு செடி தாண்டி, கரியமலை தான் தாண்டி, செந்நாய் புலி கரடி சீறும் வனந்தாண்டி காலடியைப் பார்த்து, கடுகியே தேடிய பின், அக்கானகந்தனிலே ஆராய்ந்து தேடியபின் அண்ணா வேயென் வீமா, அர்ச்சுனா யென்றழைத் தான். கூவியழைத் தானே கோடை நகுலனுமே அழைத்த குரல் கேட்டதுவே அர்ச்சுனற்கும் வீமனுக்கும், வெற்றி மத யானை வீமனுமேது சொல்வான்.
ஆணாலழகு மன்னன் அர்ச்சுனனு மேது சொல்வான் தம்பி நகுலாவோ, தாம முடியானே அண்ணனையும், என்னையும் அரவம் விழுங்கினது. மலைப்பாம்புக் கிரையானோம். மன்னவனே தம்பியரே கிட்ட நீ வாராதே எட்டி நில்லு மென் பிறப்பே
சேர நீ வாராதே தூர நில்லு மென் பிறப்பே அண்ணருக்குப் போய் சொல்லும் அரவம் விழுங்கின தாய் அஸ்தினாபுரத்துக்கு அண்ணாவைக் கூட்டிப் போய் துரியோ தனனுடனே சொன்னாலே செய்திகளை
அர்ச்சுனரை, வீமரை அரவம் விழுங்கிற்றென்றால் மெத்த மகிழ்ந்திடுவான். விஷ நாகங் கொண்டவனும் தருமபுர முள்ளதெல்லாம் தருமரையாளு மென்பான் எப்போதும் போல்நீங்கள் இராஜ்ஜியத்தை யாண்டிருங்கள்
இனியும் -நாங்கள் பிழைப்போ மென்று எண்ணா தீர் தம்பியரே.
இவ்வார்த்தை தான் கேட்டு ஏது சொல்வான் நகுலனுமே அண்ணாவே நீர் கேளும் அரவத்தை கொல்லுகிறேன். வெட்டியெறிகிறேன் வெளிப்படுங் களண்ணமாரே
உங்களை விட்டெனக்குப் போக மனம் வருமோ விட்டுப் பிரியவே வேறு மனம் வருமோ அண்ணனார் வயிற்றிலே அனலைச் சொறிவேனோ, சிறுவன் போய்ச் சொன்னாலே சீவனை விட்டிடுவார்.
மாள நினைப்பாரே மதிகேடு வந்துவிடும், போக மனம் வருமோ புண்ணியரே யென்றனக்கு அவ்வார்த்தை தான் கேட்டு அர்ச்சுனனேது சொல்வான் தலையிலெழுதினதை தள்ளி வைக்கப்போறீரோ, ஏட்டிலெழுதினதையெடுத்
தெரியப் போறீரோ,
வரும் வினைகள் வந்தாலே மடியேந்த வேண்டாமோ, ஆயனெழுத்தளவு ஆகையால் மாண்டு விட்டோம்.
இனி நாம் பிழைப்போ மென்றெண்ணாதீர் தம்பியரே மற்றும் பிழைப்போமென்று மன்னவரே யெண்ணாதீர், போடா நகுலாவென்று புகன்றானர்ச் சுனனும், செப்பும் மொழி கேட்டுச் சீராய் நகுலனுமே. இப்பாம்பை வெட்டி யெரிகின்றேனிப் போது பாம்புதனைக் கொல்ல வென்று பட்டாவுருவி நின்றான்.
பார்த்தது அப்பாம்பு பாரமுடி மன்னவனை கண்திறந்து பார்த்தது கடுக மலைப் பாம்பு வாயைத் திறந்தவனை வாரி விழுங்கிற்று,
பாம்பின் வயிற்றிலே தான் பரி நகுலன் போய் விழுத்தான்.
அண்ணாவே யென்னையும் அரவம் விழுங்கிற்றே என்னையுங் கூட எடுத்து விழுங்கிற்றே உங்களுடனாக ஒருவனுஞ் சேர்ந்தேனென்றான்.
மூவருக்கும் ஓரெழுத்தாய் முடிந்ததே என்ன செய்வோம். அண்ணரைத் தம்பியரை ஆரணங்கைக் கைவிட்டோம் என்று புலம்பியே இருக்கின்ற வேளையிலே,
வில்லாளிப் பார்த்தனுமே ,வீமனுமேது சொல்வான்.
அப்போதே சொன்னேனே தப்பு வருமென்று என் வார்த்தை கேளாமல், இங்கு வந்தீர் தம்பியரே வந்த விடந்தனிலே, வல்வினையைக் கண்டீரோ, என்றேயவர்கள் சொல்லியிருந்து விசார மிட்டார் இப்படியாக வேயிருக்கின்ற வேளையிலே பல நாழி சென்ற பின்பு பார்த்திபர் தர்மராஜர் மெத்த விசாரப்பட்டு வெகுவாய் மனங் கலங்கி சகா தேவனைப் பார்த்து தருமரைச் சலுற்றார்.
