பூவின் ஏழு நிலைகள் யாவை

பூவின் ஏழு நிலைகள் யாவை – Seven Stages Of Flower In Tamil

Post views : [jp_post_view]

பூவின் ஏழு நிலைகள் என்னென்ன தெரியுமா? Seven Stages Of Flower In Tamil

பூவின் ஏழு நிலைகள் யாவை

பூவின் ஏழு நிலைகள்.!

Seven Stages Of Flower In Tamil – பூவின் ஏழு நிலைகள் யாவை :- அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.!  இன்றைய நமது பதிவில் பூக்களின் ஏழு நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பூக்கள் அனைவருக்கும் பிடித்தமானவை. பொதுவாக, பூக்களைப் பார்த்தால், பூக்கும் முன் புதர் என்றும், பூத்த பின் பூ என்றும், பூ உதிர்ந்தால் வாடிய பூ என்றும் எப்படிச் சொல்வோம். நாம் ரசிக்கும் பூக்களுக்கு, நம் முன்னோர்கள் அவற்றின் பருவங்களையும் நிலைகளையும் காரணப் பெயர்களுடன் தமிழில் குறிப்பிட்டுள்ளனர்.

பூக்கும் ஏழு நிலைகள் எனென்ன – Seven Stages Of Flower In Tamil

Seven Stages Of Flower In Tamil :- நமது தமிழ் மொழியில் பூவின் நிலைகள் ஏழு வகைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் சங்க காலத்தில் இந்த ஏழு பருவங்களும் மேலும் ஆராய்ந்து பன்னிரண்டு பருவங்கள் என்று குறிப்பிடப்பட்டன. அவை என்னவென்றுஇன்றைய நமது https://mttamil.com/ பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

அரும்பு – பூக்கும் பருவத்தின் முதல் நிலையினை தான் அரும்பு என்று சொல்லப்படுகிறது.

அரும்பு என்ற பருவத்தை மூன்று உட்ப்பிரிவாய் பிரித்திருக்கிறார்கள். அவை என்னவென்றால்,

  • நனை – உள் புறத்தில் ஈரப்பதம் மற்றும் தேன் நினைப்புடன் காணப்படும் நிலை ஆகும்.
  • முகை – தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நிலை என்று பொருள் ஆகும்.
  • மொக்குள்– பூவுக்குள் பருவமாற்றமான மணம் பெறும் நிலை ஆகும்.

மொட்டு –அந்த அரும்பு மொக்கு விடும் நிலையினை தான் மொட்டு என்று இரண்டாம் பருவமாக சொல்லப்படுகிறது.

முகை – பூ கொஞ்சம் விரிந்திருக்கும் நிலையை தான் முகிழ்க்கும் நிலையே என்று மூன்றாவது பருவமாக சொல்லப்படுகிறது.

முகையை இரண்டு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை தான்,

  • மகிழ்- மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை ஆகும்.
  • போது – மொட்டு மலரும் போது ஏற்படும் புடைப்பு நிலைஆகும்.
  • மலர்- பூ பூக்கும் நிலையை தான் பூவாகும் நிலை என்று நான்காவது பருவமாய் சொல்லப்படுகிறது.

அலர்- மலர்கள் இன்னும் விரிந்து காணப்படும் நிலையினை தான் மலர்ந்த இதழ் விரிந்த நிலை என்று ஐந்தாவது பருவமாய் சொல்லப்படுகிறது.

வீ – பூ நன்கு விரிந்து வாடும் நிலையை தான் வீ என்று சொல்லப்படுகிறது. வீ என்பது அழிவு, நீக்கம், மடிவு என்று அர்த்தம் அதாவது பூ வாடி கீழ் விழும் நிலையை தான் ஆறாவது பருவமாய் சொல்லப்படுகிறது.

Seven Stages Of Flower In Tamil :- செம்மல் – பூ வதங்கிக் கிடக்கும் நிலையை தான் செம்மல் என்றே சொல்லப்படுகிறது. செம்மல் என்பது அந்த பூ வதங்கி சிவப்பு நிறத்தில் போகிவிடும் அதைத்தான் ஏழாவது பருவமாய் சொல்லப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *