கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி | Kanakkanpatti Chittar Jeeva Samadhi

Post views : [jp_post_view]

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி | Kanakkampatti Chittar Jeeva Samadhi

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி

கணக்கன்பட்டி சித்தர் கோவில்:

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி | Kanakkanpatti Chittar Jeeva Samadhi: பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கணக்கம்பட்டி என்னும் ஊர். ஒருவேளை நீங்கள் திண்டுக்கல் வழியாக வருகிறீர்கள் என்றால் ஒட்டன்சத்திரம் வழியாகவும் கணக்கம்பட்டிக்கு வரலாம்.

கணக்கம்பட்டி இறங்கியவுடன் தெற்கு புறமாக செல்லும் தார் சாலை கோவிலுக்கு உள்ளே செல்கிறது. இரவு 9 மணி வரை மூன்று சக்கர ஆட்டோ வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்களை ஏற்றி செல்ல வரிசையில் நிற்கும். இதற்கு கட்டணமாக இருபது ரூபாய் ஒரு நபருக்கு வசூலிக்கிறார்கள். மேலும், பழனியில் இருந்து கணக்கம்பட்டிக்கு பேருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் பேருந்து கட்டணம் பத்து ரூபாய் மட்டும் தான்.

கணக்கம்பட்டி சித்தரின் ஜீவ சமாதி:

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பச்சை நிற சட்டையுடன் அழுக்கு நிறைந்த ஒரு மனிதர் காணப்பட்டார். இவருடைய இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர், எந்நேரமும் கடவுளுக்கு பணி செய்தும் தவ நிலையிலும் இருந்து வந்தார். மேலும் இவர் ஓர் அழுக்கு பொருந்திய துணிகளை கொண்ட மூட்டைகளை எந்நேரமும் தன்னுடைய தோளில் சுமந்து சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பல பேர் இவரை பைத்தியம் என்றும் கல்லால் அடித்து துரத்திய சம்பவமும் நடந்துள்ளது. மேலும் கடவுளின் ஆசியினால் இவர் பல்வேறு நிகழ்த்த முடியாத அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

கணக்கம்பட்டி ஜீவசமாதி சித்தரின் சிறப்புகள்:

1. வேண்டியதை வேண்டிய உடன் வேண்டிய படியே கிடைக்கும் என்கிறார்கள் பல பேர்.

2. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து தரிசிக் கூடிய தென் தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய சித்தர் ஆலயமாக கணக்கம்பட்டி கோவில் மாறி உள்ளது.

3. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு உணவுகள் தயாரிக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது வழங்கப்பட்டு வருகிறது.

4. உங்களுடைய பிரார்த்தனை முடிந்தவுடன் சித்தருக்கு உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை காணிக்கையாக அளிக்கலாம்.

கணக்கம்பட்டி சித்தரை வணங்குவது எப்படி:

தற்போது பழனி முருகப் பெருமானுக்கு பக்தர்கள் செல்கிறார்களோ இல்லையோ கணக்கம்பட்டி சித்தரை பார்க்க செல்லாத ஆட்களை இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு சித்தரின் மகிமை உலகம் முழுவதும் பரவி விட்டது.கோவிலுக்கு உள்ளே சென்றதும் முதலில் கணக்கம்பட்டி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடத்தை அடையலாம்.

சமாதியை உள்ளே சென்றதும் தொட்டு வணங்கி விட்டு செல்லாமல் அங்கு தியானம் செய்யக்கூடிய அறை சித்தரின் ஜீவசமாதி முன்பே உள்ளது. அங்கு அமர்ந்து உங்களுடைய குறைகள் மற்றும் வேண்டுதல்களை மனதில் நினைத்தவாறு சித்தரை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் உங்கள் மனமானது அமைதி அடையும் மேலும் உங்களுடைய வேண்டுதலானது சித்தரின் செவிகளுக்கு எட்டிவிடும்.பின்னர் சித்தரின் அருளால் நீங்கள் வேண்டியது வேண்டிய நேரத்தில் நிச்சயம் நடந்து முடிக்கும் என்பது பல பேர் நம்பிக்கையாகும்.கணக்கம்பட்டி சித்திரை அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் வணங்குவது ஏன்:

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடலில் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் ஆர்ப்பரிக்கும் தன்மை உண்டு.பூமி, சந்திரன் அதன் சுழற்சியினால் ஏற்படும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் சந்திரனின் சக்தி ஈர்ப்பு காரணமாக கடலில் அலைகள் அதிகளவில் வழக்கத்திற்கு மாறாக மேலே எழும்புகிறது.

அதேபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக அதிக அளவு இந்த நாட்களில் மனநலம் பாதிப்பு அடைகின்றனர்.நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் அமாவாசை பௌர்ணமி தினங்களில் தியானம் செய்தால் தியானத்தன்மை இயற்கையின் உதவியால் இயல்பாக அதிகரிக்கும்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – சித்தரின் மகிமை:

நம் தன்மை எத்தகையதாக இருக்கிறதோ அதை இந்த குறிப்பிட்ட அமாவாசை பௌர்ணமி தினங்களில் இயற்கை வெகு இயல்பாக அதிகரிக்கும்.இதன் காரணமாக தான் தியானம் செய்பவர்களுக்கு அமாவாசை பௌர்ணமி தினங்களில் அதிகளவு தியானம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

கோவில்களிலும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் முக்கிய வழிபாட்டு தினங்களாக நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.ஜீவசமாதிகளில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் மற்ற நாட்களை விட அதிக அளவில் அதிர்வை வெளிப்படுத்தும்.

ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய விரும்புவர்கள் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் அதிக அளவு வெளிப்படும் அதிர்வை உள்வாங்கும் முகமாக அன்றைய தினங்களில் ஜிவசமாதியான இடத்தில் வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், சித்தரைப் பற்றி முழு தகவலையும் தெரிந்து கொள்ள இங்கே Click பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *