பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை – Birthday Wishes in Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை – Birthday Wishes in Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birth Day:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை: நம்முடைய அன்புக்குரியவர்களுக்கு வருகின்ற பிறந்தநாள்களே நாம் பல்வேறு வகையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்வோம்.

இதனை ஓர் வித்தியாசமான முறையில் அவர்களுக்கு உங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

100+ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள birthday kavithai Tamil உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்குப் பிறந்தநாள் கூறி மகிழுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:

 1. உதிராத சூரியனாய், உலகிற்கு ஒளி வீச, உனை பூமிக்கு பரிசளித்த, உன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.
 2. நீ பிறந்த நிமிடத்தைப் பார்த்து மற்ற நிமிடங்கள் கோபித்து முறைக்கின்றன. காலண்டரும், நீயும் மட்டுமே அறிந்த உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 3. பூப் போன்ற புன்னகை பொக்கிஷமாய் மின்னட்டும். புதியதோர் பொருட்சிலையை உன்னைக் கண்டு வடிக்கட்டும். வான்கண்ட நிலவென உன் புகழ் வளரட்டும். உன்னைப் பெற்ற அன்னையரை ஊர் போற்றி மகிழட்டும். சந்தோச சாரல் எல்லாம் உன் வாசலில் வீசட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 4. ஆகாசம் வாசலாக உன் வாழ்வு திறக்கட்டும் இனிமையாக மலர உன் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 5. இந்த உலகத்தில் இதுவரை யாருக்கும் கிடைக்காத சந்தோசம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் நான் Happy Birthday to You
 6. இனி வரும் நாளில் நீயே வெற்றி அடைவாய். உனக்கு வரும் கஷ்டம் கூடக் காணாமல் போய்விடும் காலையில் பொழியும் பனித்துளிகளைப் போல். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 7. நீ கவலைப்படாதே உனக்கு அந்தக் கடவுள் துணை இருப்பார். நீ பிறந்தது இந்த உலகை வென்று புது சரித்திரம் படைக்கத் தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 8. என்னோட அன்பும் அந்த ஆண்டவனுடைய கருணையும் என்றும் உனக்குத் துணை இருக்கும் நீ சந்தோஷமா வாழ எங்களோட பாசமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 9. உயிரே உனக்கு உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 10. உன் தாய் உன்னைப் பூமியில் ஈன்றெடுத்த மகிழ்ச்சியான நாளில் உன் பிறந்தநாள், அனைத்து நாளும் உனக்காக இருக்காது இந்த நாளைவிட உனக்கு எதுவும் சிறந்ததாக அமையாது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 11. அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகி அனைத்து சந்தோஷமும் அழைப்பதற்கு எடுத்து வருவது போல் இனி உன் வாழ்வில் வந்தடைய மனமாற வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 12. என்றுமே நிறைந்த ஆரோக்கியத்தோடு நிறைவான நம்பிக்கையுடன் உன் வாழ்க்கையில் வெல்ல. இந்தப் பிறந்த நாளில் வாழ்த்தும் உனது இனிய உறவு.
 13. வானம் சேராத நிலவொன்று பூமிக்கு தன் ஒளியை பரிசளித்த இனிய நாள் இன்று உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 14. வானினும் தந்தை மனம் குளிரும் பூமியில் முளைத்த அழகிய பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 15. இன்று பூமிக்கு தேவதை ஒன்று இறங்கி வந்த நாள். என் செல்லத்தின் பிறந்தநாள்.
 16. அன்போடு வாழ, புன்னகையோடு மலர, உன் வெற்றியைக் கண்டு மகிழ, உன் தோல்வியைக் கண்டு வளர, இன்றைய நாள் உனக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமைய என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 17. நீ அழுத நாள் என்று உன் தாய் சிரித்த நாள். பாசம் என்ற ஒளியால் உன்னைச் சிலையாய் செதுக்கிய நாள். உன் மகிழ்ச்சியை கண்டு அவள் ஆனந்தம் கொண்டால், அவள் பட்ட வலியைப் போக்கி உனக்கு வலியைக் காட்டினால். நல்வழியை அடைந்து மகிழ்ச்சிகள் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

special birthday wishes || குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை: 1. உன் உதடு புன்னகையால் மலரட்டும்… உன் மனது மகிழ்ச்சியால் நிறையட்டும்… உன் கனவுகள் விண்ணைத் தொடட்டும்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!!

2. தனியாய் நிலவு ஒன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகிற்கு வந்து…
என் உலகில் என் கண்முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த என் தேவதைக்கு…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

3. பிறப்பின் நிகழ்வு ஒரு உணர்ச்சிகரமானது அது ஒவ்வொரு ஆண்டும் வந்து போகும்போது வாழ்க்கை மிக அழகாகிறது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை || பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்:

4. மிகுந்த அழகோடும்…
உள்ளத்தில் மகிழ்ச்சியோடும்…
அளவு கடந்த சிரிப்போடும்…
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

5. என் வாழ்க்கையில் இன்பமோ, துன்பமோ…
எது நடந்தாலும் என்றும் என்னை விட்டு விலகாத…
அன்பு செலுத்தும் உயிரினும் மேலான அன்பு உறவுக்கு…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