வீமன் கனி பறிக்கப் போய் வெகு நேரமாச்சுதப் போ அவனைத் தேடிவாரு மென்று அர்ச்சுனரைப் போகவிட்டேன். அருச்சுனன் தேடிப்போய் அநேக நாழிகையாச்சு போன தோரர்ச்சுனனும், பின்பு வரக் காணேனே நகுலனைப் போக விட்டு நம்ம வரைப் பாரு மென்றேன்.
காளை நகுலனுமே, கடு கவரக் காணேனே செத்தார் பிழைத்தாரோ, செய்தி தெரியவில்லை. மாண்டாரோயானறியேன் மன்னவனே என்ன செய்வேன் ஆரோடே சண்டை அமரது செய்கிறாரோ, எவரோடே சண்டை ஏடா குடங்களுண்டோ அவர்களைப் பார்த்து நீ ஒரு நொடியில் வாராயோ ஓடியழைத்து நீ, ஒரு நொடியில் வாராயோ கண்டு அழைத்து நீ கடுகெனவே வாராயோ, அண்ணருரை கேட்டு அழைத்து மேவாராயோ.
அப்போது சகாதேவன் ஆணழகன் தானெழுந்து சல்லடங்களிட்டுமல்லோ தட்டி வரிந்து கட்டி, தட்டி வரிந்து கட்டித் தாமரைப் பூசுங்கு விட்டு கச்சை வரிந்து கட்டிக் கருங்கச்சை சுங்கு விட்டு ஆயுதந்தானெடுத்து அடைவாய்.
நடக்க லுற்றான் காலடியைத் தேடியே தான் கடுகியே நடக்கலுற்றான் காடுஞ்செடியுங், கனத்த மலை தான் தாண்டி ஆறுஞ்சுனையு மதிகவனந்தாண்டி சில்லென்ற காடும்.
செடியும் வனந்தாண்டி தேடியே வாரானே திசை தோறுங் கானகத்தில் எங்கெங்குந் தேடினானே. இனிய விட மாராய்ந் தான். கண்ணாலே கண்டதில்லை காளைகளான வரை பாராவிடங்களில்லை. பார முடிராஜர்களை தேடியே வந்துமவன் திகைத்தாற் போல் நின்றுவிட்டான்.
அடியனந்த மாயவரே ஆதி மூலம் வந்தருளும் அண்ணா மதவீமா அருச்சுனரேசீர் நகுலா என்று-கூவியழைத் தானே கொற்ற மன்னவீரியனும் கூவியழைத்த குரல் கேட்டது.
மூவருக்கும் ஏன்காண் சகாதேவா எங்குவந்தீர் தம்பியரே அரவம் விழுங்கினது. ஆணழகர் மூவரையும், தூர நில்லுந்தம்பியரே சேர நீவாராதே, எட்ட நில்லுந் தம்பியரே கிட்ட நீவாராதே அரவம் விழுங்கினதாய் அண்ணருக்குச் செய்தி சொல்லும்,
நீ – அழுது புலம் பாதே அண்ணரைக் கூட்டிப் போய் அஸ்தினாபுரிக்கு அடைவுடனே போய்ச் சேரும் வீமனருச்சுனரை மிக்க நகுலரையும்,
அண்ணன்மார் மூவரையும் அரவம் விழுங்கின தாய்த் துரியோதிரனுடனே செய்தி நீ சொன்னாலே சந்தோஷமாவானே, சரீப்பக் கொடியோனும், மெத்த மகிழ்ந்திடுவான்.
விட நாகங் கொண்டவனும்,
தருமாபுரத்தையல்லோ சர்ப்பக் கொடியோன் கொடுப்பான் சீமை தருவானே சிறந்ததுரைத் தனமும்,
பூமி தருவானே பொல்லாச்சுயோ தனனும் அண்ணன் நீருமே அவ்வரசையாண்டிருங்கள் போங்காணுந் தம்பியரே புகழ் பெரிய ராஜாவே, என்றும வருரைத்து இருக்கின்ற வேளையிலே இவ்வார்த்தை தான் கேட்டு இளைய சகாதேவன், போயுரையுமென்று சொல்லி புண்ணியரேசொன்னீர்கள் புகழ்வேந்தரண்ணருக்குப் போய் நானுரைத் தாக்கால் சொன்னேனேயா மாகிற் சொர்க்க பதி சேர்ந்திடுவார்.
இவ்வார்த்தை தான் கேட்டு இன்னுமிருப்பாரோ, அண்ணனுரை கேட்டு ஆணழகனேது சொல்வான்.
