திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | || Thiruvalluvar History in Tamil
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு:
திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்:- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உலகின் ஒட்டுமொத்த நன்மை தீமை வாழ்க்கை வரலாறுகளையும் ஒரே வரியில் எழுதியவர் ஆவார்.
Biography of Thiruvalluvar in Tamil
திருவள்ளுவரின் முழு பெயர் - திருவள்ளுவர்
திருவள்ளுவர் பிறந்த ஊர் - சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதி (இதற்கு சரியான ஆதாரம்)
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கிபி இரண்டாம் நூற்றாண்டு (இதற்கு சரியான ஆதாரம் இல்லை)
திருவள்ளுவர் பெற்றோர் பெயர் - ஆதி - பகவன் (இதற்கு சரியான ஆதாரம் இல்லை)
திருவள்ளுவர் மனைவி பெயர் - வாசுகி
திருவள்ளுவர் எழுதிய நூல்கள் - திருக்குறள்
திருவள்ளுவர் சிலை உள்ள இடம் - கன்னியாகுமரி
திருவள்ளுவரின் பிறப்பு
தமிழ் புலவரான திருவள்ளுவர் கி.மு.7-8 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவள்ளுவரின் திருமண வாழ்க்கை
எண்ணற்ற நூல்களை எழுதிய திருவள்ளுவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்திருக்கிறார். மேலும் இவர்களுக்கு கோவில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பற்றிய விரிவான விளக்கம்
Thiruvalluvar History In Tamil: உலகின் முதல் நூல் என்று அழைக்கப்படும் திருக்குறள், மக்களின் வாழ்க்கை வரலாறு நன்மை தீமை என அனைத்து உன்னத படைப்புகளையும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எண்ணற்ற நூல்கள் படைக்கப்பட்டு இருந்தாலும் திருக்குறளைப் போல் ஒரு நூல் இதுவரை வெளிவரவில்லை என்பதே உண்மை ஆகும்.
ஆனால் இவர் வாழ்ந்த காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி எட்டாம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம் என சொல்லப்படுகிறது.
திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
தெய்வப்புலவர், பொய்யில் புலவர், போதர், திருநாவலர், பொய்யாமொழிப் புலவர், நாயனார், தேவர் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப்படுகிறார்.
இதுவரை உலகத்தார் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நூல் திருக்குறள். இத்தகைய திருக்குறளை அவர் எழுதி உலகையே தமிழினத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
உலக இலக்கிய அரங்கில் தமிழர்களின் உன்னத படைப்பை பெருமிதமாக நினைக்கும் படி செய்த உன்னத படைப்பாளி. இந்த நூல் சங்க கால வகைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் 18 நூல்களின் ஒன்றாக உள்ளது.
திருவள்ளுவரும்,சைவமும்:
திருவள்ளுவரை சைவர்கள் “நாயனார்” என்று அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் இனம் என கூறி திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை சைவ நூல் என்று சைவர்கள் அழைக்கின்றனர்.
திருக்குறளில் உள்ள சிறப்பம்சங்கள்
Thiruvalluvar History In Tamil: திருக்குறளை பொருத்தவரையில் நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து அரங்களையும், இனம், மொழி, ஆகியவற்றை கூறுகிறது.
இரண்டே அடிகளில் உலகத்தில் உள்ள அனைத்து தத்துவங்களையும் கூறியதால் இது “ஈரடி“ நூல் என்று அழைக்கப்படுகிறது.
மனிதர்களிடையே தோன்றக்கூடிய அனைத்து நாகரீக பண்பாடுகளையும் அறம் பொருள் இன்பம் அதாவது காமம் என்னும் மூன்றே பிரிவுக்குள் மொத்த வாழ்க்கை வரலாறுகளையும் பிரித்துக் கொண்டதால் இது முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இன்னுலை எந்த ஒரு மனிதன் முழுமையாக கற்கின்றானோ அவர் புற வாழ்விலும் இன்பமும் நலமுடனும் இசையுடனும் தேவையான அடிப்படை விளக்கங்களை கற்றுக் கொள்வார்.
மேலும் இந்த திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக முப்பால், ஈரடி நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, போன்ற பல பெயர்களை சொல்லி சிறப்பித்து கூறப்படுகிறது.
மேலும் இவர் திருவள்ளுவர் நாயனார் என சைவர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர். இவர் இயற்றிய நூல் சைவ நூல் என்றும் திருவள்ளுவர் சைவ சமயத்தை சேர்ந்தவர் என்றும் சைவர்கள் நம்புகின்றனர்.
திருக்குறள் படைத்ததற்கான காரணம்:
“வள்ளுவனை பெற்றதால் பெற்றதை வையகம்” என்று பாரதியார் கூறியது போல் தமிழுக்கு புகழை சேர்த்த பெருமை திருவள்ளுவரை சாரும். தமிழில் ஒரு தொன்று தொட்டு அசைக்க முடியாத நூலாக திருக்குறள் இருக்கிறது.
இதற்கு காரணம், திருக்குறளை படிக்காத தமிழனே இவ்வுலகில் கிடையவே கிடையாது.அந்த அளவிற்கு உண்மை உணர்த்தும் நூலாக போற்றப்படுகிறது.திருக்குறளின் மகிமையை உணர்ந்தும் “ஜி.யு.போப்” இதனை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.
உலகின் தத்துவத்தினை ஈரடிகளில் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் கூறி அதன் கருத்துக்களை முத்து முத்தாக எழுதி மொத்தம் மூன்று பிரிவுகளாக அதை பிரித்து உருவாக்கியுள்ளார்.
இந்த நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்று தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
* அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
* பொருட்பால் - 70 அதிகாரங்கள்
* காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
இது மொத்தம் 133-அதிகாரங்களுடன் 1330-குறள்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. அறத்துப்பால்:
திருக்குறளில் முதல் பிரிவாக அறத்துப்பால இடம் பெற்றுள்ளது. இதில், 38-அதிகாரங்கள் எழுதப்பட்டுள்ளது. இதில் அறம் சார்ந்த வாழ்வியல் கருத்துக்கள் அனைத்தும் கூறப்பட்டுள்ளது.
அறத்தின் படி வாழ்க்கையின் நெறிமுறைகளை எவ்வாறு முறைப்படுத்தி வாழ வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது.
2. பொருட்பால்:
திருக்குறளின் இரண்டாவது பிரிவாக பொருட்பால் இடம் பெற்றுள்ளது. இதில் 70-அதிகாரங்கள் எழுதப்பட்டுள்ளது. உட்பிரிவுகளில் அரசியல் ஊழியல் மற்றும் துறவியல் போன்ற கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
3. காமத்துப்பால்:
திருக்குறளின் மூன்றாவது பிரிவாக காமத்துப்பால் இடம் பெற்றுள்ளது. இதில், 25-அதிகாரங்கள் எழுதப்பட்டுள்ளது. இதில் கற்பியல், களவியல் என்ற உட்பிரிவின் மூலமாக காதல்,இன்பம் மற்றும் இல்லறம் குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று வாழ்வியல் நெறிமுறைகளையும், உலகத்தின் கருத்துக்களையும் மூன்று பிரிவுகளில் எளிமையாக கூறி இந்த உலகத்திற்கு ஒரு அழியா பொக்கிஷத்தை விட்டு சென்றுள்ளார் திருவள்ளுவர்.
தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுவரின் சிறப்பு
திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்:- உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் தந்தை திருவள்ளுவருக்கு சென்னையில் வள்ளுவர் கோட்டம் என்ற பகுதியில் திருவள்ளூருக்காக ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் திருவள்ளுவர் இயற்றிய அனைத்து குரல்களும் பதிக்கப்பட்டு, அதற்கு முழு விளக்கங்களும் எழுதப்பட்டு இன்று வரை பாதுகாத்து வருகிறது தமிழக அரசு.
திருவள்ளுவருக்கு சிலை அமைத்த தமிழ்நாடு அரசு
Thiruvalluvar History In Tamil: தமிழகம் மற்றும் இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இவருக்கு ஒரு திருவுருவ சிலை கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடல் மட்டுமே முக்கடலும் சங்கமிக்கும் இடம் ஆகும்.
அவர் எழுதிய 133 அதிகாரங்களின் நினைவாக அவருடைய திருஉருவ சிலையானது 133 அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருவள்ளுவரை மட்டுமே எந்தவித சாதி மதம் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களாலும் போற்றப்பட்ட தமிழர் ஆவார்.
ஆனால் திருவள்ளுவர் சங்ககாலப் புலவர்கள் ஆன அவ்வையார் அதியமான் மற்றும் பரணர் ஆகிய மூவரும் காலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
திருவள்ளூர் இயற்றிய நூல்கள் பற்றிய குறிப்புகள்
திருக்குறள் எனும் இந்நூல் அறத்துப்பால் பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.
அறத்துப்பால் பற்றி பார்ப்போம் :
✍️ அறத்துப்பால் - முதல் முதலாக எழுதப்பட்ட இந்தப் பகுதியில் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன.
✍️ இவற்றில் ஒரு மனிதனின் மனசாட்சி மற்றும் நல்ல நடத்தை மரியாதை ஆகியவை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
✍️ அந்த நான்கு பிரிவுகளின் பெயர்கள். பாயிரவியால், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகும்.
பொருட்பால் பற்றி பார்ப்போம் :
✍️ பொருட்பால் - இரண்டாவதாக எழுதப்பட்ட இந்தப் பகுதியிலும் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளது.
✍️ இந்தப் பிரிவில் உலகத்தில் உள்ள அனைத்து நியாய அநியாயங்களையும் எவ்வாறு கடைப்பிடிப்பது என்ற சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
✍️ அந்த நான்கு பிரிவுகளின் பெயர்கள். அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒலிபியல் ஆகும்.
இன்பத்துப்பால் பற்றி பார்ப்போம் :
✍️ இந்தப் பிரிவில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய காமம் மற்றும் காதல் ஆகியவற்றை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
✍️ காமத்துப்பால் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஏற்படக்கூடிய காதல் போன்ற எவ்வாறு வாழ்க்கை நடத்துவது போன்ற விஷயங்களை தெளிவாக கூறப்பட்டுள்ளது.
✍️ இந்த காமத்துப்பாலில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை களவியல், கற்பியல் ஆகும்.
திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்:- இந்த மூன்று பிரிவுகள் அதாவது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய இம்மூன்றிலும் முதலில் உள்ள அறத்துப்பாலில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது உள்ள பொருட்களில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது உள்ள கிராமத்துபாலில் 25 அத்தியாயங்களும் உள்ளது.
இந்த ஒவ்வொரு அத்தியாயத்திலும் பத்து பத்து குழுக்கள் உள்ளது.
இவை அனைத்தும் இரண்டே அடிகளில் சொல்லப்பட்டுள்ளது. மொத்தமாக 1330 குறள்கள் இவற்றில் உள்ளது.
திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள்
👉 தெய்வப் புலவர்
👉 செந்நாப் போதர்
👉 செந்நாப் புலவர்
👉 தேவர் திருவள்ளுவர்
👉 பொய்யில் புலவர்
👉 வள்ளுவர்
👉 நாயனார்
👉 முதற் புலவர்
👉 பெருநாவலர்
👉 பொய்யா மொழியார்
👉 திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
👉 தெய்வப்புலமை திருவள்ளுவர்
திருவள்ளுவர் நூலுக்கு பழங்காலத்தில் பல்வேறு புலவர்கள் உரை எழுதி இருக்கின்றனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாக பயன்படுத்தப்படுபவருமான பரிம லேலழகர் எழுதிய உரை தான்.
உலகத்திலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது இடத்தை திருக்குறள் பிடித்துள்ளது.
இதுவரை உலகம் முழுவதிலும் உள்ள 80 மொழிகளில் இந்த திருக்குறள் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்:- லண்டனில் “ரசல் கொரியரில் ஸ்கூல் ஆப் ஓரியன்ஸ் மற்றும் ஆப்பிரிக்கன் ஸ்டார்ட் திஸ்“ என்ற கல்வி நிறுவனம் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவியுள்ளது.
உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரே அடியில் குரலை எழுதியவர் திருவள்ளுவர் மட்டும்தான் ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா..!!
அவருடைய மனைவி தான் அது.
Thiruvalluvar History In Tamil: திருவள்ளுவரை அவரது மனைவி ஒருநாளும் அவருடைய செயல்பாடுகளில் விமர்சித்ததே இல்லையாம். அவர் எந்த செயல் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பாராம்.
தன் கணவர் சாப்பிடும்போது கையில் ஒரு ஊசி வைத்திருப்பாராம் கீழே விழும் சோற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு கிண்ணத்தில் போடுவார்.
அந்த தண்ணீரை மீண்டும் வடித்து விட்டு அந்த சோற்றை எடுத்து தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சோற்றோடு கலந்து கொள்வார்.
இதற்கு என்ன காரணம் என்று ஒரு முறை திருவள்ளுவரை பார்த்து அவர் மனைவி கேட்டாராம். இதற்கு திருவள்ளுவர் கூறிய கருத்து, நீ இல்லாத சமயத்தில் துறவி இருவர் நம் வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் பழைய சாதம் மட்டும் இருந்ததால் அதை மட்டும் சாப்பிட்டனர் அப்போது வள்ளுவர் வாசியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறி என்றார்.
பழைய சோறு எப்படி சுடும் அந்த அம்மையார் கேள்வியை கேட்கவில்லை விசிற ஆரம்பித்து விட்டார் இப்படி கணவருடன் வாக்குவாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.
திருக்குறளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்போது நாம் பார்ப்போம்
- திருக்குறளில் முதல் முதலில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு - 1812
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
- திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்
- திருக்குறளில் அறத்துப்பாலில் எத்தனை குறட்பாக்கள் உள்ளது - 380
- திருக்குறளில் பொருட்பாலில் எத்தனை குறட்பாக்கள் உள்ளது - 700
- திருக்குறளில் காமத்துப்பாலில் எத்தனை குறட்பாக்கள் உள்ளது - 250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194
- திருக்குறளில் உள்ள இரண்டு மலர்கள் - அனிச்சம், குவள
- திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் - நெருஞ்சி பழம்
- திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரே விதை - குன்றிமணி
- திருக்குறளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துக்கள் - ங,ளீ
- திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மரங்கள் - பனைமரம் மற்றும் மூங்கில் மரம்
- திருக்குறளில் எழுதப்படாத இரண்டு வார்த்தைகள் - தமிழ் மற்றும் கடவுள்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி யு போப்
- திருக்குறளில் எழுதப்படாத ஒரே எண் - 9
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மனக்குடைவர்
இதுவரை திருவள்ளுவர் பற்றிய வாழ்க்கை குறிப்பு எந்த சூழலிலும் கிடைக்கவில்லை. அவர் மதுரையை சேர்ந்தவர் என்றும் மேலும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இவருடைய தாய் தந்தை ஆதி மற்றும் பகவன் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இவை எதுவும் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.உலகிலேயே மதுரையில் தான் மொழிக்காக சங்கம் அமைத்து அதாவது தமிழ் சங்கம் அமைத்து தமிழைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர்.
மூன்று சங்கங்கள் இருந்த நிலையில் கடைசியாக இருந்த சங்கம் கிமு 300க்கும் கிபி 250 க்கும் இடைப்பட்டது.
திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்:- திருவள்ளுவரைப் பொருத்தவரையில், கற்பனையான கடவுள்களை அவர் ஏற்கவில்லை என்றும், சாதி பிரிவினை, விலங்குகளை பலியிட நடத்தும் வேள்விகளை எதிர்த்தவர் என்றும், பொய் பேசாமல் களவு செய்யாமல் நாகரிகமுடன் வாழ்ந்தவர் என்றும், அனைவரையும் கல்வி பயிலும் படி வலியுறுத்தினார் என்றும், இயற்கையை நேசித்தார் குடும்ப வாழ்க்கை முறையையும் பண்புடன் பயன்படுத்தும் படி மற்றவருக்கு அறிவுறுத்தினார் என்றும், ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் எவ்வாறு தங்கள் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் எழுதிய 1330 குறளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
திருவள்ளுவர் இறப்பு:
தமிழரின் வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகளையும், வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளையும் எந்தவொரு விஞ்ஞான இயந்திரங்களும் இல்லாத அந்த காலத்திலேயே தன்னுடைய தமிழின் அறிவுத்திறமையால் இவ்வுலகிற்கு தன்னுடைய எழுத்தாணி மூலம் எழுதி அறிவுறுத்திய தமிழ் புலவர் திருவள்ளுவர் இறப்பு பற்றிய முழுமையான விவரங்கள் இன்று வரை கிடைக்கப் பெறவில்லை.
ஆனால்,இவர் மயிலாப்பூரில் பிறந்து அங்கே வளர்ந்து ஔவையார் உதவியுடன் மதுரையில் தமிழ் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.
திருவள்ளுவர் நினைவு சின்னங்கள்:
* தமிழகத்தின் கடைக்கொடியான தமிழ் மொழி உருவாகிய இடமான கன்னியாகுமரியில் முக்கடல் சந்திக்கும் இடத்தில் திருவள்ளுவரின் திருஉருவ சிலை 133-அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 133-அடி என்பது அவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 133-அதிகாரங்களின் எண்ணிக்கையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய சிற்பியின் பெயர் “கணபதி ஸ்தபதி” ஆவார்.
* தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள முக்கியமான ஒரு சுற்றுலா பகுதி தான் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த மணி மண்டபத்தில் திருக்குறளில் உள்ள அனைத்து குரள்களும் பொறிக்கப்பட்டுள்ளது.இது இன்று வரை தமிழக அரசால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
* திருவள்ளுவர் பிறந்த ஊரான மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு என ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நாம் இப்போது சென்றாலும் பார்க்க முடியும். இது மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகில் உள்ளது.
Read Also: தமிழ் மொழி தோன்றிய வரலாறு