அண்ணன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

 1. இது பாச அண்ணன் உருவாகும்… அது ஜென்ம ஜென்மத்தின் வரம் ஆகும். உன்மேல் நான் கொண்ட பாசம் அது கரை இல்லாத நேசம். என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 2. பரிவோடு பாசம் கொடுத்தான். அன்போடு அரவணைத்தான். வல்லமையோடு வலிமை கொடுத்தான். அக்கறையோடு அரவணைத்தான். உன் நினைவுகளில் நான் இருப்பேன். என் நிழலாய் நீ இருப்பாய் அண்ணா. உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 3. இல்லத்தின் மன்னனே…பாசத்தின் கண்ணனே… என் உயிர் அண்ணனே… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
 4. மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக… நெகிழ்வான நேரங்களில் நிகழட்டும் இளமையாக.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 5. எண்ணங்களும் இயக்கங்களும் எல்லை தாண்டி வெல்லட்டும்.. கையிட்டு செய்பவர்கள் கையில் வந்து சேரட்டும்.
 6. வலிமையான வரிகளால் வாழ்த்திட தெரியவில்லை. எனவே பூத்தொழில் வாழ்த்துகிறேன் பூப்போன்ற உன்னையே.. happy birthday to you
 7. வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே.. உதிரும் புன்னகை உறுதியாகட்டும் உனக்கே.. உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 8. பிரம்மனின் கற்பனைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல… மலைமேகம் கொண்டு வந்த வானவிலும் நீயே..
 9. பௌர்ணமி நிலவு கூட வெட்கப்பட்டு மறையுது.. இதெல்லாம் உன்னுடைய பிறந்தநாள் செய்தி அறிந்ததா.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 10. ரோஜா மொட்டுக்களோடு வாழ்ந்திட ஆசைப்பட்டேன்.. மலர்ந்து ரோஜாவுக்கு மலராத ரோஜா ஈடு ஆகுமா..
செல்ல மகனுக்குத் தாயின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை:
 1. உன் ஜனனத்தில் என் மறு ஜென்மம் கொண்டேன். என் அன்பான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 2. என் வாழ்வில் அடுத்த அத்தியாயமாக அன்னை என்ற அடையாளம் தந்தாய்.. என் அன்பின் திரு உருவமான உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 3. உயிர் அமுதம் நீ பருகிட உலகில் பிறந்த பலன் அடைந்தேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 4. உன் மழலை சிரிப்பினில் என் சோர்வும் மறந்தேன்.. உன் பிடிவாதத்தால் சில நேரம் கண்ணீர் பரிசாகினாய்.. உன் எச்சில் முத்தம் தந்தாய் கண்ணீரும் தித்தித்ததே..
 5. வருடங்கள் உருண்டோடி உன் வயது கூடினாலும் முதன்முறை பார்த்த அத்த தருணம் நெஞ்சில் நிறைந்திடுதே.. என் செல்ல மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 6. முதன்முதலாக பார்த்த அத்த தருணத்தில் நன்னாள் இன்று என் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 7. ஒவ்வொரு தாயும் உயிரை பணயம் வைத்து, உயிர் கொடுப்பது உலக நியதி.. உலகின் மிகப்பெரிய வலியை இனிமையாக இருக்கும் சக்தி இவ்வுலகில் தாய்மைக்கு மட்டுமே.. என் உயிரில் பாதியாய் உன்னை பெற்றெடுத்தேன். என் அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 8. நான் கூப்பிடலிட்டு அழுகையில் என் கருவறையில் ஒளிந்து கொண்டவனே.. உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 9. உன் முகம் பாராமல் கரு கொண்ட நாள் முதல் ஒவ்வொரு நொடியும் உனக்காக விட்டுக் கொடுப்பவள் தான் தாய்..
 10. தாய்மையை பூர்த்தி செய்த புத்திரனே..
 11. உன்னை இவ்வுலகிற்கு இந்நாளில் அறிமுகப்படுத்தியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். என் அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 12. வளமும் நலமும் பெற்று.. பெற்ற வளங்களை உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
 13. ஒருமுறை வெற்றி பெறுவதை விட பல தோல்விகளை கண்டு ஆக்கத்தை பெருக்கி அனுபவங்களை அறிந்து பல சாதனைகள் படைத்திட வையகமும் காத்திருக்கிறது. நான் உன் தாய் என்ற கருவத்துடன்..
 14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகனே.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை:

ஆசை மனைவிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:-

1. என்னுள் பாதியாய்…
வாழ்வின் மீதியாய்
என்னுடன் கலந்தாய்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:  என்னை எனக்கு அடையாளம் காண்பித்தாய்…
என் வெற்றியில் நீ மகிழ்ந்தாய்…
தோல்வியில் உற்சாகமூட்டினாய்…

என் வாழ்வை
வசந்த கால சோலை ஆக்கினாய்…
என் சுகமே உன் வாழ்க்கை என்று ஆக்கிக் கொண்டாய்…

என்ன விலைமதிப்பற்ற பொருள் தர நான் உனக்கு…
என்னைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் உனக்கு பெரிதில்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும்…

இன்று மலர்ந்த கோடானு கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்…

அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஆசை மனைவியே…

2. நீண்ட ஆயுளோடும்…
நிறைந்த செல்வத்தோடும்…
மன நிம்மதியோடும்…
ஆண்டவனின் அருளோடும்…
நூறு வயது கடந்து
வாழ வேண்டும் என்று,
மனதார வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

3. இறைவன் வாழ்க்கையில் கொடுத்த மிகப்பெரிய வரமே
மனிதனாய் பிறப்பது…
எனவே, நீ பிறந்த இந்த பொன்னான நாளை…
மன நிறைவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ வேண்டுமென…
மனதார வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

Read Also: மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

 

Leave a Comment