மன்னனுரை கேட்டு மறு வார்த்தையேது சொல்வான்.
மூவரைப் பறி கொடுத்து முடி சூட்டியாளுவரோ,அவர்-செத்து மடிந்திடுவார். சிவலோகஞ் சேர்ந்திடுவார். மாண்டு மடிந்திடுவார். வைகுந்தஞ் சேர்ந்திடுவார்.
சென்று நான் சொன்னாலே சீவன் விடுவாரே துடித்த புறாப் போலே துள்ளி விழுவாரே அடித்தமயில் போலே அலறி விழுவாரே.
சாகத் துணிவாரே தர்மலிங் கரண்ணாவும் போகத் துணிவாரே, பொறுமையுள்ள தர்மலிங்கம்.
எப்படிக்குப் போயுரைப்பேன் என்னுடைய அண்ணர்களே, என்று சகாதேவன் ஏங்கிப் புலம்ப லுற்றான். அடியற்ற மரம் போல அலறிப் புரண்டழுவான்.
மலையே பருவதமே மாண்டு மடிந்தீரோ, செம்மலையே பருவதமே செத்து மடிந்தீரோ, உங்களைப் பறி கொடுத்து ஒருத்தனாய்ப் போவேனோ,
அண்ணர்களே யென்று சொல்லி அலறிப் புலம்பினான்.
அழுத குரல் கேட்டு அம்மூவரேது சொல்வா.ர் தலையிலெழுதினதை தள்ளி வைக்கப் போறீரோ
ஏட்டிலெழுதினதை எழுதி வைக்கப் போறீரோ, ஈசனெழுதியதில் எள்ளளவுங் குறையாது.
சொல்லாதே தம்பி நீ சுருக்காக யெழுந்திரென்றார். பேசாதே தம்பி நீ போய் பிழையும் வையகத்தில். இவ்வார்த்தைதான் கேட்டு ஏது சொல்வான் சகாதேவன். உங்களைப் பார்த்து நடக்கவே தான் பாவி மனம் வருமோ கண்டு நடக்கவே. தான் போக மனம் வருமோ, பொறுத்து நடக்கவே தான் போக மனம் வருமோ, இப்பாம்பைக் கொன்றிடுவேன்.
இயலான ராஜர்களே பாம்புதனைக் கொல்லுகிறேன். பாருமென்று வாளெடுத்தான் என்று உறுவினான். இளைய சகாதேவன் கத்தி உருவையிலே கண்டதே அப்பாம்பு கண்டது மலைப்பாம்பு கணித நூற்கோமானை வாயைத் திறந்து வாரி விழுங்கின்து எடுத்து விழுங்கினது.
இளைய சகா தேவனையும், அப்போது சகாதேவன் ஆணாலழகு மன்னன் என்னையும் விழுங்கினது. என்னுடைய அண்ணாவே உங்களுடனாக ஒருவனும் வந்து விட்டேன்.
அவ்வார்த்தைதான் கேட்டு ஆணழகரேது சொல்வார் என் வார்த்தை தள்ளி இருந்தீரே. தம்பியரே நால்வருக்கு ஓரெழுத்து நான் முகனெழுதிவைத் தான் அண்ணர் தர்மராஜாவை, அல்ல வருங்கை விட்டோம். ஆச்சி துரோபதையை அரிவையரைக் கைவிட்டோம் என்று புலம்பியே தானிருந்தார்கள்.
நால்வருகே அநேக நெடு நேரமான பிறகாக தக்க புகழ்பெரிய தருமரவரேது சொல்வார். அன்னமே சொர்னமே அமிர் தப்ப சுங்கிளியே தேனே மடமயிலே தித்திக்குந் தெள்ளமுதே கன்னல் மொழியாளே கற்கண்டே சர்க்கரையே சாந்துக் கழுத்தியரே சந்தனப் பூமேனியரே கோர்வைக் கழுத்தியரே குங்குமப் பூமேனியரே குங்கும மொத்த தொரு கொல் பேரிடையாளே, நெருப்பிற் பிறந்த பெண்ணே நீலவர்ணன் தங்கையரே, கை மோசம் வந்ததுவே, கண்மணிகளைக் காணேன் போகவழியறியேன்.
புதுமைகளொன்றறியேன் செத்தார் பிழைத்தாரோ சேதியொன்று நானறியேன் மாண்டார் பிழைத்தாரோ மறுவார்த்தை நானறியேன் கடுகியெழுந் திருங்காண் கானகத்தில்தேடிடுவோம் என்று புலம்பி எழுந்தாரிருவருமாய் காலடியைப்பார்த்துமே கடுகியேவாரார்கள் தேடியேவாரார்கள் சீரானகானகத்தில் அப்பாமதவீமா அழகான வருச்சுனரே….. தொடரும்.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .