பத்துப்பாட்டு நூல்கள் | Pathu Pattu Noolgal

Post views : [jp_post_view]

பத்துப்பாட்டு நூல்கள் | Pattu Pattu Noolgal

Pathu Pattu Noolgal

பத்துப்பாட்டு நூல்கள் என்றால் என்ன:

பத்துப்பாட்டு நூல்கள் | Pathu Pattu Noolgal – பத்துப்பாட்டு என்பது ஒரு பாடலில் 100 அடிகளுக்கும் மிகாமல் இருப்பது மற்றும் அதில் பத்து விதமான தனித்தனி அதிகாரங்களை கொண்டு காணப்படுவது பத்துப்பாட்டு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றது.

பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள்:

• திருமுருகாற்றுப்படை

• பொருநராற்றுப்படை

• சிறுபாணாற்றுப்படை

• பெரும்பாணாற்றுப்படை

• முல்லைப்பாட்டு

• மதுரைக்காஞ்சி

• நெடுநல்வாடை

• குறிஞ்சிப்பாட்டு

• பட்டினப்பாலை

• மலைப்படுகடாம்

1. திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு நூல்கள் | Pathu Pattu Noolgal பத்துப்பாட்டு நூல்களில் தனித்தனியே கடவுள் வாழ்த்து இல்லை. எனவே கடவுள் வாழ்த்து போல் முதலாவதாக இந்த திருமுருகாற்றுப்படை என்னும் நூல் உள்ளது. இது “வீடு பெறுவதற்கு பக்குவம் அடைந்த ஒருவனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுவது” என்பார் நக்கீரர்.

இது ஆறு பெரும் தனித்தனி பிரிவுகளை கொண்டுள்ளது. அவை முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் முருகன், பழனி மலை முருகன், சுவாமி மலை திருவேகரம், திருத்தணி குன்றத்தோடல் மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் உள்ள முருகனின் திறன் பற்றி பேசப்படுகின்றது.

நூலின் பெயர் – திருமுருகாற்றுப்படை

நூலை இயற்றியவர் – நக்கீரர்

நூலில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை – 317

நூலுக்கு வழங்கும் வேறு பெயர் – புலவர் ஆற்றுப்படை, முருகு

நூலின் பாட்டுடைத் தலைவன் – முருகன்.

Pathu Pattu Noolgal

2. பொருநராற்றுப்படை

இந்த நூலை இயற்றியவர் பெயர் முடத்தாமக் கண்ணியார். இந்த நூலில் உள்ள பொருநர் என்பதன் பொருள் வேடந்தாங்கி அடித்தல் என்பதாகும்.

அதாவது இசை விழா, பாலை யாழ், வர்ணனை, கரிகால சோழனின் சிறப்பு, விருந்து, உபசரிப்பு மற்றும் அரசர்களிடம் பரிசல் பெரும் முறை, கரிகால சோழனின் வீரம், காவிரி ஆற்றின் சிறப்பு ஆகியவற்றின் பெருமைகளை இன்னுள் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

நூலின் பெயர் – பொருநராற்றுப்படை

நூலை இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார்

நூலில் உள்ள பாடல் அடிகளில் எண்ணிக்கை – 248

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – வேறு சிறப்பு பெயர்கள் எதுவும் இந்நூலுக்கு இல்லை

நூலின் பாட்டுடைத் தலைவன் – கரிகால சோழப்பேரரசர்

 

3. சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை இந் நூலின் ஆசிரியர் நல்லூர் நந்தத்தனார். இந்நூலில் உள்ள மொத்த அடிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.

இந்நூல் ஆனது கடையேழு வள்ளல்களின் ஆட்சி திறமையையும் மற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு ஆகியவற்றையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.

இந்நூலில் விராலிமலையின் அழகு, வஞ்சி, மதுரை, உருந்தை ஆகிய நகரங்களின் சிறப்புக்கள். வள்ளல்கள் எழுவரின் செயல்கள். நெய்தல், முல்லை, மருதம், நிலங்களின் ஒழுக்களாறு. நள்ளியோடனின் நற்பண்புகள் ஆகியவை பற்றி விரிவாக பேசப்பட்டிருக்கின்றன.

கடையேழு வள்ளல்களின் பெயர்கள்:

• பேகன்

• பாரி

• காரி

• ஆய்நாடு

• அதியமான்

• நள்ளி

• ஓரி

1. பேகன்

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை முருகன் இருக்கும் இடத்தை ஆட்சி செய்தவர் பேகன்.

அக்காலத்தில் இந்த பழனிய நகரமானது “ஆவினன்குடி பொதினி” என்று அழைக்கப்பட்டது. மேலும் பேகன் என்ற மன்னர் மயிலுக்கு தன் ஆடையை தந்தவர் என்றும், குமணன் என்ற மன்னன் பழனியை சுற்றி இருந்த முதிரமலை என்னும் இடத்தை ஆட்சி செய்துள்ளார் என்றும் வரலாறு கூறப்படுகிறது.

2. பாரி

பாரி முல்லைச் செடிக்கு தேர் கொடுத்தவர் என்றார் எவர் மனதிலும் உடனே தோன்றும் ஒரு மன்னர் என்றால் அது இவர்தான். இவர் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலை என்னும் இடத்தை ஆட்சி செய்து வந்துள்ளார்.

பிரான்மலைக்கு அந்த காலத்தில் இருந்த பெயர் பறம்புமலை என்பதாகும்.

3. காரி

குதிரைகளை இரவலுக்கு கொடுத்தவர் என்ற பெருமையை உடைய மன்னர் காரி. இவர் தற்போது உள்ள விழுப்புரம் மாவட்டத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார்.

விழுப்புரத்திற்கு அந்த மலையமான் நாடு மலை என்றால் மலக்கு என்பதன் பொருள் ஆகும்.

4. ஆய்நாடு

ஆய் என்ற மன்னன் நீல வண்ணக்கல் உடைய நாகம் கொடுத்த ஆடையை இறைவனுக்கு கொடுத்தார் என்று பெருமை உடையவர்.இவர் தற்போது உள்ள திருநெல்வேலி மாவட்டத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார்.

திருநெல்வேலிக்கு அந்த காலத்தில் இருந்த பெயர் பொதியமலை அல்லது அகத்தியர் மலை என்பதாகும்.

5. அதியமான்

அவ்வைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் அதியமான் ஆவார். இவர் தற்போது உள்ள தர்மபுரி மாவட்டத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார்.

தர்மபுரிக்கு அந்த காலத்தில் இருந்த பெயர் தகடூர் என்பதாகும்.

6. நள்ளி

தானம் பெறுபவராக இருந்தாலும் சரி அல்லது புலவர்களுக்கு கொடை வழங்குவதாக இருந்தாலும் சரி செல்வத்தை இல்லை என்று கூறாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் நள்ளி என்ற அரசராவார்.

இவர் தற்போது உள்ள ஊட்டி என்ற இடத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார். ஊட்டிக்கு அந்த காலத்தில் இருந்த பெயர் நளிமலை நாடான், நெடுங்கோடு மலை முகடு என்பதாகும்.

7. ஓரி

ஓரி என்ற மன்னர் தன் நாட்டையே பரிசாக அளித்தவர் என்ற பெருமைக்கு உடையவர். தற்போது உள்ள நாமக்கல், கொல்லிமலை ஆகிய பகுதிகளை இவர் ஆட்சி செய்து வந்திருக்கிறார்.

(மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு பெரும் கடை எழு வள்ளலர்களின் சிறப்புக்களை முழுமையாக விவரிப்பது சிறுபாணாற்றுப்படை ஆகும்.)

நூலின் பெயர் – சிறுபாணாற்றுப்படை

நூலை இயற்றியவர் – நல்லூர் நத்தத்தனார்

நூலில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை – 269

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – சிறப்புக்கள் மிக்க சிறுபாணாற்றுப்படை

நூலின் பாட்டுடைத் தலைவன் – நல்லியக்கோடான்

Pathu Pattu Noolgal

4. பெரும்பாணாற்றுப்படை

இந்நூலை இயற்றியவர் பெயர் கடியலூர் உருத்திரகங்கண்ணனார். இவர் பிறந்த ஊர் கடையநல்லூர் ஆகும்.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வல்லரிடம் சென்று பரிசு பெற பெயருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது ஆகும்.

பெரும்பாணாற்றுப்படை நூலின் சிறப்புகள்:

பேரியாயாழின் வர்ணனை, உப்பு, வணிகர், இயல்பு, எயினர், மறவர், இடையர், உழவர், கலைஞர், அந்தணர் ஆகியோர். ஒழுக்கம் பட்டினம், திருவக்கா, காஞ்சி போன்ற இடங்களின் சிறப்பு இளந்திரனின் வீரம் கொடை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

நூலின் பெயர் – பெரும்பாணாற்றுப்படை

நூலை இயற்றியவர் – கடையலூர் உருத்திரகங்கண்ணனார்

நூலில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை – 500

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – பாணா, சமுதாயப் பாட்டு

நூலின் பாட்டுடைத் தலைவன் – இளந்திரையன்

 

5. முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்களில் மிகக்குறைந்த அடிகளை கொண்ட பாடல் என்ற பெருமைக்கு உடையது இந்த முல்லைப்பாட்டு.

இப்பகுதியில் உள்ள பாடல்கள் முல்லை நிலத்தை பற்றி பாடப்பட்டுள்ளது. நூலை எழுதிய ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்தில் பொன் வாணிகனார் மகனார் நாப்பூதனார் என்பதாகும்.

முல்லைப்பாட்டு நூலின் சிறப்புக்கள்:

திருமால் மனைவி மன்னன் நீர்வரத்து தரும் பொழுது மண்ணுக்கும் விண்ணுக்கும் ஆக தேர்வு வரும் எடுத்தது என்பதை பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் விரிச்சி கேட்டல் என்பதை பற்றிய தகவலும் உள்ளது.

விரிச்சி என்பது ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர் பக்கத்தில் போய், தெய்வத்தை தொழுது நின்று அயலார் பேசும் சொல்லை கூர்ந்து கேட்பார் அவர்கள் நல்ல சொல்லை கூறி தம்சையில் நன்மையில் முடியும் என்றும் தீமொழியை கூறி தீதாயம் முடியும் என்பதன் பொருள் ஆகும்.

அரசனைப் பெருந்துறையும் அரசின் துயரங்களையும் போர் மேற்கொண்டு பாசறையில் இருக்கும் அரசனின் செயல்பாடுகளையும் அருமையாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தலைமைகள் நெஞ்சை ஆற்றுப்படுத்தி ஆற்று நிற்பதால் நெஞ்சாற்றுப்படை என்னும் இந்நூலுக்கு வேறு சிறப்பு பெயரும் உண்டு.

நூலின் பெயர் – முல்லைப்பாட்டு

நூலை இயற்றியவர் – நப்பூதனார்

நூலில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை – 103

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – நெஞ்சாற்றுப்படை, முல்லை

நூலின் பாட்டுடைத் தலைவன் – இந்நூலுக்கு பாட்டுடைத் தலைவர் இல்லை

 

6. மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டு நூல்களில் அதிக அளவு பாடல்கள் மற்றும் அடிகளை கொண்ட ஒரே நூல் மதுரைக்காஞ்சி ஆகும். காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

இந்நூல் மதுரையின் பெரும் சிறப்புகளை பற்றி பாடுவதாலும் நிலையாமை என்னும் பொருளை பற்றி எடுத்துரைப்பதாலும் இது மதுரைக்காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மொத்தமாக உள்ள 782 அடிகளில் 354 அடிகள் மதுரையை பற்றி மட்டுமே சிறப்பாக குறிப்பிட்டு பாடி உள்ளனர்.

மதுரைக்காஞ்சி நூலின் சிறப்புகள்:

பாட்டுடைத் தலைவன் தலையங்கானத்து சிறுவென்று பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலின் பெயர் – மதுரைக்காஞ்சி

நூலை இயற்றியவர் – மாங்குடி மருதனார்

நூலில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை – 782

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – மாநகர் பாட்டு, கூடர் தமிழ், காஞ்சி பாட்டு

நூலின் பாட்டுடைத் தலைவன் – நெடுஞ்செழியன்

 

7. நெடுநல்வாடை

பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் சிறிய அடிகளைக் கொண்ட நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்.

இது 188 அடிகளை கொண்ட ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

நெடுநல்வாடை நூலின் சிறப்புகள் – Pattu Pattu Noolgal:

தலைவனைப் பிரிந்த தலைவிக்கு துன்பம் மிகுதியால் நெடு வாடையாகவும் போர்ட் பாசறையில் இருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் இது நெடுநல்வாடை என்னும் பெயர் பெற்றது.

போர்க்களம் சென்ற அரசன் மற்றும் அவனுடைய படைவீரர்கள் குளிர் காலத்தில் தங்களது குடியிருப்பு மற்றும் எங்கு தங்கினார்கள் போன்றவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகை பூவை சூடி வெற்றியை கொண்டாடியதாகவும், மேலும் பாண்டிய மன்னனின் அடையாளங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

குளிரின் கொடுமையால் வருந்து மக்கள் ஆநிரைகள் பறவை விலங்குகள் நிலை அரண்மனை அமைப்பு அரசியின் வருத்தம் மன்னன் புண்பட்ட மறவர்களை நள்ளிரவில் சென்று ஆற்றுவித்தல் ஆகிய கருத்துக்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளன.

நூலின் பெயர் – நெடுநல்வாடை

நூலை இயற்றியவர் – நக்கீரர்

நூலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை – 188

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – பத்துப்பாட்டு நூலின் இலக்கிய கருவூலம், மொழிவளப்பெட்டகம், சிறப்பு பாட்டு

நூலின் பாட்டுடைத் தலைவன் – பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

 

8. குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சி நிலத்தின் பெருமையைப் பற்றி பாடப்பட்டுள்ளதால் இந்நூலுக்கு குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு உரை எழுதிய ஆசிரியர் பெருங்குறிஞ்சி ஆவார். குறிஞ்சிப்பாட்டில் மொத்தமாக 261 அடிகள் உள்ளது.

குறிஞ்சிப்பாட்டு நூலின் சிறப்புக்கள்:

தலைமகள் திணைப்புணம் காத்த வகையும் புனலாடியதும் பூக்கோயிதழும் ஓவியமாய் தீட்டப்பட்டுள்ளன.

இதில் செங்காந்தள் தொங்கி மழை இருக்கும் பூ வரை 99 பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் தோழி செவிக்கு அறத்தோடு நிற்கும் துறையிலும் இப்பாடல்கள் அமைந்துள்ளது.

நூலின் பெயர் – குறிஞ்சிப்பாட்டு

நூலை இயற்றியவர் – கபிலர்

நூலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை – 261

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – களவியல் பாட்டு, பெருங்குறிஞ்சி

நூலின் பாட்டுடைத் தலைவன் – ஆரிய நாட்டு அரசன் பிரகதத்தன்

9. பட்டினப்பாலை

இந்நூல் சோழ மன்னன் கரிகார் சோழனின் பெரும் வளத்தினை கூறும் நூலாகும்.

உருத்திரங்கண்ணனார் பாடிய இந்நூலுக்கு 16 நூறாயிரம் பொன் பரிசாக கரிகால சோழன் வழங்கினார் என்பார்கள்.

இந்நூலில் மொத்தமாக 31 அடிகள் உள்ளன.

பட்டினம் பாளை நூலில் சிறப்புகள்:

சோழவள நாடும் காவிரிப்பூம்பட்டினமும் அங்கு வாழும் மக்களின் விளையாட்டுக்களும், துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி ஆகும், பொருட்களும், கடைத்தெருவும், அதனை ஆளும் திருமாவளவன் வரலாறும் அவன் ஆற்றலும் பேசப்பட்டுள்ளது.

நூலின் பெயர் – பட்டினப்பாலை

நூலை இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

நூலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை – 301

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – தமிழ்விடு தூது, பாலைப்பாட்டு, வஞ்சி நெடும் பாட்டு

நூலின் பாட்டுடைத் தலைவன் – சோழப் பேரரசர் கரிகாலன்

10. மலைபடுகாடம்

இந்நூலுக்கு கூத்தாற்றுப்படை என்று வேறு ஒரு பெயரும் உள்ளது. இதனை பாடியவர் இரணிய முட்டாது பெருங்குன்றோர் பெருங்கௌசிகனார்.

இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் மன்னர் என்பவர் ஆவர். மேலும் இந்த மலைபடுகாடம் என்னும் இந்நூலில் 583 அடிகள் உள்ளது.

மலைபடுகாடம் நூலின் சிறப்புக்கள் – Pattu Pattu Noolgal :

நன்னன் நாற்றுக்குச் செல்லும் வழியில் தனிமை இடைவெளியில் உண்ணக் கிடைக்கும் உணவு பொருட்கள், மன்னன் கொடை நாட்டின் பெருமை, மழையில் தோன்றும் பலவித ஒலிகள், சோலையின் அழகு, செமையாறு, நல்லது, நாளொழுக்க பொலிவு, கொடை, சிறப்பு ஆகியவை பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

நூலின் பெயர் – மலைபடு காடம்

நூலை இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கவுசியனார்

நூலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை – 583

நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள் – செய்நன்னன்

நூலின் பாட்டுடைத் தலைவன் – கூத்தாற்றுப்படை

Read Also : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *