ஜன்னல் தமிழ் சொல் | Jannal meaning
ஜன்னல் என்பது நம்முடைய வீட்டிற்கு உள்ளே இருந்து வெளியே பார்க்கக்கூடிய தடுப்பு போன்ற ஒரு அமைப்பு ஜன்னல் என்று அழைக்கப்படுகின்றது.
ஆனால் உண்மையை சொல்லப் போனால் இந்த ஜன்னல் என்ற வார்த்தையானது ஒரு வேற்றுமொழி சொல் ஆகும்.
பிறமொழி சொற்கள் நம்முடைய தமிழ் மொழியில் கலந்திருப்பது சாதாரண ஒரு விஷயம் தான். ஆனால் நாம் இப்பொழுது பார்க்கும் ஜன்னல் என்ற சொல் தமிழ் மொழியா அல்லது வேறு மொழியா என்று இதுவரை யாரேனும் சிந்தித்தது உண்டா.
Jannal meaning – ஜன்னல் தமிழ் சொல்:-
இப்போது நாம் அழைக்கும் இந்த ஜன்னல் என்ற சொல் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து உருவானது. பண்டைய காலங்களில் வீடு மற்றும் அரண்மனை போன்ற மாபெரும் கட்டிடக்கலைகளில் அதிகமாக ஜன்னல்கள் வைப்பது வழக்கமாக ஒன்றாக இருக்கின்றது.
எனவே, ஜன்னல் இல்லாத வீடுகளை இவ்வுலகில் இல்லை என்று கூறலாம். போர்ச்சுகீசிய ஆட்சியின் போது தென்பட்ட இந்த ஜன்னல் என்ற வார்த்தையானது இன்று வரை தமிழ் மொழியில் நிலைத்து நிற்கிறது என்றால் தங்களால் நம்ப முடிகிறதா.
ஜன்னலுக்கு தமிழ் சொல்:
ஜன்னல் தமிழ் சொல் – தமிழில் “ஜன்னல்” என்ற வார்த்தையை “சன்னல்” என்று அழைப்பது வழக்கம். ஆனால் ஜன்னலுக்கு உரித்தான தமிழ் சொல் “சாளரம்” ஆகும். ஆனால் சில பேர் இந்த “சாளரம்” என்ற வார்த்தையை வடமொழி சொல் என்றும் அழைக்கின்றனர்.
ஜன்னலுக்கு உண்மையான தமிழ் சொல்:
இப்பொழுது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம் சாதாரண ஜன்னல் தானே இதற்கு எத்தனை வார்த்தை வித்தியாசங்கள் உள்ளது. உண்மையில் இந்த ஜன்னலுக்கு என்னதான் தமிழ் சொல் என்றால் “காலதர்” என்பதே ஆகும்.
ஜன்னலுக்கு தமிழில் “காலதர்” என்பது பொருள்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் மற்றும் சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்கள் இந்த “காலதர்” என்ற வார்த்தையை அனேக இடங்களில் பயன்படுத்தி இருப்பதை நாம் அறியலாம்.
சன்னல் தமிழ் சொல்:
சன்னல் என்ற சொல் போர்ச்சுக்கீசிய மொழிகளில் இருந்து உருவாகி இருந்தாலும் போர் சிகிச்சை மூலையில் ஜன்னலுக்கு உண்மையான பெயர் “ஜெநீலா”(janela) என்பதாகும். இங்கு சொல்லானது நாளடைவில் மருவி ஜன்னல் என்று அழைக்கப்பட்டது.
ஜன்னலுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
• சாளரம்
• பலகணி
• காலதர்
Read Also: இலக்கண குறிப்பு அறிதல்

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .